jeyakumar : கருத்துக்கள் ( 37 )
jeyakumar
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
7
2021
அரசியல் கேரளாவின் நரித்தனம் துணை போன தமிழகம் அண்ணாமலை
திரு அண்ணாமலை அவர்கள் ஒவ்வொரு பிரச்சனையிலும் மிகத்தெளிவாக ஆராய்ந்து அருமையாக விளக்கம் அளிக்கிறார். மற்ற அரசியல்வாதிகளைப்போல் ஏனோதானோ என்று பேசுவதில்லை. ஆனால் இன்னும் அடித்தள மக்கள் பலபேர் தமிழக பத்திரிகைகள், டிவி சானல்கள், பேப்பர் கடை வால் போஸ்டர்கள் கூறுவது அனைத்தும் உண்மை என்று நம்பிக்கொண்டிருக்கிறார்கள். நேர்மையும், புத்திசாலித்தனமும், கடுமையான உழைப்பும் கொண்ட திரு அண்ணாமலை அவர்கள் முயற்சியால் தமிழக மக்கள் உண்மையை விரைவில் உணர்வார்கள்.   14:43:08 IST
Rate this:
5 members
0 members
17 members

அக்டோபர்
7
2021
பொது விரைவில் 100 கோடி டோஸ் தடுப்பூசி பிரதமர் மோடி திட்டவட்டம்
மோடி ஜி அவர்களின் தேசபக்தியும் கடுமையான உழைப்பும் இந்தியாவை கொரோன தொற்றிலிருந்து மீட்டிருக்கிறது. தடுப்பூசிக்காக எந்த வெளிநாட்டிலும் கையேந்தாமல் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய வைத்து கிட்டத்தட்ட நூறு கோடி மக்களுக்கு குறைந்தது ஒரு டோஸாவது செலுத்தி சாதனை செய்திருக்கிறார். அவரை எதிர்த்து குரல் கொடுப்பவர்களை முற்றிலும் தவிர்த்து கடமையே கண்ணாக இருபது வருடங்களாக லீவு எடுக்காமல் நமது பாரத தேசத்திற்க்காக உழைத்து வரும் மோடி ஜி அவர்கள் பல்லாண்டு நல்ல உடல் நலத்துடன் தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். உலகத்தில் வேறு எந்த நாட்டிலும் எந்த தலைவனும் செய்ய முடியாத சாதனையை காரோண காலத்தில் செய்த நமது பிரதமரை குறை கூறுவது ஒன்றே நமது எதிர்க்கட்சிகளின் முக்கியமான கொள்கையாக இருக்கிறது.   10:06:07 IST
Rate this:
3 members
0 members
4 members

அக்டோபர்
1
2021
பொது பஸ் கண்டக்டர்களை கேவலப்படுத்திய துரைமுருகனுக்கு எதிர்ப்பு!
எந்த பஸ் கண்டக்டர் அவ்வாறு பெண்களிடம் பேசினார் என்று விசாரணை செய்து, தவறிருந்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை விடுத்து பொத்தம் பொதுவாக அனைத்து பஸ் கண்டக்டர்களின் மனம் புண்படும்படி பேசியதை மினிஸ்டர் தவிர்த்திருக்கலாம்   10:11:07 IST
Rate this:
1 members
0 members
3 members

