Selvaraj Thiroomal : கருத்துக்கள் ( 947 )
Selvaraj Thiroomal
Advertisement
Advertisement
Advertisement
மே
30
2020
அரசியல் 6 ஆண்டில் வரலாற்று தவறுகளை சரிசெய்த மோடி அமித்ஷா புகழாரம்
கடந்த ஆறு ஆண்டுகளாக வரலாற்று தவறுகளை செய்து வருபவர்கள் பயனற்ற பொறுப்பற்ற பேச்சை குறைத்தாலே போதுமே. தவறுகளை இனம்காணவே கொஞ்சம் அடிப்படை அறிவு தேவையே. அதுவே இல்லாதவர்கள் ஏதும் சொன்னால் ஒதுக்கி தள்ளவேண்டும்.   14:55:43 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
27
2020
கோர்ட் ஜெ., இல்லத்தை முதல்வரின் இல்லமாக மாற்றலாம் ஐகோர்ட்
ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு, அரசு ஆதரவின் மூலம் மருத்துமனை சிறையில் இருந்து உயிரைவிட்டார். தமிழகத்தின் கரும்புள்ளிகளில் ஒருவரை இப்படி தூக்கிப்பிடிப்பது மிக மிக கேவலம்.   16:43:36 IST
Rate this:
7 members
0 members
6 members
Share this Comment

மே
27
2020
பொது ‛இந்தியாவில் கொரோனாவுக்கு 18,000 பேர் உயிரிழக்கலாம்
இந்தியாவில் தினமும் ஏற்பாடு இறப்பு 28000 என்ற சராசரி அளவில் உள்ளதாக தெரிகிறது. கடந்த 60நாட்களில் 1680000 இறப்புகள் நடந்திருக்க வேண்டும். அதனால் அரசு கொரானா இறப்புகள் பற்றி அறிவிக்கையில் வழக்கமான இறப்புகள் எவ்வளவு , கூடுதலாக இந்த வைரஸினால் ஏற்பட்ட இறப்பு எவ்வளவு என்று வேறுபடுத்தி சொல்வது நல்லது. மக்களை அச்சுறுத்தாமல் யதார்த்த எச்சரிக்கை மனப்பான்மையுடன் வைத்திருப்பதே நேர்மையான நடவடிக்கையாகும்.   16:39:59 IST
Rate this:
0 members
1 members
3 members
Share this Comment

மே
25
2020
பொது டிரைவிங் லைசென்ஸ் புதுப்பிக்க ஜூலை 31 வரை அவகாசம் நீட்டிப்பு
காலாண்டு வரியை ரத்து செய்ய வாகன உரிமையாளர்கள் கோரி வருகிறன்றனர். அரையாண்டு வரியையே தள்ளுபடி செய்யவேண்டும். கடந்த மூன்று அல்லது ஐந்து ஆண்டுகளில் இழப்பீடு கோராத வாகனங்களுக்கு இந்தவருட இன்சூரன்ஸ் காலத்தை ஓராண்டு நீடித்து கொடுக்கலாம். ஆட்டோமொபைல் தொழிலில் இருந்து அரசுகள் ஆண்டுக்கணக்கில் பிடுங்கிக்கொண்டே இருந்து வருகிறது. இக்கட்டான இந்த காலகட்டத்தில் பிடுங்கியதில் ஒரு பகுதியை மத்திய மாநில அரசுகள் கொடுத்து உதவவேண்டும்.தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் நீடித்து இருக்கும்படி செய்வது ஒருவகையில் அரசுக்கு ஆதாயம் தான். புதியவர்கள் எந்த தொழிலும் இப்போதைக்கு இறங்கமாட்டார்கள் என்பதை அரசு உணரவேண்டும்.   17:11:03 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
17
2020
பொது தமிழகத்தில் 11 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு
குறைந்து வருவதாக எப்படியாவது சொல்லி அனைத்து விலக்குகளுக்கும் விலக்கு அளிக்கலாமே., எப்படியும் நடக்கக்போவதை தடுக்க அரசால் முடியாது என்பதை மக்கள் உணராமலா இருக்கிறார்கள்? அவர்களின் ஒத்துழைப்பே அதற்கு சாட்சி.   17:17:58 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மே
18
2020
உலகம் உலக சுகாதார கூட்டம் கொரோனாவும் சர்வதே அரசியலும் பேசப்படும்
அந்த வுஹான் ஆய்வகத்திற்கு அமெரிக்க நிதியுதவி செய்துவந்ததாக செய்தி வருகிறதே, அது சரியென்றால், நேர்மையான நடைமுறையால் சீனா தங்கள் தொழில் வளங்களை காத்துக்கொள்ளலாம்.   17:11:42 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மே
18
2020
பொது பிரதமரின் செல்வாக்கு அதிகரிப்பு காரணம் கொரோனா தடுப்பு பணி
மணி அடிச்சு கொரானாவை எழுப்பி, விளக்கு காண்பிச்சு ஒன்பது நிமிஷத்தில் விரட்டி தடுத்ததை பாராட்டத்தவர் தேசவிரோதிகளே.   17:06:26 IST
Rate this:
1 members
0 members
7 members
Share this Comment

