Dr.R.Raveenthiranaath Nehru Ph.D. : கருத்துக்கள் ( 24 )
Dr.R.Raveenthiranaath Nehru Ph.D.
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
17
2021
Rate this:
2 members
0 members
1 members

டிசம்பர்
27
2020
உலகம் ‛காலநிலை மாற்றத்தை கவனிக்க தவறினால் அழிவு நிச்சயம்
காலநிலை மாற்றத்தை கவனிக்க யாருக்கும் அக்கறை இல்லை. தொழில் மயமாக்கலின் விளைவு பற்றி சிந்தித்து செயல்பட வேண்டிய நேரமிது . புவியின் வெப்பம் அதிகரிக்கின்றது என்று அறிவியல் ஆய்வாளர்கள் சொன்ன பிறகும் அதனை அலட்சியமாக நினைக்கும் ஆட்சியாளர்கள், தங்களின் எதிர்கால சந்ததிகள் எப்படி புவி வெப்ப மயமாதலால் பாதிக்க பட போகின்றனர் என்று எண்ணி பார்க்க வேண்டும். இயற்கை பேரிடர்கள் ஏற்படுவது நாளுக்கு நாள் அதிகரிப்பது புவிக்கும் அதில் வாழும் ஜீவ ராசிகள் அனைத்திற்கும் நல்லதல்ல . அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து புவி வெப்ப மயமாக்கலை தடுத்து நிறுத்த வேண்டும். இயற்கை அன்னை பொறுமை இழந்தால் அது மனித குலத்தின் அழிவில் தான் முடியும் .   18:23:04 IST
Rate this:
0 members
0 members
4 members

நவம்பர்
19
2020
நலம் மன அழுத்தத்திற்கும், குழந்தையின்மைக்கும் தொடர்பு உள்ளதா?
எதிர்கால சந்ததியினர் உருவாக இன்றைய தம்பதியினர் மன அழுத்தம் இல்லாமல் வாழ வேண்டியதன் அவசியத்தை அருமையாக பதிவு செய்து உள்ளார். பணத்தை மையப்படுத்திய வாழ்க்கையை நோக்கிய பயணத்தில் மன அழுத்தம் தாம்பத்தியத்தை பாதிக்கின்றது என்பதில் இரு வேறு கருத்துக்கள் இருக்காது . இரவு நேர பணி செய்யும் போது ஏற்படும் சமநிலையற்ற தன்மை மன நிலையை பாதிப்பது நிறைய பேருக்கு தெரியாது . மருத்துவ சகோதரியின் கட்டுரை, தம்பதியினர் தெரிந்து கொள்ள வேண்டிய நிறைய கருத்துக்களை உள்ளடக்கியது . வாழ்த்துக்கள்.   07:54:28 IST
Rate this:
0 members
0 members
2 members

