Varatharaajan Rangaswamy : கருத்துக்கள் ( 29 )
Varatharaajan Rangaswamy
Advertisement
Advertisement
Advertisement
டிசம்பர்
18
2021
அரசியல் மத மாற்றம் தடை சட்டம் சித்தராமையா மீண்டும் புலம்பல்
நேற்று வரை மாரியம்மனை வழிபாட்டு வந்த ஒருவர் இன்றிலிருந்து ஏசுவையும் வழிபடுவதை பற்றி ஹிந்துக்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால், ஏசுவை வழிபட ஆரம்பித்த ஒருவர், மாரியம்மனையும் மற்ற ஹிந்து தெய்வங்களையும் பிசாசு என்று சொல்லி, ஹிந்து தெய்வங்களை இழிவு படுத்துகிறார் இதுவே நமது கலாச்சாரத்திற்கு மதம் மாற்றும் குழுக்களால் விடப்பட்டுள்ள சவால். இந்த சவாலை எதிர்கொள்ளவே மதம் மாற்ற தடை சட்டம் தேவைப்படுகிறது. ஹிந்துக்கள் 33 கோடி தேவதைகளுள் எந்த தேவதையையும் வழிபட சுதந்திரம் உள்ளது. ஆனால் ஒரு குறிப்பிட்ட தேவதையை ஒரு குறிப்பிட்ட வழிபாட்டு தலத்தில் வழிபடுவதால், வழிபாட்டு அடைப்படையில் மோதல்கள் மற்றும் சண்டை சச்சரவுகளை நமது சமுதாயத்தில் உருவாக்க நினைப்பவர்களை பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது என்பதையே கர்நாடக பாரதீய ஜனதா அரசு இயற்ற முற்படும் சட்டம் பறைசாற்றுகிறது.   03:44:34 IST
Rate this:
0 members
0 members
2 members

செப்டம்பர்
22
2021
அரசியல் தியாகராஜன் ஊர் வம்பு இழுப்பது சரியல்ல டி.கே.எஸ்.இளங்கோவன் பளிச் அறிவுரை!
மதிப்பிற்குரிய தியாகராஜன் அவர்களுடைய ஆணவப் பேச்சீன் காரணமாக நிச்சயமாக அவர் வகித்து வரும் பதிவியை ஒரு நாள் துறக்க நேரிடும் என்பதே எனது அனுமானம். அரசியல் தலைவர்கள் மட்டுமல்ல, மதிப்பிற்குரிய ஜக்கி வாசுதேவ் போன்ற ஆன்மீக பெரியவர்களையும் வாய்க்கு வந்தபடி பேசுவது நிச்சயம் நிதியமைச்சர் தியாகராஜனுக்கு சிக்கலை உருவாக்கும்.   04:01:30 IST
Rate this:
4 members
0 members
18 members

ஜூலை
4
2021
சிறப்பு பகுதிகள் அமெரிக்க தடுப்பூசி அரசியலை புரிந்து கொள்வோம்!
தடுப்பூசிகள் போதுமான அளவிற்கு தயாரிக்கப்பட்டு அனுப்பப்படுகிறது. மாநில அரசுகளின் விநியோக குளறுபடிகளால் பிரச்சினை உண்டாகிறது. மாநில அரசுகள் மத்திய அரசை குறை கூறுவதிலேயே குறியாக இருக்கின்றன. புள்ளி விவரங்களுடன் மத்திய அரசு பதிலளிக்கிறது. வாதத்திற்கு மருந்து உண்டு. பிடிவாதத்திற்கு மருந்து கிடையாது. தூங்குபவனை எழுப்பலாம். தூங்குவது போல் நடிப்பவனை எழுப்ப முடியுமா?   04:51:15 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
8
2021
அரசியல் வரி வசூல் மிரட்டலால் அரசு இயங்குகிறது ராகுல்
தேர்தல் நேரத்தில் பிரியாணி, பாட்டில், பணம் ஆகியவற்றுக்கும், ஏராளமான இலவசங்களை அறிவித்த காரணத்திற்காகவும் வாக்களித்த நாம், சில பொருட்களின் விலைவாசியை சகித்துக் கொண்டுதான் ஆக வேண்டும். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையில் விதிக்கும் வரியில் ஒரு பகுதிதான் விவசாயிகளுக்கான மானியமாகவும், ஒரு பகுதி சாலை மேம்பாட்டுக்காகவும், மற்றொரு பகுதி கொரோனா பேரிடர் கால நிவாரண இலவச ரேஷன் மளிகை பொருட்களுக்காகவும் செலவிடப் படுகிறது. விலையை குறைக்க முடியுமென்று நிரூபிக்க பாரதீய ஜனதா ஆளும் 14 மாநிலங்களில் பெட்ரோல், டீசல் மீது வரி குறைக்கப்பட்டு ஒரு லிட்டருக்கு 5 ரூபாய் வரை விலை குறைக்கப்பட்டுள்ளது. பாரதீய ஜனதா ஆட்சியில் இல்லாத மாநிலங்கள் ஒத்துழைத்தால் பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி வரி விதிப்பிற்குள் கொண்டுவர முடியும். அவ்வாறு செய்தால் பெட் ரோல் டீசல் விலை நிச்சயம் கணிசமாகக் குறையும். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகள் மனது வைக்குமா?   04:52:27 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
2
2021
பொது ஒன்றியத்தில் ஒளிந்திருக்கிறதா பிரிவினை சிந்தனை?
உடனடியாக மத்திய உள்துறை அமைச்சகம் இந்த விஷயத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.   04:22:30 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
7
2021
எக்ஸ்குளுசிவ் 15 நிமிடங்களில் ஆக்சிஜன் குறைபாட்டை சரி செய்யலாம் சொல்கின்றனர் ஆயுர்வேத மருத்துவர்கள்
மிகவும் பாராட்டத்தக்க செயல்பாடு. இந்த தம்பதிகளின் அனுபவத்தை மற்ற ஆயுர்வேத மருத்துவர்களுக்கும் தெரிவித்து, தேவை ஏற்பட்டால் பயிற்சிக்கும் அரசு ஏற்பாடு செய்யலாமே   04:52:17 IST
Rate this:
0 members
0 members
1 members

