Pats : கருத்துக்கள் ( 528 )
Pats
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
1
2020
பொது தூத்துக்குடியால் சர்ச்சையில் சிக்கும் போலீஸ் அதிகாரிகள்
மக்கள்தொகை குறைவாக, கல்வி அறிவு மிகுந்து, பெரும்பாலான மக்கள் வசதியாக இருக்கும் நாடுகளில் (சுவிஸர்லாந்து, ஸ்வீடன், நார்வே, ஐஸ்லாந்து, நியூசிலாந்து) காவல்துறை கட்டிப்பிடி வைத்தியம் செய்து சட்டத்தை அமல்படுத்தலாம். பங்கிலாதேஷ், பாகிஸ்தான், சீனா போன்ற மக்கள்தொகை பெருகி வழியும் நாடுகளில் அடக்குமுறை மூலம், பயத்தின் மூலம் சட்டத்தை அமல்படுத்தலாம். இந்தியா போன்ற மக்கள்தொகை பெருகி வழியும் ஜனநாயக நாட்டில், படிப்பறிவு குறைந்த, ஏழ்மை நிறைந்த, எடுத்ததற்கெல்லாம் கேள்வி கேட்கும், ஆளாளுக்கு சட்டம் பேசும் ஆனால் சட்டத்தை மதிக்க மறுக்கும் மக்கள் நிறைந்த நாட்டில், காவல்துறை சட்டத்தை அமல்படுத்துவது பெரும் கஷ்டம். வாயில் சொன்னால் கேட்க மறுக்கும், எதிர்த்துப் பேசும், எல்லாவற்றிற்கும் போராட்டம் செய்யும், வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் கூட்டமாக வன்முறையில் ஈடுபடும், சுயநலம் மிகுந்த மக்களிடம் காவல்துறை கடுமையாக நடந்துகொண்டால் மட்டுமே சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்த முடியும். அரசு நிர்வாகத்தில் காவல்துறையும் கை ஓங்கியிருந்தால் மட்டுமே பெரும்கூட்டம் கட்டுக்குள் இருக்கும். கேட்பதற்கு கசப்பாக இருந்தாலும் இதுதான் உண்மை.   17:33:02 IST
Rate this:
16 members
2 members
19 members

ஜூலை
1
2020
உலகம் உங்கள் வேலையை பாருங்கள் ஹாங்காங் சட்ட விமர்சனம் குறித்து சீனா கருத்து
ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு. யாரையும் மதிக்காதவன், யாராலும் மதிக்கப்படாமல் போவான்.   16:11:17 IST
Rate this:
0 members
0 members
8 members

ஜூலை
1
2020
பொது தூத்துக்குடியால் சர்ச்சையில் சிக்கும் போலீஸ் அதிகாரிகள்
இதிலிருந்து பிரச்சனை அதிகாரிசுளிடம் இல்லை என்று தெரிகிறது. என்னிக்கி தூத்துக்குடி தீய, தீண்டத்தகாத கட்சியிடம் போச்சோ, அன்னியில இருந்து தூத்துக்குடிக்கு திருகுவலி ஆரம்பம்.   16:08:18 IST
Rate this:
10 members
0 members
20 members

ஜூன்
29
2020
அரசியல் டில்லி பரிசோதனை முறை முதல்வருக்கு ஸ்டாலின் ஆலோசனை
வேண்டுகோளுக்கும் ஆலோசனைக்கும் வித்யாசம் தெரியாத ...   21:23:26 IST
Rate this:
0 members
0 members
3 members

ஜூன்
29
2020
அரசியல் டில்லி பரிசோதனை முறை முதல்வருக்கு ஸ்டாலின் ஆலோசனை
(செந்தில்-கவுண்டமணி கேள்வி பதில்): குருதி நீரியல் பரிசோதனை முறைனா என்னண்ணே? ரத்தத்துல தண்ணியவிட்டு கலக்கி குடிக்கணுமாம்னே? அடேய் மாங்கா மடையா, அதெல்லாம் ஒனக்கு புரியாதுடா. பீகார்ல இருந்து பிரசாந்த்கிஷோர்னு ஒரு தமிழ் அறிஞர் அறிவாலயம் வந்திருக்கார். அவரு மூளைல மொளைச்ச அறிவுடா. தேங்கா மண்டையா.   21:19:01 IST
Rate this:
0 members
0 members
4 members

ஜூன்
29
2020
சினிமா என்ன ஒரு முட்டாள்தனமான செயல் - எஸ்பிபி கோபம்...
பெண் மானே சங்கீதம் பாடி வா, அம்மானை பொன் ஊஞ்சல் ஆடி வா - இளையராஜாவின் இசையில், நீங்கள் இருவரும் இணைந்து பாடிய பாடலை சற்றுமுன்னர்தான் கேட்டேன். இப்போதும் காதில் ரீங்காரமிட்டுக்கொண்டிருக்கிறது. நீவிர் இருவரும் ஆற்றிய இசைத்தொண்டு மகத்தானது. வாழிய பல்லாண்டு.   20:51:30 IST
Rate this:
0 members
0 members
6 members

