Vijay D Ratnam : கருத்துக்கள் ( 2354 )
Vijay D Ratnam
Advertisement
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
6
2020
அரசியல் திமுக பொதுச் செயலர் பதவி கேட்டு போர்க்கொடி! கடும் அதிருப்தியில் துரைமுருகன்
ஐம்பெரும் தலைவர்கள் என்று சொல்லப்படும் அண்ணாதுரை, நாவலர் நெடுஞ்செழியன், ஈ.வே.கி.சம்பத், என்.வி.நடராஜன், மதியழகன் போன்ற தலைவர்கள் உயிரை கொடுத்து உருவாக்கிய கட்சி திமுக. அதை தமிழ்நாடு முழுக்க இண்டு இடுக்கு விடாமல் பட்டி தொட்டி கிராமம் குக்கிராமம் என்று அதை கொண்டு போய் சேர்த்ததில் அப்போதைய மாஸ் ஹீரோ எம்.ஜி.ஆரின் பங்கு மகத்தானது. 18 ஆண்டுகள் கடுமையான உழைப்பின் காரணமாக திமுக ஆட்சியை பிடித்தது. இந்த தலைவர்களின் வாரிசுகள் யாரும் திமுகவில் எந்த பதவியிலும் இல்லை. அந்த திமுகவில் வந்து சேர்ந்த சினிமா கதை வசனம் எழுதிக்கொண்டிருந்த கருணாநிதி கட்சியை தனது குடும்ப சொத்தாக மாற்றி வாரிசுகளை கட்சியில் இறக்கிவிட்டு திமுகவை திருக்குவளை முத்துவேலர் கருணாநிதி கம்பெனி பிரைவேட் லிமிடெட் ஆக மாற்றிவிட்டார். இனி அந்த கட்சி தேற வேண்டுமென்றால், எப்படி அதிமுகவில் ஆக்டொபஸ்ஸாக இருந்த சசிகலா குடும்பத்தை அதிமுக தொண்டர்கள் அப்புறப்படுத்தினார்களோ, அதுபோல திமுக உடன்பிறப்புகள் இந்த கருணாநிதி குடும்பத்தை கட்சியிலிருந்து அப்புறப்டுத்த வேண்டும். ஆரம்பத்தில் தடுமாறினாலும் இப்போது எடப்பாடி கே பழனிசாமி ஸ்டெடி ஆகிவிட்டார். ஆரம்பத்தில் பில்டப் கொடுத்த ஸ்டாலின் இமேஜ் இப்போது சரிந்து கிடக்குது. தகுதியோ திறமையோ இல்லாத வாரிசு தலைமையிடம் இருந்து கட்சியை மீட்டு எடுங்கள் தொண்டர்களே. 2011, 2016 ஐ தொடர்ந்து இன்னொரு அடி வாங்குனா அத்தோடு நீங்க காலி.   15:05:20 IST
Rate this:
1 members
0 members
27 members

ஆகஸ்ட்
6
2020
பொது சகோதரத்துவத்தின் அடையாளம் ஹிந்துக்களுக்கு இணையாக முஸ்லீம்கள் மகிழ்ச்சி
வரவேற்கிறோம், வாழ்த்துகிறோம். மேலே உள்ள படத்தில் ஸ்ரீராமச்சந்திர மூர்த்திக்கு மனம் குளிர தீபாராதனை காட்டும் அந்த சகோதரியின் முகத்தைப் பாருங்கள். என்ன ஒரு தேஜஸ், என்ன ஒரு கருணை. இஸ்லாமியர்கள் என்றாலும் இந்தியாவை பொறுத்தவரை அவர்களின் மூதாதையர்கள் ராமரை, கிருஷ்ணரை, சிவனை, பெருமாளை, துர்கையை, காவல்தெய்வங்களை வழிபட்டவர்கள் தானே, அவர்களும் சில தலைமுறைகளுக்கு முன் ஹிந்துக்கள் தானே. இந்தியாவில் இஸ்லாம் 200 - 300. வருடங்களாகத்தானே. உ.பி முதல்வரே, ராமர் கோவில் கட்டிமுடித்ததும் ஒட்டுமொத்த உலகிலிருந்தும், நம் நாட்டின் அனைத்து நகரங்கள், மாநகரங்கள்,கிராமங்கள் என மூலை முடுக்குகளில் இருந்தெல்லாம் 24 மணிநேரமும் கூட்டம் அலைமோதும். இப்போதிலிருந்தே அகலமான சாலை வசதிகள், ரயில் பாதை வசதிகள், பன்னாட்டு விமானநிலையம் எல்லாவற்றையும் பெரிய அளவில் பிளான் போட்டு பக்காவாக வேலையை தொடங்குங்கள். மெக்கா, வாடிகன், ஜெருசலம் போல இனி .அயோத்தி திகழும். வாரணாசிக்கு வரும் அணைத்து மக்களும் அயோத்திக்கு வருவார்கள். இந்தியாவின் லேண்ட்மார்க் ஆக அயோத்தி உருவாகும்.   16:06:44 IST
Rate this:
0 members
0 members
4 members

