JAY JAY : கருத்துக்கள் ( 587 )
JAY JAY
Advertisement
Advertisement
Advertisement
பிப்ரவரி
15
2017
அரசியல் சசி, இளவரசி கைதி எண்கள்
சசிகலா பற்றி இன்று விமர்சனம் எழுதியுள்ளவர்களை பற்றி நான் கேட்கும் வாக்கியம் , " நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்களா?.. சின்ன தவறு கூட செய்யாதவர்களா?.. பிறரை தீர்ப்பிடும் முன்னர் , இங்குள்ளவர்கள் தங்களை சுயசோதனை பண்ணிக் கொள்ள வேண்டும்...இந்த இந்தியாவில், அரசியல்வாதிகளில் சசிகலா மட்டும் தான் குற்றவாளியா?... அப்படியென்றால் ஊழல் கரம் படியாத,அல்லது விவகாரமான குற்ற வழக்குகள் இல்லாத, எந்தவிதமான சந்தேகங்களுக்கும் அப்பாற்பட்ட, நேர்மையான ஒரு அரசியல்வாதியின் பெயரை சொல்லிவிட்டு சசிகலாவின் மீது குற்றம் சுமத்துங்கள்... போங்க போங்க... உங்க புள்ளை குட்டிகளுக்கு ஊழல் இல்லாமல் எப்படி வாழுவது? பொய் சொல்லாமல் , நேர்மையாக வாழுவது எப்படி என்று கற்றுக்கொடுங்கள்.. கையில் கணினி உள்ளது, இன்டர்நெட் சேவை உள்ளது என்பதால் எந்த கருத்தையும் எழுதி லைக் வாங்குவதே வாழ்க்கையில் லட்ச்சியம் என்று நினைக்காமல் , மற்றவர்களை பற்றி கவலை படமால் நமது நாட்டு ஊழல் சிஸ்ட்டத்தை , நீதிமன்றம் , இதுபோல காலம் தாழ்ந்த தீர்ப்புக்களால் சரிபடுத்திவிடலாம் என்ற மனப்பால் குடித்து விட்டு, குப்புற கவிழ்ந்து தூங்காமல், பொதுஜனம் ஆகிய நம்மிடம் இருந்து ஊழல் ஒழிப்பை தொடங்குவோம் என்று சபதம் எடுங்கள்" ....   19:06:04 IST
Rate this:
29 members
0 members
14 members

பிப்ரவரி
15
2017
அரசியல் ஜெ., நினைவிடத்தில் 3 முறை சசி ஆவேச சபதம்
இங்கே கருத்து பதிவிட்டவர்களின் கருத்துக்களை வாசிக்கும்போது, நமது மக்கள் இவ்வளவு வக்கிர புத்தி உள்ளவர்களா என்று தோன்றுகிறது.... இந்த கருத்து பதிவிட்ட, நூத்துக்கும் சொச்சம் உத்தமர்களிடம் சில கேள்விகள்... 1 நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்களா? 2 . லஞ்சம் கொடுத்தோ அல்லது லஞ்சம் வாங்கியோ ஏதேனும் காரியம் சாதிக்காதவர்களா?... 3 . அரசுக்கு வரி கட்டி ஏமாற்றாமல் தான் இவ்வளவு நாளும் வாழுகிறீர்களா?.பில் இல்லாமல் பொருள் வாங்கினால் காசு கம்மி என்ற வணிகர்களின் ஆசை வார்த்தைக்கு மயங்காதவர்களா?... 4 . நீங்கள் வாங்கிய நிலம் மற்றும் வீடுகளுக்கு , மார்க்கெட் விலையிலேயே பத்திரம் பதிவு பண்ணியவர்களா?...5 . இலவசம் ஏதேனும் வாங்கியதே இல்லையா?.. இதெக்கெல்லாம் கூட பதில் வேண்டாம்... இந்த கேள்விக்கு மட்டுமாவது பதில் சொல்லுங்கள்... . இந்தியாவில் உள்ள, ஒரே ஒரு ஊழல் இல்லா . நியாயமான, விவகாரமான வழக்குகள் இல்லா, ஒரே ஒரு அரசியல் வாதியின் பெயரை தில் இருந்தா சொல்லுங்கள்... [ ஒட்டுமொத்த இந்தியாவும் சீரழிந்து தான் கிடக்கிறது... இதுல சசிகலா குடும்பம் மட்டும் தான் உங்கள் கண்ணை உறுத்துகிறது, என்றால், சசிகலா சிறை சென்று விட்டதால், இனி உங்கள் அனைவரின் கூற்றுப்படி , இந்தியாவில் பாலாறும் தேனாறும் ஓடுகிறதா என்று பார்க்கலாம்.. அப்படியே எனது கடைசி கேள்விக்கு பதில் , தில் இருந்தா சொல்லுங்க பார்க்கலாம் ]   18:53:57 IST
Rate this:
81 members
0 members
16 members

பிப்ரவரி
15
2017
அரசியல் உடனடியாக சென்னை வர திமுக எம்.எல்.ஏ.,க்களுக்கு அழைப்பு
ஒருவேளை, EPS , OPS இருவரையுமே சட்டசபையில் ஆதரவை நிரூபிக்க கவர்னர் உத்தரவிடும் நிலை வந்தால் ஒய் நாட் திமுக ? EPS , OPS மற்றும் சுடாலின் மூவரையும் கூப்பிடுங்கள்... சட்டசபையை கூட்டுங்கள்.... யாருக்கு பெரும்பாண்மை ஆதரவு என்று நிரூபிக்கட்டும்...   10:40:02 IST
Rate this:
6 members
0 members
14 members