செப்டம்பர்
25
2021
சிறப்பு கட்டுரைகள் தற்கொலைகளை ஊக்குவிக்காதீர்கள்!
மேடம் வாகைச்செல்வி அவர்களே, தங்களின் அருமையான மற்றும் விளக்கமான பதிவிற்கு மிக்க நன்றி. நீட் ஒரு உயிர்கொல்லி என்று சித்தரிப்பது முற்றிலும் அரசியல் காரணங்களுக்காக மட்டுமே. ஏன் நீட் மற்ற மாநிலங்களில் எந்த பிரச்சனையும் இன்றி நடைமுறைப் படுத்தப்படுகிறது? தமிழக அரசியல்வாதிகள் நடத்தும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் கோடி கோடி யாக அடித்த கொள்ளை குறைந்துவிட்டதே காரணம். இவர்கள் உண்மையிலே கிராமப்புற மாணவர்கள் நலத்திற்க்காக பாடுபடுபவர்களாக இருந்தால் நவோதய பள்ளிகளை அனுமதித்திருக்க வேண்டும். நீட் தேர்வில் வெற்றிபெறும் அனேகர் நவோதய பள்ளியில் படித்தவர்கள் என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. கிராமப்புற மற்றும் ஏழை மாணவர்களுக்காகவே மத்திய அரசால் நவோதய பள்ளிகள் திட்டம் கொண்டுவரப்பட்டது. ஏழை மாணவர்கள் அறிவுபூர்வமான நல்ல கல்வித்திட்டத்தை இலவசமாக கிடைக்க குறுக்கே நிற்பவர்கள் இந்த அரசியல்வாதிகள் தான். எல்ல மாநிலங்களிலும் நவோதயா பள்ளிகள் உண்டு. அங்கெல்லாம் அந்த அந்த மாநில மொழிகளை ஹிந்தி அளித்துவிடவில்லை. தமிழ்நாட்டில் மட்டும் எப்படி ஹிந்தி தமிழை அளித்துவிடமுடியும்? காலம் காலமாக ஆங்கிலம் தமிழ்நாட்டில் இருக்கிறதே, தமிழ் அழிந்துவிட்டதா? "நெஞ்சு பொறுக்குதில்லையே, இந்த நிலை கேட்ட மனிதரை நினைத்து விட்டால் " என்கின்ற வரிகள் தான் ஞாபகம் வருகிறது. தமிழ், மற்றும் திராவிடம் இந்த இரண்டு வார்த்தைகளை வைத்து விளையாடிக்கொண்டிருக்கும் அரசியல் வாதிகளை தமிழக வாக்காளர்கள் புரிந்துகொள்ளும் காலம் விரைவில் வரும் என்று நம்புவோம். வாழ்க பாரதம். வாழ்க தமிழகம்.   10:00:28 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
29
2021
பொது இது உங்கள் இடம் சினிமா போல சீரியல்களுக்கும் தணிக்கை வேண்டும்!
நன்றி பாமரன் அவர்களே. இன்டர்நெட் உலகம் முக்கியமாக இளைய தலைமுறையை பாதிக்கிறது. டிவி யில் காட்டப்படும் சீரியல்கள் ஏற்கனவே கூறியபடி குடும்ப பெண்களையும் வயதானவர்களையும் அதிகமாக பாதிக்கிறது. நண்பர் ஜனார்த்தனன் அவர்கள் ஒரு சேனல் கூட அறிவாற்றல் கூடுகிற மாதிரி இல்லை என்று கூறி உள்ளார். தயவு செய்து பொதிகை சேன்னலை பார்க்கவும். மிக மிக அருமையான நிகழ்ச்சிகளை காணலாம். ஆனால் நமது மக்கள் அதை பார்க்கமாட்டார்கள்.   13:53:15 IST
Rate this:
0 members
0 members
3 members

செப்டம்பர்
29
2021
பொது இது உங்கள் இடம் சினிமா போல சீரியல்களுக்கும் தணிக்கை வேண்டும்!
முற்றிலும் உண்மை. டிவி சீரியல் பார்ப்பவர்கள் முக்கால் வாசி பேர் குடும்ப பெண்களும் வயதானவர்களும் தான். சீரியல்களில் காட்டப்படும் கதைகளும் காட்சி அமைப்பும், பார்ப்பவர்களின் மனதில் நிச்சயம் மாற்றங்களை விளைவிக்கின்றன என்பதில் மாற்று கருத்து இல்லை. வருடக்கணக்காக சீரியல் பார்ப்பவர்கள் மனநிலை நிச்சயமாக பிரைன் வாஷ் செய்யப்பட அதிகம் வாய்ப்பு உள்ளது. வயதானவர்களுக்கு ஏற்கனவே மனக்குறையும் மனஅழுத்தமும் இருக்கும் பொது இந்த சீரியல்கள் அவர்களுடைய மனதில் விஷத்தை வித்திடுகின்றன. தங்கள் உறவுகள் சாதாரணமாக பேசுவதையும் விபரீதமாக எண்ணி, வயதான காலத்தில் உறவுகளின் பந்தத்தை முறித்துக்கொள்ள தயங்குவதில்லை. சீரியல்களில் காட்டப்படும் தீய யோசனைகளும் காட்சிகளும் தங்கள் வாழ்க்கையிலும் நடப்பதாகவே தவறாக நினைக்க வைக்கிறது. இவைகள் முக்கியமாக பெண்கள் சமுதாயத்தை தான் பாதிக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. சினிமாக்களுக்கு தணிக்கை இருப்பது போல் கடுமையான தணிக்கை முறைகள் சீரியல்களுக்கும் கொண்டு வரவேண்டும். முக்கியமாக மது அருந்தும் காட்சிகள் திரைப்படங்களிலும் சீரியல்களிலும் முற்றிலும் அகற்றப்பட வேண்டும்   10:02:38 IST
Rate this:
0 members
0 members
5 members

