Vasanth : கருத்துக்கள் ( 88 )
Vasanth
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
20
2019
சினிமா
அடுத்தவர் தகுதி பற்றி பேசுகிறீர்கள்.   19:22:24 IST
Rate this:
3 members
0 members
5 members

ஜூலை
20
2019
சினிமா
என்னுடைய அனைத்து பதிவுகளையும் பாருங்கள் உங்கள் கேள்விக்கு விடை தெரியும்.   13:37:04 IST
Rate this:
3 members
0 members
7 members

ஜூலை
20
2019
சினிமா
அந்த நடிகைகள் "அறியப்பட்டது, புகழ் பெற்றது" அனைத்தும், இத்தகைய பெண்களுக்கு "மதிப்பும், கம்பீரமும்" கிடைக்கும் வண்ணம் நடித்த படங்களால் மட்டுமே. நீங்கள் கூறிய காட்சிகள் அந்தரங்கமாக பார்ப்பது. அனைத்து படங்களிலும் அப்படி இருக்காது. அவற்றில் பல போலிகளும் அடங்கும். தவிரவும் நீங்கள் கூறிய காட்சிகள் இடைப்பட்ட காலங்களில்தான் வெளிப்படையாக இருந்தன. அன்றைய காலங்களின் முன்புவரை பெண்கள் போக பொருளாக மட்டுமே பார்க்கப்பட்டார்கள். அந்த கால கட்டத்தில்தான் பெண்கள் வீறு கொண்டு அந்நிலையிலிருந்து வெளி வர ஆரம்பித்தனர். Supergirl , Wonderwomen போன்ற கதாபாத்திரங்கள் அவர்களுக்கு பெரிய வூக்குவிக்கும் சக்தியாக வீறுகொண்டு எழ பெரும் தூண்டுகோலாக அமைந்தது. உங்களுக்கு ஹாலிவூட் படங்கள் பற்றி அதிகம் தெரியவில்லை என்று நினைக்கிறேன். ....அங்கு குழந்தைகளுக்கான படம் என்றால் மிக மழலைத்தன்மையுடன் மற்ற கதாபாத்திரங்கள் அனைத்தும் குழந்தைகளுக்கு உரியதாக மட்டுமே இருக்கும். வில்லன், வில்லி பாத்திரங்கள் கூட குழந்தைகள் ரசிக்கும் வண்ணம் இருக்கும் (Richie Rich , pacifier , Home Alone , The Spy Next Door ....) ... விலங்குகளுக்கான படம் என்றால் அவைகளுக்கான தன்மை மாறாமல் அதே சமயம் புத்திசாலித்தனமாக "லாஜிக்கோடு" செண்டிமெண்ட் கலந்து அவைகளை துன்புறுத்த கூடாது என்ற எண்ணம் வரும் வகையில் இருக்கும் ( A Dog’s Dale , War Horse , Stuart little , Up .....). ஏன், அங்கு பிரமாண்டமான போர் காட்சி என்றாலும் அதில் பெரும்பாலும் எந்த குதிரைகளோ காலை வாரிவிட்டு விழ வைக்கமாட்டார்கள். அதில் சவாரி செய்யும் வீரர்கள் கீழே விழுமாறுதான் அமைப்பார்கள்..., குழந்தைகளுக்கு அன்னையாக வரும் பெண்கள் கதாபாத்திரம் மிகமிக பெருமை சேர்க்கும் விதத்தில் இருக்கும். அந்த அன்னை கதாபாத்திரங்கள் தன் குழந்தைகளுக்காக எந்த வலிகளையும் தாங்குவார்கள், தங்களையே அர்பணிப்பார்கள் ( Terms of earment , Little Man Tate , ஏன் புகழ்பெற்றபடத்தில் தன் பிள்ளைக்காக கடைசி வரை போராடும் தாயின் கதை Terminator 2: Judgment Day ...... ). பெரியர்வர்களுக்கான படம் என்றால் அந்தந்த வயதில் தோன்றும் பிரச்சனையையை மையமாக வைத்து வரும் (angry management , Tootsie , Hitch , A Beautiful Mind. ...). இன்னும் பல. இத்தகைய படங்களை பற்றித்தான் கூறியிருக்கிறேன்...., "எதிர்க்குரல், சிங்கார சென்னை" நீங்கள் பார்க்கும் அந்த படங்களை வீட்டில் எல்லோருடனும் சேர்ந்து பார்க்க முடியுமா? ஆனால், ஆடை படம் வீட்டில் எல்லோரும் பார்த்தும், பாராட்டும் (தங்கள் வீட்டு பெண்கள் செய்யாமல், அடுத்த வீட்டு பெண்கள் செய்யும் வரை) அளவிற்கு முற்றிவிட்டது.   02:05:03 IST
Rate this:
0 members
0 members
28 members

