PSV : கருத்துக்கள் ( 59 )
PSV
Advertisement
Advertisement
மார்ச்
21
2019
அரசியல் ஊழல் பற்றி பேச மோடிக்கு தகுதியில்லை ஸ்டாலின்
//''ஊழல் பற்றி பேச, பிரதமர் மோடிக்கு எந்த தகுதியும் இல்லை,'' என, தி.மு.க., தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.// மிகவும் சரி. ஊழல் பற்றி பேசும் மொத்தத் தகுதியையும் நாம் தானே குத்தகைக்கு எடுத்திருக்கிறோம். மோடிக்கு எப்படித் தெரியும் மாட்டிக்கொள்ளாமல் ஊழல் செய்யவும் பின் அனைத்துத் தரப்புக்கு குற்றச்சாட்டுகளிலிருந்து சட்டப்பூர்வமாக தப்பிக்கும் வழியும். அதிலெல்லாம் நாம் தானே கரைகடந்தவர்கள்.   02:55:53 IST
Rate this:
2 members
1 members
21 members
Share this Comment

மார்ச்
20
2019
அரசியல் வாரிசுகளுக்கு வாய்ப்பு தி.மு.க., விளக்கம்
//தி.மு.க.,வில் இருப்பது, குடும்ப வாரிசுகள் அல்ல கொள்கை வாரிசுகள்// இது தான் முழுப் பூசணியை சோற்றில் மறைக்கும் வேலை. வேண்டுமானால் ஒரேயொரு எழுத்தை மாற்றி போட்டு இப்படிச் சொல்லலாம்,-" தி.மு.க.,வில் இருப்பது, குடும்ப வாரிசுகள் அல்ல கொள்ளை வாரிசுகள் ". இது நூறு சதம் உண்மையாகவும் இருக்கும், ஊர் வாயை அடைத்தும் விடும். என்ன சரிதானே ?   06:31:07 IST
Rate this:
0 members
0 members
25 members
Share this Comment

மார்ச்
12
2019
சம்பவம் காதலை மறுத்த பெண் மீது தீவைப்பு
காதலை ஏற்கவில்லையென்றால், கொளுத்திவிடும் இதற்குப் பெயர் தான் காதலா ? காதல் தீ போன்றது என்ற ரீதீயிலெல்லாம் கவிஞர்கள் எழுதும் திரைப்பாடல் வரிகளைத் தவறாகப் புரிந்து கொண்டுவிட்டானோ ? காலம் கலிகாலம்.. பெண்களை பெற்றவர்கள் வயிற்றில் நெருப்பு.. பெண்கள் உடலில் நெருப்பு...அவள் உயிர் வாழ வேண்டுமெனப் பிரார்த்திப்பதா.. இல்லை இந்த வேதனையிலிருந்து அந்தக் குழந்தை விடைபெற்றிட வேண்டுமென வேண்டுவதா? பெற்றோர்கள் நிலையென்னவாயிருக்கும் ? அக்னி தேவனே.. நீயே ஒரு நியாயம் சொல்லு...அந்தப் பெண் உயிர் மீண்டாலும்.. இனி வருங்காலமுழுதும் எப்பேர்ப்பட்ட வேதனையில் வாழ்வாள்..நெஞ்சம் பதறுகிறது... இது மாதிரியும் இன்னும் பொள்ளாச்சி சம்பவம் போலெல்லாம் நடக்கும் இந்த மாதிரி ஒழுக்கங்கெட்ட, சீர்க்கெட்டச் சிறுமைத்தனமான சமுதாயத்தைத் தான் நாம் பெற்ற சுதந்திரம் உருவாக்கியிருக்கிறதா ? பெண்ணை மதிக்காத சமுதாயம் வாழ்ந்தென்ன, வீழ்ந்தென்ன ? இனிமேல் இப்படித்தானிருக்குமென்றால், இறைவா எங்களை போன்றோருக்கு இதையெல்லாம் தாங்கிக்கொள்ளும் மன உறுதியைக் கொடு..   20:37:28 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