செப்டம்பர்
23
2021
ட் விட் செய்திகள் ராகுல் ட்வீட்ஸ்
திரு ராகுல் ஜி அவர்களே, மோடி ஜி அவர்கள் இந்திய மக்கள் அனைவரையும் நண்பர்களாக நினைத்து செயல் படுவதால் நீங்கள் சொல்வது உண்மை தான்   10:17:30 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
21
2021
கோர்ட் நீட் தேர்வால் பாதிப்பு என்ன? நீதிபதி ராஜன் அறிக்கை வெளியீடு!
அரசு மருத்துவ கல்லூரிகளில் மேனேஜ்மென்ட் சீட் கிடையாது. தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள மேனேஜ்மென்ட் சீட்டில் சேர்வதற்கும் நீட் பாஸ் செய்திருக்க வேண்டும். வெறும் +டூ பாஸ் செய்தால் மட்டும் போதாது. முன்பு +டூ பாஸ் செய்து பணம் இருந்தால் மேனேஜ்மென்ட் சீட் வாங்கிவிடலாம். இப்பொழுது முடியாது. மேலும் நீட் மார்க் ரேங்க் படியும் மாணவர்களின் முன்னுரிமைப்படியும் தான் தனியார் கல்லூரிகளில் சீட் கிடைக்கும். தனியார் கல்லூரிகள் கட்டணம் கூட அரசே முடிவு செய்யும். மாணவர்கள் நீட் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால் அதிக கட்டணம் வசூலித்தாலோ கேட்டாலோ அரசு நடவடிக்கை எடுக்க முடியும். ஆகவே நீட் தேர்வு அனைத்து மாணவர்களுக்கும் ஒரு வரப்பிரசாதம். மற்ற மாநிலங்களில் மாணவர்கள் ஏன் எதிர்ப்பதில்லை ? தமிழ்நாட்டு அரசியல் தான் முக்கிய கரணம்.   09:56:22 IST
Rate this:
0 members
0 members
5 members

செப்டம்பர்
19
2021
பொது ஏலத்தில் பங்கேற்க மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்
கொரோன காலத்தில் கங்கையில் பிணங்கள் மிதந்தன என்ற கட்டு கதையை நம்பும் நண்பர்களுக்கு மோடி ஜி யின் அருமை எவ்வாறு புரியும்? நினைவிருக்கிறதா நண்பர்களே, சில வருடங்களுக்கு முன்பு, ஒருவர், ஒரு மிக உயர்ந்த பதவியில் இருந்து தனது பணியை விட்டு செல்லும் பொது எவ்வளவு வெகுமதி பொருட்களை தனது வீட்டிற்கு அள்ளிச்சென்றார் என்று. ஒரு தன்னலமற்ற தேச பக்தி மிக்க தலைவன் தனக்கு கிடைத்த வெகுமதிகளை நாட்டிற்கு அர்பணிக்கின்றார் என்றால் அவரை பாராட்ட வேண்டாம், குறைந்தபட்சம் குறை கூறாமல் இருக்கலாமே. திருவிளையாடல் படத்தில் நாகேஷ் கூறும் ''குற்றம் கண்டு பிடித்தே பெயர் வாங்கும் புலவர்கள்'' என்கின்ற வரி தான் நினைவுக்கு வருகிறது. இத்தகைய நண்பர்கள் கூறுவதை இந்த காதில் வாங்கி அந்த காதில் விட்டுவிட வேண்டும். வாழ்க பாரதம், ஜெய்ஹிந்த்   10:44:43 IST
Rate this:
4 members
0 members
9 members

செப்டம்பர்
19
2021
பொது ஏலத்தில் பங்கேற்க மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்
மோடி ஜி அவர்களை குறை கூறுவது ஒன்றே எங்கள் வேலை, வேறொன்றும் அறியேன் பராபரமே என்று இருப்பவர்கள், மொழிவதை இந்த காதில் வாங்கி அந்த காதில் விட்டு விடவேண்டும். நினைவிருக்கிறதா நண்பர்களே, ஒரு ராஷ்ட்ரபதி பணியை விட்டு செல்லும்போது எவ்வளவு வெகுமதிகளை வீட்டிற்கு எடுத்துச்சென்றார்கள். ஒரு சுயநலமற்ற தேசபக்தியுள்ள தலைவன் தனக்கு கிடைத்த வெகுமதிகளை வீட்டிற்கு அள்ளிச் செல்லவில்லை, நாட்டிற்காக அர்பணிக்கிறார் என்பதை உணருங்கள். கொரோன காலத்தில் கங்கையில் பிணங்கள் மிதந்தன என்ற கட்டுக்கதையை நம்புபவர்கள் மோடிஜி அவர்களை பாராட்ட எப்படி மனம் வரும். திருவிளையாடல் படத்தில் நாகேஷ் கூறும் ' குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்கும் புலவர்கள்' தான் நினைவுக்கு வருகிறது. வாழ்க பாரதம், ஜெய்ஹிந்த்   09:56:37 IST
Rate this:
3 members
1 members
5 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X