ஏதாவது ஒரு செய்தி வந்துவிட்டால், அதன் முழு வீச்சு அறியாமல் பொத்தம் பொதுவாக எல்லோரையும் குறை காண்பது . பட்டய கணக்காளர் மீது நடவடிக்கை வரும் என்ற உடன், நாட்டில் உள்ள ஊழல்களின் தொடக்க புள்ளியே கணக்காளர் தான் என்று கருத்து தூவப்படுகிறது .
வீட்டில் இருக்கும் மின்சார மீட்டரை ஆதார் கார்டோடு இணையுங்கள் என்றல் வேண்டாம் என்பது, அங்கேயே ஊழல் ஆரம்பித்துவிட்டது , அப்படி செய்தல் ஒருவர் எத்துணை இணைப்பு வைத்துள்ளார்,
ஒன்றுக்கும் மேற்பட்ட வீட்டை எவ்வாறு கையாள்கிறார் என்ற விவரம் எல்லாம் வெளியில் தெரியவரும் , பின்னர் மின்சார சலுகை கட்டணம் குறையும் , வாடகைக்கு வருமான வரி செலுத்தவேண்டும் . இப்படி செய்யாமல் இருப்பது ஏமாற்று வேலை இல்லையா
06-மே-2023 12:54:24 IST
கருத்துக்கள் எழுதும்பொழுது கொஞ்சம் நிதானம் தேவை. தொப்பி இல்லாத போலீஸார் salute செய்யமாட்டார்கள். அங்ஙனம் salute செய்யவேண்டும் என்றால் அது ஒரு போலீஸ் அல்லது அரசு உயர் அதிகாரியாகவோ அல்லது மக்கள் பிரதிநிதியாகவோ இருக்கவேண்டும். பல நேரம் காவல் துறை உயர் அதிகாரிகள் ஜீப்பில் இருக்கும்போது, அங்கே உள்ள காவலர்கள் (சீருடை) அணித்தவர்கள் சலூட் செய்வார்கள். அவ்வாறு சீருடையில் இல்லாமல், சாதாரண உடையில் இருக்கும்போது, கைகளை விறைப்பாக பின்னைக்கு தள்ளி கால்களை கொஞ்சம் உயர்த்தி வணக்கம் சேவகரால். இதற்கும் துபாய்க்கு என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை. இந்த புகை படத்தை கவனித்தால் அவர்கள் தொப்பி வைக்கவில்லை, ஓர் அதிகாரி கவனமாக கால் ஷூ அணியவில்லை. மற்றபடி அந்த காவலர்கள் கொஞ்சம் கவனத்தோடு தான் செயல்பட்டுள்ளார் ஆனால் இது தேவைற்றது
07-ஆக-2022 13:20:27 IST
கடிதம் எழுதுவதால் ஒன்றும் நடக்காது ஏன் சட்டசபை ஒரு தீர்மானம் போட்டாலும் ஒன்றும் நடக்காது . அனால் ஒரு எச்சரிக்கை தரமுடியும் .கட்சி தலைவர் அவர்களது உறுப்பினர்களுக்கு கடிதம் எழுதுகிறார் . ஏன் சிலநாட்களுமு முன்பு மும்பையில் ஆயிரம் கோடிக்கு மேல் போதை பொருள் கிடைத்ததை துரைசாமி அவர்கள் மறந்து விட்டார் .அதேபோல ஒரு தனியார் துறைமுகத்தில் போதை பொருள் பெருமளவில் சிக்கியதை பற்றி பேச்சு இல்லை . உலக வாங்கி சிக்கனமாக இருங்கள் என்று கூறுகிறது, அப்படி என்றல் நம்முடைய அரசு ஊதாரித்தனமா செலவு செய்கிறதா ? எந்த விடயத்திலும் குதர்க்கம் கண்டுபிடத்தல் 8மணிக்கு வரும் தொல்லைக்காட்சி கூச்சலுக்கு பயன்படும் ஆனால் மக்கள் நலனுக்கு அம்மாம் ஜல்லி பெறாது (அதே வடிவேலு மொழியில்)
07-ஆக-2022 11:38:31 IST
பொய் சொல்றதில ஒரு வரம்பு வேண்டாமா, தினகரன் எப்போது நாலு சதவீத வோட்டு எடுத்தார். நாலு சீட்டு ஜெயிச்ச பிஜேபி ரெண்டரை சதவீத வோட்டு வாங்கியது, சீமான் ஆறு சதவீதத்திரு மேலாக வோட்டு வாங்கினார், தினகரன் ரெண்டரைக்கும் குறைவான வோட்டு வாங்கினார்
11-ஜூலை-2022 12:19:33 IST
முதலில் பழநிஸ்வாமி அவர்களுக்கு வாழ்த்துக்கள் . தமிழகத்தில் பேர் ஆதரவு கொண்டு ஆட்சி செய்த கட்சிக்கு தலைமை பொறுப்பில் வருவதற்கு திறமையும் பொறுப்பும் தேவை. அதை இங்கே நடத்தி காட்டி உள்ளார். கோடி நபர்களுக்கு மேலாக உள்ள கட்சிக்கு தலைமை பொறுப்பில் வருவது சாதாரணமா விடயம் கிடையாது. எல்லா அரசியல் கட்சி தலைமை மாற்றங்களின் போதும் பல விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெறும், அதிமுகவும் விதி விலக்கு அல்ல. முன்னாள் முதல்வர் பன்னிரு செல்வதை கட்சியில் இருந்து