NALLA THAMBI : கருத்துக்கள் ( 124 )
NALLA THAMBI
Advertisement
Advertisement
ஜூலை
25
2016
சிறப்பு பகுதிகள் காலுக்கு செருப்பா, செருப்புக்கு காலா?
இயற்கை வளங்கள் குறைவாகவும் ,மக்கள் நெருக்கம் அதிகமாகவும் இருக்கும் தமிழகம் போன்ற மாநிலம் , சேவைத்துறையில் முனைப்புடன் செயல்படுவது மிக அவசியம் . அதற்கான அடிப்படைக் கட்டமைப்பை மிக பலமானதாகவும் ஆகச் சிறந்ததாகவும் வைத்துக்கொள்ளவேண்டிய கட்டாயம் உள்ளது . ஆகவே சர்வதேச தரத்திற்கு முடியாவிட்டாலும் இந்தியாவிலேயே மிகச் சிறந்த , எத்தகைய தேர்வினையும் எதிர்கொள்ளும் ஆற்றலுடன் இளைஞர்களை தயாரிக்க பாடத்திட்டங்களை வகுக்க வேண்டும் .   12:03:37 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
28
2016
பொது அகதிகளுக்காக ரூ.2000 கோடி சிறப்பு திட்டம் மத்திய அரசு அதிரடி
ஈழத்திலிருந்து இந்தியா வந்து 25 ஆண்டுகளுக்கும் மேலான ஈழ அகதிகளுக்கு இந்திய அரசு ஏன் இன்னும் குடியுரிமை வழங்க வில்லை ? அவர்களுக்கு கேந்திரிய வித்யாலயாக்களில் இடஒதுக்கீடு உண்டா ? மத்திய உயர்கல்வி நிலையங்களில் இடஒதுக்கீடு உண்டா ?   16:39:09 IST
Rate this:
4 members
0 members
17 members
Share this Comment

ஆகஸ்ட்
18
2016
பொது நீட் தேர்வுக்கு சிறப்பு பயிற்சி தனியார் பள்ளிகளில் துவக்கம்
நீட் போன்ற தேர்வில் வென்ற திறமையானவர் தான் இனிமேல் மருத்துவராக முடியும் என்றால் இதுவரை மருத்துவம் படித்தவரெல்லாம் திறமையற்றவர்களா ? குறைந்த இடங்களுக்கு அதிகம் , மிக அதிகம் பேர் முயற்சிப்பதால் ஒரு கடினமான வடிகட்டி வைக்கிறார்கள் .அவ்வளவே ஆனால் அந்த வடிகட்டி எதன் அடிப்படையில் அமைக்கப் படுகிறது என்பதே கேள்வி . தமிழக பாடத் திட்டத்தில் தமிழக மாணவர்களுக்கு எத்தனை கடுமையான வடிகட்டிகள் அமைத்தாலும் அதை விமரிசிக்க முடியாது . இங்கே பெரும்பான்மையோர் பங்கேற்காத பாடத்திட்டத்தின் அடிப்படையில்தான் என்பதே அநீதி என்கிறோம் . தமிழக அரசின் நிதியில் இயங்கும் மாநில மருத்துவக் கல்லூரிகளின் 100% இடங்களையும் நானே நிரப்புவேன் என்று மத்திய அரசு முயல்வது சரியா ? ஏற்கனவே 15% இடங்களை மத்திய அரசுக்கு மாநில அரசு வழங்கியுள்ளது .. அப்படி ஆல் இந்திய கோட்டா மூலம் மற்ற மாநிலங்களில் இதுவரை படித்த தமிழக மாணவர்கள் எத்தனை பேர் ? இந்தியாவின் உயர்கல்வி நிலையங்களான ஐ ஐ டி , என் ஐ டி , ஐ ஐ எம் , ஐ ஐ எஸ் சி , ஐ ஐ எஸ் சி ஆர் போன்ற கல்வி நிலையங்களில் தமிழக மாணவர் எத்தனை பேர் சேர முடிகிறது ? தமிழக மாணவர்களை விட மற்றைய மாநில மாணவர்கள் அர்ப்பணிப்பும் ,அதீத திறமையும் கொண்டவர்களா ? சிவில் சர்வீஸ் தேர்வுகளில் இருமொழிக் கொள்கை மூலம் கல்வி அறிவும் தார்மீகமும் குறைவாக உள்ள உ.பி , பிஹார் மாணவர்கள் பெரும்பாலோர் தேர்வாவது உங்களை உறுத்தவில்லையா ? தமிழ் உள்ளிட்ட பிற மொழி மாணவர்கள் சிவில் சர்வீஸ் தேர்வெழுதுவதை தடுக்க எடுக்கப்படும் மத்திய அதிகார வர்க்க நடவடிக்கைகள் உங்களுக்கு அநியாயமாகப் படவில்லையா ? வாய்ப்புக்கள் அனைத்தும் அனைத்து பிரிவு மக்களுக்கும் சரிசமமாக பகிர்ந்து அளிக்கப்பட உரிய கவனம் செலுத்தப் படவேண்டுமேயன்றி பாரபட்சம் மட்டுமே நீதியாகி விடக் கூடாது . இங்கே நீட்டும் ,ஜல்லிக்கட்டுக்கு தடையும் அநீதியாக மட்டுமே உள்ளது என்பது 100% உண்மை .   14:29:38 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஆகஸ்ட்
15
2016
அரசியல் தி.மு.க.,வுடன் கூட்டணி இல்லைமாற்று ஏற்பாட்டில் ப.சிதம்பரம்
அறிவாலயத்திலிருந்து அதிகாரப்பூர்வமற்ற செய்தி பசி யிடம் வந்திருக்கலாம். ஸ்டாலின் முதல்வர் கனவை 100%கெடுத்துக் கீழவழியாக்கிய காங்கிரசை சேர்த்து உள்ளாட்சியிலும் முழுதும் மண்ணைக் கவ்வ நாங்கள் தயாராக இல்லை என மஞ்சள் சால்வை மஹான் திருவாய் மலர்ந்து அருளியிருக்கலாம் ..   12:04:38 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

