S A Sarma : கருத்துக்கள் ( 60 )
S A Sarma
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
22
2019
சம்பவம் லாட்டரி அதிபர் மார்ட்டின் சொத்துக்கள் ரூ.119.60 கோடி சொத்துக்கள் முடக்கம்
அவரது சொத்தை மட்டும் பறிமுதல் செய்தால் போதாது. அவர் அரசியல் தொடர்பு இல்லாமல் இந்த மாதிரியான நிலம் அபகரிப்பு, கள்ள லாட்டிரி வியாபாரம், கருப்பு பணம் போன்ற செயல்களை பல வருடங்களாக செய்ய முடியாது. இவரையும், இவருடன் தொடர்புள்ள அனைத்து பெரிய புள்ளிகளையும் வட்டமிட்டு, அவர்களின் உரிய இடமான திஹார் மனையில் குடிபெயர வைக்க வேண்டும்.   21:00:52 IST
Rate this:
0 members
0 members
10 members
Share this Comment

ஜூலை
21
2019
அரசியல் நிர்மலா சீதாராமன் அறிவுரை விழித்தது தமிழக அரசு
தமிழக அரசுக்கு தேவை இந்துக் கோவில்களில் இருந்து வரும் பணம் மட்டுமே. இந்து பண்டிகைகளைப் பற்றி கவலை இல்லை. அவர்களுக்கு இந்து விழாக்கள் என்றால் பணத்தில் இருக்கும் ஆசை, வசதிகள் செய்து தரவேண்டும் என்ற எண்ணமே கிடையாது. இந்துக்கள், இந்து மதம், இந்து கோவில்கள் என்றால் ஒரு ஏளனம். தமிழ்நாட்டில் சும்மார் முப்பதாயிரம் கோவில்கள் உள்ளன. அதில் வரும் பணம் அரசுக்கு. அவர்கள் எந்த வசதிகளையும் தர வேண்டும் என்ற தார்மீக எண்ணம் கூடக் கிடையாது. காவேரி புஷ்கரம், தாமிரபரணி புஷ்கரம் சமயம் மாநில அரசு வடக்கு பக்கம் பார்த்துக் கொண்டு ஒன்றும் செய்யவில்ல. இதைப் போல் எந்த அரசாங்கமும் இருக்கக் கூடாது. தமிழ் என்றாலே, ஆன்மிகம். ஆன்மிகம் என்றாலே கோவில்கள். கோவில்கள் என்றாலே சைவமும், வைணமும். இது இல்லாமல் தமிழ் கிடையாது. கோவில்கள், அதைச் சுற்றி விழாக்கள், பண்டிகைகள், விழாக்கள். இதை வைத்து ஒரு அரசாங்கம் பெரிய அளவில் மாநிலத்தினை உலக அளவில் பிரசித்தி பெற செய்து இருக்கலாம். மாநிலத்திற்கு பெரும் வருவாயினை கொடுத்து இருக்கும். காஞ்சி புரத்தில் மட்டும் சுமார் 180 பிரசித்தி பெற்ற கோவில்கள் உள்ளன. காஞ்சீபுரம் எழு பெரு நகரில் ஒன்று. இதைப் போன்ற ஒரு அரிய வாய்ப்பை தவறி விட்ட இந்த மாநில அரசை என்ன வென்று சொல்வது.   21:57:14 IST
Rate this:
0 members
0 members
26 members
Share this Comment

ஜூலை
17
2019
அரசியல் ஐ.எம்.ஏ., குழும உரிமையாளரிடம் முதல்வர், ரூ.20 கோடி வாங்கினாரா?
நமக்கு கோடி என்றால் எத்தனை சைபர் இருக்கிறது என்று தெரியாது. ஆனால், அரசியல்வாதிகள், தொடங்குவது எல்லாமே, எப்பொழுதுமே, கோடிக்கணக்கில். இவர்களுக்கு என்கிறந்து பணம் வருகின்றது. இவர்கள் எப்படி பணத்தை வங்கியில் இருந்து எடுத்துக் கொண்டு வந்தார்கள்? இவர்களுக்கு எந்த வங்கி பணம் தந்தது? இவர்கள் ஆன்லைன் மூலமாகவோ, அல்லது டிஜிட்டல் மூலமாகவோ பணத்தை பரிமாற்றம் செய்ய வேண்டுமே. இவர்களுக்கு மட்டும் எப்படி, வங்கிகள் பணத்தை தருகின்றன?   07:20:45 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