மார்ச்
8
2019
கோர்ட் சிதம்பரத்தை கைது செய்ய தடை நீட்டிப்பு
மனிதர்கள் இயற்றிய சட்டம், இதில் ஓட்டைகள் அதிகமுண்டு, எதிலேனும் நுழைந்து இப்படித் தப்பித்துக் கொள்ளலாம்...ஆனால் இறைவன் இருக்கிறான், சட்டநாதன்...அவனது தர்மாலயத்தில் சொல்லப்படும் தீர்ப்பு மிகவும் வலுவாக இருக்கும், வலியாகவும் இருக்கும் .. என்ன, அந்த சட்டம் மிகவும் மெதுவாகவே வேலை செய்யும், சில சமயங்களில் அது வேலை செய்கின்றதா என்ற ஐயத்தை நம்முள் ஏற்படுத்திவிடும். ஆனால் ஒரு சிறு குற்றம் செய்திருந்தாலும், அதற்குரிய தண்டனை அடையாமல் அங்கேத் தப்பிக்க முடியாது..இது தெரியாமல் ஆடினால், ஒரு நாள் மொத்தமாக அடங்கிவிடுவோம்.. இதை அனைவருமே நினைவில் கொள்ள வேண்டும்..முன்னாள் நிதியமைச்சர் உட்பட...   19:28:33 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மார்ச்
5
2019
சிறப்பு கட்டுரைகள் உடல், பொருள், ஆவி - மனைவி
அருமையான கட்டுரை...அவசியமான அறிவுரை... நன்றி, அமுதா நடராஜன் அவர்களே   18:52:44 IST
Rate this:
1 members
0 members
8 members
Share this Comment

மார்ச்
6
2019
பொது பெற்றோரை இழந்த 3 பிள்ளைகள் படிப்பை தொடர முடியாமல் தவிப்பு
ஆம், நானும் அந்த எண்ணைத் தொடர்பு கொண்டேன், எடுக்கவில்லை. ஒரு வேளை, இது தலைமையாசிரியரின் தனிப்பட்ட செல்பேசி எண்ணாக இருந்து அவருக்கு இது தொடர்பாக நிறைய அழைப்புகள் வந்ததால், செல்பேசியைத் தற்காலிகமாக எடுக்காமலிருக்கிறாரோ என்னவோ... மீண்டும் சில நாட்கள் கழித்துத் தொடர்பு கொண்டு பார்ப்போம். இதன் நடுவில் இணையத்தில் தேடி எடுத்த அந்தப் பள்ளியின் முகவரி மற்றும் தொலைபேசி எண்ணை இவ்விடம் பதிகிறேன்..உதவுமா என்று பாருங்கள்...நன்றி Address:M K N Middle School , T.Pudukottai, Manamadurai Taluk Sivagangai distTamil Nadu, 623701, இந்தியா Phone: +91 73734 41578   18:25:53 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
5
2019
உலகம் பயங்கரவாதி மசூத் அசாரின் மகன், சகோதரன் கைது
"பயங்கரவாத செயல்களுக்கு பாகிஸ்தான் மண் பயன்படவில்லை என்பதை உறுதி செய்வதற்காக, பயங்கரவாதிகளை கைது செய்துள்ளோம். இதனை நாங்களாக தான் செய்தோம். யாரின் அழுத்தமும் காரணம் இல்லை." - இப்படிக்கு ' எங்கப்பன் குதிருக்குள் இல்லை' பாகிஸ்தான்.   19:43:17 IST
Rate this:
1 members
0 members
20 members
Share this Comment

