காசு பாத்தாச்சு நடையைக்கட்டு.வேட்பாளர்கள் வேண்டுமானால் வங்கிகளில் கடன் ( கட்சி தலைவர் பெயரில் தான் ) வாங்கி தேர்தலில் நிற்கலாம். தேர்தலுக்குப்பிறகு வாராக்கடனில் தள்ளுபடியாகலாம்.என்னது அரசியல் " தொழில் " வகையில் வராதா?. அப்புறம் ஏம்பா இங்கு இவ்வளவு கூட்டம்?
03-மார்ச்-2021 15:20:29 IST
சத்தியம் சக்கரைப்பொங்கல் போங்கய்யா நீங்களும் உங்க மனுவும்.கோர்ட் மற்றும் நீதிபதியின் பொன்னான நேரங்களை வீணடிக்காமல் ஊட்டுக்கு லஞ்சம் கொடுக்கும் ,வாங்கும் ஆசாமிகளை கையும் களவுமாக பிடித்து ஆதாரத்துடன் கோர்ட்டில் நீதிபதிகள் முன்னிலையில் நிறுத்தவும். அப்ப மட்டும் என்ன ................ போறாங்கன்னு கேக்கிறீங்களா அதுவும் சரிதான்.
02-மார்ச்-2021 15:09:57 IST
பெட்ரோல், டீசல் மீதான வரி குறைப்பு? நிதியமைச்சகம் ஆலோசனை நீங்கள் ஆலோசித்துக் கொண்டேயிருக்கலாம்.ஆனால் மக்கள் முடிவே எடுத்தே விட்டார்கள் .வரும் ஐந்து மாநில தேர்தல்களின் அதன் பிரதிபலிப்பு கண்டிப்பாகத் தெரியும்.
02-மார்ச்-2021 12:42:31 IST
சட்டம் ஒரு இருட்டறை இல்லை ஒரு இருட்டு குகை .கல்யாணம் பண்ணியவன் பதினான்கு வயது சிறுமியைக் கற்பழித்தானாம் பதினெட்டு வயதில் கலயாணம் செய்து கொள்ள இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்தார்களாம் (ஏனென் ற்றால் அரசாங்க உத்தியோகம் அல்லவா ) .இப்போது கல்யாணத்திற்கு சம்மதிக்கவில்லையாம்.என்னதான் நடக்குது நாட்டிலே ? இந்த வழக்கில் கொடுக்கும் தீர்ப்பு யாரும் இதே தவறை நினைத்து பார்க்ககூடாதளவுக்கு இருக்கவேண்டும்.
02-மார்ச்-2021 11:08:41 IST
ஒரு ஜனநாயக நாட்டின் உள்துறை அமைச்சர் மற்றும் ஒரு யூனியன் பிரதேச மாஜி முதலமைச்சர் பேசும் பேச்சுக்களாக தெரியவில்லை. அரசியல் நாகரீகம் என்பது கொஞ்சம் கூட இல்லை.அவர்கள் வகிக்கும் ,வகித்த பதவிகளுக்கு கொஞ்சம் கூட மதிப்பும் மரியாதையும் இல்லை.பெண்கள் போடும் குழாயடி சண்டையைவிட அசிங்கமாக உள்ளது. காட்சிகள் திரைப்படங்களையும் மிஞ்சிவிடும்போல் இருக்கிறது.
01-மார்ச்-2021 16:44:40 IST
தேசிய கட்சிகளாகட்டும் ,மாநில கட்சிகளாகட்டும் எல்லாமே ஒரே " கழிசடைகள்" தான் . சந்தர்ப்பத்திற்கு தகுந்தாற்போல் சுயநலத்துக்காக கட்சி மாறிக்கொண்டே இருப்பது , கொள்கையாவது ,கோட்பாடாவது, மக்கள்நல செயல் திட்டங்கள் ,தொலைநோக்கு பார்வையில் மக்களை முன்னேற்ற செய்ய திட்டங்கள் என்றால் என்னவென்றே தெரியாமல் இருக்கிறார்கள்.மக்களுக்கு பிச்சை இட திட்டங்கள் தீட்டுவதோடு சரி ,மற்றபடி எப்படியாவது ,ஜாதிவாரி ,அல்லது மதவாதி கட்சிகளுடன் கூட்டணி வைத்து ஆட்சி கட்டிலில் படுத்து உறங்கவேண்டும். ஜனநாயகமாவது ஒண்ணாவது எல்லாமே பணநாயகமாக மாற்றிக்கொண்டாகிவிட்டது." குடும்ப அரசியல் ", " இந்துத்துவா அரசியல்" , பணபல அரசியல் அல்லது "பிண அரசியல் " என்று ஏதாவது கூறிக்கொண்டு " மதசார்பற்ற இந்தியாவை " நாசம் செய்வதில் எல்லாக்கட்சிகளுக்கும் ஏகபோக உரிமை உண்டு.மக்களுக்கு என்ன செய்வதென்றே தெரியாமல் இருக்கும் மனநிலையை பயன்படுத்தி, குழப்பி குட்டையில் மீன்களை பிடிப்பதுபோல ஆட்சியை பிடிக்க வீறுகொண்டு அலையும் கட்சிகளுக்கு யார் பாடம் புகட்டுவர் ?
01-மார்ச்-2021 08:50:04 IST
உங்கள் அணியின் கொள்கை, செயல் திட்டங்கள் பற்றி?
அது குறித்து கலந்து பேசிக் கொண்டிருக்கிறோம் விரைவில் அறிவிப்போம்.
முதல்வர் வேட்பாளராக, யாரை முன்னிலைப்படுத்துவீர்கள்?
தேர்தல் முடிவுக்கு பின், முதல்வரை தேர்வு செய்வோம். பொழுது விடிஞ்சாப்போச்சு புது புது கட்சிகளும் ,புது புது கூட்டணிகளும் நாட்டில் உருவாகுவதைப் பார்த்தால் அரசியல் ஒரு நல்ல " தொழிலாக" அங்கீகரிக்கப்பட்டு விட்டது என அறியலாம்.கொள்கையும் கிடையாது ,கோட்பாடும் கிடையாது ,செயல் திட்டங்களும் கிடையாது யார் முதல்வர் வேட்பாளர் என்றும் தெரியாது .ஆனால் கட்சியும் ,கூட்டணியும் மட்டும் உண்டு.மக்களை எவ்வளவு மாக்கான்களாக எடைபோட்டுயிருக்கிறார்கள்.இவர்கள் எதைச் சொல்லி ஓட்டு கேட்ப்பார்கள்?.தேர்தல் ஆணையம் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்திற்கு மேல் ஒரு கட்சிக்கு " வோட்" கிடைக்காவிடில் அதை பதினைந்து வருடங்களுக்கு தேர்தலில் கலந்துகொள்ள அனுமதிக்கக்கூடாது.
28-பிப்-2021 11:25:48 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.