ஜூலை
20
2019
சினிமா
சமூக பொறுப்பு இல்லையா?   13:37:20 IST
Rate this:
2 members
0 members
7 members

ஜூலை
20
2019
சினிமா
நிர்வாணமாக காட்டி திருத்த பார்ப்பது என்பது சமுதாயத்தில் ட்ரெண்டில் இருக்கும் விஷயத்தை சாதகமாக மாற்றி சம்பாரிப்பது என்றாகிவிட்டது. இதில் சற்றும் பொதுநலம் இல்லை. இத்தனை பேர் பார்க்கிறார்கள், இத்தனை ஆதரவு என்பதெல்லாம் சமுதாயம் கெட்டு விட்டது என்பதின் அடையாளம். நிறைய பேர் இது விழிப்புணர்வு என்றோ, தைரியம் என்றோ, முன்னேற்றம் என்றோ பலவாறாக கூறலாம். ஆனால், நாளடைவில் இதே செயலை பல இளம் பெண்களும் tiktok, instagram, etc... ஆபாச செல்ஃபி வீடியோ போன்று செய்து காட்டும் நிலை நாட்டில் உருவாகும். கெட்ட விஷயங்கள் ஆரம்பத்தில் அச்சுறுத்தாது. அதன் விளைவு மோசமான நிலைக்கு இட்டு செல்வது உறுதி. இத்தகைய படங்களுக்கு ஆதரிப்பவர்களின் வீட்டு பெண்கள் செய்யாத வரையில் அடுத்த வீட்டு பெண்கள் செய்வதை பாராட்டுவார்கள். வெளிநாட்டு பெண்களின் தைரியம் என்பது பல ஆபத்துகள் இருந்தும் காவல் துறையில் அதுவும் மிக ஆபத்தான போதை கடத்தல் பிரிவில் பணி புரிவது, விமான ஓட்டிகளாக, மேலாண்மை துறையில், மருத்துவராக, சுயமாக நிறுவனங்கள் cake, decorators, rental house communicator, etc... , பெண்களை மதிக்க வேண்டும் என்று wonder women, cat women, supergirl, black widow, batgirl, Harley Quinn போன்ற கதாபாத்திரங்களை உருவாக்கி ஸ்கர்லெட் ஜான்சன், ஹேலிபரி, ஜெனிபர் கார்னர், ஆலிஸ்யா ஸில்வர்ஸ்டோன், லின்டா கார்டர், etc.... போன்ற பல நடிகைகள் கம்பீரமாக பெண்மைக்கு மதிப்பையும், பெருமையையும் சேர்கிறார்கள். ஆனால், இங்கு “BOLD” எனப்படுவது ஒரு பெண் மேலாடை அணியாமலோ, புகை பிடிப்பதையோ, மது அருந்துவதையோ, கெட்ட வார்த்தை பேசினாலோ, செய்தால் பாராட்ட பயன்படுத்தும் வார்த்தை. அன்றாடம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் கொடூர குற்றங்களுக்கு இத்தகைய நடிகைகளும், படங்களும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ நிச்சயம் ஒரு வகையில் காரணம். சமீபத்தில் வெளியான “100” படம் இன்றைய இளைய தலைமுறை எந்த அளவுக்கு கொடூரமாக உள்ளார்கள் என்பதற்கு சரியான உதாரணம். பெண்களை கவர்ச்சியாக, ஆபாசமாக பயன்படுத்தி நடத்தப்படும் காதலிக்க நேரமில்லை, பிக் பாஸ், சகலை vs ரகளை, etc...... போன்ற நிகழ்ச்சிகளை, படங்களை வீட்டில் குடும்பத்தோடு பார்ப்பதை நிறுத்தினால் மட்டுமே கொடூர குற்றங்கள் குறையும். தட்டி கேட்க எண்ணம் தோன்றும்.   17:42:44 IST
Rate this:
1 members
0 members
51 members

