L.Pannneerselvam : கருத்துக்கள் ( 300 )
L.Pannneerselvam
Advertisement
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
7
2018
பொது இன்றைய(ஆக.,07 ) விலை பெட்ரோல் ரூ.80.05 டீசல் ரூ.72.35
அடப் பாவிகளா, மனட்சாட்சியே இல்லையா? இப்படியா விலைகளை ஏற்றிக்கொண்டே செல்வது? நீங்கள் ஆட்சிக்கு வந்தால் விலைகள் குறையும் என்றுதானே ஆட்சியில் அமர்த்தினோம் ஆனால் அவர்களே பரவாயில்லை என்பது போல இப்போது உணர்கிறோம். ஒன்று உங்களுக்கு திறம்பட ஆளத் தெரியவில்லை அல்லது மக்கள் நலனில் உண்மையான அக்கறை இல்லை என்பது இந்த விலையேற்றத்தில் தெரிகிறது. காலம் வரும்போது மக்கள் உங்களுக்கு தக்க பாடம் கற்பிப்பார்கள்.   08:52:24 IST
Rate this:
1 members
0 members
11 members
Share this Comment

மே
12
2018
அரசியல் தனித்தா, கூட்டணியா பா.ம.க.,வில் குழப்பம்
ஏதோ தாம்தான் அறிவு ஜீவிகள், அரசியல் சாணக்கியர்கள் என சிலர் கருத்தை அள்ளித் தெரித்து இருக்கின்றனர். பாமக தனித்து நின்றால் தோற்றுவிடும், கூட்டணியில் சேர்க்கக்கூடாது, டெபாசிட் கிடைக்காது, இப்படி, அப்படி என்று வாந்தியெடுக்காத குறையாகசொல்லியுள்ளனர். ஆனால், தமிழகத்தின் பல்வேறு பிரச்சினைகளில் குறைகளை முழுமையாக சுட்டிக்காட்டியும், மத்திய மாநில அரசுகளின் செயல்பாட்டில் உள்ள குறைகளை ஆதாரப்பூர்வமாக சுட்டிக்காட்டி, அதனை சரிசெய்ய ஆக்கப்பூர்வமான கருத்துக்களையும் ஒரு கட்சி என்ற முறையில் மிகவும் மரியாதையுடனும், கட்டுப்பாட்டுடனும் மக்களுக்கு தெரிவித்து விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறது. ஆனால், அக்கட்சி தோன்றிய காலத்தில், அதன் செயல்பாடுகளை வைத்துக்கொண்டு அதனை ஒதுக்குவது எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை? இன்றுள்ள கட்சிகளில், எந்த கட்சி கூட்டணி வைக்காத கட்சி என்று சொல்லமுடியுமா? கூட்டணி வைக்கும் போது ஒரு பேச்சும், வைத்துக்கொண்டபிறகு ஒரு பேச்சும் பேச்சைத்தானே கேட்டிருக்கிறோம்? அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் அவற்றின் தலைவர்களை ஒன்றையொன்று எவ்வளவு கீழ்த்தரமாக தாக்கி பேசிக்கொண்டன? இப்போதும் பேசி வருகின்றன? தன்னலமற்ற தலைவர் காமராஜர் அவர்களை திமுக செய்யாத விமரினம் உண்டா? பிஜேபீ கட்சி தற்போது எவ்வளவு தரம் தாழ்ந்து தனிமனித தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது என்றும் தெரியும். ஆனால், இப்படி குறைகள் இருந்தாலும், மக்களிடையே உள்ள ஆதரவு அக்கட்சிகளுக்கு குறைவில்லை. ஏதோ அக்கட்சிகளிடம் உள்ள சில நல்ல திட்டங்களும், கொள்கைகளாலும் மக்கள் ஈர்க்கப்படுகின்றனர். அதைப்போன்று பாமகவிலும் மக்கள் நலக் கொள்கைகள் இருக்கத்தான் செய்கிறது.அதன் தலையிடமிருந்து வரும் அறிக்கைகள், முக்கிய எதிர்க்கட்சியோ, அல்லது தலைவர்களோ சிந்திக்காத,எண்ணாத கருத்துக்களை அவர்களே வியக்கும் வண்ணம் உள்ளதாக இருக்கிறது. அவர்கள் யாரையும் கீழ்த்தரமாகவோ, தனிமனித தாக்குதலிலோ ஈடுபடுவதில்லை, ஆனால், மற்றவர்கள் அக்கட்சியை ஜாதிய கண்கோண்டு பார்ப்பதாலோ அல்லது அதன் மீதுள்ள அலர்ஜி காரணமாகவோ, அக்கட்சியினரை வெறுத்து ஒதுக்குகிறார்கள். மக்களிடையே ஆரோக்கியமான அரசியலோ, நல்ல கருத்துக்களோ போய்ச் சேரக்கூடாது என்று யாரும் நினைத்தால், அது மக்களுக்குத்தான் இழப்பாக இருக்கும்.   11:16:56 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

