Dr.C.S.Rangarajan : கருத்துக்கள் ( 655 )
Dr.C.S.Rangarajan
Advertisement
Advertisement
Advertisement
டிசம்பர்
31
2020
அரசியல் ஸ்டாலினை எதிர்த்து சீமான் போட்டி
சீமான் ஸ்டாலின் எதிராக தேர்தலில் போட்டிபோடப்போவதாக அறிவித்தது ஸ்டாலினுக்கு 'பாதுகாப்பு வளையம்' அமைத்துக் கொடுப்பது போலாகும். ஒரு கட்சி அரண் போல் ஸ்டாலினுக்கு உதவக்கூடியநிலையில் சீமான் யாருக்கும் வாக்களிக்காத வாக்காளர் எண்ணிக்கையை விட குறைந்த வாக்கினை பெறக்கூடும் என்பது உறுதி.   05:27:41 IST
Rate this:
2 members
0 members
6 members

டிசம்பர்
21
2020
அரசியல் வேளாண் சட்டத்தில் காங்., செய்ய முடியாததை பாஜ., செய்துள்ளது குஷ்பு
விவசாயமே முதலும் , முடிவுமாக இருக்க முடியாது . பஞ்சாபிலும் மற்றய அண்டைய மாநிலங்களின் வேளாண் உற்பத்தி மட்டுமே நாட்டின் தேவைக்கதிகமான நிலைமை தொடர்ந்தால் மற்ற மாநில வேளாண் பொருட்களுக்கு நுகர்வோரை காண்பதரிதாய் போய்விடும் கார்பொரேட் எதிரிகள் அல்லவே வேலை வாய்ப்புக்களை வழங்குவதுடன் வேளாண் பொருட்களை பலநாட்களுக்கு பாதுகாப்பாக உண்ணும் உணவாக மாற்றித்தரும் அவர்களின் பங்கு விவசாயிகளுக்கு தேவை இல்லையா ? கரும்பு உற்பத்தி கார்பொரேட் இல்லாமால் பெருத்தோங்கமுடியுமா   07:10:28 IST
Rate this:
1 members
0 members
1 members

டிசம்பர்
15
2020
கோர்ட் பல்கலை துணைவேந்தருக்கு எதிரான மனு தள்ளுபடி
சூரப்பா துணை வேந்தராக அண்ணா பல்கலை கழகத்தில் நியமிக்கப்பட்டதால் டிராபிக் ராமஸ்வாமிக்கு ஏற்பட்ட சங்கடங்கள் என்னென்ன? ஒரு பொதுநல வழக்கு தான் என்றாலும் பொதுநலம் எந்தவகையில் பாதிக்கப்பட்டது , அல்லது பாதிக்கப்படக்கூடும். 'கற்றது உலகளவு , கல்லாதது கையளவு' என்ற நிலையில் உள்ளோர் கற்றவர்கள் கல்லாதவர்களால் தாக்கப்படும்போது சமூக மாற்றம் தவிர்க்கமுடியாததுதானா?   04:39:40 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
13
2020
அரசியல் பிரியங்கா தலைமையில் போட்டியிட்ட காங்., வேட்பாளர்கள் படுதோல்வி!
நேஷனல் ஹெரால்ட் கட்டிடத்தை விட்டு விலகுமாறு டெல்லி உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பிற்கு தர்காலீக தடை விதித்த உச்சநீதிமன்றம், ராகுல் காந்தி எங் இந்தியன் வருமானவரி வழக்கிலும் முடிவான தீர்ப்பு என்னவாக இருக்கும் என மக்கள் யூகிக்க முடிந்தாலும் தீர்ப்பு காலதாமதம் ஆவது எதனால்?   05:21:06 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
13
2020
உலகம் அறிய முடியாத குணம் கொண்ட ராகுல் ஒபாமா மதிப்புரை
உண்மை கசக்கத்தான் செய்யும். புத்தகங்களுடன் உறவாடி அதன் வாயிலாக ஆற்றலையும், ஆக்கத்தையும் ஊக்கத்தையும் பெற தவறினால் எழுதி தருவதை படிப்பதை தவிர வேறு வழியில்லை. 'சத்தியத்திற்கு சோதனை' சிலரால் வருவதை சத்தியமே சந்திக்கும் வெற்றிவாகை சூடி.   19:48:26 IST
Rate this:
0 members
0 members
7 members

