babu : கருத்துக்கள் ( 50 )
babu
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
26
2019
பொது 15 மணி நேரமாக தொடரும் குழந்தையை மீட்கும் பணி அடுத்து என்ன?
தேசிய பேரிடர் ஏன் உடனே வரவில்லை. தயவு செய்து அலட்சியம் காட்டாதீர்கள். இந்த மாதிரி ஒரு செயல் நடந்த வுடன் பேரிடர் அதிகாரிகள் மற்றும் ராணுவ அதிகாரிகள் உடனடியாக ஹெலிஹாப்டர் மூலமாக வந்து காப்பாற்றும் முயற்சியில் ஈடு பட்டு இருக்க வேண்டும். சீன அதிபர் வரும் போது மட்டும் அந்த உயிருக்கு பாதுகாப்பு எப்படி அளித்தீர்கள் அந்த மாதிரி இவைகளுக்கு முழு தீவிர முயற்சி கொண்டு இருக்க வேண்டும். இந்த கருத்தை பதிவு செய்யும் பொழுது என் மனம் மிகவும் வருத்தமாக உள்ளது. டிஜிட்டல் இந்தியாவாக நாம் இருந்து என்ன புண்ணியம். தயவு செய்து பொது மக்கள் தங்கள் வீட்டில் வீட்டின் அருகில் இந்த மாதிரி மூட படாத ஆழ்துளை கிணறுகளை கண்டறிந்து உடனடியாக மூடுங்கள். இல்லை என்றால் இழப்புகளை தாங்க முடியாது. ரசிகர் மன்றங்களை கொண்டுள்ள ரசிகர்கள் தயவு செய்து தொலைக்காட்சிகளில் பேட்டி கொடுத்து தங்கள் ரசிகர்களை இந்த மாதிரி குழாய் இடங்களை மூட சொல்லுங்கள். அரசு தக்க தண்டனை அளிக்க வேண்டும். தயவு செய்து இறைவா எங்கள் குழந்தையின் உயிரை காப்பாற்று .....................   13:24:38 IST
Rate this:
10 members
1 members
5 members
Share this Comment

ஜனவரி
16
2019
பொது மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றார் ஜெட்லி
ஏன் இந்த மாதிரி நேரங்களில் இவர்களை போன்றவர்கள் நமது இந்திய அரசாங்கத்தின் அரசு மருத்துவமனை மற்றும் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக செல்வதில்லை. உங்களுக்கே நம்பிக்கை இல்லை நமது அரசு மருத்துவ சிகிச்சை மேல்.....   08:32:11 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜனவரி
16
2019
பொது மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றார் ஜெட்லி
ஏன் இந்த மாதிரி நேரங்களில் இவர்களை போன்றவர்கள் நமது இந்திய அரசாங்கத்தின் அரசு மருத்துவமனை மற்றும் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக செல்வதில்லை. உங்களுக்கே நம்பிக்கை இல்லை நமது அரசு மருத்துவ சிகிச்சை மேல்..... நீங்களெல்லாம் சும்மா போலியாக இந்தியா வல்லரசாகிவிடும், எய்ம்ஸ் உலக தரமானது என்று வாயளவில் பேச மட்டும் தான் தைரியம் உள்ளவர்கள். எந்த கட்சியை சேர்ந்தவர்களாக இருக்கட்டும் மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா, லண்டன், சிங்கப்பூர் செல்வது உங்களுக்கு எளிதாக உள்ளது, அந்த அளவிற்கு பணம் நிறைய உள்ள உங்களுக்கு இறைவன் நல்ல உடல் நலத்தை கொடுக்க வில்லை. எப்படியோ கேவலப்பட்டு சம்பாதிச்சது வெளி நாட்டில் கொண்டு போய் கொட்டுகிறீர்கள். இதுவரையும் திருந்தாத நீங்கள் செத்து வானுலகம் போய் இறைவனின் கஜானாவில் கை வைக்காமல் இருந்தால் சரி....   07:48:04 IST
Rate this:
0 members
0 members
22 members
Share this Comment

