காஷ்மீரில் இருக்கும் இந்துக்களை மட்டும் குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல் கவலைக்குரியது. இந்த வருடம் மட்டும் இதுபோன்று 17 தாக்குதல்கள் நடந்துள்ளன. நீங்கள் தமிழ்நாட்டில் தினமலர் தவிர வேறு எந்த செய்தி ஊடகங்களிலும் இது போன்ற செய்திகள் முக்கியத்துவம் காட்டப்படாது. இதற்கு கண்டன குரல்கள் தமிழ்நாட்டில் வராது. இதற்கு குரல் கொடுத்தால் இங்கு சிறுபான்மையினரின் ஓட்டு கிடைக்காமல் போய்விடலாம். நாடு எப்படி போனால் என்ன சிறுபான்மையினர் ஓட்டு மட்டும் போகக்கூடாது. திராவிட மாடல்.
02-ஜூன்-2022 19:23:39 IST
பாஜகாவில் சேர்ந்ததிலிருந்து மத்தியில் மந்திரி பதவி எதுவும் கொடுக்கவில்லை, கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்கள் இனி வேறு என்ன வழி ஏதோ ஒரு வகையில் அவர்களை குறை சொல்லி பழிவாங்குவது தான் சுப்பிரமணிய சுவாமியின் நிலை. இது ஒரு சாதாரண விஷயம்தான். அதே போன்று ஏ ஆர் ரகுமானுக்கு இந்தி பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை அதனால் தான் இந்தி தெரியாது போடா காமெடி எல்லாம்.
02-ஜூன்-2022 19:19:06 IST
அரசு போக்குவரத்து கழகங்களின் கடன் சுமைகளை கட்டுக்குள் வைத்து போக்குவரத்து கழகத்தை காப்பாற்ற வேண்டும். டீசல் விலை உயரும் பொழுது மற்றும் உதிரி பாகங்களின் விலைகள் உயரும் பொழுது கட்டண உயர்வு தவிர்க்க இயலாது. அதோடல்லாமல் போக்குவரத்துக்கழக ஊழியர்களின் சம்பளமும் வருட வருடம் உயர்த்த வேண்டி உள்ளது. டீசல் விலை என்பது சந்தை விலையில் போக்குவரத்து கழகங்களுக்கு கொடுக்கப்படுகிறது. ஆகவே பேருந்து கட்டணங்களையும் இதை பொருத்து அமல்படுத்த வேண்டும். திமுக எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது கட்டண உயர்வை வைத்து அரசியல் செய்தனர் இப்போது உள்ள எதிர்க்கட்சிகளும் அதையே செய்யும். போக்குவரத்து கழகங்களின் கடன்களை கட்டுக்கோப்புக்குள் வைப்பதே சிறந்த நிர்வாகம். இந்த மாநில அரசு முயற்சி செய்தால் ஊழல்களை குறைத்து அதனால் வரும் நட்டங்களை குறைக்கலாம். இலங்கை திவால் ஆனதற்கு காரணம் இதுபோன்று தேவையான கட்டணங்களை வரிகளை உயர்த்துவது மிக முக்கிய காரணம். எதிர்க்கட்சிகளும் இதைப் புரிந்து கொண்டு கடுமையாக அரசியல் செய்வதை குறைக்க வேண்டும். நட்டம் அதிகரித்துக் கொண்டே சென்றாள் கடைசியில் ஏர் இந்தியா விற்றதைப் போல், வந்த விலைக்கு விற்க வேண்டும்
17-மே-2022 17:50:49 IST
அரசு இலவசமாக இடம் மற்றும் வீடு கொடுக்கிறது. வாங்கி உள்ளவர்கள் இந்த கட்டிடத்திற்கான பராமரிப்புகளை செய்து கட்டிடங்களின் சிற தன்மை பாதுகாக்க வேண்டும். இன்று நகர்ப்புறத்தில் வீடு வாங்கும் சராசரியாக வேலைசெய்யும் நடுத்தர வர்க்கத்தினர் இருபது வருடங்கள் லோன் கட்டுகின்றனர் மற்றும் மாதம் மாதம் பராமரிப்புக்கு பணம் கொடுக்கின்றனர். இலவசமாக வீடு வாங்குபவர்கள் பராமரிப்பு கூட எதுவும் கொடுக்காதது சரியாக இல்லை மற்றும் அரசு ஒதுக்கீட்டு வீடுகளில் குற்றம் புரிந்தவர் வசிக்கவும் அனுமதிக்கக் கூடாது. இலவசமாக வீடுகளையும் வாங்கி அங்கு குற்றவாளிகள் தங்க அனுமதிக்க கூடாது
17-மே-2022 07:56:11 IST
அரசு அலுவலகங்களில் பொதுவாக ஊழல் நடைபெறுவது போல் அனைத்து அரசு வங்கிகளிலும் இதுபோன்று ஊழல்கள் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது. அனைத்து வங்கிகளையும் தனியார் மயமாக்குவதே நல்லது.
16-மே-2022 13:15:32 IST
நாங்கள் மசூதி இருக்கும் தெருவையோ, இல்லை சர்ச்சை இருக்கும் தெருவையும் பெயர் மாற்றம் செய்ய மாட்டோம். இநா வாநா மக்கள் எங்கு உள்ளனரோ அங்குதான் மாற்றம் எல்லாம்.
13-மே-2022 13:35:45 IST
எந்த பரிட்சைகள் வைத்தாலும் நமது மாணவர்கள் நீண்டகால அடிப்படையில் நிறைய இடங்கள் பெற்று இந்தியாவில் முதலிடம் பெறுவர். மாணவர்களுக்கு பாதிப்பில்லை. பல கல்லூரிகள் திறந்து கல்லா கட்ட நினைக்கும் கல்வி தந்தைகளுக்கு மட்டுமே பாதிப்பு. அப்படி பல மாநிலங்களுக்கும் சென்று நமது மாணவர்கள் படித்தால் கொஞ்சம் விவரமாய் கழகத்திற்கு ஓட்டு போடாமல் போய் விடுவார்கள். அந்த வகையில் கழகத்திற்கு பாதிப்பு. திறமையான நமது மாணவர்களுக்கு ஒரு பாதிப்பும் இல்லை
12-ஏப்-2022 00:05:34 IST
பொதுவாக மத்திய அரசு வேலைகளில் நமது மக்கள் கவனம் செலுத்துவதில்லை. அது யுபிஎஸ்சி ஆக இருந்தாலும் சரி இல்லை மற்ற மத்திய அரசு வேலைகளாக இருந்தாலும் சரி. என்றைக்கு திமுக மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் என்று கொண்டு வந்தார்களோ அப்போதிருந்தே மத்திய அரசில் பணிகளில் நம் தமிழ் மக்கள் சேர்வதில்லை. மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தை விட 30 இங்கு சம்பளம் கம்மியாக இருந்தால் நம் மக்கள் மத்திய வேலைகளுக்கு முயற்சி செய்வார்கள். புதிதாக வேலைகளுக்கு செய்பவர்களுக்கு இந்த 30 சதவீத ஊதியக் குறைப்பு கொண்டுவரலாம். அப்படிக் கொண்டுவந்தால் இங்கு உள்ள ரயில் நிலையங்களில் டிக்கெட் கொடுப்பதில் தமிழ் பேசுவோர் வருவர்.
29-மார்ச்-2022 08:34:34 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.