அக்டோபர்
22
2020
அரசியல் கொரோனா தடுப்பூசி எப்போது கிடைக்கும் - ராகுல் தகவல்
கொரோனாவிற்கு தடுப்பூசி என்று கிடைக்கக்கூடும் என்ற கேள்விக்கு மெத்த படித்தது போல் இருப்பவர்களுக்கே தெரியாத போது சீனாவுடன் ரகசிய ஒப்பந்தத்தின் பக்க விளைவுகள் பல நேரிடையாகவும் மறைமுகமாகவும் தாக்கும் நேரத்தில் 'என் நாடு சரியோ, தவறோ' என்ற எண்ணமில்லாமல், 'ரோமாபுரியில் தீப்பற்றியெரியும்போது வயலின் வாசித்த நீரோ'விற்கும் காரோணவிற்க்கு தடுப்பூசி என்று கிடைக்கும் என வினா எழுப்புபவருக்கும் வித்தியாசம் தெரிகிறதா என்ன .   01:37:33 IST
Rate this:
0 members
0 members
4 members

அக்டோபர்
12
2020
சினிமா எல்லாவற்றையும் தொலைத்து விட்டேன்: சூரி உருக்கம்...
பிறருக்காக 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' என வாழும் சமுதாயத்தில் சட்டங்களே தேவை இல்லை' 'தனக்கு மிஞ்சியே தானமும் தருமமும்' என தன்னை முதன்மை படுத்தி வாழும் சமுதாயத்தில் சட்டங்கள் இல்லாது வாழ்வமையாது என்கிறார் ஒரு தத்துவ ஞானி. நமக்காகவே நாம் வாழும் நிலைமைக்கு உறவுமுறை மாற்றங்கள் ஏற்பட்டது எதனால்?   03:43:56 IST
Rate this:
0 members
0 members
1 members

அக்டோபர்
4
2020
அரசியல் " வேளாண் சட்டங்களை தூக்கி எறிவோம் " - ராகுல் ஆவேசம்
கற்பனைக்கெட்டாத அற்புதங்கலின் பலவகைக்கும் இடையே தன்னையும் தன் கட்சியையும் 'தூக்கி ஏறிந்தது' மட்டுமல்ல, மக்களவையின் ஒரு எதிர்கட்சி தகுதிதனை தர மறக்காமல் மறுத்ததும் நினைவைவிட்டு நீங்கும் முன் எதை எதையோ தூக்கி ஏறிய முயலலாம் முடியாது என்று தெரிந்தபோது. வேளாண் சட்டங்களை தங்கள் கட்சி ஆளும் மாநிலத்தில் தாங்களே அறிமுகப்படுத்த திட்டமிட்டாலும் ஆளுநர் கையொப்பம் இடாமல் எவ்வாறு அறிமுகப்படுத்தமுடியும்? திசை மாறிப்போனாலும் மற்றவர்களை திசை திருப்ப முயலுவது லாபமாக நினைக்க தோன்றினாலும் நழ்டத்தில்த்தானே முடியும்.   02:25:27 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
2
2020
அரசியல் போராட்டம் வெற்றி பெறும் சோனியா நம்பிக்கை
உள்ளம் ஆமையாய்   இருந்திருந்தால் 'நாவடக்கம் ' அறிவுறுத்ததக்கதாய் இல்லாதுபோய் இருக்கும். மனதில் மீதமொன்றுமில்லாது சொல்லில் வருவதனைத்தும் மனதுக்கு வடிகால் ஆனாலும் விளையும் இடறுகல் நம்மை இடறவைக்காமலா விட்டுவிடும் ? உள்ளன்புடன் கூறும் இனிய சொல்லே அறமெனும்போது, இன்சொல்லுக்கு 'வாய் முடக்கம்' செய்து கடும்சொற்களே கூறும் ஒருவர் தலைமை தங்கினாலும் பழத்தை நழுவவிட்டு காயுடனாவது  வருவாரா என்பதே ஐயப்படத்தக்கது.    01:07:24 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
2
2020
அரசியல் யாருக்கும் அஞ்சமாட்டேன் ராகுல் டுவிட்
பொய்யை உண்மையால் வெல்லுவேன் என்பது சத்திய வாக்கெனில் ராகுல் காந்தி வெற்றிவாகை சுடுவதில் சிக்கல் நிறைந்ததாகத்தான் இருக்கமுடியும். பொய்யிலே பட்டபடிப்பிற்கொத்த நிலைதனில் 'உண்மையை உறக்கத்திலாழ்த்தியவர்' வெற்றிக்கும் தனக்கும் தினம் தினம் இடைவெளியை அதிகப்படுத்திக் கொள்வதை அறியாதது ஏன்   18:08:06 IST
Rate this:
1 members
0 members
5 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X