செப்டம்பர்
16
2020
சிறப்பு பகுதிகள் நீட் தேர்வு மாணவர்கள் தற்கொலை நியாயமானதா?
மருத்துவத்தை மக்களுக்கு சேவை செய்யும் பணியாக நினைத்து , அர்ப்பணிப்பு , முழு முயற்சி கொண்டு அயராது படித்தால் மட்டுமே மருத்துவராக முடியும் என்பதை மிக அழகாக தெளிவாக எடுத்து சொல்லி அனைவருக்கும் பயனுள்ள கட்டுரை எழுதி உள்ள மருத்துவ சகோதரிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் . மருத்துவராக நினைக்கும் அனைத்து மாணவரும் , தனது பிள்ளைகள் மருத்துவராக்க நினைக்கும் பெற்றோரும் படித்து பத்திரப்படுத்த வேண்டிய கட்டுரை . ஒவ்வொரு பள்ளியிலும் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும், மருத்துவராக கனவு காணும் மாணவர்கள் அனைவருக்கும் இந்த கட்டுரையை பிரதி எடுத்து கொடுப்பது நலம் பயக்கும் . மருத்துவமனை வரும் அனைத்து நோயாளிகளையும் பரிசோதித்து மருந்து கொடுக்கும் மருத்துவர்களுக்கும், நோயாளிகள் மூலம் நோய் பரவும் அபாயம் இருப்பதையும் மிக கவனமாக கையாண்டு மருத்துவ பணி ஆற்றும் மருத்துவர்கள் சில சமயங்களில் நோய் தொற்றினால் பாதிக்க படுவதும் உண்டு . மொத்தத்தில் மக்களின் நோய் நீக்கும் கடவுளாக- மருத்துவராக வேண்டும் என்றால் ,சேவை மனப்பான்மையும் , அர்ப்பணிப்பு உணர்வும் , படித்ததை மிக கவனமாக பக்க விளைவுகள் இல்லாமல் நோயாளிக்கு மருத்துவம் பார்க்கும் உறுதியும் நம்பிக்கையும் வேண்டும் . மனதளவில் ஒருவர் தைரியமாக இருக்கிறார் என்றால் அவர் எந்த துறையிலும் துருவ நட்சத்திரமாக பிரகாசிப்பார் . மன தைரியத்தை மாணவர்களுக்கு கொடுக்க வேண்டியது ஆசிரியர்களே . எதையும் தாங்கும் இதயம் அனைவருக்கும் அவசியம் . ஒவ்வொரு தேர்வும் முடிவல்ல . தேர்வில் வெற்றி பெற வழி காட்டி மாணவ சமுதாயத்தை முன்னேற்ற வேண்டியது அனைவரின் கடமை என்று மருத்துவ சகோதரி வலியுறுத்தி அவர்களுக்கான மன தைரியத்தைக் கொடுக்க வேண்டியது ,பெற்றோரின் கடமை, ஆசிரியருடைய கடமை, இந்த அரசினுடைய கடமை ,நம் சமுதாயத்தினுடைய கடமை.என கூறி உள்ளது முத்தாய்ப்பானது . அருமையான கட்டுரையை சிந்தித்து அற்புதமாக எழுதிய சகோதரிக்கு நல்வாழ்த்துக்கள் .   11:27:35 IST
Rate this:
0 members
0 members
3 members

ஆகஸ்ட்
20
2020
சிறப்பு பகுதிகள் கொரோனா காலத்தில் குழந்தை பெற்றுக் கொள்ளலாமா?
எதிர்கால சமுதாயம் பற்றிய சிந்தனையில் தோன்றிய அருமையான கட்டுரை. மண்ணில் மனித இனம் நிலைத்திருக்க வேண்டும் என்றால் சந்ததியினர் உருவாக வேண்டும் .சந்ததியினர் தோன்ற இந்த கால கட்டம் உகந்ததா இல்லையா என்பதை போக்கும் கட்டுரை. எனக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை எனது சந்ததிக்கு எதுவும் கஷ்டம் நேர்ந்து விடக்கூடாது என்பது அனைவரின் மனதினுள் உள்ள எண்ணம். பிரசவ காலத்தில் கொரோனா வைரஸ் குழந்தையை அணுகியதாக உள்ள தரவுகள் மிகக்குறைவு.என்ற கருத்தை எடுத்துரைத்து தாய்மார்களின் சந்தேகம் நீக்கியது இன்றைய அவசிய தேவை . மருத்துவ சகோதரிக்கு வாழ்த்துக்கள் .   15:57:45 IST
Rate this:
0 members
0 members
3 members