மே
12
2018
பொது கொள்ளை லாபம் ஈட்டுவோரை தடுக்க வணிக வரி அதிகாரிகளுக்கு உத்தரவு
ஆணையத்தின் அறிவுரை எல்லாம் சரி, வரவேற்கத்தக்கது. அதேசமயம், ஒரு திட்டமிடல் இன்றி, கண்டவாறு வரிவிகிதங்களை விதித்து, பொருட்களின் விலைகளை உயர்த்திவிட்டு, இப்போது மாதாமாதாம் ஜிஎஸ்டி கவுன்சில் என்று கூடி, வரிவிகிதங்களை அடிக்கடி மாற்றிக்யமைக்கிறார்களே, அதன் விளைவுதானே இது இதற்கெல்லாம் காரணமானவர்களை எப்படி கண்டிப்பது? மூல காரணம் அவர்கள் தானே ஏற்றிய விலையில் லாபம் பார்த்தவனை, விலையை குறைடா என்றால் எவன் குறைப்பான்? வரி குறைக்கப்பட்டது விலையை குறைத்து விற்க வேண்டும் என்று சொன்னால், அவன் பொருட்களின் ம. உற்பத்திவிலை கூடிவிட்டது என்று சொல்லி அதே விலைக்குத்தான் விற்க தொடர்கிறான். எனவே, வியாபாரிகள் தவறு செய்கிறார்கள் என்பதோடு கூட, அதற்கு அரசும், திட்டமிடல் இல்லாத வரிவிதிப்பும்தான் காரணம் என்பதையும் அந்த ஆணையம் உணரவேண்டும்.   10:23:24 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
12
2018
சம்பவம் பலாத்கார வழக்கு பா.ஜ., எம்,எல்,ஏ மீதான குற்றச்சாட்டு உறுதி
சில ஜால்ராக்கள் இதற்கும் சத்தமாக தட்டுவார்களே எங்கே அவர்களைக் காணோம்? காங்கிரஸ்காரன் செய்ய வில்லையா, அவன் செய்யவில்லையா, இவன் செய்யவில்லையா, அந்த ஆட்சியில் நடக்கவில்லையா என்று ஓ வென்று கூக்குரலிடுவார்கள். மடையர்களே, அவர்கள் சரியில்லை என்பதில்தானே உங்களை ஆட்சியில் அமரச்செய்தோம். நீங்களும் அதே தவறைச் செய்தால் உங்களுக்கும் அவர்களுக்கும் என்ன வேறுபாடு?   10:00:31 IST
Rate this:
1 members
0 members
17 members
Share this Comment

மே
9
2018
அரசியல் மோடியை புகழ்ந்து ஓட்டு கேட்ட சித்தராமைய்யா
நல்ல வேளை சித்தராமையா மோடியை நல்லவிதமாகத் சொல்லிதான்( வாய் தவறிதான்) ஓட்டுக்கேட்டுள்ளார். அமித்ஷாவைப் போல "எதியூரப்பாவைப் போல ஊழல்பேர்வழியை பார்த்ததில்லை" உண்மையை சேம் சைடு கோல் போடவில்லை அந்தமாதிரி எதிர்மறை கருத்தையும் சித்தராமையா வெளிப்படுத்தவில்லை.   11:44:54 IST
Rate this:
8 members
0 members
16 members
Share this Comment

