மலரின் மகள் : கருத்துக்கள் ( 2600 )
மலரின் மகள்
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
3
2022
பொது தமிழகத்தில் ஒரே நாளில் 2.34 லட்சம் சிறார்களுக்கு தடுப்பூசி
மகிழ்ச்சி. கடந்தமுறை ஆசிரியர்களே கூட, எங்கள் நட்பு வட்டாரத்தில் உள்ளவர்கள் கூட, தடுப்பூசிக்கு எதிராகவே வாட்ஸாப்ப் செய்தார்கள் நம்பிக்கை இல்லாமல் இருந்தார்கள். தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு மிகப்பெரிய தயக்கம் காட்டினார்கள். அப்போது அவர்களிடம் கூறினேன், அரசு கொஞ்ச காலம் முடிந்த பிறகு ஒருவிதத்தில் கட்டாயம் என்பது போன்ற ஒருநிலையை உருவாக்கினால் அப்போது நிச்சயம் முதல் ஆளாக சென்று போட்டுக்கொள்வீர்கள் என்று. அதுபோலவே தான் பள்ளி திறப்பதற்கு முன்பு அரசு ஊழியர்கள் கூட தடுப்பூசியை போட்டுகொண்டாள். எதிர்ப்போ பழைய அச்சமோ அவர்கள் இப்போது காட்டவில்லை. யாரோ பின்னணியில் இருந்துகொண்டுகூட தூண்டிவிட்டிருக்கக்கூடும் தடுப்பூசிக்கு எதிராக என்று கூட சொல்லப்பட்டது. இப்போது பாருங்கள் பள்ளி சிறுவர்களுக்கும் தடுப்பூசி போடும் நிலை. மகிழ்ச்சியாக விரும்பி போட்டுக்கொள்கிறார்கள். மாணவிகளிடம் ஆசிரியர்கள் ஊழியர்கள் பெரியவர்கள் படிக்கவேண்டிய பாடமிது. மதுரையில் ஒரு பெண் மருத்துவர், சென்னையில் ஒரு நகைச்சுவை நடிகரின் பரிபூரண நிலை அடைந்ததை இவர்கள் தங்களுக்கு சாதகமாக்கிக்கொண்டு எதிராக பிரசாரம் செய்தார்கள். வெளிநாடுகளில் பள்ளி சிறார்களுக்கு இப்போது இரண்டாவது தடுப்பூசியையும் செலுத்திவிட்டு பூஸ்டர் டோஸ் பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள். உலக மருந்து, தடுப்பூசி உற்பத்தி மையமான இந்தியாவில் நாம் பின்தங்கி இருக்கிறோம். நடுவணரசு பல்வேறு முயற்சிகளை செய்துதான் தடுப்பூசியை பெரியளவில் வழங்குகிறது. நடுவணரசு மிக திண்ணியமாக செயலாற்றவில்லை என்றால், எதிர்க்கும் கட்சிகள் தங்கள் அரசியல் லாபத்திற்காக வேறுவிதமாகவே இருந்துகொண்டிருக்கும். மத்திய அரசிற்கு நன்றி பாராட்டுவோம்.   19:06:28 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜனவரி
2
2022
பொது ஆனந்தம் பொங்கிட அனுமனை போற்றுவோம் அனுமன் ஜெயந்தி ஸ்பெஷல்
மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். இன்று எனோ தெரியவில்லை ஒரு சில மனசஞ்சலம் காரணமேதுமின்றி. எதிலும் ஆட்டமில்லா நிலை. சம்யத்தி ஆபத்பாந்தவன் போல இந்த புராணம் மலரில் படிக்கும் வாய்ப்பு. படித்தபிறகு மனம் மிகவும் இலகுவாகவும், அமைதியாகவும், திருப்தியாகவும் உணர்கிறேன். தெய்வீகமலர் மலரில் தொடர்ந்து படித்து படித்து வருகிறேன். ஒவ்வொரு பண்டிகையின் போதும் அந்த பண்டிகையின் முக்கியத்துவம் மலரில் வருவது சிறப்பு. இந்த சேவை தொடர்ந்து நிலைக்கட்டும் வயல் உள்ளளவும்.   15:45:10 IST
Rate this:
0 members
0 members
1 members

டிசம்பர்
30
2021
உலகம் 25 போர் விமானங்களை சீனாவிடம் வாங்கும் பாக்.,
