சல்மானை மோடி கட்டியணைத்து வரவேற்பதில் எந்த தவறும் இல்லை. இந்தியாவில் முதலீடு செய்ய வருகிறார். அவரால், பலருக்கு வேலை வாய்ப்புகள் வருகிறது. மேலும், சவுதியுடன் கூடிய நெருங்கிய தொடர்பு, மற்ற இஸ்லாமிய நாடுகளின் வாய்க்கு போடும் பூட்டு. சவுதியை எதிர்த்தால், அனைத்து இஸ்லாமிய நாடுகளும் ஒன்றுபட்டு இந்தியாவை எதிர்க்கும். அதனால், சவுதியுடன் நல்லுறவு கொள்வதே, புத்திசாலித்தனம். ராகுல் அடக்கி வாசிப்பது நல்லது.
21-பிப்-2019 02:28:36 IST
நேற்றுவரை பிஜேபியை எதிர்த்துவந்த சிவசேனா ஒரே நாளில் நமது ராமதாஸை போல் பல்டி அடித்துள்ளது. இதற்கு பெயர் தான் சந்தர்ப்பவாத அரசியல். ஆனால் மக்கள் இவர்களை நிராகரித்துவிடுவார்கள். கொள்கையை மாற்றி கொண்டே இருந்தால், மக்கள் விலகி விடுவார்கள். கட்சி தாவிக்கொண்டே இருக்கும் அரசியல்வாதிகளின் நிலையை போன்று தான், சந்தர்ப்பவாத கட்சிகளின் நிலையும். தேமுதிக, பாமக, வைகோ, திருமா, வாசன் போன்றோர் அவர்களது சொந்த ஓட்டுக்களை இழந்ததற்கு முக்கிய காரணம் நிலையில்லா கொள்கைகள் தான்.
21-பிப்-2019 02:23:58 IST
ரபேல் டீலில் முப்பதாயிரம் கோடி ரூபாய் அரசு கொடுத்துள்ளதே. அதில் இருந்து ஒரு ஐநூறு கோடியை எரிக்ஸனுக்கு கொடுங்கள். ஜெயித்து வந்தபிறகு, மோடி அரசு ஐம்பதாயிரம் கோடி ரூபாய் உங்களுக்கு பரிசாக கொடுக்கும். கவலை வேண்டாம். இப்போது சமாளியுங்கள்.
21-பிப்-2019 02:19:28 IST
தேர்தல் வருவதால், மேகதாது அணை கட்ட கூடாது. தேர்தல் முடிந்தவுடன், பழனியே மேகதாது அணைக்கு சேலத்திலிருந்து கற்கள் அனுப்புவார். பன்னீர் அணை கட்ட மணல் கொடுப்பார். கர்நாடகா கவலை கொள்ள கூடாது.
21-பிப்-2019 01:50:45 IST
காங்கிரஸ் கட்சிக்கு பத்து இடம் கொடுத்தால், மம்தா பேனர்ஜி கட்சிக்கும் இருபது இடங்கள் தமிழகத்தில் திமுக கொடுக்கலாம். அவர் தமிழகத்தில் வந்து ராகுலை விட அதிகமாக பிரச்சாரம் செய்வார். முலாயமிற்கு ஒரு பத்து இடங்கள் கொடுங்கள். சந்துரு, லாலு, பட்நாயக், கவுடா, இம்ரான் கான் என்று ஒவ்வொருவருக்கும் தலா ஐந்து இடங்கள் பெற்று, திமுக ரெண்டு இடங்களில் நின்றால், நிச்சயம் நாற்பதும் திமுகவிற்கே தான்.
20-பிப்-2019 03:03:31 IST
பிஜேபியோடு சேர்ந்த அதிமுகவிற்கு அதே மணம் தான் வீசும். அதனால், அதிமுக தலைமையில் கூட்டணி என்றால், மக்கள் பிஜேபியை மறந்து விடுவார்களா என்ன?
20-பிப்-2019 02:56:23 IST
பாமக நல்ல கொள்கைகளுடன் இருந்தாலும், அது ஒரு ஜாதி கட்சி. அதனால், பாமக, திருமா, புதிய தமிழகம், AC சண்முகம், ஜான் பாண்டியன் போன்ற ஜாதிக்கட்சிகளை பெரிய கட்சிகள் ஒதுக்கி வைப்பது, சமூகத்திற்கு நல்லது. ஜாதிக்கட்சிகளுக்கு சந்தர்ப்பம் கொடுத்து தீனி போட கூடாது.
20-பிப்-2019 02:53:57 IST
இவனுக்கு பின்னால் இருப்பது பாகிஸ்தான் ராணுவம். இவன் வெறும் அம்பு தான். பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து, காஷ்மீர் மக்களை உபயோகப்படுத்தாதபடி பார்த்துக்கொள்வது தான் நமது முக்கிய வேலையாக இருக்க வேண்டும்.
19-பிப்-2019 06:30:57 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.