ஆகஸ்ட்
5
2020
உலகம் டைம்ஸ் சதுக்கத்தில் ராமர் கோவில் டிஜிட்டல் போர்டு
வாடிகன் போல மெக்கா போல இனி உலகம் முழுவதும் இருக்கும் 150 கோடி ஹிந்துக்களின் புண்ணிய ஸ்தலமாக அயோத்தி திகழும். பஸ், ரயில், விமான போக்குவரத்து வசதிகளை சர்வதேச தரத்துக்கு உயர்த்தவேண்டும். சாலை வசதிகள், பாதுகாப்பு வசதிகள் மேம்படுத்தப்படவேண்டும். உத்திரபிரதேச அரசுக்கு இனி நிறைய வேலைகள் இருக்கிறது.   22:55:40 IST
Rate this:
0 members
0 members
7 members

ஆகஸ்ட்
5
2020
பொது ராமர் கோவில் நாட்டில் புதிய கலாச்சாரத்தை உருவாக்கும் பாபா ராம்தேவ்
வந்தேறிகளால், மதமாற்ற மாஃபியாக்களால் மதம் மாற்றப்பட்ட மக்கள் மீண்டும் திரும்பும் காலம் வரும்.   15:13:28 IST
Rate this:
2 members
0 members
6 members

ஆகஸ்ட்
4
2020
பொது முழுக்க முழுக்க கற்களால் மட்டுமே ராமர் கோவில்
தன்னால் முடிந்த ஒரு தொகை அனுப்ப விரும்பும் எளிய மக்கள் வசதிக்காக, செக் எந்த பெயரில் எந்த முகவரிக்கு அனுப்பலாம் என்று வெளியிடலாமே. பலருக்கு உதவும்.   14:12:44 IST
Rate this:
2 members
0 members
9 members

ஆகஸ்ட்
3
2020
பொது மக்களின் வரிப்பணம் ரூ 15 கோடிக்கு பிடித்தது சனி சிலை பாதுகாப்புக்கு நிரந்தர தீர்வு வருமா இனி?
தமிழ்நாட்டில் இந்திய சுதந்திரத்துக்கு போராடிய மஹாகவி பாரதியாருக்கு தமிழ்நாட்டில் எத்தனை சிலை உள்ளது. சுதந்திரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த அண்ணாதுரைக்கு எத்தனை சிலை உள்ளது. அதுபோல சுதந்திரத்துக்கு போராடி உயிர்நீத்த வ.உ. சிதம்பரம் க்கு எத்தனை சிலை உள்ளது. சுதந்திரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரிடிஷ்காரன் தான் இந்தியனை ஆளவேண்டும் என்ற ஈ.வே.ராமசாமிக்கு எத்தனை சிலை உள்ளது. கணிதமேதை ராமானுஜத்துக்கு, கி.ஆ.பெ.விஸ்வநாதனுக்கு, தமிழ்த்தாத்தா என்றழைக்கப்படும் உ.வே.சாமிநாத அய்யருக்கு இங்கே எத்தனை சிலை இருக்கிறது. யாருக்கு சிலை வைக்கவேண்டும் என்பதை அறிஞர்களும், மேதைகளும், கல்வியாளர்களும் முடிவு செய்வதில்லை. ஜாதி வாக்குகளை அண்டி பிழைப்பு நடத்தும் தற்குறி அரசியல்வியாதிகள் முடிவு செய்வதால் இந்த கருமத்தை எல்லாம் பார்த்துதான் ஆகவேண்டும்.   17:42:29 IST
Rate this:
4 members
0 members
25 members