ஆகஸ்ட்
14
2020
சிறப்பு பகுதிகள் கொரோனா கவலையின்றி ‛சுதந்திரமாக வாழலாம் வாருங்கள்
சஸ்பென்ஸ் திரில்லர் போல இருந்த நிலை கொஞ்சம் கொஞ்சமாய் ரணமாகிக் கிடக்கும் தமிழக மண்ணிற்கும் மக்களுக்கும் உள்ளபடியே இதமாய் மருந்து கொடுத்து மன பயத்தை நீக்க உங்களை போன்ற தமிழில் அற்புதமாக கட்டுரை எழுதும் மருத்துவர்களால் மட்டும் தான் முடியும். பாமரனும் புரிந்து கொள்ளும் வண்ணம் எளிய அழகு தமிழில் கருத்துச் செறிவுடன் இயல்பாய் மருத்துவ சகோதரி எழுதி இருப்பது பாராட்டுக்குரியது. நம்முடைய இருமல் எதில் சேர்த்தி?,மஞ்சள் துாளை விட மிளகு துாள் அதிகம் சேர்க்கலாமா?இரவு சாப்பிடும் தோசைக்கும் பேசாமல் ரசத்தையே தொட்டுக் கொள்ளலாமா?வலது பக்க நாசி வழியாக காற்றை வெளிவிடும்போது சிரமமாக இருக்கிறதே மூச்சு திணறல் ஆரம்பமாகிவிட்டதா? உட்கார்ந்து எழுந்தால் கால் வழிக்கிறதே? கம்ப்யூட்டரையே உற்றுப்பார்த்தால் கண் பார்வை மங்குதே? இரவு இரண்டு மணியானாலும் துாக்கம் வரமாட்டேங்குதே? என்று ஏகப்பட்ட உடல் மன ரீதியிலான பிரச்னைகளுக்கும் கொரோனாவிற்கு முடிச்சுப் போட்டுக் கொண்டு பயந்து பயந்து வாழ்ந்தது போதும் .இந்த கருத்துக்கள் யதார்த்தத்தினை பிரதிபலிக்கின்றன. மனிதர்களின் மனம் எதையும் சாதிக்க வல்லது. மனதை தைரியமாக வைத்துக்கொள்ள நேர்மறை சிந்தனையுடன் எழுதி இருப்பது நிறைய மக்களுக்கு உதவியாய் இருக்கும். இதுதான் வாழ்க்கை என்று இருப்பதை வைத்து திருப்தியுடனும்,நம்பிக்கையுடனும் தைரியத்துடன் சுதந்திரத்துடனும் இருங்கள் காரணம் அதுதான் உங்கள் குடும்பத்தின் மகிழ்ச்சிக்கும் மன நிம்மதிக்கும் அடிப்படையாகும். மறுக்க முடியாத தங்க வார்த்தைகள். அருமை. ஒரு மருத்துவராய் மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் சகோதரிக்கு வாழ்த்துக்கள். துவண்டு இருக்கும் சமுதாயம் துடிப்புடன் மீண்டு எழ சகோதரியின் பங்கு அளப்பரியது .   14:33:28 IST
Rate this:
0 members
0 members
13 members

ஜூலை
27
2020
பொது எல்லாருக்கும் எஸ்.எம்.எஸ்., வேண்டும்!
கொரோனாவிலிருந்து மீண்டு வந்ததும் அனைவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டியவை பற்றிய சகோதரியின் கட்டுரை அருமை . கைகொடுத்து, கட்டி அணைத்து, கண்ணீர் பெருக்கி, அன்பை பெருக்கிக்கொள்ளும் பழைய நடை முறைக்கு, இன்னும் பல மாதங்கள் தடை போடுங்கள். இலக்கிய நயத்துடன் எழுதும் மருத்துவ சகோதரிக்கு வாழ்த்துக்கள் . மருத்துவராக தனது கடமையை தவறாது செய்து மக்களுக்கு தன்னால் முடிந்த மருத்துவ சிகிச்சை அளித்தது பாராட்டுதலுக்கு உரியது . நிறைய மருத்துவர்கள் தங்களின் மருத்துவ மனைகளை திறக்க மிக யோசித்த நேரத்தில் தனது மருத்துவ மனையில் தொடர்ந்து சிகிச்சை அளித்தது போற்றுதலுக்கு உரியது . இயற்கை பாரம்பரிய உணவுக்கு அனைவரும் மாற வேண்டிய தருணம் இது என்பதையும் அழகாக வலியுறுத்தி உள்ளார் . நம் உணவே நமக்கு மருந்தாகும் . எஸ்.எம்.எஸ் முத்தாய்ப்பான சிந்தனை .   10:29:34 IST
Rate this:
1 members
0 members
8 members

