Subramanian Marappan : கருத்துக்கள் ( 94 )
Subramanian Marappan
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
22
2020
பொது உடுமலை சங்கர் கொலை வழக்கு கவுசல்யா தந்தை விடுவிப்பு குற்றவாளிகள் தண்டனை குறைப்பு
அரசியல் சட்டம் பெற்றோருக்கு அவர்கள் பிள்ளைகள் மேல் என்னென்ன விதத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கலாம்.எந்த வயது வரை கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தலாம்? அதை மீறி நடக்கும் பிள்ளைகளை என்ன செய்ய வேண்டும் என்ற விதிமுறைகளை ஒவ்வொரு இனம் மொழி மதம் வாரியாக வகுக்க வேண்டும். மேலும் பதினெட்டு வயது ஆனால் மேஜர் என்ற கருத்து இந்தியாவுக்கு ஒத்துவராது. சில குழந்தைகள் பெற்றோர் வருமானத்தில் முப்பது வயதுவரை வாழும் நிலை உள்ளது.மேலும் பெற்றோர் வருவாயில் வளரும் பிள்ளைகள் அவர்களுக்கு எந்தெந்த விதத்தில் மரியாதையை தர வேண்டும் என்ற கருத்தையும் வரையறுத்து கூற வேண்டும்.பெற்றோர் உழைப்பில் வாழும் பிள்ளைகள் பெற்றோருக்கு அவர்களின் நன்றி கடனை எதாவது ஒரு வகையில் அவர்கள் சந்தோசம் அடையும் வகையில் திருப்பி தர வேண்டும். பெற்றோருக்கு மட்டுமே பிள்ளைகளை பெற்று வளர்த்து ஆளாக்க வேண்டும் என்ற பொறுப்பு திணிக்கப்படக்கூடாது.பதிலுக்கு பிள்ளைகளும் அவர்கள் சம்பாதிக்க ஆரம்பித்த பின் பெற்றோரை அவர்கள் மனம் கோணாமல் கவனிக்க வேண்டும்.இதையும் நீதிமன்றங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.உயிர் கொடுத்த பெற்றோரை பழி வாங்கும் எண்ணம் கொண்ட மிருக குணம் கொண்டவர்களை கண்டிக்க வேண்டும்.   15:12:11 IST
Rate this:
6 members
0 members
33 members

ஜூன்
21
2020
அரசியல் கடவுள் மீது குற்றம்சாட்ட முயற்சி முதல்வருக்கு ஸ்டாலின் கண்டனம்
ஐயா நீங்கள் குறிப்பிடும் மக்கள் யார்? அந்த மக்கள் பிரதிநிதிகள் மருத்துவ ஞானம் கொண்டவர்களா? இவர்கள் என்னென்ன யோசனைகளை சொல்லியுள்ளனர் என்பது உங்களுக்கு எப்படி தெரியும்?   18:38:03 IST
Rate this:
1 members
0 members
4 members

ஜூன்
17
2020
அரசியல் வகுப்பறை கல்விக்கு மாற்று இல்லை நிழல் நிஜமாகாது என்கிறார் ஸ்டாலின்
உங்களுக்கு ஆதரவாக உள்ள பெரும்பான்மை ஆசிரியர் கூட்டம் தொலைதூர அஞ்சல் வழி கல்வி மூலமாக பல பட்டங்கள் தங்கள் பெயருக்கு பின்னால் வைத்து பணப்பலன் பெற்று வந்தது இவருக்கு தெரியுமா?. ஆன்லைன் கல்வி பாகுபாடு கொண்டது என்றால் அஞ்சல் வழி கல்வியை என்னவென்று சொல்வது?   07:26:27 IST
Rate this:
0 members
0 members
14 members

ஏப்ரல்
26
2020
பொது பணிக்கு வராத ஐ.ஏ.எஸ்., அதிகாரி மீது போலீசார் வழக்கு பதிவு
1976 இல் இந்தியா மத சார்பற்றது என்று அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்தார்கள் ஆனால் சிறுபான்மையினரின் மத உரிமைகள் குறித்த சரத்துக்கள் ஏன் இன்றுவரை நீக்கப்படவில்லை   12:39:25 IST
Rate this:
0 members
0 members
5 members

