அன்புள்ள தமிழக முதல்வர் மாண்புமிகு திரு மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும் மற்றும் தமிழக நிதி அமைச்சர் திரு PTR அவர்களுக்கும்,
தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ₹2,63,967 கடன்.
அந்த வகையில் எங்கள் குடும்பத்திற்க்கு ₹2,63,967 கடன். இதை நாங்கள் அடைக்க விரும்புகிறோம்.
1.தமிழக குடும்ப தலைவிகளுக்கு ₹1000 பிரதி மாதம் உரிமை தொகை தருவதாக சொன்னீர்கள். உங்கள் ஆட்சி முழுவதும் அந்த தொகை ₹60,000 (60 மாதம் ₹1000) எங்களுக்கு வேண்டாம். நீங்களே வைத்து கொள்ளுங்கள். அந்த தொகையான ₹60,000/- எங்கள் கடனில் வரவு வைத்து கொள்ளவும்.
2. 5 சவரன் நகை கடன் அடைத்து நகையை மீட்டு தரப்படும் என்று சொன்னீர்கள். அதை நாங்கள் சொந்தமாக அடைத்து கொள்கிறோம். அந்த தொகையான ₹1,20,000/- எங்கள் கடனில் வரவு வைத்து கொள்ளவும்.(5 சவரன் =40 கிராம்).
40 கிராம் ₹3000 = ₹1,20,000
3. சமையல் எரிவாயு சிலிண்டர் ( Gas) ஒரு சிலிண்டருக்கு மானியம் ரூ100 தருவதாக சொன்னீர்கள்.
அந்த தொகை ₹6,000/- (60 மாதம் ₹100) எங்கள் கடனில் வரவு வைத்து கொள்ளவும்.
4.பெட்ரோலுக்கு மானியம் ரூ5 / லிட்டருக்கு தருவதாக சொன்னீர்கள்.
ஒரு நாளைக்கு 2லிட்டர் ₹5 = ₹10 ஒரு மாதத்திற்கு
30 நாட்கள் ₹10 = ₹300
60 மாதங்கள் ₹300 =₹18,000/-
அந்த தொகை ₹18,000/- எங்கள் கடனில் வரவு வைத்து கொள்ளவும்.
5. ரேசன் பொருட்கள் வழியாக மாதம் ஒரு குடும்பத்திற்க்கு ₹500 மானியம் தரப்படுகிறது.
ஒரு வருடத்திற்கு 12 ₹500= ₹6000. அந்த மானியம் எங்களுக்கு வேண்டாம். நிறுத்தி விடுங்கள்🙏🙏
அந்த தொகை ₹30,000/- (60மாதம் ₹500) எங்கள் கடனில் வரவு வைத்து கொள்ளவும்.
6. மாத மாதம் EB Reading எடுப்பது மூலம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ₹500 மாதம் மிச்சப்படுத்தலாம். அந்த வகையில் ₹30,000. (60 மாதம் ₹500) மிச்சப்படுத்தலாம்.
ஆக இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை EB Reading எடுக்கவும். பிரதி மாதம் எடுக்க வேண்டாம்.
அதில் மிச்சப்படுத்தும் தொகையான ₹30,000/- (60 மாதம் ₹100) எங்கள் கடனில் வரவு வைத்து கொள்ளவும்.