ஆகஸ்ட்
14
2016
அரசியல் 5 மாவட்ட செயலர்கள் மாற்றம் தி.மு.க., தலைவர் கருணாநிதி தீவிரம்
இது நல்ல ஐடியாவா இருக்கே...சசிகலா புஷ்பா என்ற மாபெரும் வீராங்கனை கழகப் பணியில் ஈடுபட்டால், எதிர்கட்சிகளெல்லாம் கன்னத்திற்கும் சேர்த்து ஹெல்மெட் போட்டுக்கொண்டு அலையும் நிலை வரலாம். கனி,சிவா போன்றோரின் பெரும் ஆதரவும் ஏற்கனவே இவருக்கு உள்ளதால், ஸ்டாலின் எதிர்க்கக் கூடும் .ஆனால் அவரை கட்டுப்படுத்த தானைத்தலைவருக்கும் ,நிரந்தர பொது செயலாளருக்கும் வழியா தெரியாது ?   11:59:26 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஆகஸ்ட்
14
2016
சினிமா பாடலாசிரியர் நா.முத்துக்குமார் காலமானார்...
அதிர்ச்சியும் வேதனையும் அடைகிறேன் . மிக இளம்வயதில் அற்புதமான சாதனைகள் புரிந்த ந.முத்துக்குமார் மறைந்தது தமிழ் திரை உலகுக்கும் , அவரது குடும்பத்தாருக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும் . முத்துக்குமாருக்கு எனது கண்ணீர் அஞ்சலி .   11:48:48 IST
Rate this:
0 members
0 members
10 members
Share this Comment

ஆகஸ்ட்
1
2016
பொது அடுத்த ஆண்டு முதல் நீட் கட்டாயம் மசோதா நிறைவேறியது
நாட்டில் மிக வசதியுள்ளோருக்கு மட்டுமே உயர்கல்வி வழங்கப்படும் என்று ஒரு சட்டம் போட்டுவிட்டால் பல பிரச்சனைகள் தீர்ந்து போகும் . குருடன் யானையை பார்த்த கதையாக , தனியார் மருத்துவ கொள்ளையை தடுக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு ஏழைகள் மற்றும் கிராமப்புற மாணவர்களின் வாய்ப்புகளை பறிக்கும் கொடும் செயல் கண்டிக்காத தக்கது . முதலில் இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான பாடத்திட்டம் ,குறைந்த பட்சம் அறிவியல் ,கணித பாடங்களுக்காவது கொண்டுவந்த பின்பு , அனைத்து அரசு பள்ளிகளுக்கும் முறையான ஆய்வக வசதியை நாடெங்கிலும் உருவாக்கிய பின்பு போட்டிக்கானகுறைந்த பட்ச சமநிலையை உறுதி செய்து நீட் என்ன கோட் கூட நடத்தி தேர்வு செய்யுங்கள் .யாரும் எதிர்க்க மாட்ட்டார்கள் . தமிழக மருத்துவக் கல்லூரி இடங்களை மேட்டுக்குடிகளுக்கு மட்டுமே தாரைவார்க்க துடிக்கும் நீதிமான்கள் , ஜல்லிக்கட்டு விவகாரம் போல தடித்த தோலுடைய தமிழர்கள் அமைதியாக இருப்பதில் மட்டற்ற மகிழ்சசி கொள்ளுகிறார்கள் . தமிழக அரசுப்பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கே அரசு பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கும் தகுதி உண்டென்று தமிழக அரசு அவசரத் சட்டம் இயற்ற வேண்டும் .   13:00:51 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

