2001ல் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த சில மாதங்களில் வீரப்பன் வேட்டைக்கு விஜயகுமார் அப்பாய்ன்ட் ஆனார். அச்சமயம் டில்லி மத்திய கேடரில் இருந்த விஜயகுமாரை ஸ்பெஷல் பெர்மிசனில் மாநில கேடருக்கு வர வைக்கப்பட்டார். இத்தகைய மாற்றங்கள் ஐபிஸில் சாதாரணம் என்றாலும் பேப்பர் வொர்க் மாதங்களில் ஆகுமாம். ஆனால் ஜெ இவரிடம் ஓப்புதலை கேட்ட அடுத்த நாளில் ஆர்டர் வந்து விட்டது என்று ஜெ யின் வேகத்தையும் செல்வாக்கையும் சிலாகித்து இந்த புத்தகத்தில் எழுதியுள்ளார். வீரப்பனை உயிருடன் பிடிக்க முடியாத வருத்தத்தையும் பதிவு செய்துள்ளார். மிக சிறந்த போலீஸ் ஆப்பரேசனில் இதுவும் ஒன்று. வாழ்த்துக்கள் சார்
21-டிச-2022 07:23:47 IST
ஒரு விஷயம் தெளிவாக புரிகிறது. பார்வை எண்ணிக்கைக்கும் பட வெற்றிக்கும் சம்பந்தம் இல்லையென்று. பெரிய நடிகர்களின் ரசிகர்கள் வீம்புக்கு மீண்டும் மீண்டும் பார்வையிட்டு எண்ணிக்கையை கூட்டுகிறார்களே தவிர, அவை உண்மையான வரவேற்பு அல்ல. இன்றைய சூழலில் ஒரு திரைப்படத்தின் வெற்றி என்பது நான்காவது நாளுக்கு அப்புறமும் சர்வைவ் ஆவதும், கதையம்சத்தில் பலதரப்பட்ட மக்களை ஈர்ப்பதிலுமே உள்ளது
20-டிச-2022 07:01:03 IST
இவர் பிறந்தது கென்யாவில். இவரின் தாத்தா பிறந்தது தற்போது பாகிஸ்தானில் இருக்கும் முந்தைய இந்தியா. இதற்காக பூர்வீகம் இந்தியா என்று புளகாங்கிதம் அடைவதில் அர்த்தம் இல்லை. இவரின் ஆட்சியில் இந்திய இங்கிலாந்து உறவில் பயனுள்ளதா என்று மட்டுமே நாம் பார்க்க வேண்டும். வேடிக்கை பார்ப்போம்
25-அக்-2022 19:39:34 IST
ஓரிரண்டு நாட்களில், அநேகமாக தீபாவளி அன்றே தியேட்டர்கள் மீண்டும் பொன்னியின் செல்வன் படத்தை போட வாய்ப்புள்ளது. இன்னும் அதற்கு ஃபேமிலி கூட்டம் வந்து கொண்டிருக்கிறது
19-அக்-2022 19:48:09 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.