THINAKAREN KARAMANI : கருத்துக்கள் ( 153 )
THINAKAREN KARAMANI
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
7
2019
பொது இரவு பகலாக உழைத்த 16,500 விஞ்ஞானிகள்
இப்போது என்ன தவறு நிகழ்ந்தது என்று கண்டுபிடித்து சரிசெய்துகொண்டால் அது எதிர்காலத்தில் நமது மனிதர்களை நிலவுக்கு பாதுகாப்பாக அனுப்பிவைக்க உதவும். இந்தத்தவறு நிகழ்ந்ததும் ஒரு நல்லதற்குத்தான் என்று நமது விஞ்ஞானிகள் மனத்தைத் தேற்றிக்கொண்டு தொடர்ந்து ஆராய்ச்சிகளைச் செய்யவேண்டும். நமது சந்திராயன்-2 க்காக இரவுபகலாக அயராது பணிபுரிந்த ஆயிரக்கணக்கானவர்களுக்கு எனது பாராட்டுக்கள். THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.   21:27:52 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

செப்டம்பர்
7
2019
பொது கண்ணீர் விட்ட சிவன் கட்டி அணைத்து தேற்றிய மோடி
" கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை " - " MANY A SLIP BETWEEN CUP AND LIP " என்று சொல்வார்களே அது மாதிரி ஆகிவிட்டது. பழம் நழுவி பாலில் விழுமென்று காத்திருந்தோம். ஆனால் பழம் பாலில் விழாமல் நழுவிவிட்டது. அதற்காக இதையே நினைத்து வருந்தவேண்டியது இல்லை. கடுமையான முயற்சிக்குப்பின் மூன்று லட்சத்தி எண்பத்தி நாலாயிரத்து நானுறு கிலோமீட்டர்(3,84,400 km ) பயணித்து வெற்றிகரமாகச் சென்று இரண்டு (2 km ) கிலோமீட்டர் தொலைவில் நிலவைத் தொடுவதில் பின்னடைவாகி விட்டது. இந்தத் தவறுக்கான காரணத்தைக் கண்டுபிடித்து சரிசெய்து கொண்டோமென்றால் அது நம் மனிதர்களை நிலவிற்கு பத்திரமாகக் கொண்டு சென்று நிலாவில் இறக்குவதற்கு பேருதவியாக இருக்கும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை. இந்தத் தவறு நிகழ்ந்ததும் ஒரு வகையில் நல்லதுக்குத்தான் என்று எடுத்துக் கொள்வோம். ISRO தலைவர் திரு சிவன் அவர்களே, நீங்கள் கலங்காமல் உங்கள் குழுவோடு புது உற்சாகத்தோடு மீண்டும் உங்கள் ஆய்வினைத் தொடருங்கள். உங்களுக்கும் உங்கள் குழுவுக்கும் எனதன்பு நல்வாழ்த்துக்கள். THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.   20:09:56 IST
Rate this:
0 members
0 members
16 members
Share this Comment

செப்டம்பர்
6
2019
பொது நிலவில் சந்திராயன் 50 அம்சங்கள்
"அமெரிக்காகாரன் நிலாவுல ராக்கட்டை இறக்கிட்டானாம்" என்று நாம் வியந்து பேசியக்காலம்போய் இன்றைக்கு என்னா நிலமைனா 'இன்னைக்கு ராத்திரி நாம நாம்ம ராக்கெட்டை நிலாவுல இறக்கப்போகிறோம் ' என்று பெருமையுடன் சொல்லிக்கொண்டு அடக்க முடியாத ஆவலுடன் அந்த அற்புத தருணத்தை எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கிறோம். வெள்ளைக்காரங்கள் நினைக்கலாம் கோவணத்தைக் கட்டிக்கொண்டு மண்ணு வரப்பு என்று வெட்டிக்கொண்டு கிடந்த பயலுக வானத்தைக்கடந்து வான்நிலவினைத் தொடப்போகிறானாம் என்று ஏளனமாகப் பேசியவர்களின் வாய்கள் இன்று அடைக்கப் படப்போகின்றன. சாதனை படைக்கப்போகும் சந்திரயான்-2 வே உனக்கு என் அன்பு வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.   22:04:06 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
3
2019
பொது வண்டி விலை ரூ.15 ஆயிரம் அபராதம் ரூ.23 ஆயிரம்
" ஆகா சரியான தண்டனை ". இந்த RULES-யை அனைவரிடமும் STRICT-டா அமுல் படுத்துங்க. நாடு நலம் பெரும். THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.   21:30:30 IST
Rate this:
1 members
0 members
16 members
Share this Comment