ஏப்ரல்
30
2020
கோர்ட் சிறுபான்மையினர் கல்லூரிக்கும் நீட் தேர்வு கட்டாயம் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு
தரம் தான் "நீட்" தேர்விற்கான அவசியம் என்பது மாணவர்கள் சேர்க்கையில் மட்டுமா அல்லது சேர்ந்த மாணவர் மருத்துவராக தேர்வான பிறகா? "நீட்" காலத்திற்கு முன்பு படித்து தேறிய மாணவர்கள் தரமற்ற மருத்துவர்கள் என்று எடுத்துக்கொள்ளலாமா? அப்படி தரமற்ற மருத்துவர்கள் இன்று அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்வது நியாயமா? பல வாரிய பாடத்திட்டங்களில் படித்த மாணவர்களுக்கு ஒரு வாரிய பாடத்திட்டத்தில் இருந்து மட்டும் கேள்விகள் கேட்கப்படுவது நியாயமா? எப்படியும் மருத்துவ படிப்பென்பது அனைவருக்கும் ஒரே பாடத்திட்டமாக இருப்பதால் அணைத்து மாநில வாரியங்களும் ஒரேவிதமான பாடப்பகுதிகளையும், தேர்வு முறைகளையும் கடைபிடிக்க மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்.. கிராமப்புறங்களில் இருந்து மாணவர்கள் மருத்துவம் படித்தால் மட்டுமே, அவர்கள் கிராமங்களில் பணிபுரிய வாய்ப்பும், தார்மீக கடமையும் உண்டு.. இன்று "கொரானா" காரணமாக நமது மருத்துவ தேவையின் அவசியம் புரிந்தும், இப்படி தீர்ப்பை சொல்லியது வருத்தமளிக்கிறது..   14:01:51 IST
Rate this:
25 members
0 members
4 members
Share this Comment

ஏப்ரல்
29
2020
பொது தாய் இறந்த ஓரிரு நாளில் பாலிவுட் நடிகர் இர்பான் கான் காலமானார்
மிக இயல்பாக நடிக்கக்கூடியவர். புற்றுநோயில் தப்பினாலும் அது பலருக்கும் நிரந்தரமில்லை..   14:16:32 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

ஏப்ரல்
29
2020
அரசியல் யாருடைய கடனும் தள்ளுபடி செய்யப்படவில்லை புள்ளி விவரங்களுடன் நிர்மலா பதிலடி
இதற்கு பதில் அளிக்கவேண்டியது ரிசர்வ் வங்கியும் அந்த பட்டியலில் உள்ள நபர்களும் தான். இவர்களில் சிலர் சொன்னால் தான் நாம் நம்பலாம். அவர்கள் மேல் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் போடப்பட்டுள்ள வழக்குகளுக்கு இந்த தகவல் உதவுமா? அப்படியானால் அதில் யாருக்கு சாதகம்?   14:12:40 IST
Rate this:
2 members
1 members
6 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X