அது என்னுடைய அறிக்கை அல்ல, ஆனால் அதில் வந்திருக்கும் உடல்நிலை குறித்த தகவல்கள் அனைத்து உண்மை
" இது எப்படின்னா, மாப்பிளை நானில்லை . ஆனா அவர் போட்டுருக்கிற டிரஸ் மட்டும் என்னது" அது போல
29-அக்-2020 16:25:04 IST
பேருந்து பயணம் என்பதில் ஆரம்பத்தில் அவ்வளவாக கூட்டம் இல்லாமல் தான் இருந்தது. தனியார் பேருந்து ஓடாமல் கூட இருந்தது. ஆனால் நாள் பட நாள் பட அணைத்து பேருந்துகளும் ஓடிக் கொண்டுதான் இருக்கிறது . அதனால் திரையரங்குகள் திறக்க ஆணை பிறப்பித்தாலும் ஆரம்ப கால கட்டத்தில் கூட்டம் வராமல் இருந்தாலும் , போகப் போக கூட்டம் சேரும். டிக்கெட் வழங்காமலும் , எக்ஸ்ட்ரா நாற்காலி போட்டும் படம் ஓட்டலாம்,
27-அக்-2020 20:31:27 IST
சபாஷ் . மும்மொழிக் கொள்கையில் , " மூன்றாவது மொழியை அந்தந்த மாநிலமே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். எந்த மொழியும் திணிக்கப்படாது. மாணவர்கள் விரும்பும் மொழியைப் படிக்கலாம் " அருமையான பதில் . பிறிதொரு மொழி பயில , கற்க , கற்றுக்கொள்ள ஏதுவாகிறது.
19-செப்-2020 17:31:44 IST
நடிகர் சூர்யா நீட் தேர்வை விமர்சித்து அறிக்கை :
அதில் , நம் பிள்ளைகளின் தகுதியையும், திறனையும் வெறும் தேர்வுகள் தீர்மானிக்க அனுமதிக்கக்கூடாது,
இனி பெற்றோர்களும், ஆசிரியர்களும் விழிப்புடன் இருக்க வேண்டும்.
புதிய கல்வி கொள்கையின் அடிப்படையில் , ஹிந்தி மொழி பயில எல்லோருக்கும் ஒரு வாய்ப்பு கிடைக்கும் போது அரசியல் செய்கிறார்களே அதனை தட்டிக்கேட்டு , விருப்பம் உள்ளவர்கள் பிற மொழி கற்க அனுமதியுங்கள் என்று அரசியல்வாதிகளுக்கு கோரிக்கை வைக்கலாமே?
.
பிள்ளைகளின் தகுதியையும், திறனையும் வெறும் தேர்வுகள் தீர்மானிக்க அனுமதிக்கக்கூடாது என்று தாங்கள் சொல்கிறீர்களே , அப்படி என்றால் தேர்வே வேண்டாம் என்கிறீர்களா ? .
அரியர் தேர்வுக்கு கட்டணம் செலுத்தியிருந்தால் போதும் அத்தனையிலும் தேர்ச்சி பெற்றதாக ஒரு அறிவுப்பு வந்ததே அதனை ஏற்றுக் கொள்கிறர்களா ?
தேர்வு எழுதுவதற்கு முன்பே தற்கொலை என்றால் , அவர்கள் நீட் தேர்விற்கு ஆகவில்லை என்று தெரியவருகிறது அல்லவா ?
தேர்ச்சி பட்டியல் வெளியிடும் முன்பாகவே தற்கொலைகள் , தேர்வு சரியாக எழுதவில்லை என்று எண்ணியதும் தற்கொலைகள் , இப்படி எங்கே போய்க்கொண்டிருக்கிறது மாணவ சமுதாயம் .
இதனை தடுத்து நிறுத்த , தேர்வுகளை எதிர் கொள்ள அனைவருக்கும் ஆக்கமும் ஊக்கமும் ஆக இருக்க வேண்டுமே தவிர , கொரோனா அச்சத்தால் உயிருக்கு பயந்து வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது' என்று சொல்லி ஒரு வித எதிர் வினையை தூண்டுகிறாரோ ?
14-செப்-2020 20:18:45 IST
யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம் என்றார். எந்த மொழிக்கும் அவர் வேற்றுமை பார்க்கவில்லை என்பது தெளிவாகிறது. தோத்திரப் பாடல்கள், வேதாந்தப் பாடல்கள், தேசிய இயக்கப் பாடல்கள், தேசியத் தலைவர்கள், காவியங்கள்: கற்பனையும் கதையும், கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம், வசன கவிதை என பட்டி தொட்டிகளிலிலெல்லாம் புகழ் பரப்பிய முண்டாசு கவிஞன் மீசைக்கார கவிஞன் புகழ் பாடுவோம்.
09-செப்-2020 21:10:59 IST
நிதர்சனமான உண்மை.
தனியார் பள்ளிகளில் ஹிந்தி அடிப்படை அளவில் தெரிந்து வைத்திருப்பவர்கள் , தனி வகுப்பில் முறையான பயிற்சி பெற்று பேசவும் எழுதவும் தெரிந்து வைத்து இருக்கிறார்கள். ஆனால் தமிழ் மொழிக் கல்வி மட்டுமே பயின்றவர்கள் பிற மாநில பயணம் மேற்கொள்ளும் போது ஏற்படுகின்ற தடுமாற்றம் மற்றும் தமிழ்நாட்டிலேயே பிற மாநிலத்தவர் பல்வேறு பணிகளை மேற்கொண்டு செய்து வரும் இந்த கால கட்டத்தில் அவர்கள் சர்வ சாதாரணமாக ஹிந்தி பேசும் போது ஏற்படுகின்ற தடுமாற்றம் அதனை அறிந்தவர்களுக்குத் தான் தெரியும். அரசியல் வாதிகளுக்கு இதனை வைத்து அரசியல் செய்ய மட்டுமே தெரியும், பன்மொழி புலமை பெறாவிட்டாலும் இந்திய மொழிகளில் பிறிதொரு மொழி தெரிந்து கொள்வதில் நாம் தான் முயற்சி எடுக்க வேண்டும். இதில் அரசாங்கம் பொது மக்களிடையே கருத்துக் கணிப்பு நடத்தி ஊக்கம் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் .
11-ஆக-2020 12:45:53 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.