raghavan mageswary : கருத்துக்கள் ( 11 )
raghavan mageswary
Advertisement
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
17
2018
எக்ஸ்குளுசிவ் கேரள மக்களுக்கு உதவுவோம் வாசகர்களே!
மிக மோசமான பதிவு. இதே நிலை நமக்கும் நாளை ஏற்படலாம். தமிழர் மலையாளி இந்தியன் என்பதையும் தாண்டி ஒரு உணர்வு உண்டு அதுதான் மனிதன் என்ற உணர்வு. அந்த உணர்வின் விளைவுதான் மனிதாபிமானம். அது செத்து விட்டால் மனிதன் மரணிதத்திற்கு சமம். மனித உணர்வோடு மனிதாபிமானத்தோடு வாழ்வோம். நல்லது செய்ய முடியவில்லை என்றாலும் இது போன்ற விஷமமான கருத்தை சொல்லாதீர்கள்.   15:11:04 IST
Rate this:
18 members
1 members
20 members

ஜூலை
10
2018
பொது கற்பழிப்பு வழக்கில் பிஷப் கைதாகிறார்
மத குருமார்கள் என்ற பெயரில் மதம் பிடித்து திரியும் இவைகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். எந்த மதமானால் என்ன விடக்கூடாது .   14:24:12 IST
Rate this:
0 members
0 members
24 members

ஜூலை
10
2018
Rate this:
0 members
0 members
13 members

மே
4
2018
பொது பெண்களுக்கு சம வாய்ப்பு அளிக்க முயற்சி மோடி
பெண்களின் முன்னேற்றம் பெண்களின் பாதுகாப்பில் அடங்கியுள்ளது.   10:48:15 IST
Rate this:
6 members
0 members
11 members

ஏப்ரல்
19
2018
உலகம் பலாத்கார சம்பவங்களை அரசியலாக்காதீர் மோடி
அடுக்கடுக்காக நிகழ்ந்து கொண்டிருக்கும் இந்த அக்கிரமங்கள் தடுக்கப்படவேண்டும். நிகழ்ந்தபின் நீதி தேவையில்லை. நிகழாமல் தடுப்பதற்கு ஏதேனும் கடுமையான வழிமுறை இருக்கிறதா என்று அதிகாரத்தில் இருப்பவர்கள் சிந்திக்கட்டும். சமூக நீதியையும் தனிமனித ஒழுக்கத்தையும், மனித நேயத்தையும் போதிக்கும் கல்விக்கூடங்கள் எல்லாம் இன்று தரமில்லாத வியாபாரிகளின் (அரசியல்வாதிகளின்) கைகளில். இதற்க்கு ஏதேனும் மாற்று வழி இருக்கிறதா? பணத்திற்கும் பதவிக்கும் வளைந்து கொடுக்காத நீதி கிடைக்க ஏதேனும் மாற்று வழி உண்டா ? ஆன்மிகவாதிகள் என்று மக்களுக்கு போதனை செய்து கொண்டிருப்பவர்கள் எல்லாம் இறை நம்பிக்கையையே கேள்விக்குறியாக்கும் நிலையில் இருக்கிறார்கள். பயங்கரமான குற்ற பின்னணி உடையவர்களாகவும் பெரும் செல்வதந்தார்களாகவும் இருக்கிறார்கள். இவர்களை வேரறுக்க ஏதேனும் வழி உண்டா? அரசாங்கத்தின் மிகப்பெரிய பொறுப்பில் இருப்பவர்கள் இதையெல்லாம் மாற்ற என்ன வழி என்பதை சிந்தித்து செயலாற்ற வேண்டும். அதுவரை இதுபோன்ற கொடுமைகள் எந்த ரீதியில் வெளிப்பட்டாலும் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இப்போதைய உடனடி தேவை செயலே அன்றி சொல் அல்ல.   13:06:15 IST
Rate this:
0 members
0 members
29 members

ஏப்ரல்
16
2018
சம்பவம் மாணவியரை மூளை சலவை செய்த பேராசிரியை கைது செய்யக்கோரி போராட்டம் வலுக்கிறது
செய்தியை படித்தவுடன் சூடாக கருத்து தெரிவித்துவிட்டு பின்னர் ஒன்றுமே நடக்காதது போல நாளை முதல் இயல்பு வாழ்க்கையை பார்க்க போகிறோம். இதுவும் கடந்து போகும்.   17:10:01 IST
Rate this:
0 members
0 members
12 members

