ராஜ்யசபா சீட் என்பது மதிப்பு மிக்கது. அதை சினிமாக்காரர்கள், கிரிக்கெட் வீரர்கள் போன்ற கோமாளிகளுக்கு குடுத்து அனுப்புவது சுத்த பைத்தியக்காரத்தனம். மன்மோகன் சிங், நிர்மலா சீதாராமன் போன்ற பொருளாதார மேதைகள், படித்த அறிவாளிகள், நேர்மையான திறமைசாலிகள் லோக்சபா தேர்தலில் நின்று போட்டியிட்டு ஓட்டுக்கு ஐந்தாயிரம் பத்தாயிரம், குடம் குந்தாணி என்று அள்ளிவீசும் அரசியல்வாதிகளை ஜெயிக்கமுடியாது. அப்படி ஒருத்தரை அனுப்பினால் கட்சிக்கு மாநிலத்துக்கு ஏதாவது நன்மை விளையலாம். பிரகாஷ்ராஜ் போன்றவர்களால் தம்படிக்கு பிரயோஜனமில்லை. ஒய்வு பெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரி அல்லது ஒய்வு பெற்ற நீதிபதி, பொருளாதார பேராசிரியர், தொழில்துறையில் சாதனை படைத்தவர்கள் போன்றவர்களை அனுப்பினால் ஏதாவது விவாதம் நடத்துவார்கள்.
18-மே-2022 17:47:36 IST
அப்படியே பாரதரத்னா விருதையும் குடுத்து உட்டுடுங்கப்பா. பொறவு இன்னும் எதுக்கு இந்த கோவை குண்டுவெடிப்பு கேசில் ஜெயிலில் இருக்கும் உத்தமர்களை வைத்துக்கொண்டு. அவிங்களையும் பத்திவிட வேண்டியதுதானே. கிருஸ்தவருக்கு ஒரு நியாயம் இஸ்லாமியர்களுக்கு ஒரு நியாயமா. நல்ல கதையா இருக்கே. திட்டமிட்டு நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் உடல் சிதறி செத்தது முன்னாள் பாரத பிரதமர் ராஜீவகாந்தி மட்டுமா? அவரோடு சேர்ந்து பதினாறு பேர் பலியாகி இருக்கிறார்கள் கடமையை செய்துகொண்டு இருந்த காவல்துறை அதிகாரிகள், பெண்காவலர், பெண்கள், ஒரு பெண்குழந்தை, ஒரு கல்லூரி மாணவி உட்பட 16 பேர் படுகொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள்.. இருபதுக்கும் மேற்பட்டோர் உடல் பாகங்களை இழந்து இன்றைக்கும் மரண அவஸ்தையில் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். நாற்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து இருக்கிறார்கள். இதுக்கு முன் கீழ் கோர்ட், ஸ்பெஷல் கோர்ட், ஹைகோர்ட், சுப்ரீம் கோர்ட் கொடுத்த தீர்ப்புகளுக்கு என்ன மரியாதை.
18-மே-2022 16:19:34 IST
சின்னாத்தா அந்தளவுக்கெல்லாம் யோசிக்க மாட்டாரு. அவரு சொன்னது நிஜமான குரங்கு கதை. தஞ்சை ஜில்லாவில் மாந்தோப்புகளும் அதிகம் குரங்குத்தொல்லையும் அதிகம் தூங்க போகும் முன் ரெண்டு வயசு குழந்தைக்கு சொல்லும் கதை. எனக்கு ரெண்டு வயசு இருக்கும் போது என் பாட்டி சொன்ன கதை என் மகனுக்கு ரெண்டு வயசு இருக்கும் போது எங்கம்மா சொன்ன கதை அதைத்தான் சின்னாத்தா சொல்லிருக்கு.
16-மே-2022 15:01:41 IST
அதிமுக சார்பாக ராஜ்யசபா எம்.பி பதவிக்கு தகுதியான நபரை அனுப்பவேண்டும். சும்மா பெஞ்சு தேய்க்குற ஆளை அனுப்ப கூடாது. டெல்லி பாலிடிக்ஸ்க்கு இந்த கோகுல இந்திரா, வளர்மதி போன்ற கோமாளிகளை அனுப்பக்கூடாது. மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் தமிழக டிஜிபி யுமான, நேர்மையான அதிகாரியாக மனிதராக அறியப்பட்ட ஆர்.நடராஜ் ஐ.பி.எஸ் அவர்களை ராஜ்யசபா எம்.பி பதவிக்கு தேர்வு செய்து அனுப்பவேண்டும். பனி ஓய்வுக்குப்பின் ஜெயலலிதாவின் அழைப்பின் பேரில் அதிமுகவில் இணைந்தவர். தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தலைவராக பல சீர்திருத்தங்களை செய்து மிகச்சிறப்பாக பணியாற்றியவர், இரண்டு முறை ஜனாதிபதியின் தங்கப்பதக்கம் பெற்றவர், நான்கு ஆண்டுகள் அண்டை நாடான நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இந்தியன் ஹைகமிஷனராக பணியாற்றியவர். இவரை விட தகுதியானவர், பொருத்தமானவர் யாராவது தமிழக அரசியலில் இருக்கிறார்களா? ஆர்.நடராஜ் IPS அவர்களை அதிமுக சார்பாக ராஜ்யசபா எம்பி யாக தேர்வு செய்து அனுப்பவேண்டும். செய்வீர்களா நீங்கள் செய்வீர்களா.
15-மே-2022 19:02:32 IST
2005 ஆம் ஆண்டிற்கான சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றவர் சரிகா. இந்திய சினிமாவின் ஐகான் என்று சொல்லப்படும் கமல்ஹாசன், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் ஐம்பத்துக்கும் மேற்பட்ட சொந்தப்படங்கள் எடுத்தவர், எடுபவர் அவரது முன்னாள் மனைவியும், இன்றைக்கு கோடிகளில் சம்பளம் பெரும் நடிகை ஸ்ருதிஹாசனின் தாயும் ஆன சரிகா 2000 ரூபாய்க்கு வேலைக்கு போவதாக சொல்வது நம்பும்படி இல்லையே .
15-மே-2022 18:30:42 IST
அடப்போங்கய்யா, இப்புடியே பெனாத்திக்கிட்டே இருங்க. அந்தாளு அண்ணாமலை திருவாரூரில் மாஸ் காட்டிட்டாருல்ல. உங்களை மாதிரி உபிஸ்க்கு 200 ரூபாய், பணம் குவாட்டர், பிரியாணி , லாரி வாடகை, மகளிரணி குத்தாட்டம்லாம் இல்லாம செம்ம கெத்து காட்டிட்டு போயிட்டாரூ. பொதுக்கூட்டம் கூட இல்ல ஒரு கண்டன ஆர்ப்பாட்டம். அதுக்கே அந்த தெற்கு ரத்த வீதி ரொம்பிடிச்சில்ல. சொம்மா திருவாரூர் அதிருச்சுல்ல. ஐயா அவன் வேற மாதிரி.
14-மே-2022 18:32:19 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.