1. ₹60,000
2. ₹1,20,000
3. ₹6,000
4. ₹18,000
5. ₹30,000
6. ₹30,000
₹ 2,64,000 /-
எங்கள் குடும்பத்தின் கடனை அடைத்து விடுங்கள். மேற்கூறிய எங்கள் அனைத்து உறுதிமொழிக்கும் தகுந்த முறையில் உறுதிமொழி பத்திரம் தயார் செய்து நாங்கள் அதில் கையொப்பம் இட்டு தருகிறோம். நீங்கள் எங்கள் கடனை அடைத்து எங்களுக்கு NO DUES Certificate கொடுக்கவும். வருங்காலத்தில் எங்கள் பெயரில் கடன் வாங்க வேண்டாம். 🙏🙏🙏🙏🙏
12-ஆக-2021 23:03:00 IST
டாஸ்மாக் தவிர்த்து அனைத்து கடைகளையும் மூடுங்கள் .. கிறித்துவ இஸ்லாமிய வழிபாட்டு தளங்களை தவிர்த்து இந்து வழிபாட்டு தளங்களை மூடுங்கள் . தி மு க ஆட்சிக்கு வந்ததும் தமிழ் நாட்டில் கொரோனாவை ஒழித்துவிட்டார்கள் . இப்போது மக்களிடம் அதன் பெயரை கெடுக்க ... அரசு கொரோனவை தமிழ் நாட்டில் மறுபடியும் பரப்புகிறது . இதை எதிர்த்து உதயநிதியின் தலமையில் ... அரசை எதிர்த்து அனைத்து மாவட்டங்களிலும் போராட்டம் நடைபெறும் . தமிழ் மக்கள் அனைவரும் கூட்டம் கூட்டமாக திரண்டு போராட்டத்துக்கு ஆதரவு அளிக்க வேண்டுகிறோம்
31-ஜூலை-2021 23:04:13 IST
கடந்த 2016 சட்டப்பேரவை தேர்தலில் பூரண மதுவிலக்கை அமுல் படுத்துவதோடு மட்டும் அல்லாமல் ,திமுகவினர் நடத்தும் மது ஆலைகள் மூடப்படும் .தமிழகத்தில் மதுவிலக்கு என்பதற்காக வெளிமாநிலத்துக்காக கூட அவர்கள் மதுவை உற்பத்தி செய்யமாட்டார்கள் என்று கூறுனீர்களே .. போன வருடம் அதிமுக ஆட்சியில் ஒரு நாளைக்கு ஏறத்தாழ 500 பேர் நோய்த் தொற்றுக்குள்ளாகும்போது டாஸ்மாக் திறந்தபோது அதனை எதிர்த்து போராட்டங்கள் நடத்துனீர்களே . இன்றைக்கு அபரிமிதமாக 15,000 பேர் வரை நாளொன்றுக்குப் பாதிக்கப்படும்போது மதுபானக்கடைகளைத் திறக்க வழிவகை செய்வது மக்களின் உயிரோடு விளையாடும் பேராபத்தில்லையா.. அதை பற்றி மூச் . ஒரு வார்த்தை கூட உங்களிடமிருந்து வரவில்லையே ..
16-ஜூன்-2021 01:32:19 IST
துணிவு இருந்தால் அதே மாதிரி எல்லா மசூதிகளிலும் தமிழில் ஓத வேண்டும் என்று சொல்வார்களா . இந்து என்றால் என்ன வேண்டும் செய்யலாம் . அவர்கள் எல்லாவற்றையும் தாங்கி கொள்வார்கள் . இதுதான் சமத்துவம் .
10-ஜூன்-2021 22:07:34 IST
தடுப்பூசி எவ்வளவு நம்பகத் தன்மை கொண்டது என்று தெரியவில்லை என முதல்வர் ஆகும் முன், ஸ்டாலின் சொன்னார். கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாதீர்' என, திராவிட கூட்டங்களும், திருமாவளவனும் வதந்தி பரப்பினார்கள் . காங்கிரஸ் கட்சியினர் 'பிரதமர் மோடி, இந்திய மக்களை, 'கினி பிக்' ஆக்குகிறார்' என்றார்கள் . ஆனால் இவர்களில் பாதி பேர் தடுப்பூசி எடுத்து கொண்டார்கள். பாதிக்கப்பட்டது இவர்கள் பேச்சை கேட்ட சாமான்ய மக்கள் தான். உலகமே நம் தடுப்பூசி எடுத்து கொண்ட போது இவர்கள் தேவை இல்லாத புரளியை கிளப்பி பயத்தை ஏற்படுத்தினார்கள் . இப்போது ..
06-ஜூன்-2021 11:56:36 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.