ஆகஸ்ட்
25
2019
சம்பவம் 600 பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டியவர் கைது
இவனையும் ஜெயிலுக்குள் உட்கார வைத்து மூணு வேளையும் சாப்பாடு போட்டு வருடக்கணக்கில் கவனிச்சுக்கங்கோ. தண்டனை ஏதும் உடனே கொடுத்திடாதீங்க. THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.   21:11:39 IST
Rate this:
0 members
0 members
15 members
Share this Comment

ஆகஸ்ட்
25
2019
உலகம் விண்வெளியில் முதல் குற்றம் நாசா விசாரணை
நம்ம ஊரு (சங்ககால-திருவிளையாடல் புராண) நக்கீரனின் "குற்றம் குற்றமே" பாணியில் விசாரணை. உண்மை வெல்லட்டும். THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.   20:49:05 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
25
2019
உலகம் தங்கம் வென்றார் சிந்து உலக பாட்மின்டனில் வரலாறு
"உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்தார் சிந்து". இந்த செய்தியை வாசிக்கும் ஒவ்வொரு இந்தியனும் பெருமையில் தன் காலரைத் தூக்கிவிட்டு கொள்ளலாம். தங்கம் வென்ற தங்கமங்கைக்கு இனிய வாழ்த்துக்கள். THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.   20:15:43 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

ஆகஸ்ட்
24
2019
பொது தெலுங்கானாவில் 460 கிராமங்கள், 2 நகரங்கள் மாயம்
நம்ம ஊரு சினிமா ஜோக்கில ஒரு கிணத்தக்காணோம்ன்னு சொன்னாங்க. இன்னொரு சினிமாவில ஒரு கிராமத்தைக் காணோம்னு சொன்னாங்க. நாம காணோம் காணோம்னு சொன்ன கிணறு, கிராமம் எல்லாம் கதையில வந்தது. இப்போ என்னடானா நிஜமாகவே நூற்றுக்கணக்கான கிராமங்களையே காணோம்னு சொல்லறாங்க. அடுத்து என்னா சொல்லப் போறாங்கன்னா இந்த நாட்டையே காணோம்னு சொல்லப்போறாங்க . THINAKAREN KARAMANI, VELLORE, INIDA.   17:28:18 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஆகஸ்ட்
17
2019
பொது 3 ஆண்டுகளுக்கு கெட்டுப்போகாத இட்லி வந்தாச்சு!
ஏற்கனவே நம்ம வீடுகளில் ஒருநாளைக்கு குழம்பை உபயோகப்படுத்திவிட்டு ஒரு வாரம் FRIGE-ல் வைத்தது சாப்பிடுங்கோன்னு சொல்றாங்க. இந்த இட்லி மூணு வருசம் வச்சு சாப்பிடலாம் என்று வந்த பிறகு, இனி என்னா ஆகும்னா குழந்தை பிறந்தவுடனேயே இட்லி அவித்து வைத்துவிடுவார்கள். அப்படி அவித்து வச்சுட்டா பிள்ளை L.K.G. போகும்போது பேக் பண்ணி ஸ்கூலுக்கு அனுப்ப வசதியா இருக்கும்ல.ரொம்ப நல்ல கண்டுபிடிப்பு THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.   21:05:58 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

ஆகஸ்ட்
11
2019
சம்பவம் இறந்த தந்தையின் முன் திருமணம்
தன் தந்தைமீது எவ்வளவு அன்பு வைத்திருந்தால் அவர் தன் திருமணத்தை இறந்த தன் தந்தை முன் நடத்ததிருப்பார். அவரின் அளவுகடந்த தந்தைப்பாசம் என்னை மெய் சிலிர்க்க வைத்துவிட்டது..நீடுழிவாழ்க.THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.   19:36:30 IST
Rate this:
3 members
0 members
18 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X