சைரோ மலபார் கிருத்துவ கல்வி நிறுவங்களின் பல முறை பார்த்திருக்கிறேன். அவர்கள் துவங்கும் எந்த ஒரு கட்டிடங்கள், விளையாட்டரங்கங்கள், கலையரங்கங்கள் என்று எதிலும் முதலில் அவர்களின் பிஷப் வந்து சிறப்பு பிரார்த்தனை செய்வார். கட்டிட திறப்பின் போதும் மிகவும் சிறப்பாக வழிபாடுகள் இருக்கும். குறைந்தது மூன்று நான்கு மணிநேரம் கூட ஆகும். நம்மை போலத்தான் அவர்களின் நம்பிக்கையும். நாம் தண்டம் என்ற ஒன்றை வைத்திருந்தால் அவர்கள் சிலுவை வைத்திருந்து அதை வைத்து செய்கிறார்கள் நறுமணங்கள் புகைகள் உண்டு. அதுமட்டுமா, கிரகப்பிரவேசமும் உண்டு. பணக்காரர்களின் வீடுகளில் கிரகப்பிரவேசத்திற்கு அவர்களின் செல்வாக்கிற்கு தகுந்தபடி ஒரு பாதரோ அல்லது ரெவெரென்ட், ரைட் ரெவரென்ட், வெரி ரைட் ரெவெரென்ட் என்று வருவார்கள், மிகவும் செல்வாக்கிருந்தால் பிஷப், ஆர்ச் பிஷப் வந்து கிரகப்பிரவேசத்தை கூடசிறப்பாக செய்து தருவார்கள். கேரளாவில் திருச்சூரில் சென்று பாருங்கள் தெரியும். நமது ராணுவ மந்திரி செய்தது, நாங்கள் எங்கள் மதத்தில் நம்பிக்கையை முழுமையாக வைத்திருக்கிறோம். அதை வெளியுலகத்திற்கு சொல்வதில் எங்களுக்கு எந்த இடர்பாடும் இல்லை என்பதே. முன்னவர்கள் அப்படி அல்ல. தயக்கம். ஓட்டுக்களுக்காக மட்டுமே அரசு என்று இருக்கக்கூடாது.   05:55:27 IST
Rate this:
0 members
0 members
3 members

டிசம்பர்
30
2021
உலகம் 25 போர் விமானங்களை சீனாவிடம் வாங்கும் பாக்.,
ரபேல் விமானங்களின் தனிச்சிறப்பு என்பது செங்குத்தாக கீழிறங்குவதும். மேலேறுவதும் மணிக்கு மூவாயிரம் கி மீ வேகத்தில் பறந்து கொண்டே துல்லியமாக ஏவுகணைகளை வீசி தாக்குவதும், ரேடார் கண்ணில் படமால் ரேடாருக்கு அருகிலேயே பறந்து சென்று ரேடாரையும் அழிக்கவல்லதும், ரேடார் கதிர்களை பிரதிபலிக்காமல் அதை தன்னகத்தே உட்கிரத்து கொள்வதும் அல்லது அவற்றை பெற்று செல்லும் திசையிலேயேஊடுருவி வளியேற செல்வதுமாக அதன் மேற்பரப்பு தகடுகள் உள்ளது. அதனால் ரேடார் கதிர்கள் பிரதிபலித்து ரேடார் கருவிக்கு தகவல்களை சொல்ல இயலாது. மேலும் இந்திரன் பலடி சந்திரன் பலடி என்று சொல்வதைப்போல எந்த திசையிலும் எப்போதுவேண்டுமானாலும் மாறி மாறி செல்வதும் பல்டி அடிப்பதுமாக இருக்கிறது. மிக குறைந்த உயரத்தில் கூட தொடர்ந்து பறக்க வல்லது. விமானங்களால் குறைந்த உயரத்தில் பறக்க இயலாது என்பதும் மேலும் அதற்கு எரிபொருள் மிக அதிகம் செலவாகும் என்பதும் அனைவருக்கும் தெரியும். குறைந்த உயரத்தில் பறந்தால் எளிதில் எதிரியின் ரேடார் போன்ற கண்காணிப்பிலிருந்து தப்பி சென்று இலக்கை தாக்க இயலும். இஸ்ரேல் தன்னை எதிர்த்த ஆறுநாடுகள் அரபு கூட்டணியை வென்றதும் மேலும் அவர்களின் த்வஜமானத்தை கடத்திய கடத்தல் தேசத்தின் விமான தளத்தை போர் விமானங்கள் சுக்கு நூறாக்கி திரும்பியதும் இது அனைத்தும் பல ஆயிரம் கி மீ தூரங்கள் எதிரி