ஜூலை
19
2019
சினிமா படுக்கையறை காட்சி : பெண்களை மட்டுமே விமர்சிப்பது ஏன்? ராதிகா ஆப்தே...
முன்பு,.. ஆண்கள் கூட்டமாக உள்ள இடங்களில் யாரேனும் ஒரு பெண் சென்றால் உடனே அங்கிருக்கும் ஆண்கள் சற்றும் ஆபாசமாக பேசுவதையும் பேசகூடாத வார்த்தைகளையும் தவிர்ப்பர். சிகரெட் ஏதும் பயன்படுத்தினால் எறிந்து விடுவர். அந்த பெண் அங்கிருந்து நகரும் வரை இதை தொடர்வர். பேருந்தில் உட்கார இடம் இன்றி யாரேனும் பெண் நின்றிருந்தால் உடனே இடம் தருவர். தெருவில் அல்லது ஏதேனும் பொது இடங்களில் ஒரு பிரச்சினை என்றால் அதில் சம்மந்தப்பட்ட பெண்ணிற்கு முதலில் ஆதரவாக குரல் கொடுப்பர். ஏதேனும் கனமான பொருளினை ஒரு பெண் தூக்கி சென்றால் உடனே உதவ ஆண்கள் முன் வருவர். ஒரு பெண் யாரேனும் ஒரு ஆண் மீது குற்றம் சுமற்றினால் அதை அனைவரும் மறுப்பின்றி முழுமையாக நம்புவர், etc.. இங்கு, பெண்கள் பலவீனமானவர்கள் என்றோ, மோகத்தால் என்றோ காரணம் கிடையாது… முக்கியமாக, பெண் என்றால் நேர்மையானவர்கள், ஒழுக்கமானவர்கள், பொய் பேசாதவர்கள், தூய அன்பு பாசம் உடையவர்கள், தன் குடும்பதிற்காக சுயநலம் இன்றி உழைப்பவர்கள், குடும்பத்தை நடத்துபவர்கள், குறிப்பாக ஒழுக்கமற்ற செயல்களை ஒருபோதும் செய்ய மாட்டார்கள், மிக மிக உறுதியான மண வலிமை படைத்தவர்கள், குழந்தை பேறு பெறும் இணையற்ற பெரும் பொறுப்பினை இயற்கை இவர்களுக்கு அளித்த தகுதி பெற்றவர்கள்,... என்ற பல அசைக்க முடியாத நம்பிக்கைகளுக்கு உரியவர்கள் என்ற பல உயரிய காரணங்களால்தான் பெண்கள் மீது ஆண்கள் மிகுந்த மரியாதை வைத்துள்ளனர்… ஆகையினால்தான், மது புகை முறையற்ற உறவுகள் பழக்கம் கொண்ட ஆண்கள் தன்னை பெண்கள் கண்டித்தால் அடங்கி விடுகிறார்கள். ஆனால், அதே தவறை பெண்களும் செய்தால் கண்டிக்கும் தகுதியினை இழக்கிறார்கள். ஆண்களின் தவறுகளால் வரும் பாதிப்பை விட பெண்களின் தவறுகளால் வரும் பாதிப்பு மிக அதிகம். ஏனெனில் ஆண்கள் துவண்டு விடுவர் அக்குடும்பமே பாதிப்படைகிறது. ஆனால், பெண்களால் மண வலிமையோடு குடும்பத்தை நடத்த முடியும். என்றென்றும் பெண்களை நம்பியே ஒவ்வொரு குடும்பமும் உள்ளது. தற்போது ஆண்களுக்கு இணையாக பெண்களும் பல தவறுகளை செய்கிறார்கள். போட்டி என்பது நல்ல விஷயங்களில் மட்டுமே இருக்க வேண்டும். ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் யார் தவறு செய்தாலும் பாதிக்கப்படுவது குடும்பமும், குழந்தைகளும் என்ற உண்மை உணர்ந்தால் தவறு செய்ய தோன்றாது.   20:14:28 IST
Rate this:
1 members
0 members
14 members

ஜூலை
14
2019
சினிமா அப்பா நீங்கள் கடவுளின் குழந்தை- செளந்தர்யா ரஜினி நெகிழ்ச்சி...
உங்கள் வீட்டு பெண்களுக்கும் முதல் வாழ்க்கை சரியாக இல்லை என்றால் வேறு ஒரு நல்ல மண வாழ்க்கை அமைய முயற்சிக்க மாட்டீர்களா? அப்படி செய்ய வில்லை என்றால் நீங்கள் குடும்பத்திற்கு லாயக்கற்றவர் என்று பொருள். கவலை பட வேண்டாம், உங்கள் வீட்டு பெண்களுக்கும் இந்த நிலைமை வரும். அப்போது கூறுங்கள்....... புகுந்த வீடுகள்   17:15:50 IST
Rate this:
1 members
0 members
4 members