பிப்ரவரி
6
2021
பொது விவசாயிகள் சாலை மறியல் டுவிட்டரில் டிரெண்டிங்
விவசாயி தன்னுடைய விலை பொருட்களை சந்தைப்படுத்துவதில் உள்ள சிரமங்களை களைவதற்கு மத்திய பாரதீய ஜனதா அரசு மிகவும் அற்புதமான மூன்று திருத்தங்களை கொண்டு வந்துள்ளது. இந்த சட்டங்களை யார் எதிர்த்தாலும் என்னை போன்ற படித்த விவசாயியை திசை திருப்ப முடியாது. விவசாயி பிச்சைக்காரனாக நீடிப்பது பல அரசியல் கட்சிகளுக்கு அவசியம் என்பதாலேயே அப்பாவி விவசாயிகள் ஏமாற்றப்படுகிறார்கள். விவசாய சட்டங்களை எதிர்க்க போதுமான ஆதாரங்கள் இருந்தால் பாராளுமன்றத்தில் விவாதத்தின்போது முன்வைக்கலாமே கொழுத்த, வசதி படைத்த இடை தரகர்களை தூண்டிவிட்டு எதிர்க்கட்சிகள் நாடகமாடுகின்றன. சமூக விரோத, தேச விரோத சக்திகளுக்கு வெளிநாட்டு ஆதரவும் இருக்கிறது. எனவே போராட்டம் தொடர்கிறது. என்னை போன்ற சிறு விவசாயிகள் இந்த சட்டங்களை வரவேற்கிறோம். இந்த விவசாய சட்டங்கள் அவசியம் அமுல்படுத்தப்பட வேண்டும். மாநில அரசு விரும்பினால் அமல் படுத்தலாம் என்று திருத்தம் கொண்டுவரலாம். எந்தெந்த மாநிலங்கள் விவசாயிகளுக்கு எதிரி என்பது வெளிப்படையாக தெரிந்துவிடும்.   04:15:09 IST
Rate this:
3 members
0 members
7 members

ஜனவரி
25
2021
பொது வாராக் கடன்களுக்கு தனி வங்கி பொறுப்பை தட்டிக் கழிக்கும் முயற்சியா?
வாராக்கடன்களுக்காக தனி வங்கி என்பதை ஏற்க முடியாது. தங்கள் கருத்துடன் நூறு சதவீதம் உடன்படுகிறேன்.   04:46:58 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜனவரி
9
2021
பொது கர்நாடகாவில் ஏழை பிராமண அர்ச்சகர்களை மணந்தால் ரூ.3 லட்சம் நிதியுதவி
மிகவும் நல்ல, பாராட்டப்பட வேண்டிய முயற்சி கோவிலில் பணிபுரியும் அர்ச்சகர்களும் தங்கள் வேலையின் புனிதத்தை உணர்ந்து செயல்பட வேண்டும்.   05:17:12 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
15
2020
அரசியல் நிர்மலா சீதாராமன் உரை 10 லட்சம் பேர் பார்க்க ஏற்பாடு
மிகவும் சோதனையான கால கட்டத்தில் நமது நாட்டின் பொருளாதாரம் மட்டுமல்ல, உலகெங்கிலும் பொருளாதார சூழ்நிலை இருக்கிறது. இந்த நிலையிலிருந்து நாம் எழுவதற்கு சிறப்பாக செயல்பட்டு வரும் மதிப்பிற்குரிய பாரதப் பிரதமர் நரேந்திர மோதி அவர்களுக்கும் மதிப்பிற்குரிய நிர்மலா சீதாராமன் அவர்களுக்கும் கோடானு கோடி வாழ்த்துக்கள்.   08:09:35 IST
Rate this:
23 members
0 members
9 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X