நாட்டின் வான் எல்லையில் அவர்களுக்கு தெரியாமல் சென்று தாக்கி திரும்பி வந்ததும் இந்த குறைந்த உயரபறக்கும் திறனால் தான். அத்தகைய திறன் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது ரபேல் விமானத்தில். மேலும் நமக்கு பொதுவாக தேவைப்படுவது இமயமலையில் அனைத்து கால சூழல் களிலும் செயலாற்ற வேண்டிய போர் விமானம் அதுவும் ரபேல் தான். நம்முடைய எதிரிகள் வடக்கு எல்லையில் இருக்கிறார்கள் அவர்களை விட திறைமையானவர்களாக நமது விமான படை இருக்கிறது, அதனால் அவர்களுக்கு அச்சுறுத்தல்கல் இருப்பதால் அவர்கள் வாலை சுருட்டி வைத்து கொண்டிருக்கிறார்கள். நமக்கு எவ்வளவு தெரிகிறதோ ரெபேலை பற்றிய தகவல்கள் அதைவிட பன்மடங்கு சீனனுக்கும் அந்த கூண்னுக்கும் அறிந்து அச்சமிருக்கிறது. அதனால் தான் அவர்கள் பலரையும் தூண்டி விட்டு ரபேலை இந்தியா வாங்காமல் இருப்பதற்கு பல்வேறு வகைகளை கையாண்டார்கள், அனைத்தும் தவிடு பொடியாகி விட்டது. ஊழல் என்ற ஒரு அஸ்திரத்தை கையிலெடுத்தவர்களுக்கு மோடிக்கு எதிராக ஊழலால் குற்றசாட்டை சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள் என்பதை உணர்ந்து கொள்வதற்கு ஒரு வழியாக அது அமைந்தது அவ்வளவே. மேலும் ஒவ்வொரு முறையும் போரில் கலந்து கொண்டு திரும்பும் விமானத்தை உடனடியாக மெயின்டெனன்ஸ் செய்யவேணும். அது மிக குருகிய காலத்தில் ரபேலில் செய்யலாம். விமானம் திரும்பிய இரண்டு மணி நேரத்திற்குள்ளாக அடுத்த தாக்குதலுக்கு முழுமையாக தயாராகிவிடும் என்பது வேறு எந்த போர்விமானத்திற்கும் இல்லாத தனி சிறப்பு. முத்தாய்ப்பாக ஒன்றை அறிந்து கொள்ளலாம். ரபேல் யுத்தத்தில் பலமுறை பங்கேற்று தன்னை சிறப்பை மேய்ப்படுத்தி காட்டியிருக்கிறது. இது போன்ற நேரடி யுத்தத்தில் சீனாவின் விமானங்கள் இதுவரையில் கலந்து கொண்டு அதன் திறனை காட்டவில்லை. ரபேலுடுன் முழுமையான ஆயுதங்களை பிரான்ஸ் தந்திருக்கிறது நமக்கு. மேலும் ரபேலிலில் நமது அக்கினி பிரமோஸ் போன்ற ஏவுகணைகளையும் பொருத்தி ஏவலாம். இந்தியாவிலேயே தயாரிப்பதற்கான தொழில் நுட்பங்கள் தரப்படுகிறது. கூட்டு தயாரிப்பு ஆரம்பமாகிறது. இன்னும் 116 விமானங்கள் இங்கே தயாரிக்க பட்டு விமானப்படையில் இணையவிப்பிருக்கிறது. அனைத்தையும் கணக்கிட்டு தான் உலகம் சொல்கிறது, இந்தியா உலகின் ராணுவ வல்லரசு என்று. 2030 ல் உலகின் இரண்டாமிடத்திற்கும் 2050 ல் ராணுவ வலிமையில் முதலிடத்திற்கு செல்லும் என்றும் உலகம் நிச்சயமாக சொல்கிறது. பெருமை கொள்வோம். நாம்.   05:39:46 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜனவரி
1
2022
பொது மலர்ந்தது புத்தாண்டு 2022 மக்கள் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