ஜூலை
14
2019
சினிமா அப்பா நீங்கள் கடவுளின் குழந்தை- செளந்தர்யா ரஜினி நெகிழ்ச்சி...
இந்தியாவில் அதிலும் தமிழகத்தில் உண்மையான செய்திகளை சேர்த்து மக்கள் சேவை செய்யும் பத்திரிக்கை ஒன்று கூட இல்லை. தன் பத்திரிக்கை ஓட தருமத்தை மறந்து பிறரை மட்டமாக இகழ்பவர்கள் மட்டுமே இங்கு தகுதியானவர்கள். அவர்கள் வார்த்தைகளுக்கு மட்டுமே இங்கு இடம் உண்டு.   12:32:03 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூலை
14
2019
சினிமா அப்பா நீங்கள் கடவுளின் குழந்தை- செளந்தர்யா ரஜினி நெகிழ்ச்சி...
அப்படியானால், வேலை வெட்டி இல்லாமல் தெருவில் யார் யார் சிகரெட் பிடிக்கிறார்கள் என்று பார்ப்பதுதான் உங்கள் வேலை. அப்படி சிகரெட் பிடிக்கும் ஒவ்வொருவரிடமும் யாரை பார்த்து சிகரெட் பிடிக்க கற்றுக் கொண்டீர்கள் என்று கேட்டு அவர்கள் அனைவரும் ரஜினிதான் காரணம் என்றார்களா? அது எந்த தெரு? தெரு முழுக்க உங்கள் கண்களுக்கு மட்டும் சிகரெட்டை தூக்கி போட்டு விளையாடுவது? அவன் அவன் தெருவில் பயந்து ஒளிந்து சிகரெட் பிடிக்கிறார்கள். புளுகுவதற்கும் அளவு வேண்டாமா? அது ஏன் சிகரெட்டை மட்டும் பார்த்து கற்றுக் கொள்கிறீர்கள், வாழ்க்கையில் அதுவும் சினிமா துறையில் இருந்தும் ஒரே திருமணம் செய்து ஒழுக்கமாக வாழும் வாழ்க்கையாக பின்பற்றுங்கள், இவ்வளவு பணம் பேர் புகழ் இருந்தும் பந்தா இல்லாத நல்ல குணத்தை பின்பற்றுங்கள், தன் மனதில் நல்லது என்று தோன்றிய உண்மையை வெளிப்படையாக பேசும் தைரியத்தை பின்பற்றுங்கள், நடை உடை பாவனையில் தனக்கென்று ஒரு ஸ்டைலை தானே உருவாக்கி தமிழ்நாடு இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் கொண்டாடும் தனி திறமை மற்றும் தலைமை பண்பினை பின்பற்றுங்கள், சற்றும் விளம்பரம் இன்றி அக்காலம் முதல் பல ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவும் கொள்கைகளை பின்பற்றுங்கள், யாருடைய மனதையும் புண்படுத்தாமல் பேசும் உயரிய குணத்தை பின்பற்றுங்கள், ரஜினி ரசிகரின் ஆட்டோ என்றால் பெண்கள் தைரியமாகவும் பாதுகாப்பாகவும் பயணம் செய்வார்கள். ரசிகர்களுக்கு இந்த சமூக ஒழுக்க பண்பினை கற்றுக் கொடுத்த தலைமை பண்பினை பின்பற்றுங்கள், பல வெளிநாட்டவர் உட்பட அவர்கள் ரஜினியை ரசிப்பது ஸ்டைல், அதிரடி வேகம் என்பது மட்டுமல்ல குறிப்பாக அவர் ஒரு நல்ல மனிதர் என்பதுவும் முக்கிய காரணமாக கூறுகிறார்கள். இவ்வளவு ஏன் அவர் வழியில் ரசிகர்கள் அனைவரும் பிறரிடம் மரியாதையாக பேசும் கருத்திடும் நல்ல பண்பினை பின்பற்றுங்கள்...   10:46:08 IST
Rate this:
0 members
1 members
4 members

ஜூலை
14
2019
சினிமா அப்பா நீங்கள் கடவுளின் குழந்தை- செளந்தர்யா ரஜினி நெகிழ்ச்சி...
ஒரு தந்தை மற்றும் மகளின் அன்பை பார்த்து இறைவனே இவர் தன் குழந்தை என்பார். ஆனால், இந்த செய்திக்கு தொடர்பே இல்லாமல் ஒரு பாச உணர்வுகளை விட்டு கண்டதையும் எழுதுபவர்கள் நிச்சயம் கடவுளின் குழந்தைகளாக இருக்க முடியாது...   14:04:16 IST
Rate this:
3 members
0 members
3 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X