நீக்காமல் இருப்பது நல்லது, பன்னிர் அவர்களுக்கு இப்போது சறுக்கு முகமாக இருந்தாலும், வருங்காலத்தில் அவருக்கு என்று ஒரு அணியை உருவாக்க முடியும், கொஞ்சம் பொறுமை தேவை. சசிகலா மற்றும் திமுகவுடின் பேசுவது, அவருக்கு நல்லது அல்ல. தென் மாவட்டங்களில் அவர்க்கு இருக்கும் சமுதாய ஆதரவை (?) பலப்படுத்தியல், தேர்தல் நேரத்தில் பேர் உதவியை இருக்கும். OPS மற்றும் eps, பிஜேபியை எதிர்த்து அரசியல் செய்யமாட்டார்கள், தமிழக அரசு எதனை ரைடு நடத்தினாலும், ஒன்றிய அரசு மௌனம் காக்கிறது , வரும் 2024 வரை , இப்படியா தொடருவார்கள்
11-ஜூலை-2022 10:04:56 IST
தங்கம் வாங்கறது பிரச்சனை இல்ல, பெட்ரோல் போட்டு வேலைக்கு போனால் பிடிக்கவில்லை . சமையல் என்னை விலை உயர்வு இந்த பிரச்சனையில் முக்கிய பங்கு வகிக்கிறது . சமையல் என்னை இறக்குமதி விலை 2019-20 $9800 , 2020-21- $11308, 2021-22-$19354 மில்லியன் டாலராக உயர்ந்துள்ளது , ஏறக்குறைய இரண்டு வருடங்களில் இரண்டு மடங்காக ஆகிவிட்டது ,
23-ஜூன்-2022 14:09:07 IST
இவரது குணாதிசியங்கள் இக்கால அரசியலுக்கு சரிவருமா என்று சந்தேகம். வன்னியர்க்கு இடை ஒதுக்கீடு செய்வதற்கு நன் ஒப்பொகொள்ளவில்லை, என் சமூகத்தார் பாலில் சத்தியம் வாங்கி எனக்கு எதிராக வோட்டு அளித்தனர் என்று ஒரு வருடத்திற்கு பிறகு பொது வெளியில் கூறுகிறார். மோடிஜி கூறியதால் தான் துணை முதலவர் பதவி ஏற்றுக்கொண்டேன் என்கிறார், அதிமுக ஆட்சிக்கு எதிராக வாக்களித்துவிட்டு பின்னர் இப்படி கூறுவது சரியா? வன்னிய சமூகத்திற்கு உள் ஒதிக்கீடு தவறு என்று ஏன் அப்போதே கூறவில்லை, அப்படி கூறி இருந்தால், அன்றே எடபடிக்கு செக் வைத்திருக்கலாம், மேலும் தான் சார்ந்த சமூகத்தின் ஆதரவையும் பெருக்கி இருக்கலாம், சிறுது அளவே ஓட்டுகள் பிரிக்கப்பட்டாலும், தினகரனை பற்றி ஒன்றும் கூறவில்லை? ஒரு சமூகத்தின் வாக்கு வாங்கி இப்படி துண்டாடப் பட்டால், நாட்டம் தனக்கு தன என்று தெரியாதவர? இவரது கூற்று உண்மையானால் வைத்தியலிங்க, செல்லூர் ராஜு, உதயகுமார், போன்றோர் எங்கனம் வெற்றி பெற்றனர், கண்மூடித்தனமாக பிஜேபிக்கு ஆதரவு அளித்துவிட்டு, சிறுபான்மையினரின் வோட்டு வங்கியை வெட்டு வைத்துவிட்டு, இப்போது புலம்பி என்ன ஆகப்போகிறது? சரி இவருடன் வந்த ஆதரவாளர் என்ன ஆயினர், உங்களுக்காக வக்காலத்து வங்கியிற் புகழேந்தியை கட்சியை விட்டு நீக்கினார்கள்? பின்னர் நீங்களே பாமகவை குறை கூறுகிறீர்கள், இது நேர்மையான அரசியலை?
23-ஜூன்-2022 13:33:12 IST
என்னஜி அப்படி பார்த்தால் ஹிந்துக்கள் திருமண வரவேற்பில் பொது கோட் போடுகிறார்கள், நிச்சயதார்த்தின் போது கேக் வெட்டுகிறார்கள், ஏன் மோதிரமும் மாற்றிக்கொள்கிறார்கள், அப்படி என்றால், இவர்கள் எல்லாம் கிறிஸ்தவர்களை, திருமணம் என்பது தனிப்பட்ட விடயம், இதில் அவசியம் இல்லாமல் கருது தெளிக்க வேண்டாம். இந்த நாட்களில் ஒரே பாலினத்தவர் திருமணம் செய்தல் என்ன என்ற விஷயங்கள் வரும்போது, ஆணும் பெண்ணும் தானே திருமண செய்தார்கள், போகட்டும் விட்டுவிடுங்க, தம்பதிக்கு மனதார வாழ்த்துக்கள்
14-ஏப்-2022 13:43:13 IST
நம்ம மல்லையா அன்னான் ஓவர் நைட்ல ஓடிப்போனபோ , காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்தது? இன்னமும் எதன்னை நாளைக்குத்தான் கூசாமல் பொய் கூறுவீர்கள், எதனை வருடங்களுக்கு நேருவை இகள்வீர்கள் ?
29-மார்ச்-2022 10:00:32 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.