பிப்ரவரி
28
2019
பொது பாக்., விமானத்தை வீழ்த்திவிட்டு குதித்த அபிநந்தன்
நமது வேண்டுதல்கள் வீண் போகவில்லை.'பறக்கும் சவப்பெட்டி' என்று இராணுவத்தினரால் விமர்சிக்கப்படும் பழைய மிக் இரக விமானத்தில் பறந்து, அமெரிக்க நவீன தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட மிக பலம் வாய்ந்த எப் -16 இரக விமானத்தைச் சுட்டு வீழ்த்தி, வீரச்செயல் புரிந்து, எதிர்த்தரப்பினர் வசம் சிக்கிய பின்னும், சிறிதும் கலங்காமல், அறிவில் தெளிவாகவும், மன உறுதியுடனும், நாட்டுப்பற்றுடனும் செயல்பட்ட இந்திய விமானப்படை இராணுவ வீரர், தமிழர் அபிநந்தன் வர்த்தமான் அவர்கள் நல்ல முறையில் நாளை தாயகம் திரும்ப வேண்டும். அவர்களது குடும்பத்தாருக்கு இச்செய்தியால் ஏற்பட்டிருக்கும் நிம்மதியும் மகிழ்ச்சியும், உலகெங்குமுள்ள இந்தியர்களுக்கும் ஏற்பட்டிருமென்று எண்ணுகிறேன். இம்ரான் கான் மனிதநேயத்துடன் எடுத்த முடிவின் பின்னணியில் மோடி என்ற மனிதரின் ஆளுமை இருக்கின்றது என்பதை சிலரால் ஒப்புக்கொள்ள முடியாமல் போகலாம், ஆயினும் அது மறுக்க முடியாத உண்மை. தங்கள் மண்ணில் சுதந்திரமாக உலவி வந்த பயங்கரவாதிகளை மட்டும் குறிவைத்து இந்திய இராணுவம் தாக்கியழித்ததை பாகிஸ்தான் அரசும், இராணுவமும் ஒப்புக்கொள்ளுமென்று எதிர்பார்த்தால், அது எவ்வளவு பெரிய முட்டாள்த்தனம் அப்படிச் செய்தால், பாகிஸ்தான் மண்ணில் தீவிரவாதிகளின் ஆதிக்கமிருப்பதை அவர்களே உலகறிய ஒப்புக்கொண்டதாகாதா ? அவர்கள் தரப்பில் இந்திய விமானப்படையின் தாக்குதல் பற்றிய உண்மைச்செய்திகளைப் பகிர்ந்து கொள்ள முடியாமல் இருக்கிறார்கள். திருடனுக்குத் தேள் கொட்டிய நிலையில் உள்ளது உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெளிவு. அபிநந்தனை விடுவிக்காமல், அவர் உயிருக்கும், உடல்நலத்திற்கும் பாதிப்பு ஏற்படுத்தினால், அடுத்து உலக நாடுகளின் ஆதரவைப் பெற்ற இந்தியா என்ன நடவடிக்கையில் இறங்குமென்று உணர முடியாதவர்களா பாகிஸ்தானிய அரசும், இராணுவமும் ? அதைத் தாங்கும் பலம் அவர்களுக்கில்லை என்பதும் தெரிந்திருக்குமே எது எப்படியோ, அமைதிக்கான முதல் படியை இம்ரான் எடுத்திருப்பதைப் பாராட்டுவோம், தொடர்ந்து எல்லை தாண்டிய தீவிரவாதத் தாக்குதல்களை முன்கூட்டியேத் தகர்த்தெறிய இந்தியா தயங்காது என்பதையும் அவர்களுக்கு கண்டிப்புடன் தெரிவிப்போம். நல்ல தலைமையிலான அரசு அமைய நமது கடமையைத் தவறாமல் புரிவோம். இந்தியாவின் புகழ் ஓங்குக வாழ்க பாரதம்   18:58:20 IST
Rate this:
2 members
0 members
221 members
Share this Comment

பிப்ரவரி
19
2019
பொது வீரர்கள் குடும்பத்திற்கு கூலி தொழிலாளி நிதி
உங்களை வணங்குகிறேன், ஐயா கூலி வேலை செய்தாலும் தர்ம சிந்தனையோடு இருக்கிறார்களே, இவர்கள் தான் பாரததேவியின் தவப்புதல்வர்கள்.மற்றபடி அரசியல்வாதிகளென்று சொல்லித்திரியும், அடுத்தவன் குடி கெடுத்துத் தலைமுறைக்கும் சொத்து சேர்க்கும் பதர்களைப் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை.   07:57:12 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

பிப்ரவரி
15
2019
பொது பயங்கரவாத தாக்குதலில் வீர மரணம் அடைந்த வீரர்கள்
கோழைத்த தாக்குதலுக்கு அநியாயமாய் உயிரிழந்த எம் மண்ணின் வீரர்களுக்கு இதயங்கனிந்த அஞ்சலி அன்பையும், அகிம்சையையும் நாடும் என் மனம் இன்று குமுறுகிறது.கண்ணீர் மடைதிறக்கிறது. சமாதானம் வேண்டும் இறைவா.. முருகா.. தேவசேனாபதி...என் குலதெய்வமே.. உன் வீரமுகத்தை என் நாட்டின் எல்லையில் காவலிருக்கும் ஒவ்வொரு வீரப்புதல்வனுக்கும் கவசமாய்க் காட்டு...காக்கக் காக்கக் கனகவேல் காக்க...தாக்கத் தாக்கத் தடையறத் தாக்க.. வெற்றிவேல்..வீரவேல்...வந்தே மாதரம்..ஜெய்ஹிந்த்   23:35:16 IST
Rate this:
0 members
0 members
17 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X