மே
6
2018
பொது நீட் கபட நாடகம் ஆடிய கட்சியினர் மூக்குடைப்பு!
நீட் தேர்வு எளிதாக இருந்தது என்று மாணவர்கள் சொன்னால், எதிர்கட்சியினரின் மூக்கு எப்படி உடைபடும்? நல்ல நோக்கத்துடன், இஉச்சநீதிமன்றம் சொன்ன கருத்துக்களை, அல்லது விதிமுறைகளை, தனி மனித உரிமை மீறல், மனிதாபிமானம் அற்ற முறையில் நடத்தல் என்று புரிந்துக்கொண்டு மாணவர்களை துண்புறுத்துவது எந்தவித்த்தில் நியாயம் எனத் தெரியவில்லை எல்லாம் நூல் பிடித்ததைபோன்று நடத்துகின்ற சிபிஎஸ்இ, உச்சநீதிமன்றத்தின் உத்திரவுகளை தலைமேல் ஏற்று அப்படியே அமல்படுத்தும் சிபிஎஸ்இ, கம்பியூட்டரே வேறு மாநிலத்திற்கு மாணவர்களுக்கு சென்டர்களை ஒதுக்கியது என்று சொல்லிவிட்டு, பின்னர் அடுத்தடுத்து முரண்பட்ட தகவல்களை சொல்வதேன்? தமிழகத்தில் பத்து நகரங்களில் இருந்த சென்டர்களை எட்டாக குறைத்துக்கொண்டதேன்? தேர்வை நடத்தும் இந்த அமைப்பு, மனை செய்த மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சென்டர்களை ஏற்படுத்த வேண்டுமா அல்லது சென்டர்களை முடிவுசெய்துவிட்டு அந்த அளவுக்குத்தான் இடம் தரமுடியும், மீதி பேரெல்லாம் எக்கேடு கெட்டாகிலும் எவ்வளவு தொலைவாக இருந்தாலும் போய் எழுதி தொலையுங்கள் என்ற நிலைப்பாட்டை எடுக்குமா? தனது எல்லையைமீறி, அல்லது தன்னை மீறி நடந்தவிட்ட ஒருசில நிமிட தாமதத்தைக்கூட ஏற்காமல், தேர்வை எழுத அனுமதிக்காத இந்த ஒழுக்கமுடைய சிபிஎஸ்இ, கேள்வித்தாளை இந்தியில் மாற்றிக்கொடுத்து, அடுத்து வினாத்தாளை வரவைத்து, மாணவர்களை மணிக்கணக்கில் அறையில் அடைத்துவைத்து, ஒழுக்கமற்று நடந்துக்கொண்டு தேர்வை நடத்திய இந்த அமைப்பை எப்படி பாராட்டுவார்கள்? அல்லது நடந்த இந்த தேர்வு முறைகளைத்தான் மக்களோ, எதிர்கட்சியினரோ எப்படி ஆதரிப்பார்கள்?   08:20:37 IST
Rate this:
27 members
0 members
16 members
Share this Comment

மே
6
2018
பொது தினமும் ரூ.3 ஆயிரம் கோடிக்கு 500 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பு
இந்த இரண்டாயிம் நோட்டு வெளிவந்த போது, இது கறுப்பு பணத்தை ஊக்குவிக்கும். இந்த நோட்டின் மூலம் கறுப்பு பணமாக நிறைய சேர்த்துவைப்பார்கள் என பல பொருளாதார நிபுணர்களும், அரசியல் தலைவர்களும் எச்சரித்தனர். அதோடு மட்டுமன்றி, போலி நோட்டுக்கள் அச்சடிக்கப்பட்டால் பெரும் மதிப்பில் உள்ள இந்த நோட்டுக்கள் மூல் இந்திய பொருளாதாரத்திற்கு ஆபத்து ஏற்படும் என்றும் எச்சரித்தனர். ஆனால் அதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாமல் இரண்டாயிரம் நோட்டை அச்சடித்து தள்ளினர். ஆனால், பின்னர் வந்த காலங்களில், மேலே எச்சரித்த இரண்டுமே நடந்தது கண்கூடு. தாமதமாக விழித்துக்கொண்டதாலோ என்னவோ, இப்போது அந்த இரண்டாயிரம் நோட்டு அச்சடிப்பும், புழக்கத்திலிருந்தும் படிப்படியாக விலக்கிக்கொள்ளப்படுகிறதோ என்று கருதுப்படுகிறது. அதனால்தான், இந்த குறைந்த மதிப்பிலான இருநூறு, ஐந்நூறு நோட்டுக்கள் வருகின்றன. நடைமுறையில் இதுதான் உண்மையாக இருக்கும். ஆனால் சில ஜால்ராக்கள் இதற்கு சப்பை கட்டுகிறது, வரி போடலாம் என்று ஆலோசனை சொல்வது மிகவும் அபத்தம்.   07:51:40 IST
Rate this:
1 members
0 members
7 members
Share this Comment