மார்ச்
20
2018
பொது எனக்கு பின்னால் கடவுள்- ரஜினி
நல்ல வேலை எனக்கு பின்னால் கடவுள் என்றுதானே சொன்னார்..வழக்கம் போல பஞ்ச் டயலாக் இல் சேர்த்து கொள்ளலாம். நானே கடவுள் என்று சொல்லாமல் போனாரே என்று சந்தோஷப்படுங்கள் மக்களே.   17:43:50 IST
Rate this:
3 members
0 members
9 members

மார்ச்
10
2018
பொது இன்று இமயமலை செல்கிறார் ரஜினி
ஆன்மிகம் காட்டும் வழி அன்பு, அன்பை வெளிப்படுத்தும் வழி தன்னலமற்ற தொண்டு. இதையெல்லாம் புரிந்து கொள்ளாதவர்கள் எந்த மலைக்கு போனாலும் நமக்கு பிரயோஜனமில்லை.   12:18:13 IST
Rate this:
0 members
0 members
0 members

மார்ச்
5
2018
அரசியல் படிக்கிற காலத்தில் அரசியல் வேண்டாம் ஆங்கிலம் கற்றுக்கொள்ள ரஜினி அறிவுரை
படிக்கிற காலத்தில் அரசியல் வேண்டாம். நல்ல அறிவுரை. அதையே இவர் படம் ரிலீஸ் ஆகும்போது மாணவர்கள் ரசிகர்கள் என்ற பெயரில் வகுப்பை மட்டம் அடித்து வீட்டில் அவசிய செலவுக்கு கொடுத்த காசை சினிமாவிற்கு செலவளித்து, இவர் கட்அவுட்டிருக்கு பால் ஊற்றும் போது, படிக்கிற காலத்தில் சினிமா ஹீரோக்களின் மேல் இப்படி கண்மூடித்தனமான அபிமானம் வேண்டாம் என்று சொல்லியிருந்தால் பாராட்டியிருக்கலாம். சிறுமிகளுடன் ஜோடியாக நடிக்க மாட்டேன் என்று சொல்லியிருந்தாலும் பாராட்டியிருக்கலாம். தான் சார்ந்த துறையில் முன்னேற இவர்கள் கொள்கை இல்லாத செயல்களை செய்து பணம் செய்து முன்னேறிவிட்டு இப்போது யதார்த்தமாக கொள்கை பேசுவது சற்று செயற்கையாக தெரிகிறது. தமிழன் வளர்ந்தால்தான் தமிழ் மொழி வளரும். மிகவும் சரி. தமிழன் வளர ஆங்கிலம்தான் ஒரே வழி என்று யார் சொன்னது. கலாம் ஐயாவின் அறிவியல் அறிவு, நாட்டுப்பற்று, மனிதாபிமானம், இவற்றுக்கெல்லாம் மேலாக தாயமொழிப்பற்று இவையெல்லாம் ஒன்றுசேர்ந்து தான் உலக அரங்கை ஐயாவை நிமிர்ந்து பார்க்க வைத்ததே தவிர ஆங்கிலம் மட்டும் அல்ல. இன்னும் சொன்னால் திருவள்ளுவரும் , திருக்குறளும் , கம்பனும் மகா கவி பாரதி அறியப்படுவதும் தமிழால் மட்டுமே. அரசியல் செய்ய வந்து விட்டீர்கள் செய்யுங்கள். அறிவுரைகளை நிறுத்துங்கள். சினிமா கதைகள் பாடல்கள் வசனங்கள் எத்தனை இளம் நெஞ்சங்களின் மனதை ஆட்டி படைக்க கூடியது. அந்த மாபெரும் சக்தியை சமுதாய நலனுக்காக பயன்படுத்தியவர்களும் இருக்கிறார்கள். அதை வைத்து வெறும் வணிகம் மட்டுமே செய்தவர்களும் இருக்கிறார்கள். இவர் இரண்டாம் ரகம்.   15:21:36 IST
Rate this:
3 members
0 members
4 members

பிப்ரவரி
26
2018
Rate this:
0 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X