Pats, Kongunadu, Bharat, Hindustan : கருத்துக்கள் ( 681 )
Pats, Kongunadu, Bharat, Hindustan
Advertisement
Advertisement
Advertisement
டிசம்பர்
8
2022
அரசியல் குஜராத்தில் பா.ஜ.,வுக்கு ஏறுமுகம் காங்., பின்னடைவு
வந்தியதேவ வல்லவரையன் சார், உங்களுக்கான பதில் "முடியும் ஆனால் முடியாது" என்பதுதான். மக்கள் உழைத்து முன்னேற வழிவகை செய்து, கல்வி, மருத்துவம், உள்கட்டமைப்பு, விவசாய உற்பத்தி, உணவு பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு, சமநீதி, போன்றவற்றில் பொறுப்புடன் செயலாற்றி, ஊழலற்ற நிர்வாகமும் செய்தால் ஒரே கட்சியால் தொடர்ந்து பதவியில் இருக்க முடியும். அதே சமயம் மக்கள் ரோபோக்கள் அல்ல. எதிர்கட்சிகளிலும் நல்லவர்கள் உருவாக முடியும். ஆகவே சில காலத்திற்கு பிறகு மக்கள் ஒரு மாற்றத்தை விரும்பவே செய்வர். ஆகையினால் ஒரே கட்சியால் தொடர்ந்து ஆட்சி செய்ய முடியாது என்பதும் உண்மையே. ஆனால் பிஜேபி வேறு மாதிரி. இங்கு திறமை உள்ள யார் வேண்டுமானாலும் கட்சியில் முன்னுக்கு வர முடியும். உட்கட்சி ஜனநாயகம் ஓங்கி சிறந்து விளங்கும் கட்சி பிஜேபி என்பது மறுக்க முடியாத உண்மை.   17:25:05 IST
Rate this:
1 members
0 members
9 members

டிசம்பர்
6
2022
தமிழகம் கேரளாவை பாராட்டும் கழிவு அரசியல்
கம்யுனிசமும், மதவாதமும் குப்பைதான். கேரளா முழுவதும் இவை இரண்டும் மட்டுமே நிறந்துள்ளது.   09:12:57 IST
Rate this:
1 members
0 members
8 members

டிசம்பர்
5
2022
உலகம் சும்மா இருக்க ஒரு கோடி சம்பளம் மனஉளைச்சலால் நீதிமன்றத்தை நாடிய நபர்
செய்தி ஸ்ஸரியான்னு பாருங்க. அயர்லாந்தா இல்லை... தமிழ்லாந்தா... நம்ம ஊர்ல பெரும்பாலான அரசு ஊழியர்கள் சும்மா இருந்துதான் சம்பளம் வாங்குகின்றனர்.   18:04:39 IST
Rate this:
3 members
1 members
8 members

டிசம்பர்
4
2022
அரசியல் ஒரே மேடையில் ஒரே நபரை மணந்த இரட்டை சகோதரிகள் போலீஸ் விசாரணை
டிராவல்ஸ் நடத்துனர்களுக்கு இது சகஜம். புறப்படும் ஊரில் ஒரு குடும்பம், சேரும் ஊரில் ஒரு குடும்பம்.   18:53:37 IST
Rate this:
2 members
0 members
6 members

டிசம்பர்
3
2022
தமிழகம் நரிக்குறவர் பெயரில் குறவர் வார்த்தையை நீக்க வழக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
தமிழ் குறவர் என்று அழைத்தால் சிறப்பாக இருக்கும். திருநாவுக்கரசர், திருஞான சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரையும் தமிழ்க் குறவர்கள் என்று அழைப்பதுபோல, இனி மலைகுறவர்கள், குறவர், குறவன், குறத்தி என்போரை தமிழ் குறவன் என்று அழைப்பு. முருகப்பெருமானுக்கும் தமிழ்க் குறவன் என்ற சிறப்புப் பெயர் உண்டு.   08:37:00 IST
Rate this:
2 members
0 members
2 members