மே
6
2018
அரசியல் கர்நாடகாவில் மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைப்போம் அமித்ஷா
கர்நாடகாவில் 3500 விவசாயிகள் தற்கொலை செய்துக் கொண்டனராம், அமித் ஷா சொல்கிறார். கர்நாடகம் இந்தியாவில் இல்லையா? இந்தியாவை பிஜேபீ கட்சி ஆளவில்லையா? அந்த தற்கொலையை தடுத்து விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க இவர்களுக்கு கடமையில்லையா? இந்தியாவில் விவசாயிகள் தற்கொலைகள் நடைபெறுகின்றன என்று முதலில் இப்படி பேசுவதற்கு வெட்கப்படவேண்டாமா? டெல்லியில் மாதக் கணக்கில் விவசாயிகள் போராட்டம் செய்தார்களே? மராட்டிய மாநிலத்தில் ஒரு பெரும் ஊர்வலத்தையே நடத்திக் காண்பித்தார்களே? அவர்களுக்கெல்லாம் மத்திய அரசு நிவாரணம் வழங்கிவிட்டதா? கேட்டால் அது அந்தந்த மாநில அரசை எதிர்த்து என்பார்கள் ஆனால் இப்போது அந்த மாநில அதிகாரத்தை பிடிக்கத்தானே இவ்வளவு ததிங்கணத்தோம் போடுகிறார்கள்?   07:26:34 IST
Rate this:
4 members
0 members
5 members
Share this Comment

மே
7
2018
அரசியல் ராம்நாத் கோவிந்த் ஜனாதிபதி ஆவதை ராகுல், சோனியா விரும்பவில்லை மோடி
பிரதமர் என்ன பேசுகிறார் என்பதற்கு அர்த்தமே இல்லாமல் போய்விட்டது. ஏன் ராம்நாத் கோவிந்தை, சோனியா காந்தியும், ராகுலும் ஆதரிக்கவேண்டும், விரும்பவேண்டும்? அவர்கள் தனி கட்சியினர் ஆயிற்றே அவர்கள் கட்சியின் ஒரு தலித், அதுவும் ஒரு பெண்மணியை நிறுத்தினார்களே, மோடி கட்சியினர் அவரை விரும்பினார்களா அல்லது ஆதரித்தார்களா? தான் என்ன பேசினாலும் கை தட்டுவதற்கு சிலர் இருக்கின்றனர் என்பதாலேயே என்னவெல்லாமோ பேசலாம் என் மோடி அவர்கள் நினைக்கிறார் போலும்? இங்கே, மேலே ஒருவர் குறிப்பிட்டதைப்போல, ஓட்டு விகிதாச்சார அடிப்படையில், பெருவாரியான மக்கள் இவருக்கு எதிரான வாக்களித்து தங்களது ஆதரவின்மையை வெளிப்படுத்தி இருந்தார்களே, அதை இவர் உணர்ந்திருக்கிறாரா?   07:14:48 IST
Rate this:
5 members
0 members
35 members
Share this Comment

மே
7
2018
பொது இன்றைய(மே-7) விலை பெட்ரோல் ரூ.77.43, டீசல் ரூ.69.56
என்ன ஆச்சரியம், தொடர்ந்து சில நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் ஏற்றமில்லையே   07:03:29 IST
Rate this:
4 members
0 members
1 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X