S.Baliah Seer : கருத்துக்கள் ( 1584 )
S.Baliah Seer
Advertisement
Advertisement
Advertisement
பிப்ரவரி
23
2020
அரசியல் சாலைகளை மறிக்க உரிமையில்லை மத்திய அமைச்சர்
சாலை மறியல் ,பஸ்/டிரைன் மறியல் செய்யும்போது பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.என்பது உண்மைதான். குழந்தை பசிக்கும்போது அழத்தான் செய்யும்.அதற்காக அதன் வாயை மூட முடியுமா. போராட்டம் என்பது பொதுமக்களின் கவனத்தை ஈர்ப்பது. அரசாங்கத்துக்கு அழுத்தத்தை கொடுப்பது. வன்முறையில்லாமல் போராட்டம் நடத்துவது ஒத்துக்கொள்ளப்பட்ட வரைமுறைதானே.   20:53:08 IST
Rate this:
5 members
0 members
3 members
Share this Comment

பிப்ரவரி
23
2020
அரசியல் பெண் பாதுகாப்பு நாள் கொண்டாட என்ன தகுதி? ஸ்டாலின் கேள்வி
முதலில் பெண் குழந்தைகளை சினிமா,டிவி,விளம்பரம் இவைகளில் நடிப்பதை தடை செய்வார்களா? குழந்தைகள் பள்ளிக்கு படிக்கத்தான் செல்கிறார்கள்.வெய்யலில் மணிக்கணக்கில் அரசியல் வாதிகளையும் ,அதிகாரிகளையும் வரவேற்க குழந்தைகளை நிறுத்துவதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?   20:44:37 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

பிப்ரவரி
23
2020
நலம் நூறு வயது வரை வாழ என்ன செய்ய வேண்டும்?
எத்தனை வயதுவரை வாழ்கிறோம் என்பதைவிட நம்மால் நம் சமுதாயத்துக்கு என்ன பலன் என்பதை சிந்தித்தால் போதுமானது.யான் அறிந்தவரை சுறுசுறுப்பு மனிதர்களுக்கு எந்த நோயும் குறிப்பாக BP ,SUGAR நோய்கள் வர வாய்ப்பே இல்லை.மூன்று வேளையும் கொட்டிக்கிட்டு உட்கார்ந்திருந்தால் சத்தியமாக எல்லா நோய்களும் வரும்.பலரோடு கலகலப்பாக பழக வேண்டும்.தனிமையில் உட்கார்ந்து கொண்டு வீட்டின் மேற்கூரையைப் பார்த்துக்கொண்டிருந்தால் எல்லா நோய்களும் வரும். செடி கொடிகளை வைத்து அவற்றை தினமும் பராமரிப்பு செய்து பாருங்கள்.மனதுக்கும் உடலுக்கும் மகிழ்ச்சியைக் கொடுக்கும்.நொறுக்கு தீனியை தவிர்த்து விடுங்கள்.பசித்து புசியுங்கள்.அதுவே ஆரோக்கியமான வாழ்வாகும்.தினமும் பச்சை காய்கறிகளை சாப்பிட்டு வாருங்கள்.பட்டினி கிடந்தாலும் ஓட்டலுக்கு போய் சாப்பிடாதீர்கள்.தமிழ்நாட்டு ஓட்டல்களில் காய்களை பார்க்க முடியாது.சுகர் 180 /190 இருந்தால் கூட அதைப்பற்றி கவலைப்படாமல் குறைந்த அளவு சாப்பிட்டு சந்தோஷமாக இருந்தால் படிப்படியாக சுகர் 120 /130 -க்கு வந்து விடும்.   20:14:29 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
22
2020
பொது பைக் டாக்ஸி திட்டத்தில் ரூ. 4 ஆயிரம் கோடி மோசடி?
ஒரே வருடத்தில் இரட்டிப்பு மோசடி போலீசாருக்கு தெரியாமல் எப்படி நடக்கும்.ஏமாறுபவன் இருக்கும் வரை ஏமாற்றுக்காரர்கள் இருக்கத்தான் செய்வார்கள்,திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது போன்ற பழைய பல்லவிகளைப் பாடுவதால் எப்பயனும் இல்லை.   19:41:48 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
22
2020
சம்பவம் நடைபாதையில் பைக் ஓட்டியவருக்கு பாடம் புகட்டிய சூப்பர் லேடி
நிர்மலா தேவியின் துணிச்சல் பாராட்ட தக்கது.அதே சமயம் பொதுமக்களின் கோழைத்தனமும் ,போக்குவரத்து போலீசாரின் அலட்சியமும் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரிக்க காரணமாகிறது.சென்னை சோழிங்கநல்லூரை எடுத்துக்கொள்ளுங்கள்.அந்த பகுதியில் ஏகப்பட்ட IT கம்பெனிகள்.சர்வீஸ் ரோடுகளில் கூட பல்லவா பஸ் டிரைவர்கள் பஸ்களை ஒட்டி செல்கின்றனர்.அதனால் அபார்ட்மெண்ட்களில் வசிப்பவர்கள் டிராபிக் நேரத்தில் மிகுந்த தொல்லைகளுக்கு தினமும் ஆளாவது வாடிக்கையாகி வருகிறது.போக்குவரத்து போலீசார் முன்னாடியே இவை அரங்கேற்றப்படுகின்றன.   19:23:10 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
23
2020
பொது தேசிய தேசிய கொடுஞ்சாலை... 19 பேர் பலிக்கு இதுவும் காரணமா?
மைய தடுப்பு சுவரின் உயரத்தை ஏற்றுவது இருக்கட்டும்.போக்கு வரத்து போலீசார் என்ன செய்கின்றனர் என்பதுதான் கேள்வி.யாராவது இளிச்சவாயன் ஹெல்மட் போடவில்லை என்றால் அவனை மடக்குவதுதான் இவர்கள் தொழிலா என்ன?ராங் சைடில் வருபவர்களை போலீஸ் ஏன் கண்டுகொள்வது இல்லை.தடுப்பு சுவர்களை ஆங்காங்கே கட்டிங் செய்வது ஏன் ? U டேர்ன் போடும் பழக்கம் யாரிடமும் இல்லை.முதலில் இவற்றை சரி செய்யுங்கள்.   19:10:17 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

