NARAYANAN.V : கருத்துக்கள் ( 227 )
NARAYANAN.V
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
24
2021
அரசியல் மீண்டும் மேல்சபை? ஸ்டாலின் மும்முரம்
மேல் சபை வந்து நாட்டில் சட்டம் ஒழுங்கு சீராகப்போவதில்லை.இன்னும் சொல்லப்போனால் கடத்தலுக்குத் துணை போகிறவர்கள்தான் அதிகமாவார்கள். கு.உறுப்பினர்கள் அனைவரையும் கொண்டுவந்து வைத்து அழகு பார்க்கலாம்.   19:54:00 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜூலை
23
2021
பொது ஆறுமுகசாமி கமிஷன் பதவிக்காலம் நீட்டிப்பு
நாடகமாடும் அப்போல்லோ மருத்துவமனைக்கு கிடுக்கிப் பிடி போட்டு வழக்கு விசாரணையை நடத்த முடியாதா ? வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்காவிட்டால் மருத்துவமனைக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் அனுமதியை தமிழக அரசு ரத்து செய்து வழக்கு விசாரணையைத் துரிதப்படுத்த வேண்டும்.   16:52:10 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
22
2021
உலகம் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டால் நிரவ் மோடி தற்கொலை செய்துகொள்வார்
தண்டனை கொடுத்தால் குற்றவாளி தற்கொலை செய்துகொள்வார் என்று குற்றவாளியின் வக்கீல் சொல்வது எந்த விதத்தில் நியாயம் ? கோர்ட், குற்றவாளியின் வக்கீல் சொல்வதைப் பரிசீலிக்குமா ?   23:25:08 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
21
2021
அரசியல் உள்ளாட்சி பணிகளில் தவறா... நடவடிக்கை உறுதி என்கிறார் நேரு!
மணல் மாபியா ஆரோக்கியசாமி விஷயத்தில் தன் உண்மை முகத்தைக் காண்பித்த அமைச்சர் அரசு அதிகாரிகள் கூட்டத்தில் ஜம்ப வசனம் பேசுவது 'படிக்கிறது இராமாயணம்,இடிக்கிறது பெருமாள்கோவில் என்கின்ற கதையாக இருக்கிறது.இதுதான் ஜனநாயகமா ?   07:40:47 IST
Rate this:
0 members
0 members
3 members

ஜூலை
18
2021
பொது மணல் கடத்தல் வாகனங்கள், டிரைவர்கள் விடுவிப்பு விவகாரத்தில் கலெக்டர் மாற்றப்படுவாரா?
களை வாரிசு தன் கட்சிக்காரர்களுக்குப் பாடம் புகட்டும் வகையில் மணல் கொள்ளையன் ஆரோக்கியசாமியைக் காப்பாற்ற கலெக்ட்டருக்கு அரசியல் அழுத்தம் கொடுத்த மூத்த அமைச்சரைப் பதவியிலிருந்து நீக்க வேண்டும்.அதற்கும் அதிகப்படியான படிப்பினையைக் கொடுப்பது அவர்களது உட்கட்சி விவகாரம்.இந்த விவகாரத்தில் களை வாரிசு எடுக்கும் நடவடிக்கை தன் கட்சிக்காரர்களைக் குறைந்தது ஐந்தாண்டுகளுக்காவது கப்சுப் என்று இருக்க வைக்கவேண்டும்.இந்த விவகாரத்தில் மட்டுமின்றி இதுபோல் திருச்சி,மணப்பாறை,கரூர் ஏரியாக்களில் உள்ள மணல் மாப்பியாக்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அந்த மூத்த அரசியல்வாதி ஆரோக்கியசாமிகளுக்கெல்லாம் தலைவராக ஆகிவிடுவார்.இந்த விஷயத்தில் நீதிமன்றம் தலையிட்டு வழக்கு விசாரணையை நடத்தவேண்டும்.   11:22:58 IST
Rate this:
0 members
0 members
17 members

