உழைப்பினால் வரும் வருமானத்திற்கு எல்லாரும் வரி கட்டுகிறார்கள் என்பதே தவறுதான். அதிலும் குறிப்பாக லஞ்சம் ஊழல் மூலம் சம்பாதித்த பணத்திற்கும் கோவிலில் தட்டில் விழும் காசிற்கும் ஒப்பீடு செய்வதே அபத்தம். விசு அய்யருக்கு ஐயர்கள் மீது என்ன கோபமோ தெரியவில்லை.
19-மே-2022 13:33:19 IST
இது ஒரு விரும்பத்தக்க மாற்றமே என்றாலும், திரு. அண்ணாமலை அவர்கள் ஒன்றை மறக்கக்கூடாது. போராட்டக் காரணம் நீர்த்துப் போகும் அளவுக்கு போராட்ட வெற்றியை கொண்டாட அவசியம் இல்லை. இந்த போராட்டத்தால் பெயர் மாற்ற உத்தரவு திரும்பப் பெறப்பட்டால் மட்டுமே இந்தப் போராட்டம் வெற்றி பெற்றதாக சொல்லலாம். இல்லையெனில் ஒரு கட்சி தன் இருப்பை காட்டிக்கொள்ளும் முயற்சியன்றி வேறு ஒன்றுமில்லை. திரு. அண்ணாமலை வெற்றி பெற வாழ்த்துக்கள். மனுநீதிச் சோழனின் பெயர் என்றும் நிலைத்திருக்கும். திருவாரூர் மக்களின் எழுச்சி பாராட்டுக்குரியது. இது ஆன்மிக பூமி, நாத்திக வாதிகளுக்கு இங்கு அங்கீகாரம் தேவையில்லை.
14-மே-2022 09:05:10 IST
எவ்வளவு திறமையான போலீஸ் அதிகாரியாக இருந்தாலும் கோபாலபுரத்து தலையசப்பிற்காக காத்திருக்கும் அவலம். ஆளும் கட்சியின் பரிபூரண ஆசி முதுகோவன் அழகிரி போன்ற அல்லக்கைகளுக்கு உண்டு. இந்த நிலை மாற ஒன்று ஆண்டவன் அவதிருக்க வேண்டும் அல்லது ஆண்டவன் அருளால் தொழில் நுட்பம் உச்ச நிலையை அடைய வேண்டும். இளைஞர்கள் புதிய பாதையை நோக்கி பயணிக்க வேண்டும். இந்த மீடியாக்கள் நான்கு நாட்கள் இவர்களை கண்டுகொள்ளாமல் விட்டால் போதும் இவர்கள் காணாமல் போய் விடுவார்கள். RSB மீடியாக்கள் தீர்மானிக்க வேண்டும். அண்ணாமலை போன்ற இளைஞர்களை ஈர்க்கும் தலைவர்கள் உருவாக வேண்டும்
11-மே-2022 08:41:58 IST
தொலைநோக்கு திட்டங்கள் எதுவும் எங்களிடம் கிடையாது வாக்குகளை குறிவைக்கும் இலவசங்களே என்ற வகையில் இது அடுத்தது. ஏற்கனவே கடனில் தத்தளிக்கும் தமிழக அரசு இந்த திட்டத்தை எவ்வளவு காலத்திற்கு தொடர முடியும்? குஜராத் முதல்வராக திரு. மோடி அவர்கள் இருந்த போது விவசாயிகளிடம் உங்களுக்கு இலவச மின்சாரம் வேண்டுமா அல்லது குறைந்த விலையில் தடையில்லா மின்சாரம் வேண்டுமா என்று கேட்டார். இலவசம் வேண்டாம் தடையில்லா மின்சாரத்திற்கு தாங்கள் கட்டணம் செலுத்த தயார் என்று குஜராத் விவசாயிகள் சொன்னார்கள். கழக அரசுகள் மக்களை இலவசத்திற்கு அடிமையாக்கி விட்டன. ஒவ்வொரு ஊரிலும் பேருந்து நிலையத்தையும் அரசு" இலவச" மருத்துவமனையையும் போய் பார்த்தாலே தெரியும் அரசு திட்டங்கள் எந்த லட்சணத்தில் செயல்படுகின்றன என்று. அம்மா உணவகத்தை மேம்படுத்தினாலே ஏழை எளிய மக்களின் பசியைப் போக்க முடியும். ஆனால் அரசியல்! தன்னுடைய திறமையின்மையை மறைக்கவும் பிரச்சனைகளிலிருந்து ஓடி ஒளியவும் இம்மாதிரி அறிவிப்புகள் ஒரு அரசுக்கு தேவைப்படுகின்றன. தேசிய கட்சிகள் எழுச்சி அடைந்தால் தமிழகம் ஒளிபெறும். அது மக்கள் கையில்!
07-மே-2022 13:31:55 IST
திருமா பேச்சால் காங் அதிர்ச்சி. அதிர்ச்சி அம்பேத்கருக்கும் இருந்திருக்கும். வெயில் காலங்களில் இதெல்லாம் சகஜம். இவரை நம்பி இவர் பின்னால் போய்க்கொண்டிருக்கும் தொண்டர்களை நினைத்தால் பரிதாபமாக உள்ளது. இவரால் இவர் சார்ந்த இனத்தவர்க்கு ஏதாவது பிரயோஜனம் உண்டா? கட்டப்பஞ்சாயத்து செய்து திமுக போன்ற கட்சிகளுக்கு பல்லக்கு தூக்கிக் கொண்டு வருமானம் பார்த்துக்கொண்டு இருக்கும் இவரைப் போன்றவர்களுக்கு ஊடகங்களோ பெரிய கட்சிகளோ அங்கீகாரம் அளிக்கக்கூடாது. எந்த கொள்கையும் இல்லாத கட்சி. மோடி எதிர்ப்பு ஒன்றே குறிக்கோள். காங்கிரஸுக்கு பிடித்த கெட்ட காலம் இவர்களோடு கூட்டணி. பிரதமரை மோசமாக விமர்சிக்கும் இவரை கைது செய்ய சட்டத்தில் இடமில்லையா? அம்பேத்கர் இந்நாட்டிற்கு பொதுவானவர். சிறந்த அறிவாளி படிப்பாளி. அவரை ஜாதி டப்பாவில் அடைத்து வியாபாரம் செய்யும் திருமாவளவன் போன்ற நாலாந்தர அரசியல்வாதிகள் தடை செய்யப்பட வேண்டும்.
06-மே-2022 13:08:32 IST
ஏழு கொண்டல வாடா வெங்கடரமணா கோவிந்தா கோவிந்தா. சேகர் ரெட்டி நிரபராதி என்றால் அவர் சம்பந்தப்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை கைப்பற்றிய 2000 ரூபாய் புது நோட்டுகளும் 178 கிலோ தங்கமும் எப்படி கிடைத்தது? ஊழலை ஒழிப்பது எப்படி என்று 24/7 ஓயாமல் சிந்தனை செய்யும் மத்திய பிஜேபி அரசு மேல் முறையீடு செய்வார்களா? The nation wants to know.
06-மே-2022 09:12:17 IST
நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம். பட்டினப்பிரவேச நிகழ்வு நடைபெற வேண்டும். இந்துக்களே மயிலாடுதுறையில் ஒன்று கூடுங்கள். இந்த நாத்திக ஆட்சிக்கு பதிலடி கொடுங்கள்.
05-மே-2022 11:04:45 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.