டிசம்பர்
2
2022
பொது கோவில்களில் மொபைல் போனுக்கு... தடை!
கோவில்களின் உட்புறம் நடக்கும் தவறுகள், ஆலய அழிப்பு நிகழ்வுகள் மக்களுக்கு தெரியாமல் போகும். மொபைல் போன்கள் கோவிலுக்குள் தேவை இல்லைதான். ஆனால் இந்த தடையை அமல்படுத்தும் முன் ஊர் பெரியவர்கள், ஆலய சிவாச்சாரியார்கள், தீட்சிதர்கள், குருக்கள், மடாதிபதிகள் முன்னிலையில் அனைத்து ஆலயங்களின் அனைத்து பகுதிகளும் முழுமையாக 3D தொழில்நுட்ப முறையில் விடியோ எடுத்து ஆவணப்படுத்த வேண்டும். மேலும் ஆலயங்களின் வாயில்களில் கேமராக்கள் பொருத்தி 24 மணிநேரமும் பதிவு செய்ய வேண்டும்.   11:06:43 IST
Rate this:
0 members
0 members
8 members

டிசம்பர்
3
2022
பொது மக்களிடம் மாற்றம் ஏற்படுத்த நல்ல ஊடகங்கள் தேவை
நியூஸ் என்றால் நடக்காததை நடந்தது போலவும், நடந்ததை நடக்காதது போலவும் திரித்து கூறுவது.   10:47:30 IST
Rate this:
0 members
1 members
2 members

டிசம்பர்
3
2022
பொது ஏடாகூட வீடியோவால் சிக்கிய நீதிபதி மீது நடவடிக்கை?
பெண்கள் ஆணையம் சிறப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்   08:04:31 IST
Rate this:
0 members
0 members
4 members

டிசம்பர்
2
2022
சினிமா செய்திகள் கனவாய் மறைந்து போன கவர்ச்சி தாரகை சில்க் ஸ்மிதாவின் 62வது பிறந்ததினம்...
ஏழையின் சொல் அம்பலம் ஏறாது என்பதற்கு விஜயலக்ஷ்மி என்ற சில்க் ஸ்மிதா அவர்களின் 19 வயது முதல் 36 வயது வரை, வெறும் 16-17 ஆண்டுகள் மட்டுமே ஜொலித்து மறைந்தார். அவர் சம்பாதித்த பணம் என்ன ஆனது? அவர் இறப்பு விசாரணையின் முடிவு என்ன? அவரின் பெற்றோரின் நிலை, கணவர் எங்கே? பதில் தெரியாத கேள்விகள். சில்க் ஸ்மிதாவின் சிரிக்கும் கண்களின் முன்னே அனைத்தும் மறைந்துவிட்டன.   13:53:12 IST
Rate this:
0 members
0 members
0 members

டிசம்பர்
2
2022
பொது குப்பையிலிருந்து இயற்கை எரிவாயு தனியாருடன் இணைந்து மாநகராட்சி அசத்தல்
"தனியாருடன் இனைந்து", "சப் காண்ட்ராக்ட்" - மாநகராட்சியில் அரசு ஊழியர்கள் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள். ஏன் எதற்கெடுத்தாலும் தனியார், சப் காண்ட்ராக்ட்? இந்த அரசு ஊழியர்கள் எல்லோரும் என்னதான் செய்கின்றனர்? சில ஆண்டுகளுக்கு முன் என் வீட்டிற்கு குடிநீர் இணைப்பு கொடுக்க தர்மபுரி பகுதியில் இருந்து அன்றாட கூலி வேலை செய்யும் கணவன்-மனைவி கைக்குழந்தையுடன் வேலை செய்தனர் - இருவருக்கும் சேர்த்து ₹1000 சம்பளம். வேலை செய்ய வேண்டிய நான்கு அரசு ஊழியர்களும் காலையில் போனவர்கள் மாலையில் பைக்கில் வந்து ஆளுக்கு 1000 ரூபாய் லஞ்சம் வாங்கிக்கொண்டு போனார்கள். வேலைசெய்த தம்பதிக்கு சாப்பாடு நான் வாங்கி கொடுத்தேன்.   09:57:38 IST
Rate this:
0 members
0 members
4 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X