மலரின் மகள் : கருத்துக்கள் ( 2176 )
மலரின் மகள்
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
23
2021
உலகம் தலிபான்களை ஒடுக்க ஆப்கனில் மீண்டும் களமிறங்கிய அமெரிக்கா
தலிபான்கள் என்பதற்கு மாணவர்கள் இயக்கம் என்று பொருள்.   00:29:02 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூலை
21
2021
உலகம் சீனாவில் ஒரேநாளில் கொட்டி தீர்த்த கனமழை வெள்ளத்தில் மிதந்த கார்கள்
அவர்கள் அடுத்த ஐம்பது ஆண்டுகள் நூறாண்டுகள் என்று திட்டமிடுவார்கள். ஆனால் வரும் பிரச்சினைகளை அறியமாட்டார்கள். உலகில் அதிக அளவில் அணைகளை காட்டியது சீனாதான். எதற்காகா? விவசாயத்திற்காகவா என்றால் முழுதும் அல்ல. வெள்ளம் திசைமாறுவது அணைகள் திசை மாறுவது என்று இருப்பதை தடுத்து நிறுத்தி அதை வேண்டும் வண்ணம் திறந்து விட்டு வெள்ளப்பெருக்கிலிருந்து தப்பித்து கொள்வதற்காக என்று சொல்லலாம். அனால் சீனா சொல்வதோ தொடர்ந்து அனைத்து காலங்களிலும் ஹைடிராலிக் மின்சாரம் தயாரிப்பதற்கு என்று சொல்கிறது. உலகின் பல வல்லுநர்கள் எச்சரித்து கொண்டே வந்திருக்கிறார்கள் அணைகள் ஒவ்வொன்று பல அணுகுண்டுகளை சமம் என்று. அதை அவர்கள் கேட்டுக்கொண்டதாகவே தெரியவில்லை. அதன் விளைவுகள் தான் இது. சீனா மற்ற தேசத்தின் மீது யுத்தம் செய்தால் ஒரு ராக்கெட் போதும் அவர்களின் அணைகளை தகர்ப்பதற்கு, அவ்வளவு தான் மற்றத்தை ஜலசக்தி பார்த்து கொள்ளும். நாணில் ஏற்றப்பட்ட அம்பு போலத்தான் அவர்களின் அணைகள் அனைத்தும் தயாராக இருக்கிறது உடைத்து கொண்டு அழிவை அள்ளித்தருவதற்கு. அவர்களின் ஒரு நூறு பெரிய அணைகளை ஏவுகணை கொண்டு தாக்கினால் போதும், சீனா முழுதும் கற்காலத்திற்கு சென்றுவிடும். ஜலசக்தி ஆயுதம் மற்றும் அதனடுத்து வரும் நோய்கிருமிகளால் பரவும் வியாதிகள் இயற்கையான பயோவார் ஆகா இருக்கும் அங்கே. இறை நம்பிக்கை இல்லாதவர்கள் அவர்கள். இயற்கையை மதித்து நன்றி பாராட்டி அஞ்சி அதையே வணங்கி தான் மனித குலம் பல ஊழிகளால புவியில் நிலைத்திருக்கிறது என்பதை உணராதவர்கள். மதம் உண்டானது அதன் மூலமாகவே. இறை பக்தி தேவை இயற்கை சீரழிவில் இருந்து மனிதகுலம் பிழைத்திருப்பதற்கு.   23:36:11 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூலை
21
2021
உலகம் சீனாவில் ஒரேநாளில் கொட்டி தீர்த்த கனமழை வெள்ளத்தில் மிதந்த கார்கள்
உலகின் அணைவுடைப்பின் சராசரிவிகித்ததை விட நான்கு மடங்கு அணையுடைப்பு ஒவ்வொரு வருடமும் நடக்கும் தேசம் சீனா. கட்டப்பட்ட அணைகள் வலுவற்றவை பல இருக்கின்றன. அறுபதுக்கும் எண்பதுக்கும் இடைப்பட்ட வருடங்களில் கட்டப்பட்ட அனைத்து அணைகளும் உடைந்து விடும் தருவாயில் இருக்கிறது. சில அணைகளை அவர்கள் வெடி வைத்து தகர்கிறார்கள். மலைமட்டும் பொலிந்து வெள்ளம் பெருகியதா அல்லது அதனுடன் கூடவே அணைகளும் உடைந்ததனால் பெருவெள்ளம் வந்ததா என்ற செய்திகள் ஊகத்தின் அடிப்படையிலும் உள்ளார்ந்த சிந்தனையுடனும் அறிந்து கொள்ளவேண்டும்.   23:28:06 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூலை
21
2021
உலகம் சீனாவில் ஒரேநாளில் கொட்டி தீர்த்த கனமழை வெள்ளத்தில் மிதந்த கார்கள்