பிப்ரவரி
7
2020
அரசியல் நேரு மதவாதியா? மோடி கேள்வி
ஒருங்கிணைந்த இந்திய நாட்டின் சுதந்திரத்திற்கு உண்மையில் யார் யார் உழைத்தவர்கள்? பாக் இந்திய சுதந்திரத்திற்கு ஒரு நாள் முன்னாள் அதன் சுதந்திரத்தை பெற்றது. அதன் சுதந்திரதின் தந்தை யார்? அதன் சுதந்திரத்திற்கு யார் எல்லாம் காரணம்? இந்திய சுதந்திரம் ஏன் தாமதம் ஆனது? இங்கே ஒரு சிலருக்கு மட்டுமே சரித்திரத்தில் இடம் கொடுக்க என்ன காரணம்? இந்த நாடு மதச்சார்பற்ற நாடு என்னும் போது ஏன் சிறுபான்மை மக்கள் சிறப்பு உரிமைகள் ஏன் நீக்கம் செய்யப்படவில்லை? ஏன் இன்னும் தனி சட்டங்கள் தொடர்ந்து இருந்து வரும் நிலை உள்ளது?. மதச்சார்பற்ற நாட்டில் மத ரீதியான இட ஒதுக்கீடு எல்லா பதவிகளுக்கும் கல்வி விஷயத்தில்உம் இருக்க கூடாது.   16:09:15 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜனவரி
11
2020
அரசியல் அரசு பள்ளிகளில் இலவச சிற்றுண்டி இ.பி.எஸ் வியூகம்
அரசு பள்ளி ஆசிரியர்கள் தரத்தை உயர்த்தும் முயற்சிகளை முதலில் மேற்கொண்டு அதன் பலனை மாணவர்கள் சேர்க்கை மூலம் உறுதி படுத்துங்கள். பல பட்டங்கள் வாங்கி ரூபாய் 10000 த்துக்கு தனியார் பள்ளிகளில் வகுப்பு நிறைய மாணவர்கள் கொண்டு வேலை செய்யும் ஆசிரியர்கள் நிலையை பார்த்து இந்த +2 படித்து ஒரே பயிற்சி எடுத்து அஞ்சல் வழியாக பட்டம் விலைக்கு வாங்கி ₹ 40000-60000 வாங்கும் அரசு ஆசிரியர்கள் வெட்கப்பட வேண்டும். தனியார் பள்ளி ஆசிரியர்கள் இவர்களைப் போல மாணவர்கள் முன்னேற்றம் தங்களது முயற்சியில்தான் என்று மார்தட்டி கொள்வது இல்லை.   12:10:35 IST
Rate this:
0 members
0 members
4 members

டிசம்பர்
28
2019
சம்பவம் " பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் " - எஸ்.பி. ஆவேசம்
நம் அண்டை நாட்டுக்கு ஒரு நாள் முன்னதாக வெள்ளையன் சுதந்திரம் கொடுத்தது எதனால் என்று யாராவது சரியான காரணம் குறித்து சொல்ல இயலுமா? ஆனால் இது பற்றி யோசிக்காமல் காங்கிரஸ் சுதந்திரம் தாங்கள் வாங்கி கொடுத்ததாக சரித்திரம் எழுதியது.   21:10:26 IST
Rate this:
3 members
0 members
26 members

நவம்பர்
30
2019
அரசியல் பா.ஜ.,வில் இணைந்தார் ராதாரவி
.சுய சிந்தனையோ அல்லது ஒரு கட்சியின் தொண்டர்கள் குணம் நடவடிக்கைகள் பற்றிய அறிவோ இன்றி வளரத்தொடங்கியுள்ள கட்சியை குறை சொல்லாதிருத்தல் நலம்.திமுக 1949 களில் தொடங்கி 1967 கூட்டணி மூலம் ஆட்சியில் அமர்ந்ததை மறந்துவிடாதீர்.   13:13:41 IST
Rate this:
1 members
0 members
1 members

