ஹிந்தி தெரியாமல் தமிழர்கள் வெளி நாட்டில் இருந்து அனுப்பப் படுகிறீர்களா? எந்த வெளி நாட்டில் இந்தி தெரிய வேண்டும்? அமேரிக்கா? ஐரோப்பா? வளைகுடா நாடுகள்? ஒரு மனிதனை அடிமை ஆக்க வேண்டும் என்றால் முதலில் அவனது மொழியை அழிக்க வேண்டும்.
ஆங்கிலம் இணைப்பு மொழியாக இருந்துவிட்டுப் போகட்டுமே ? ஆனால் இந்தி வெறியர்களுக்கு அது அந்நிய மொழி. அதேபோல் நமக்கும் இந்தி அந்நிய மொழி தானே ஆங்கிலம் படித்தால் உலகம் முழுதும் வேலை செய்யலாம். இந்தி மட்டும் படித்தல் வட இந்தியாவில் மட்டும் தான் வேலை செய்ய முடியும். தேவை இருக்கிறவன் படித்துக் கொள்கிறான். வட இந்தியாவில் இருந்து தமிழகத்திலும் , கேரளத்திலும் வந்து வேலை செய்யும் ஆயிரக் கணக்காண கூலித் தொழிலார்கள் தமிழில் BA வும் MA வும் வாங்கி கொணடா வந்து வேலை செய்கிறார்கள்? மொழி என்பது தாய்க்குச் சமம்.
17-ஏப்-2023 19:06:54 IST
எல்லாம் காலத்தின் கட்டாயம் தமிழ்நாட்டில் காலூன்றும்வரை இந்தி வெறி என்ற முகத்தை மறைக்க மோடிக்குத் தமிழ் என்ற முகமூடி தேவைப்படுகிறது
தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்தவுடன் சுய ரூபம் மெல்ல மெல்லத் தெரியும்
17-ஏப்-2023 07:41:47 IST
எண்ணிக்கைதான் அளவுகோல் என்றால் இந்தியாவின் தேசிய பறவையான மயிலை மாற்றி காக்கையாக இருக்க வேண்டும். காக்கை தான் இந்தியாவில் அதிக அளவில் இருக்கிறது.
13-அக்-2022 00:34:00 IST
அம்மா,
கம்பரிடம் வடமொழி படித்தே ஆக வேண்டும் என்று யாரும் சொல்லவில்லை தனக்குத் தேவை எனபதால் படித்தார். அதைத்தானே நாங்களும் கேட்கிறோம்.
14-மே-2022 08:03:39 IST
ஒலி பெருக்கிகள் மத வழிபாட்டுக்குத் தேவையா என்ன? ஒலி பெருக்கிகள் தடை செய்யப் பட வேண்டியவை. எந்த மதமாக இருந்தாலும். காரணம் அவை sound pollution ஐ உண்டாக்குகின்றன. ஒலி பெருக்கிகள் கண்டுபிடிப்பதற்கு முன் இந்த மதங்கள் என்ன செய்து கொண்டிருந்தனவோ அதைச் செய்யட்டும். அதில் எதாவது பிரச்சினை என்றால், கைபேசிகளில் ஆப் மூலம் நேரத்தை உணர்த்தலாம்.
20-ஏப்-2022 18:20:19 IST
எல்லாம் ஆட்சியைப் பிடிப்பதற்காக மட்டுமே நண்பரே ஆட்சி கையில் வந்ததும் பாரதியாவது, வள்ளுவனாவது , தமிழாவது...ஏமாறுவதற்காகத் தலையை மொட்டையடித்துக் கொண்டு ஆட்களை வரிசையாக நிற்கும் வரை, ஏமாற்றுபவன் இருக்கத்தான் செய்வான்...மதம் மோடியின் பின் செல்பவர்களின் கண்களை மறைக்கிறது
11-டிச-2020 23:32:42 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.