பிப்ரவரி
15
2017
அரசியல் உடனடியாக சென்னை வர திமுக எம்.எல்.ஏ.,க்களுக்கு அழைப்பு
9 MLA க்களை மட்டுமே வைத்துள்ள OPS க்கு ஆசை இருக்கும்போது, 89 MLA க்களையும், 8 காங் , MLA க்கள் ஆகி மொத்தம் 97 MLA க்களை வைத்துள்ள சுடாலின் ஆட்சி அமைக்க நினைப்பதில் தப்பே இல்லை...   10:36:57 IST
Rate this:
15 members
0 members
30 members

பிப்ரவரி
15
2017
அரசியல் உடனடியாக சென்னை வர திமுக எம்.எல்.ஏ.,க்களுக்கு அழைப்பு
119 MLA க்கள் ஆதரவு உள்ள, EPS ஐ ஆட்சி அமைக்க கவர்னருக்கு உறுத்தல் இருக்குமானால், அடுத்து 89 MLA க்கள் ஆதரவுள்ள திமுகவை அழைப்பது தான் முறை.... 9 MLA க்கள் மட்டுமே ஆதரவுள்ள,பாஜகவின் பினாமி அணி என்று சொல்லப்படும் OPS அணியை ஆட்சியமைக்க கவர்னர் அழைப்பாரேயானால், அது ஜனநாயக படுகொலை...   10:22:35 IST
Rate this:
23 members
0 members
26 members

பிப்ரவரி
14
2017
அரசியல் தகர்ந்தது சசிகலாவின் முதல்வர் பதவி கனவு தூள் தூள்!சொத்து குவிப்பு வழக்கில்4 ஆண்டு சிறைபதவிக்கு ஆசைப்பட்டவர் களி சாப்பிட போகிறார்உடனடியாக பெங்களூரில் சரணடைய உத்தரவு10ஆண்டுகள் தேர்தலில் நிற்க முடியாது
கீழே நான் எழுதியுள்ள ஒரு பெரிய கருத்துக்கு பதில் கருத்து எழுதியுள்ள, திரு. கைப்புள்ள Nj யின் கருத்தில் உள்ள நகைசுவை உணர்வை ரசித்து படித்து சிரித்தேன்... வளர்க உங்கள் நகைசுவை உணர்வு..... ஆனால் எதிர் கருத்து எழுகிறவர்களை கொஞ்சம் அதிகம் கலாய்க்காமல் கருத்து எழுதினால், உங்கள் நகைசுவை கருத்தை அடிச்சுக்க ஆள் இல்லை...   10:13:47 IST
Rate this:
4 members
0 members
6 members

பிப்ரவரி
15
2017
பொது புதிய வராலாறு படைத்தது இஸ்ரோ
மோடியின் சாதனைகளில் இது ஒரு மகுடம்.... இஸ்ரோ வுக்கு அதிக நிதி ஒதுக்கி, உலக நாடுகளின் நன்மதிப்பை பெரும் விதத்தில், இன்று சாதனை புரியும் அளவுக்கு இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்த மோடி அவர்களுக்கு நன்றி....   09:58:08 IST
Rate this:
4 members
1 members
9 members

பிப்ரவரி
15
2017
பொது புதிய வராலாறு படைத்தது இஸ்ரோ
இஸ்ரோ , மற்றும் மோடி க்கு வாழ்த்துக்கள்...   09:43:54 IST
Rate this:
4 members
1 members
13 members

பிப்ரவரி
15
2017
பொது இன்று சசிகலா சரண்? பெங்களூருவில் உச்சகட்ட பாதுகாப்பு
ஜெ அம்மா க்கும் சேர்த்து வழங்கப்பட்ட தீர்ப்பை , கொண்டாடும் OPS ஆதரவாளர்களை புகழ தினமலர் போன்ற ஏடுகளுக்கு எப்படி மனசு வருகிறது?.... இந்த கேசில் முதல் குற்றவாளியான ஜெ அம்மா பற்றி யம் அவரது இந்த ஊழல் பற்றியும் விரிவாக கட்டுரை எழுத தினமலர் தயாரா?... [ எல்லாவற்றிற்கும் காரணம் சசிகலா தான் என்று சப்பை கட்டவேண்டாம்... பதவி பிரமாணம் எடுத்தவர்களுக்கு தான் அதிக பொறுப்பு... ஒரு முதல்வரை 33 ஆண்டுகள் ஒரு குடும்பம் ஏமாற்றிக்கொண்டிருந்தார்கள் என்று சொல்லப்படும் வாதம், கேடுகெட்ட முட்டாள்தனமான வாதம் ]   09:22:47 IST
Rate this:
19 members
1 members
76 members

பிப்ரவரி
15
2017
அரசியல் பெங்களூரு செல்கிறார் தம்பிதுரை
போபர்ஸ் ஊழல் அதனை விட பழமையானது... மேலும் ஒரு வழக்கில் மெயின் குற்றவாளி இறந்த பின்னர் தான் இறுதி தீர்ப்பு வரும் என்றால், அதுவா நீதி?... அதுபோல தான் நான் மேலே குறிப்பிட்டுள்ள ஊழல்களின் சூத்திரதாரிகள் இறந்த பின்பு தான் தீர்ப்பு வருமோ?.. எந்த ஊரு நியாயமுங்க இது?..   09:16:33 IST
Rate this:
8 members
0 members
4 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X