ஜூலை
8
2021
கோர்ட் பத்திர பதிவு துறையில் ஊழல் கட்டுப்படுத்த நடவடிக்கை என்ன?
முதல் புனுகு மூட்டையிடமிருந்து இரண்டாவது புனுகு மூட்டை வாங்கி கோர்ட்டில் சமர்ப்பிக்கப்போகும் அறிக்கை என்னவாக இருக்கும் என்றால் 'என்னுடைய தாய் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டு இருக்கிறார்.நான் அவர் அருகிலேயே இருந்து பார்த்துக் கொள்ள வேண்டியிருப்பதால் மீண்டும் சென்னைக்கே மாறுதல் கேட்டு வந்துவிட்டேன் 'என்பதே .   18:12:04 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
14
2021
சம்பவம் மணப்பாறை கிழக்கு ஒன்றிய தி.மு.க., பொறுப்பாளர் அடாவடி!
முதல்வர் இவ்விஷயத்தில் தன் கட்சி நிர்வாகியைத் தட்டிக் கொடுப்பாரா அல்லது சட்டத்தின்படி தண்டிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். முதல்வரின் கவனத்திற்கு இந்தவிவகாரம் இந்த நொடிப் பொழுது வரை சென்றதாகத் தெரியவில்லை.போலீஸ் டி.ஜி.பி உத்தரவிற்கே அமைச்சர்களின் பின்பு(ப)லத்தோடு சவால்விடும் தன் கட்சி நிர்வாகிகளை எப்படி எதிர்கொண்டு சமாளித்து அப்பழுக்கற்ற ஆட்சியை நிலைநாட்டப் போகிறார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.சன் குடும்ப அரசியலில் ஆரோக்கியசாமியும் ஒரு மெம்பர் ஆகி விட்டாரா ?   15:01:02 IST
Rate this:
0 members
0 members
5 members

ஜூலை
9
2021
பொது ஆந்திராவில் கனமழை தரைப்பாலம் மூழ்கியது
தமிழகத்தில் இருந்த முந்தைய அரசு விழுப்புரத்தில் உள்ள தடுப்பணை ஒன்றை இருபத்து நான்கு கோடி ரூபாயில் மராமத்து செய்தது . ஒருசில மாதங்களில் பெய்த கன மழையில்அந்த அணையின் மதகு அருகிலேயே பெரிய விரிசல் ஏற்பட்டு ஏரித் தண்ணீர் எல்லாம் விளைநிலத்தில் பாய்ந்த கதை அனைவரும் அறிந்ததே.இதுதான் நாம் தண்ணீர் சேமிக்கும் முறை.பணம் மட்டும்தான் கபளீகரம் ஆகிற கதையாக இருக்கிறது.   01:04:51 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
6
2021
சம்பவம் கரை வேட்டியில் டாஸ்மாக் பணியாளர் சஸ்பெண்ட் செய்ய கலெக்டர் உத்தரவு
டாஸ்மாக் கடையில் கரைவேட்டி கட்டிக்கொண்டு டோக்கன் கொடுத்த விற்பனையாளர் அடுத்ததா தாம் தான் மந்திரியாகப் போகிறோம் என்ற கனவோடு இப்படிச் செயலில் இறங்கியிருப்பர்.   14:12:54 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
5
2021
அரசியல் 1,500 கிலோ ஆவின் இனிப்புகள் அள்ளி சென்ற ராஜேந்திர பாலாஜி!
பால்கோவாவை பல்க்கா பர்ச்சேஸ் செய்து தனக்குப் பெரிய அளவில் பல வகையிலும் வருமானம் கிடைக்க உதவிய புரோக்கர்களுக்குத் தீபாவளியை ஒட்டி இனிப்பு வழங்கி மகிழ்ந்து இருப்பர்.கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைத்துவிட்டுப் போன கதை கணக்காகிப் போன கதை முன்னாள் மந்திரிக்குத் தெரியாமல் போனாலும் இப்போது ஊருக்குத் தெரிந்துவிட்டது என்பது சம்பந்தப்பட்டவருக்குத் தெரியுமோ தெரியாதோ தெரியவில்லை.இவர் மேல் சொத்துக் குவிப்பு வழக்குத்தான் போய்க்கொண்டு இருக்கிறதல்லவா?அதிலிருந்து மீட்டுவிடலாம்.   16:18:23 IST
Rate this:
0 members
0 members
5 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X