பிப்ரவரி
23
2020
பொது காஷ்மீர் மாஜி முதல்வர்கள் விடுதலை பெற பிரார்த்திக்கிறேன்ராஜ்நாத்
இப்போதாவது காஷ்மீர் எதிர்க்கட்சி தலைவர்களை வீட்டுக்காவலிலோ அல்லது சிறையிலோ வைத்திருப்பதை ஒத்துக்கொண்டீர்களே .ராஜ்நாத் சிங் ஓர் ஸ்ட்ரெயிட் பார்வேர்டு மனிதர்.அதனால்தான் உண்மையைக் கொட்டிவிட்டார்.   18:57:44 IST
Rate this:
2 members
1 members
1 members
Share this Comment

பிப்ரவரி
23
2020
பொது கைலாஷ் ரெடி- நித்தி வெடி
யார் அந்த குரு பரம்பரை நித்தி.யானும் அந்த பரம்பரையை சார்ந்தவன் தான்.உம்மை போன்ற தீயோரின் காசு எங்களுக்கு தேவையில்லை.யார்யாரிடம் ஏமாற்றி கை எழுத்து வாங்கி சொத்தை சேர்த்தீரோ அவர்களிடமே அவற்றை திருப்பி தருவதே தர்மமாகும்.   18:48:59 IST
Rate this:
3 members
0 members
3 members
Share this Comment

பிப்ரவரி
22
2020
அரசியல் பாரத் மாதா கி ஜெய் கோஷம் மன்மோகன் கடும் விமர்சனம்
தன் தாயை எவனும் எங்கம்மா எங்கம்மா என்று சொல்லமாட்டான்.அப்படி சொல்லுபவன் ஊரை ஏமாற்றும் ஒரு கேடியாகத்தான் இருப்பான்.   15:07:08 IST
Rate this:
7 members
0 members
3 members
Share this Comment

பிப்ரவரி
23
2020
அரசியல் இம்ரான்கானின் கைப்பாவை ஸ்டாலின் முரளிதர ராவ்
இம்ரான்கான் பாகிஸ்தானின் பிரதம மந்திரி. திரு.ஸ்டாலின் இந்தியாவில் உள்ள ஒரு மாகாணமான தமிழ்நாட்டின் எதிர்க்கட்சி தலைவர். ஒரு நாட்டின் பிரதமருக்கு இன்னொரு நாட்டின் ஒரு பகுதி எதிர்க்கட்சி தலைவருடன் இணக்கம் என்பது மூடர்களின் தலைவர் முரளிதர ராவுக்கு வேண்டுமானால் சரியாக இருக்கும்.   15:01:30 IST
Rate this:
3 members
0 members
4 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X