ஜூலை
27
2016
சினிமா கபாலி டிக்கெட் அதிக விலைக்கு விற்றது தவறுதான் - ரஞ்சித்...
ஊரை அடித்து உலையில் போட்டு விட்டு இனி ஒன்றும் தேறாது என்ற நிலையில் உத்தமன் வேடம் போட ரஞ்சித் முயன்றுள்ளார் . அதைக்கூட செய்ய அவதார புருஷர் ரஜினிக்கு மனமில்லை . தாணுவுக்கும் , ஏன் ஒட்டுமொத்த சினிமாக்காரர்களுக்கு திருட்டு டி வி டி பற்றி வாயை திறக்கவே அருகதை இல்லை .   11:52:16 IST
Rate this:
11 members
0 members
26 members
Share this Comment

ஜூலை
26
2016
கோர்ட் பாரம்பரிய விளையாட்டு என்பதற்காக ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்க முடியாது
சிதம்பரம் தீட்சிதர்கள் எந்த அடிப்படையில் மற்ற அந்தணர்களை பூஜை செய்ய அனுமதி மறுக்கிறார்கள் ? அப்படிச் செய்ய அனுமதித்ததுக்கு யார் காரணம் ? பசு வதைச் சட்டம் எந்த அடிப்படையில் அனுமதிக்கப் பட்டுள்ளது ? கோவில் கருவறைக்குள் அந்தணர்கள் தவிர மற்றவர்களை தடுக்கும் முறை எதனால் வந்தது? ஜல்லிக்கட்டு விஷயத்திலும் , மருத்துவ நீட் நுழைவுத் தேர்வு விஷயத்திலும் நீதிமன்றங்கள் பாதிக்கப் பட்டுள்ள மக்களின் மனநிலையையும் ,பெருவாரியான மக்களின் கோபத்தையும் கண்டு கொள்ளாமல் எதேச்சதிகார போக்குடன் சட்டங்களுக்குப் புறம்பான வகையில் செயல்படுவது தெளிவாக தெரிகிறது . மக்களுக்காகத் தான் சட்டமே தவிர ஒரு சில நீதிமன்றங்களின் விருப்பங்களுக்கு மக்கள் அல்ல. இப்படி நோண்டிநோண்டி கேள்விகள் கேட்கும் நீதிமன்றங்கள் சங்கர ராமன் , தா .கிருட்டிணன் , கொலை வழக்குகளிலும் கேட்டிருந்தாலோ நன்றாக இருந்திருக்கும் . சல்மான்கான் மானைச் சுடவில்லை . எதோ ஒரு புலி துப்பாக்கி வாங்கி வந்தா சுட்டு விட்டது ? நீதிமன்றங்கள் பாவப்பட்ட மக்களின் கலை, கலாச்சார நிகழ்வுகளை கேலியோடும் அருவெறுப்போடும் பார்க்கும் பார்வை மாற வேண்டும் . நாம் இப்போது சுதந்திர நாட்டில் வாழுகிறோம் .   12:23:05 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

ஜூன்
9
2016
அரசியல் பீனிக்ஸ் பறவையாக தே.மு.தி.க., எழும் விஜயகாந்த் சபதம்
இந்த ஆளை அரசியலை விட்டு நிரந்தரமாக ஒழித்து தமிழகத்திற்கு மிக நல்ல சேவை செய்த வைகோ அவர்களுக்கு நன்றி. நன்றி.   17:19:15 IST
Rate this:
3 members
0 members
12 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X