இந்த 500 நாட்களில் எவ்வளவு சாதாரணமாக உயர்ந்திருக்க வேண்டுமோ, அதை 500 நாட்களுக்கு முன்பே உயர்த்தியதால், இத்தனை நாட்கள் விலை உயர்த்தப்படாமல் இருக்கிறது. - இது என்ன சாதனையா?
03-அக்-2023 09:31:59 IST
இப்போ மட்டும் சனாதனம் மலையேறிவிடும். தமிழர்களும் கன்னடர்களும் வேறு வேறு நாட்டவர் ஆகிவிடுவர். சுப்ரீம் கோர்ட்டு ஆர்டரின் படி கர்நாடகா தண்ணீர் திறந்து இருக்கிறது. இதில் சனாதனம் பேசும் பி.ஜெ.பி பந்த் நடத்துகிறது. கொடுமைடா. இப்போ மட்டும், பி.ஜெ.பி காரன் என்று பேசுவதில்லை...மாறாக கர்நாடக அரசியல்வாதிகள் என்று பொத்தாம் பொதுவாக சொல்லிவிடுவது.....
26-செப்-2023 11:43:14 IST
அடிச்சி விடு ராஜா.... காசா பணமா? உங்கள் எஜமானர்கள் சொல்வதை கூவுகிறீர்கள். தமிழ்நாடு மாதிரி சிறப்பான இன்னொரு மாநிலம் என்ன இருக்கிறது சொல்லுங்கள் பார்ப்போம்.
25-செப்-2023 13:28:59 IST
இவர் சொல்வது உண்மை. இப்போ உங்கள் வீட்டில் 80 வயதிற்கு மேலே உள்ளவர்கள் இருந்தால் கேட்டுப்பாருங்கள். மதமாற்றம் அப்பாவு அவர்கள் குறிப்பிட்ட பள்ளிகளில் நடப்பது இல்லை. இப்படிப்பட்ட பள்ளிகளில் 90% மாணவர்கள் கிறிஸ்தவர்கள் அல்லாதவர்கள். நானே அப்படிப்பட்ட பள்ளியில் தான் என் பள்ளிப்படிப்பை முடித்தேன். நான் என்ன கிறிஸ்தவன் ஆகி விட்டேனா. அப்படி இருந்திருந்தால், அங்கு படித்து முடித்த அனைவருமே கிறிஸ்தவர்களாக அல்லவா மாற்றப்பட்டு இருக்கவேண்டும். சமத்துவம் கிடைக்க பாடுபட்ட அனைவரையும் நினைவுகூறி - நன்றி தெரிவிக்கும் நேரம் இது.
22-செப்-2023 11:09:17 IST
"சனாதனம் என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு நித்தியமானது, காலத்தால் அழியாதது என்று பொருள். ஒருவர் தன் வாழ்வை ஒழுக்கமாகவும் நிறைவாகவும் வாழ உதவும் கோட்பாடுகளே சனாதன தர்மம் என்பார்கள். இந்த கோட்பாடுகள் சாதி, மதம் போன்றவற்றைப் பொருட்படுத்தாமல் அனைவருக்கும் பொருந்தும். நேர்மை, உயிர்களை காயப்படுத்தாமல் இருத்தல், தூய்மை, நல்லெண்ணம், கருணை, பொறுமை, சகிப்புத்தன்மை, சுயக்கட்டுப்பாடு, பெருந்தன்மை, துறவு போன்ற நற்பண்புகள் ஆகியவை பொதுக் கடமைகளில் அதாவது சனாதான தர்மத்தில் அடங்கும்" - இங்கு பொங்கியெழும் அனைத்து பி.ஜெ.பி மக்கள் ஒருவருக்கும் தூய்மை, நல்லெண்ணம், கருணை, பொறுமை, சகிப்புத்தன்மை, சுயக்கட்டுப்பாடு, பெருந்தன்மை இவைகளில் ஒன்றாகிலும் இருக்கிறமாதிரி தெரியவில்லை. ஒரு சாமியார் தலையை எடுக்கவேண்டும் என்று பேசுகிறார். சனாதனம் உண்மை என்றால் அதை யாரும் அழிக்க முடியாது - அதற்கு யாரும் முட்டுக்கொடுக்கவேண்டிய அவசியமே இல்லை...
06-செப்-2023 23:42:46 IST
12 ம் வகுப்பு படித்து முடித்திருக்கும் சிறுவனை MG காரை ஓட்ட கொடுத்திருக்கிறாரகள், அதுவும் ஹைவேய்ஸில். அவனுக்கு என்ன பக்குவம் இருந்திருக்கும்.... தானும் செத்து, தந்தையையும் கொன்று, மினி லாரியில் போன்றவர்களையும் கொள்ளப்பார்த்திருக்கிறான். இனியாவது இதுபோன்ற துர்நிகழ்வுகளை பார்த்து, இந்த தவற்றை செய்து கொண்டிருக்கும் பெற்றோர் திருந்துங்கள்.
03-செப்-2023 10:09:12 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.