ஜூலை
16
2019
கோர்ட் நீட் விலக்கு மசோதா மத்திய அரசு விளக்கம்
நீட் முடிந்து விட்ட விஷயம். இதைப் பற்றி மறுபடியும் பேசி குழப்பத்தை ஏற்ப்படுத்த வேண்டாம். இது மாணவர்கள் பிரச்சனை இல்லை. இது தமிழ்நாடு மாநிலத்தின் அரசியல்வாதிகளின் பொருளாதாரப் பிரச்சனை. இவர்கள் நடத்தும் கல்லூரிகள், நீட் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டிய நிலை ஏற்ப்பட்டுள்ளதால், இவர்களின் கருப்பு பண வியாபாரம் நின்று விட்டது. படிப்பை பற்றி தெரியாதவர்கள் நீட் பற்றி பேச அருகதை இல்லை. இவர்கள் நோக்கம், மாணவர்கள் முன்னேறக் கூடாது. நீட் பரிச்ஷையை அரசியல் படுத்தும் அரசியல்வாதிகள் கல்விக்குள் வந்து நிலைமையை சீர்குலைக்க வேண்டாம்.   19:30:31 IST
Rate this:
2 members
0 members
6 members
Share this Comment

ஜூலை
15
2019
அரசியல் கர்நாடகாவில் கோடிகள் புரளுது சந்தேகம் வளருது
இவர்கள் எப்படி பணத்தை வெளியே கொண்டு வருகின்றார்கள்.? டிஜிட்டல் இந்தியா தோல்வி அடைந்துள்ளதா? அரசியல்வாதிகள் அனைவரும், பணத்தை காசோலை மூலமாகப் பரிமாற்றம் செய்து கொள்கின்றார்களா? இல்லை இவர்கள் துரைமுருகன் செய்தது போல் , வங்கியுடன் தொடர்பு கொண்டு ரிசர்வ் வங்கியின் பணக் கிடங்கில் இருந்து கையை வைத்து விளையாடுகிறார்களா? அரசியல்வாதிகள் அனைவரும் எப்படி இந்த வகையில் செலவு செய்து ஊர் முழுவுதும் சுற்றுலாப் பயணம் செய்கிறார்கள்? இவர்கள் பின்னால் யார்? இவர்கள் எப்படி பணத்தை வைத்து இப்படி விளையாடுகிறார்கள். சாதாரண மக்களால் ஒரு பத்தாயிரம் கணக்கிற்கு வந்தால் நமக்கு நோட்டீஸ் வருகிறது. இவர்களுக்கு இது எல்லாம் கிடையாதோ? இந்த பண நாடகம் துரைமுருகன் கதை போல் ஒன்றும் தெரியாமல் புதைக்கப் பட்டு விடும் போல் உள்ளது. தினகரன் இருபது நோட் என்ன ஆனது என்றே தெரிய வில்லை. அழகிரியின் திருமங்கலம் பண பட்டுவாடா பரிசோதனை என்ன ஆனது என்று மக்களுக்குத் தெரியவில்லை. கோவையில் கிடைத்த ஐநூறுக்கு மேல் கோடிப் பணம் யாருடையது என்று தெரியவில்லை.   03:05:41 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஜூலை
14
2019
அரசியல் காங்., எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டம் எடுப்பது ஏன்?
எல்லா குடும்பக் கட்சிகளும் அழிவைத் தேடிக் கொண்டு செல்கின்றன. லாலுவின் கட்சி சிறையிலும் வீட்டிலும் ஊசல் ஆடிக் கொண்டு உள்ளது. அப்துல்லா கட்சி காஷ்மீரிலில் நித்ய கண்டம் பூரண ஆயுசு என்று உள்ளது. மெஹ்பூபா ட்விட்டர் மூலம் கட்சியை நடத்திக் கொண்டு உள்ளார். பவார் கட்சி தள்ளாடிக் கொண்டு உள்ளது. ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவை விரட்டி அடித்து விட்டார்கள். கர்நாடகத்தில், அப்பா-மகன் கட்சி ஐ.சி .யு . வில் உள்ளது. காங்கிரஸ் கட்சியில், யார் தலைவர், யார் தொண்டர் என்று தெரியவில்லை. மோடி சொன்னது போல், காங்கிரஸ் முக்த பாரத் விரைவில் நிறைவாகி விடும் போல் தோன்றுகிறது. திராவிடக் கட்சிகள் என்று அழியும் என்று தெரியவில்லை, ஏனென்றால், எதிர்க் கெடுத்தாலும் போராட்டம், பிரிவினைவாதம். குடும்பக் கட்சிகள் அழியும் காலம் நெருங்கி விட்டது.   01:56:29 IST
Rate this:
1 members
0 members
24 members
Share this Comment