அக்டோபர்
5
2018
பொது கனமழை சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து விட்டு ஆசிரியர்களை மட்டும் கண்டிப்பாக வேலைக்கு வர வேண்டும் என்றும் அப்படி வரா விட்டால் 2 நாட்கள் சம்பளம் பிடிக்கப்படும் என்று சென்னை மாவட்ட தனியார் பள்ளி மேலிடம் உத்தரவு அனுப்பி உள்ளது. தயவு செய்து இந்த கருத்தை ஏற்று உடனடியாக அரசு,தொலைக்காட்சி மற்றும் செய்தி தாள்கள் அதிகாரிகளுக்கு தெரிய படுத்தவும். தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.   07:19:12 IST
Rate this:
2 members
0 members
46 members
Share this Comment

அக்டோபர்
5
2017
அரசியல் டெங்குவுக்கு 400 பேர் பலி ஸ்டாலின்
சென்னை போரூர் கொளப்பாக்கம் MRK நகர் பகுதியில் உள்ள பால் பண்ணை மாடுகள் ரோட்டில் கட்டி போடப்படுகின்றன. அந்த பகுதி முழுவதும் சாணம் கிடப்பதால் கொசுக்கள் உற்பத்தி ஆகின்றன. அதிகாரிகள் லஞ்சம் வாங்கிக்கொண்டு வாயை மூடிக்கொண்டு உள்ளனர். தயவு செய்து டெங்கு பரவுவதற்கு முன் நடவடிக்கை தேவை....   17:24:02 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

ஜூலை
20
2017
சிறப்பு கட்டுரைகள் டி.வி.ஆர்., வளர்த்த தமிழுணர்வு!
இன்று எந்த தனியார் பள்ளியில் குழந்தைகளுக்கு தமிழ் கற்று தருகின்றார்கள், எந்த தனியார் கம்பெனியில் (நம் தமிழ் நாட்டில் உள்ள) நம் தமிழ் வழி கல்வி பயின்ற மாணவர்களுக்கு வேலைக்கு சேர முன்னுரிமை தருகின்றனர் சொல்லுங்கள் பார்க்கலாம். எங்கு சென்றாலும் ஆங்கில மோகம் தானே அவர்களை ஆட்டுகின்றது. எத்தனை தமிழ் வழியில் நன்கு படித்த மாணவர்கள் ஆங்கில புலமை இல்லாததால் (அவர்கள் கிராமத்து பள்ளியில் ஆங்கில வசதி, அவர்கள் பெற்றோர்கள் பயிலாத காரணத்தால்) நம் தமிழ் நாட்டின் தலை நகரான சென்னை பெருநகரத்தில் ஆங்கிலம் பேச முடியாமல் தலை குனிந்து வெறுத்து போய் வேலை கிடைக்காமல் திரிபவர்கள் எத்தனையோ, இறந்தவர்கள் எத்தனையோ, ஹோட்டல்களில், சிறு கடைகளில் வேலை பார்க்கின்றனர். இவர்களை நமது அரசால் அடையாளம் காணப்பட வில்லை. ஆனால் எதாவது ஒரு பிரச்சனை என்றால் மட்டும் நாம் தமிழர் இனம் என்று மார் தட்டிக்கொள்கின்றோம். தயவு செய்து அரசு ( இந்த கருத்தை படிக்கும் அரசு துறை சார்ந்த மற்றும் தனியார் துறை சார்ந்த அதிகாரிகள்) மெத்தனம் காட்டாமல், உதவுங்கள். அப்பொழுது தான் நம் தாய் மொழி சிறப்பு பெறும். எங்கு பார்த்தாலும் புற்றீசல் போல தனியார் ஆங்கில பள்ளிகள் தோன்றி மக்களிடம் பணத்தை கறக்கின்றனர். லட்ச கணக்கில் கொட்டி இன்ஜினீர் படித்த மாணவர்கள் இன்று சொற்ப சம்பளத்தில் வேலை செய்வதை கண்டால் கண்கள் கலங்குகின்றன. மாணவ சமுதாயமே, முகநூல், வாட்ஸுப் போன்றவைகளுக்கு தங்களை அடிமைகளாக்காமல் மற்ற மொழிகளில் புலமை பெறும் அறிவை நம் தாய் வழியின் மூலம் தேடுங்கள்...............   11:19:48 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