மலருடன் இணைந்திருக்கும் அனைவருக்கும் அன்பான புத்தாண்டு புதுவாழ்வு வாழ்த்துகள். சில பத்து மணி துளிகளில் நாங்களும் குடும்பத்துடனும் உறவினர்கள் நண்பர்களுடனும் கொண்டாட போகிறோம். அமைதியாக அனைவருக்கும் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டு நண்பர்களுடனும் உறவுகளுடனும் பேசி மகிழ்ந்து வழக்கம் போல மீம்ஸ் கலைகளையும் அரட்டை செய்து புத்தாண்டு வரவேற்கிறோம் அனைவரையும் போலவே. மலருடன் இது எனக்கு ஐந்தாவது புத்தண்டு, மலரில் வந்து எழுதுவாவும் வாசிக்கவும் உறவுகளாக ஒரு புதிய சொந்தங்கள் உருவானதை முகமறியாமல் கருத்துக்கள் மற்றும் எழுத்துக்களால் மட்டுமே உணர்ந்து கொண்டு உறவாடி மகிழ்ந்த வருடங்கள் ஐந்தாகிறது. ஒவ்வொரு பண்டிகையின் போதும் மலரில் வரும் வாழ்த்துக்களை படித்துவிடுவது உண்டு. மதம் மொழி, நாடு சமயம் கடந்து அனைத்து விழாக்களிலும் மலரில் தான் வாழ்த்துக்கள் பகிர்தலும் மகிழ்தலும் தொடர்கிறது. நிச்சயமாக இன்னும் எத்துணை விழாக்கள் குடியரசு சுதந்திர தின கொண்டாட்டங்கள் என்று எது வந்தாலும் மலரில் இணைந்திருப்போம், மகிழ்ந்திருப்போம். நமக்கு ஒருவிதமான உற்சாகமும் சந்தோஷமும் வருகிறதல்லவா? அனைவருக்கும் புத்தாண்டு சிறப்பாக அமையும். இறைவன் நமது பக்கம். வாழ்த்துக்கள், வந்தனங்கள்.   04:48:31 IST
Rate this:
0 members
0 members
2 members

டிசம்பர்
30
2021
பொது ‘ஏர் இந்தியா’வை பறக்க வைக்க ‘டாடா’வுக்கு வங்கி கடன் ரெடி
திரு ஆனந்த் ஸ்ரீனிவாசன், பொருளாதார மேதை மற்றும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் வெகுஜன தொடர்பாளர் சொன்னது. டாட்டா நிறுவனம் மிக பெரியது சிறந்தது. அவர்களின் உத்தி என்பது தங்கள் சொந்த பணத்தை முதலீடு செய்வதில்லை. மாறாக கடன் வாங்கி அந்த பணத்தில் தான் தொழில் நடத்துவார்கள் என்று. சொந்த பணம் கடன் டவங்கும் தொகையை விட ஆயிரக்ணணக்கான மடக்கில் இருந்தாலும், கடன் வாங்கித்தான் தொழில் செய்வார்கள். அந்த தொழில் மூலமாக அதை மேம்படுத்தி எப்படியும் கடனை வட்டியுடன் அடைத்து டெபிட் பிரீ கம்பனியாக குறுகிய காலத்தில் மாறுவார்கள். கடனை அடைக்கும் விதத்தில் தொழில் சிறப்பாக நடக்கவில்லையென்றால் எப்படியாவது சொந்த அப்பணத்திலிருந்தாவது கடனை அடைத்து விடுவார்கள் என்று. வித்த்ஜியசமான அணுகுமுறையாக தெரிகிறது.   14:48:17 IST
Rate this:
0 members
0 members
23 members

டிசம்பர்
29
2021
பொது ஜார்க்கண்டில் டூவீலருக்கு மட்டும் பெட்ரோல் விலை ரூ.25 குறைப்பு
இது சரியாக தெரியவில்லை. பெட்ரோல் நிறுவனங்கள் அனைத்து வாகனங்களுக்கும் டூ வீலெர் விலையில் போட்டதாக கணக்கு காண்பித்துவிட்டு நான்கு சக்கர வாகனங்களிடம் டூ வீலெர் பெட்ரோல் விலையில் பத்து பதினைந்து ரூபாய் கூடுதலாக பணம் பார்த்துவிடுவார்கள். டூ வீலரில் பெட்ரோல் பெற்றுக்கொண்டு அதை வெளிச்சந்தையில் பத்து ரூபாய் கூடுதலுக்கு விற்க்கும் உள்ளூர்த்தலைகளும் இருக்கும். மின்சாரத்திற்கு இருப்பதை போல பயன்பாட்டிக்கரு தகுந்தவாரூ சலுகைகளையும் விலையேற்றத்தையும் நிர்ணயிக்கலாம். ஆதாரில் உரிமையாளர்களின் வாகங்னளை இணைத்து அவர்களின் வாகனத்திற்கு தகுந்தபடி மாதம் ஒரு ஆதார் கார்ட் தாரருக்கு டூ வீலருக்கு ஐம்பது லிட்டருக்கு நான்கு சக்கரதாரர்களுக்கு இருநூறு லின்டரும் குறைக்கப்பட்ட விலையிலும் அதற்கு பிறகு மார்க்கெட் விலைக்கும் என்று நிர்ணயிக்கலாம். கோட்டா சிஸ்டெம் கொண்டுவரலாம்.   17:21:49 IST