ஜூன்
30
2020
பொது சீனாவை எதிர்கொள்ள கூடுதலாக ஸ்பைஸ் 2000 ரக குண்டுகளை வாங்க முடிவு
பிரான்ஸ் ஜூலை மாத இறுதிக்குள் 4 முதல் 6 ரஃபேல் போர் விமானங்களை முழு ராணுவ தாக்குதல் தளவாடங்களுடன் இந்திய விமானப்படையிடம் ஒப்படைக்க சம்மதம் தெரிவித்துள்ளது. மேலும் 16 இந்திய விமானப்படை விமானிகள் ஏற்கெனவே பயிற்சியை முடித்து, அவர்களே ரஃபேல் போர் விமானங்களை நேரடியாக இந்தியாவிற்கு கொண்டுவருவதற்காக பிரான்ஸ் நாட்டிற்கு சென்றுள்ளனர். இஸ்ரேல் விண்வெளி பாதுகாப்பு ராடர்களுடன் மற்றும் ஏவுகணைகளை காஷ்மீருக்கு அனுப்பி வருகிறது. அமெரிக்கா துல்லியமாக தாக்கும் பீரங்கி ராக்கெட்டுகளை காஷ்மீருக்கு அனுப்பி வருகிறது. மேலும் இந்திய ராணுவத்திற்கு தேவையான சீன-பாக் எல்லைப்பகுதியின் விண்கோள்களின் வீடியோ மற்றும் புகைப்படங்களை நேரடியாக வழங்கிவருகிறது. ரஷ்யா இந்திய ராணுவத்திற்கு தேவையான பீரங்கி ராக்கெட்டுகள், தோட்டாக்கள், வெடிப்பொருட்கள், விமானப்படைக்கு தேவையான ஏவுகணைகளை சீனாவின் வேண்டுகோளையும்/மிரட்டல்களையம் மீறி இந்தியாவிற்கு அனுப்பத் துவங்கியுள்ளது. இவைதவிர கப்பல் படைக்கு தேவையான ஆயுதங்கள், ராக்கெட்டுகள் ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ளது. இந்த செய்திகள் எல்லாம் ஏற்கெனவே பொதுவெளியில், பத்திகைகளில் வெளிவந்தவை.   20:44:23 IST
Rate this:
0 members
0 members
14 members

ஜூன்
30
2020
பொது கோடிக்கணக்கானவர்கள் வாழ்வாதாரத்திற்கு எங்களை சார்ந்துள்ளனர் டிக் டாக் அறிக்கை
ஜனநாயகத்தை பற்றி யார் பேசுகிறார்கள் பாத்தீங்களா கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுதாம் எங்கே... சீனாலயா? இடத்தை காலிபண்ணிட்டு ஓடுங்கடா.   19:47:43 IST
Rate this:
0 members
0 members
15 members

ஜூன்
30
2020
பொது இந்தியாவின் 423 மீட்டர் பகுதியை ஆக்கிரமித்த சீனா
துருக்கி - வெறும் 8 கோடி மக்களை கொண்ட நாடு. கிரீஸ் நிலப்பரப்பை ஆக்கிரமித்து, கருங்கடல் - மத்தியதரைக்கடல் இணைப்பு நீர்க்கால்வாயை கட்டுப்படுத்துகிறது (இன்றைய இஸ்தான்புல் நகரம் - மலைப்பகுதிகள் நிறைந்த இடம்.). இதனால் ரஷ்யா கப்பல்கள் மத்தியதரைக்கடலுக்குள் நுழையவும், ஐரோப்பிய/அமெரிக்க கப்பல்கள் கருங்கடலுக்குள் நுழையவும் துருக்கியின் அனுமதியின்றி முடியாது. துருக்கியில் இர்சிர்லிக் என்ற நகரில் அமெரிக்க அணுஆயுத மையம் உள்ளது. சிரியாவின் லடாகியா நகரில் ரஷ்யாவின் கெமீமிம் அணுஆயுத மையம் உள்ளது. இரண்டு நாடுகளுக்கும் துருக்கிய முக்கியம். அதே போல, இந்தியா பாகிஸ்தான் ஆக்ராமித்துள்ள கில்கிட்-ல் உள்ள ஸ்கார்டு மலைப்பகுதியை கைப்பற்றினால் பாக்-சீன CPEC பொருளாதார வழித்தடம் இந்தியாவின் கட்டுப்பாட்டில் வந்துவிடும். ஆனால் அதற்கு தகுந்த விலையை இந்தியா கொடுக்க வேண்டும். இந்தியர்கள் அதற்கு தயாராக இருக்க வேண்டும். என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.   13:45:26 IST
Rate this:
0 members
1 members
23 members

ஜூன்
30
2020
பொது கொரோனா நோயாளிகளுக்கு வீட்டுத் தனிமை மதுரையில் புதிய திட்டம்
என்னடா இது, மதுரைக்கு வந்த சோதனை சொக்கா... மதுரை... என் மனதில் நீங்கா இடம்பிடித்த திருநகர். மதுரைக்கு போக நினைத்தாலே மனதில் ஒரு துள்ளல், மகிழ்ச்சி ஏற்படும். சொக்கநாதர்-மீனாட்சியம்மை கோயில் கோபுரத்தை பார்த்தவுடன் ஒரு பரவசம் மனதில் தோன்றும். என்று மீண்டும் மதுரைக்கு வரலாம்... மதுரைவாழ் அன்பர்கள் சோதனைகளில் இருந்து மீண்டு வந்து, எனை மீண்டும் வரவேற்க வேண்டும். அன்புடன்...   12:57:08 IST
Rate this:
0 members
0 members
4 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X