உண்மை உலகத்திற்கு சொல்லப்படக்கூடாது என்பதை மிகப்பெரிய கொள்கைமுடிவை வைத்திருக்கிறார்கள்.   23:25:26 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூலை
21
2021
உலகம் சீனாவில் ஒரேநாளில் கொட்டி தீர்த்த கனமழை வெள்ளத்தில் மிதந்த கார்கள்
ஆயிரம் வருடங்களுக்கு பிறகு இப்போது தான் இந்த அளவு மழை பெய்திருக்கிறதாம். எப்படி கணக்கிட்டார்கள் என்று தெரியாது. எதை எடுத்தாலும் ஆயிரம் வருடம் இரண்டாயிரம் வருடம் என்று தான் டுமீல் விடுவார்கள் அவர்கள். இந்த மிகப்பெரிய வெள்ளப்பெருக்கால் நிறைய வியாதிகள் பெருகும். கபாசுர குடிநீரெல்லாம் அங்கே கிடையாது. இதை காரணம் காட்டி புதிது புதிதாக ஏதேனும் வியாதிகளை பரப்பி விடப்போகிறார்கள்.   23:24:36 IST
Rate this:
0 members
1 members
0 members

ஜூலை
21
2021
Rate this:
0 members
0 members
1 members

ஜூலை
19
2021
பொது பிளஸ் 2 முடிவுகள் வெளியானது
இம்முறை மதிப்பெண்கள் குறைந்துள்ளதால் கடந்தாண்டு ஸ்டுடென்ட்ஸ் இந்த வருடம் தொழிற்கல்வியில் எளிதில் சேரலாமல்லவா. நீட் இல்லாமல் அட்மிஷன் என்றால் அவர்களுக்கு மருத்துவத்தில் எளிதில் இடம் கிடைக்கும். அரசு என்ன மாதிரி வழிகாட்டுதல்களை உயர்கல்வி அட்மிஷன் கு வைத்திருக்கிறது. தெரிந்தால் விளக்கவும். நன்றி   20:13:43 IST
Rate this:
0 members
0 members
3 members

ஜூலை
16
2021
பொது அடுத்த 100 நாட்கள் மிகவும் முக்கியம்
அரசு செய்யவேண்டியது முதலில் விருப்பப்படும் அனைவருக்கும் தடுப்பூசியை செலுத்தவேண்டும். ஏற்றுமதிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதால் தானோ என்னவோ உள்நாட்டில் பயன்பாட்டிற்கு தடுப்பூசி கிடைக்கவில்லை. இரண்டாவதாக விருப்பமில்லாதவர்களுக்கு தடுப்பூசியின் முக்கியத்துவத்தை தெளிவாக்கவேண்டும். இன்சென்டிவ்ஸ் கூட வழங்கலாம். மூன்றாவதாக நிர்வாக சிக்கலைகளை குளறுபடிகளை கலையவேண்டும். நான்காவதாக மிக முக்கியமாக சுகாதார மேம்பாடு மற்றும் மருத்துவமனைகளை அதி தீவிரமாக பரவும் வியாதிகளுக்கு எதிராக தயார் படுத்துவது. நமது முக்கிய குறை சுகாதாரமின்மை தான், முக கவசம் அணியவில்லை என்று இரன்டு குறைப்படுகிறோம், பத்தோ நூறோ அபராதம் என்று விட்டு விடுகிறோம். ஆனால் பன்னெடுங்காலமாக கண்ட கண்ட இடங்களில் எச்சில் துப்புவதும் சிறு நீர் கழிப்பதும், பொதுவிடங்களில் புகைப்பதும் கண்டும் கண்டுகொள்ளாமல் இருக்கிறது அனைத்து அரசுகளும். உள்ளாட்சி அமைப்புக்களிலிருந்து நடுவணரசு வரையில் அனைவரும் அமைதி காக்கிறார்கள். சுத்தமின்மை என்ற ஒன்றே ஒன்றில் நமது நாட்டின் மீதான மதிப்பு கீழிறங்கி இருக்கிறது வெளிநாடுகளில்.   23:55:09 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூலை
17
2021
உலகம் அமெரிக்காவின் எம்எச்-60 ஆர் ரக ஹெலிகாப்டர்கள் இந்திய கடற்படையிடம் ஒப்படைப்பு
நல்லவன் நல்லவன் ஜி உங்கள் பெயர் அன்பு வா. எப்படி இருக்கிறீர்கள்? இரண்டு மூன்று பேர்கள் குழப்புவதாகவும் இருந்தது. யார் எழுதுகிறார்கள் என்ற குழப்பம் வேறு இருந்தது. நலமா? அன்புடன். மலரின் மகள். விஜயலக்ஷ்மி சௌமியன்.   23:38:22 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
17
2021
பொது இது உங்கள் இடம் காலத்தின் கட்டாயம் கொங்கு நாடு!