ஆகஸ்ட்
2
2020
பொது காஞ்சிக்கும் அயோத்திக்கும் நெருங்கிய தொடர்பு விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் விளக்கம்
விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் போன்றவர்கள் தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிக்கு குறைந்தபட்சம் மாதம் ஒரு முறையாவது செல்லவேண்டும். இப்போதைய அரசியல்வியாதிகளால் நடத்தப்படும் ஜாதி அரசியல் முடிவுக்கு வரவேண்டும் என்றால் விஜயேந்திரர் போன்றவர்கள் அந்த மக்களை அரவணைத்து செல்லவேண்டும். நீங்கள் தயங்குவதால் பாதிரியார்கள், மதரஸாக்கள் சுலபமாக உள்ளே நுழைகிறார்கள்..   14:53:51 IST
Rate this:
1 members
0 members
9 members

ஆகஸ்ட்
2
2020
அரசியல் அயோத்தி விழாவில் பங்கேற்க அழைப்பில்லை மவுனம் காக்கும் எதிர்க்கட்சி தலைவர்கள்
பாவம் இவர்கள் என்ன குட்டிக்கரணம் போட்டாலும் கதைக்காவாது. நூற்றாண்டுகளாக தூங்கிக்கொண்டு கிடந்த ஹிந்து சமுதாயத்தை பாஜக எழுப்பிவிட்டுவிட்டது. இந்திய மக்களுக்கு குறிப்பாக ஹிந்துக்களுக்கு எது நமக்கான கட்சி, எது ஹிந்து கலாச்சாரத்தை காக்கும் கட்சி என்பதை புரிந்து கொண்டுவிட்டார்கள். அது மட்டுமல்ல எது மைனாரிட்டி வாக்குகளை அண்டி பொழப்பு நடத்தும் கட்சி. எது மதமாற்ற மாஃபியாக்கள் வீசும் எலும்புத்துண்டுக்கு வாலாட்டும் கட்சி என்பது தெள்ளத்தெளிவாக புரிந்துகொண்ட விட்டார்கள்.   14:36:09 IST
Rate this:
2 members
0 members
10 members

ஜூலை
31
2020
அரசியல் பெயர் மாற்றப்பட்ட ரயில் நிலையங்கள்
பேரா வைக்குறிங்க பேரு. ஆட்சி மட்டும் மாறட்டும் அப்புறம் பார்த்துக்குறோம். அதுக்கப்பறம் எல்லாத்துக்கும் கருணாநிதி பெயர்தான். சென்னை கருணாநிதி டைடல்பார்க் தொடங்கி கன்னியாகுமரி வரை ஒரு இடத்தை விட்டுவைக்க மாட்டோம்.   21:50:46 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
31
2020
அரசியல் சோனியாவிடம் காங்., இளம் எம்.பி.,க்கள் கொந்தளிப்பு! ராகுலை தலைவராக நியமிக்க வலியுறுத்தல்
பாட்டன், அப்பன், மகள், மகன், மருமகள், பேரன், பேத்தி என்று கட்சியின் தலைமை பொறுப்புக்கு பதவிக்கு வந்து அரசியலை சாக்கடையாக்கும் குடும்பத்தை அரசியலை விட்டு ஒழித்துக்கட்டவேண்டும். வாரிசு அரசியல், பரம்பரை அரசியல், குடும்ப அரசியல் என்பது இந்திய தேசத்தை பிடித்த தொழுநோய். இந்த நாத்தம் பிடித்த சாக்கடையை இந்திய அரசியலுக்கு பழக்கப்படுத்திவிட்ட அந்த குடும்பத்தை முதலில் கட்சியிலிருந்து கழட்டி விடுங்கள். அதை வச்சிக்கிட்டு நீங்கள் அரசியல் செய்தால் பாஜகவை அசைக்க கூட முடியாது. அவர்கள் தூங்கிக்கிடந்த ஹிந்துக்களை எழுப்பி விட்டுவிட்டார்கள். இனி மைனாரிட்டி பருப்பு வேகாது. இந்தியாவில் இருக்கும் 10 சதவிகித மானங்கெட்ட ஹிந்து வாக்குகளை தவிர்த்து மீதமுள்ள 90 சதவிகித ஹிந்து வாக்குகள் பாஜக வசம் சென்றுவிட்டது. ஆதலால் நானொரு நல்ல யோசனை சொல்கிறேன். அதான் கிட்டத்தட்ட சுதந்திரம் அடைந்த பிறகான இந்த 73 ஆண்டுகளில் 60 ஆண்டுகள் வக்கணையாக ஆண்டு அனுபவித்து விட்டீர்களே. போதும் அரசியலை விட்டுவெளியேறுங்கள். கொஞ்சம் கஷ்டம்தான் எஞ்சிய காலத்தையாவது உழைத்து சம்பாதித்து வாழ்ந்து பாருங்கள்.   19:19:46 IST
Rate this:
0 members
0 members
7 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X