ஜூலை
25
2020
உலகம் ‛ஹெர்ட் இம்யூனிட்டி மனிதர்களுக்கு உருவாக நீண்டகாலமாகும் உலக சுகாதார நிறுவனம்
ஒரு முறை கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்தவர்களுக்கு நோய் தடுப்பாற்றல் நிலைத்து இருப்பதில்லை . தமிழ்நாட்டை சேர்ந்த செவிலியர் தங்கம் என்பவர் ஒரு முறை கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்த பின் மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். எனவே தடுப்பூசி கண்டு பிடிப்பது மிகவும் சவாலான விஷயம் தான். மந்தைத் தடுப்பாற்றலை மனிதர்கள் இயற்கையாகப் பெற மிக அதிகமான உயிர்களை இழக்க நேரிடும். சவாலான இந்த தருணத்தில் முக கவசம், தனி மனித இடை வெளி , மற்றும் இயற்கையாக நோய்தடுப்பாற்றல் பெற சித்த வைத்திய முறையில் சொல்ல படும் கஷாயத்தை தவறாமல் பின் பற்ற வேண்டும். கொரோனா காலத்தில் உயிரோடு நிலைத்திருப்பதே மிக பெரிய சவால் தான். எனவே நாட்டின் பொருளாதாரம் பற்றிய கவலையை விட்டு எப்படியாவது உயிர் வாழ பார்ப்போம். தினசரி வருமானம் பெற்று வாழ்க்கையை கடந்துவந்த தனி மனிதர்களின் பொருளாதார நிலை தான் கண்களில் கண்ணீரை வர வைக்கின்றது. பொருள் நிறைந்தோர் பொருள் தேவை படுவோருக்கு முழு மனதுடன் கொடுத்து உதவி வாழ்வோம் .   09:29:41 IST
Rate this:
0 members
0 members
21 members

ஜூலை
14
2020
பொது கொரோனா பணியில் ஈடுபட்டிருந்த துணை ஆட்சியர் மரணம்
ஆழ்ந்த இரங்கல் . அறிகுறி தெரிந்தவுடன் சுய தனிமை படுத்தாமல் நல்ல மருத்துவமனையில் மருத்துவம் ( பிளாஸ்மா சிகிச்சை ) பார்த்து இருந்தால் ஒருவேளை உயிரிழப்பை தவிர்த்து இருக்கலாம் . மக்களுக்கு சேவை செய்யும் நல்ல இதயம் கொண்ட துணை ஆட்சியர் மறைந்தது சமுதாயத்திற்கு மிக பெரிய இழப்பு . அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன் . அவரின் பிரிவால் வாடும் அவரின் கணவருக்கும் சின்னஞ்சிறு குழந்தைக்கும் இறைவன் தான் பிரிவை தாங்கும் சக்தியை தர வேண்டும் .   19:24:32 IST
Rate this:
2 members
0 members
21 members

ஜூன்
29
2020
சிறப்பு பகுதிகள் தனிமையை நினைத்து கலங்கிவிடாதே
அருமையான கட்டுரை . மக்களின் நலன் பற்றி சிந்தித்து எழுதப்பட்ட படைப்பு . மருத்துவ உலகில் மிக சிலரே தமிழ் கட்டுரைகள் சிறப்பாக எழுதும் வல்லமை படைத்தவர்கள் . அந்த ஒரு சிலரில் இந்த கட்டுரை எழுதிய சகோதரியும் ஒருவர் . அனைவரும் படித்து பாதுகாத்து பிறறையும் படிக்க, பாதுகாக்க சொல்ல வேண்டிய கட்டுரை . அரசாங்கமே இதனை மக்களிடம் கொண்டு சேர்க்கலாம் . சமுதாயத்துக்கு நலம் பயக்கும் .   09:42:14 IST
Rate this:
0 members
0 members
15 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X