நவம்பர்
21
2019
சம்பவம் ரெய்டுக்கு பயந்து வீசி எறியப்பட்ட பணக்கட்டுக்கள்
இங்கே தமிழ்நாட்டில் உள்ள எல்லா அரசு அலுவலகங்களிலும் சொல்ல முடியாத அளவில் லஞ்சம் பெறப்படுகிறது.இங்கே லஞ்ச ஒழிப்பு துறை நடவடிக்கையின் போதும் பணம் வெளியே வீசப்படுவது உண்டு.தமிழ் நாட்டில் புழங்கும் லஞ்சப்பணத்தில் அரசாங்க கடன்களை அடைக்க இயலும்.தன்னிச்சையாக கண்காணிப்பு துறை செயல்பட்டு ஓரிருவரை பிடிப்பதை விட்டு ஆயிரக்கணக்கில் எப்போது கைது செய்கிறார்களோ அப்போதுதான் இந்த அயோக்கிய பிச்சைக்காரர்கள் திருந்துவார்கள்.என்று அரசு அலுவலகங்களில் லஞ்சம் நிற்கிறதோ அன்றுதான் மத்தியதர வர்க்கத்திற்கு விடிவு பிறக்கும்..   13:50:21 IST
Rate this:
0 members
0 members
11 members

நவம்பர்
4
2019
கோர்ட் நீட் தேர்வை ஏன் திரும்பப் பெறக்கூடாது? ஐகோர்ட்
உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு அகில இந்திய அளவில் எல்லா மாநிலங்களிலும் நடைமுறையில் உள்ள நீட் தேர்வை பற்றி உயர்நீதி மன்றம் கேள்வி எழுப்புவது சரியானது அல்ல. அரசு பள்ளி ஆசிரியர்கள் ஏழைகள் அல்ல.அவர்கள் குழந்தைகளை வசதியானவர்கள் குழந்தைகள் படிக்கும் தனியார் பள்ளிகளில்தான் சேர்க்கின்றனர்.தகுதிக்கும் திறமைக்கும் சம்பந்தமே இல்லாத சம்பளம் அவர்களுக்கு வீட்டிற்கு அருகே குக்கிராமத்தில் பணியில் இருந்தாலும் கொடுக்கப்படுகிறது.ஆனால் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் பெரும்பான்மையோர் பெற்றோர்கள் வசதி குறைந்தவர்கள் /இல்லாதவர்கள். எனது கேள்வி என்னவென்றால் இந்த தகுதி அற்ற அரசு பள்ளி ஆசிரியர்களின் பொறுப்பற்ற தன்மையினால்தான் அரசு பள்ளிகளின் தரம் கேள்விக்குறியாக உள்ளது அல்லது தரம் உயர்த்தப்பட முடியாமல் உள்ளது .அரசு மருத்துவமனைகளில் எப்படி மருத்துவர்கள் சரியான நேரத்துக்கு வராமலும் கடைமை உணர்வுடன் பணி செய்வதில்லையே அதேபோல் பள்ளி ஆசிரியர்களும் வேறு வகையான தொழில் நாட்டமுள்ளதால் பணித்திறமையை வளர்ப்பதில்லை. முன்பு இருந்தது போல் அந்தந்த பஞ்சாயத்து யூனியனில் அவர்களை மீண்டும் சேர்த்து பணி புரிய சொல்லவேண்டும் சம்பளம் பஞ்சாயத்துகள் வருமானத்தை பொறுத்து வழங்க வேண்டும் .மேலும் அவர்கள் குழந்தைகளை கட்டாயம் அவர்கள் பணி செய்யும் பள்ளிகளிலோ அல்லது அருகிலுள்ள அரசு பள்ளியில் கட்டாயம் சேர்க்க சொல்லவேண்டும்.அதற்கான விதிமுறையை பணியில் சேரும்போதே காட்டி பின்பற்ற சொல்ல வேண்டும். அரசு பள்ளி ஆசிரியர்கள் ஒழுங்காக கடைமை உணர்வுடன் பணி செய்தால் ஏழை மாணவர்கள் சிறந்த கல்வி பெறுவர்.   17:06:28 IST
Rate this:
0 members
0 members
15 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X