ஜூன்
29
2017
அரசியல் 30 ஆண்டுகள் காத்திருப்புக்கு பின் ஜி.எஸ்.டி., அறிமுகம்...இ்ன்று!
முதலில் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள டோல் கேட்களை எடுங்கள், இதையும் நீங்கள் தானே ஆட்சிக்கு வந்தவுடன் கூறினீர்கள்....   11:11:16 IST
Rate this:
16 members
1 members
18 members
Share this Comment

ஜூன்
30
2017
பொது அரசு பள்ளிக்கு நிலம் தானம் டிரைவருக்கு விருது
அரசு தலை குனிய வேண்டும்.............. ஒரு தனிப்பட்ட ஏழை மனிதனே இவ்வளவு செய்யும் பொழுது மாநில அரசு உன்னால் ஏன் இடம் வழங்க முடியவில்லை... முடியவில்லையா அல்லது இடம் வழங்கிய பணத்தை முழுங்கி விட்டனரா............   11:04:14 IST
Rate this:
2 members
0 members
6 members
Share this Comment

ஜூன்
21
2017
பொது வைகை அணைையை தூர் வாருவோம்
" பொதுமக்கள், கல்லுாரி மாணவர்கள், இளைஞர்கள், விவசாயிகள் குழுக்களாக சேர்ந்து துார் வார களமிறங்க வேண்டும். அனைவரும் ஒன்றிணைந்து இரவு, பகல் பாராது குழுக்களாக களமிறங்கினால் வண்டல் மண்ணை வெளியேற்றி விடலாம் " இதனை கேட்க நன்றாக உள்ளது. எவராவது வருவார்களா............. நிறைய படித்த, கொஞ்சம் படித்த, படிக்காத எல்லாருக்கும் வெளி நாடு போகணும், கை நிறைய சம்பாதிக்கணும், வெளி நாட்டில் வெள்ளை அடிச்சு, கழிவறை கழுவும் வேலை பார்த்தாலும் விடுமுறைக்கு என் தாய் நாட்டிற்கு வந்து அங்கிருந்து வாங்கிட்டு வந்த பொருட்களை வைத்துக்கொண்டு ஏழை மக்கள் முன் பந்தா காட்டுதல், நம் தாய் மண்ணை கேவலமாக பேசுதல் போன்ற இழிவான செயல்களை செய்வதை தானே வாடிக்கையாக கொள்வார்களே தவிர நம் மண்ணை தூர்வார எவரும் வர மாட்டார்கள்...............இதனால் நமது அரசும் கண்டும் காணாதது போலவே உள்ளது.... ஊர் கூடி உண்ண வேண்டும் என்பதை மறந்து இப்பொழுது ஊரை விட்டு ஓட வேண்டும் என்ற எண்ணம் மக்களிடம் வளர்ந்து விட்டது. இதற்கு காரணம் வேலையில்லை என்பது தான். சென்னை போன்ற பெருநகரங்களில் தான் வேலை வாய்ப்பு என்றால் பேசாமல் அமைதியாக அனைத்து ஊர்களையும் மதுரை, கோவை, நெல்லை என்பதற்கு பதிலாக சென்னை, சென்னை, சென்னை என்றே அழைக்கலாமே..... அப்படியாவது எங்கள் ஊர் பக்கம் வேலை வாய்ப்பு பெருகும் என்ற ஒரு நம்பிக்கை தான் எங்களுக்கு......?   12:23:54 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

ஜூன்
20
2017
பொது ஜனாதிபதி காரை நிறுத்திய எஸ்.ஐ., உயரதிகாரிகள், பொதுமக்கள் பாராட்டு
இறந்தவர்களை பற்றி பேசுவது அநாகரீகம் நண்பரே..................... இது தான் உங்கள் சிங்கப்பூர் வாழ்க்கை பாடமா....   17:31:50 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X