ஜூலை
11
2019
அரசியல் ஏன் விலகணும் குமாரசாமி குதர்க்கம்
குமாராசாமி அவர்களை கர்நாடக மாநிலத்தின் ஸ்டாலின் என்றே கூறலாம். தேவ கௌடா அவர்கள் அந்த மாநிலத்தின் கருணாநிதி.தேவ கௌடா , கருணாநிதி போல் தன குடும்பம் எப்பொழுதும் பதவியில் இருக்க வேண்டும் என்று விருப்பமுடையவர்.   23:06:05 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜூலை
6
2019
அரசியல் ஆந்திரா எரியும் சந்திரபாபுக்கு தெரியும்
சந்திரபாபு நாயுடு அவர்கள் ஆந்திரா எரியும், தனக்கு ஏதாவது ஏற்பட்டால் என்று கூறியுள்ளார். எதற்க்காக எரியும்? இவர் மக்களை வன்முறையில் தூண்டி விடுகிறாரா? சில நாட்களுக்கு முன் ப சிதம்பரம் அவர்களும் இதையேக் கூறினார். அவருக்கு ஏதாவது ஏற்ப்பட்டால், மக்கள் தீக் குளிப்பார்கள் என்று. மக்கள் இறக்க வேண்டும், இந்த அரசியல் வாதிகள் அவர்களின் பிணத்தின் மீது கால் வைத்து பதவி அடைய வேண்டும். பாபு அவர்கள் மோடியை புறக்கணித்து விட்டு அரசியல் கூட்டு வைத்தவர்கள் அனைவருமே மக்களை பணயம் வைத்து பதவிக்கு வந்தவர்கள். இந்தி மொழிக்கு எதிராக மக்களை தூண்டிவிட்டு அவர்களின் உயரின் மேல் பதவிக்கு வந்தது தி மு க. காஷ்மீர் பண்டிட்டின் நிலைமை எப்படி ஆனது என்று பாபுக்கு தெரியாமல் இல்லை. அதற்கு காரணம் அப்துல்லாவின் குடும்பம் என்று. மோடியை வசை பாடி , ஆந்திராவை இரண்டாக செய்தது காங்கிரஸ் கட்சி என்று கூடாக பாராமல், அவர்களுடன் கூட்டு வைத்துக் கொண்டது தெரிய வில்லை. இப்பொழுது ஆந்திரா எரியும் என்று கூவுகிறார்.   23:45:52 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

ஜூலை
9
2019
அரசியல் இரண்டாவது வரிசையில் ராகுலுக்கு இடம்
இவர்கள் அனைவரையும் ஒரே பெஞ்சில் அமர்த்த வைத்தால் , அவர்கள் பேசுவதற்கோ, அரசுக்கு எதிராக வெளி நடப்பு செய்யவோ, கூட்டாக ஏதாவது திட்டம் செய்து அமளி செய்யவோ மிக வசதியாக இருக்கும். சுருக்கமாகச் சொன்னால், எல்லா எதிர்க்கட்சி பாராளமன்றத் தலைவர்களை ஒரே பெஞ்சில் உட்கார வைப்பது மேல்.   23:33:11 IST
Rate this:
2 members
0 members
5 members
Share this Comment

ஜூலை
7
2019
அரசியல் வாத்ராவுக்கு என்னாச்சு?
இந்திய அரசியல்வாதிகள் அனைவரும் தங்கள் உடல்நலத்தைப் பார்த்துக் கொள்ள இந்தியாவில் உள்ள அரசாங்க மருத்துவமனையில் தான் செல்ல வேண்டும் என்ற ஒரு அறிவிப்பு வந்தால், யாரும் லண்டன் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.   02:14:27 IST
Rate this:
0 members
0 members
19 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X