Rate this:
0 members
0 members
3 members

டிசம்பர்
27
2021
பொது ஏர் இந்தியா நிறுவனம் கைமாறுவதில் தாமதம்
கையகப்படுத்தும் என்ற வார்த்தை பிரயோகத்தை விட, பெற்று கொள்ளும் என்று சொல்வது சரியாக பொருந்தும் போல.   04:29:07 IST
Rate this:
0 members
0 members
3 members

டிசம்பர்
27
2021
சம்பவம் ஏ.டி.எம். மிஷின் வெடி வைத்து தகர்ப்பு ரூ.16 லட்சத்தை அள்ளிச்சென்ற கொள்ளையர்கள்
இவர்கள் கொள்ளையர்களாக இருப்பதற்கான வாய்ப்புக்கள் மிகவும் குறைவு என்று எண்ணுகிறேன். நிச்சயமாக இவர்கள் பயங்கரவாதிகளாகத்தான் இருக்கவேண்டும். தீவிரவாதிகளுக்கு பணம் வந்து சேரும் அனைத்து வலிகளும் அடைபட்டு கொண்டே இருப்பதால், இப்போது இப்படி கொள்ளையடித்து பயங்கரவாதத்திற்கு பணம் எடுக்கிறார்கள் என்று சந்தேகிக்கவேண்டியுள்ளது. கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் நாடு முழுவதும் இப்போது பிடிபடுகிறது, பதுக்கியவர்கள் விற்பவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். ஆகவே பயங்கரவாதிகள் எ டி எம் பணத்தை கொள்ளையடிக்கும் திட்டதிக்ரு வந்திருக்கிறார்கள் போல. இது மிகவும் தேசத்திற்கு ஆபத்தானது என்றாலும், வேறுவகையில் நன்மை பயக்கலாம். சமூகத்திற்குள் மக்களோடு மக்களாக இருந்து கொண்டு உள்ள பயங்கரவாதிகளை இப்போது காமிராக்கள் மூலம் இனம் கண்டுகொள்ளமுடியும். உள்நாட்டிலேயே இருந்துகொண்டு தேசத்திற்கு எதிராக செயல்படுவோரை கண்டுபிடிக்க வழிவகுக்கும் என்று தீவிரமாக இதை அரசு கையாளவேண்டும்.   04:20:28 IST
Rate this:
0 members
0 members
3 members

டிசம்பர்
27
2021
பொது ஹெத்தை அம்மன் திருவிழா காணிக்கை செலுத்தி கோலாகலம்
படுகர் இந மக்களின் வாழ்க்கை முறையை பற்றி அறிந்து கொள்ள உதவுகிறது. மலரில் தான் இப்போதெல்லாம் நமது பண்டைய கலாச்சாரத்தொடர்பான விஷயங்களுக்கும் முக்கியத்துவம் உள்ளது. இதுபோன்ற செய்திகளை மற்ற பத்திரிகைகளில் காண முடிவதில்லை. நமது கலாச்சாரம் பண்டைய நாகரிகங்கள் இன்னமும் மாறாமல் இருப்பது கிராமங்களில். அனைத்து செய்திகளையும் உள்ளடக்கி தமிளகம் முழுவதும் நிருபர் குழுக்களை வைத்து இது போன்ற செய்திகளை தருவதில் மலரின் சிறப்பு இருக்கிறது. இது போன்ற செய்திகள் மனதில் இடம் பிடிக்கின்றன. ஹெத்தை அம்மன் முதன் முதலாக அறிகிறேன். அம்மனின் அருளால், அம்மனின் சிறப்புக்களை அனைத்தையும் தினமலரில் படிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று எண்ணுகிறேன். நன்றி மலர்.   18:21:32 IST
Rate this:
0 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X