பல்கலைக்கழகங்கள் பிரிக்கப்படுகின்றன. கார்பொரேஷன்கள் பிரிக்கப்படுகின்றன. பெரிய நிறுவனங்கள் எல்லாம் பிரிக்கப்படுகின்றன. மாவட்டங்கள் பிரிக்கப்படுகின்றன. நிர்வாகத்திற்காகவும் மேம்பாட்டிற்காகவும் செய்யப்படுகின்றன. வளர்ச்சி மேம்படவும், பிராந்திய கலாச்சாரங்கள் பாதுகாக்கப்படவும், மக்களின் சமூக ஒற்றுமை ஓங்கவும் அவசியமாகிறது. திட்டங்கள் அறிவிக்கப்பட்டு நடைமுறை படுத்தப்படாமல் பல இருக்கின்றன. சிறப்பான வளர்ச்சிக்கும் குடும்பங்கள் முன்னேறவும் கூட சிறு மாநிலங்கள் அவசியமாகிறது. கொங்கு மண்டலம் கல்வி மருத்துவம் விவசாயம் தொழிற்சாலைகளில் மேம்பாடு அடைந்திருந்தாலும், பல மடங்கு வளர்ச்சிக்கு வாய்ப்பிருந்தாழும் சிறுமடங்கே பெற்றிருக்கிறது என்கிறார்கள் போல தெரிகிறது. சென்னை முதல் குமரி வரை என்று வடக்கும் தெற்குமாக ஒரு நேர்கோட்டில் தமிழகத்தை புரிந்து கொண்டிருக்கிறார்கள் போல, அரசியல் செய்வோர். மேற்கு கிழக்காக புரிந்து கொண்டிருக்கவும் வேண்டும். வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்பது இந்தியாவில் மட்டுமல்ல தமிழகத்திலும் அதே நிலை என்பதையும் சிலர் சொல்வதை அறியமுடிகிறது. தடுப்பொசியின் தேவை கொங்குமண்டலத்தில் தான் அதிகம் இருக்கிறது, ஜிடைத்தது சொற்பம். தெற்கே தட்டுபாடில்லாமல் தினமும் வாக்கின் முறையில் பெற்றுக்கொள்ள முடிகிறது. கோவையிலோ நள்ளிரவிலிருந்தே நீண்டவரிசையில் காத்திருந்தும் ஏமாற்றத்துடன் திரும்பும் நிலைக்கு காரணம் சொல்வது அங்கே அனைவருக்கும் தெரியும் என்னவென்று. அனைவருக்குமான அரசு கோவைக்கும் தான். அனைத்தும் சிறப்பை நோக்கி சென்றால், எந்த பகுதியினரும் புறக்கணிக்க படுகிறோம் என்ற நிலை இல்லாமலிருந்தால், கோரிக்கைக்கு அவசியமிருந்திருக்காது என்று உணர் வேண்டும். ஆரம்பத்திலேயே உணர்ந்தது சீர்செய்யவேண்டும். நன்றி   09:57:01 IST
Rate this:
2 members
0 members
8 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X