ஓட்டுப்போடும் முன் யோசித்து வாக்களியுங்கள்
ஒரு வேட்பாளர் வெற்றி பெற்று வார்டு உறுப்பினர் ஆனால் என்ன பணிகளெல்லாம் அவரால் செய்யமுடியும்?
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் பணிகள்:
🎯 பொது சுகாதாரம் - துப்புரவு, கழிவுநீர் அகற்றல், கழிப்பறை வசதி, திடக்கழிவு மேலாண்மை 🙏
🎯மக்கள் உடல்நலம் மற்றும் நோய்த்தடுப்பு
🎯குடிநீர் வழங்கல்
🎯தெரு விளக்கு வசதி மற்றும் கல்வி மேம்பாடு
🎯கட்டிடங்கள் மற்றும் கட்டுவதை ஒழுங்குசெய்தல்
🎯தொழிற்சாலைகள் மற்றும் தொழில்கள் ஏற்படுத்துவதை உரிமம் வழங்கி முறைப்படுத்துதல்
🎯பிறப்பு/இறப்பு பதிவு
🎯மயானங்களை ஏற்படுத்தி பராமரித்தல்.
🎯சாலை வசதிகள் ஏற்படுத்துதல் மற்றும் பராமரித்தல்
🎯பூங்காக்கள் மற்றும் கட்டிடங்கள் பராமரிப்பு
🎯 மாநில, மத்திய அரசுகளின் திட்டங்களை செயல்படுத்துதல்
🎯இன்னும் பல..
இதற்கான வருவாய் ஆதாரங்கள்:
🏷️சொத்து வரி
🏷️தொழில் வரி
🏷️கேளிக்கை வரி
🏷️விளம்பர வரி
🏷️பயனீட்டாளர் கட்டணம்
🏷️நிறுவனத்தின் மீதான வரி
🏷️நுழைவு வரி
🏷️வணிக வளாகங்கள் வாடகை
🏷️பூங்காங்கள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களின் வருவாய்
🏷️அரசு மானியம்
🏷️மாநில நிதி பகிர்வு
🏷️ மத்திய அரசின் திட்டங்கள் மூலமான நிதி
மேலே குறிப்பிடப்பட்ட அனைத்தும், வார்டு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட எல்லோருக்கும் பொருந்தும், அவர் ஆளும் கட்சியா இல்லை எதிர் கட்சியா என்ற கேள்விக்கு இடம் இல்லை.
உண்மையான மக்கள் நலம் விரும்பும் ஒர் வார்டு கவுன்சிலர், தனது வார்டுக்கு மட்டுமன்றி, ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் பாதுகாப்பிற்கும் பணியாற்ற முடியும்
வார்டு உறுப்பினர், நிர்வாகத்தோடு இணைந்து🌹அவர்களது சுய விருப்பு வெறுப்புகளை களைந்து ஊரின் வளர்ச்சிக்கு கிராம வளர்ச்சிக்கும், வார்டு மக்களின் நலனுக்கும் துணை நிற்பதே உண்மையான மக்களின் சேவகர்.
ஆளும் கட்சி வேட்பாளரும், சுயட்சை வேட்பாளரும் வார்டு மக்களால் நேரடியாக வாக்களித்து தான் தேர்வு செய்யப்படுகிறார்.
தேர்வு செய்யப்பட்ட வார்டு உறுப்பினர், தலைவரால் பதவிப்பிரமாணம் செய்யப்பட்டு பதவி ஏற்கிறார். அது முதல் அவர்களது பணி தொடங்குகிறது. வேறெந்த வேற்றுமையும் அவர்களுக்கிடையே இல்லை
⁉️உங்கள் தெருவில் நிற்கும் வேட்பாளர் களபணி செய்பவரா?🙏🙏🙏
⁉️நீங்கள் நினைத்த நேரத்தில் அவரை அனுகமுடியுமா?🙏🙏🙏
⁉️பெரியண்ணன் மனப்பான்மை இல்லாதா, சகோதர குணம் உடையவரா?
⁉️கறைபடியாத கரங்களுக்கு சொந்தகாரா?
⁉️உங்கள் பகுதி கோரிக்கைக்களை மன்றத்தில் உரக்க சொல்லக் கூடிய தகுதி உடையவரா?
என பார்த்து வாக்களிக்களித்தால் மட்டுமே நம் தேவைகள் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு நிறைவேறும்
12-பிப்-2022 15:45:46 IST
கஞ்சா வியாபாரத்தைவிட , ஜாதி கட்சி நடத்துவது , கட்சி நடத்துவது நல்ல லாபம் . பெட்டி வாங்கி , ஆளும் கட்சி எதிர் கட்சி என்று கூட்டணி வைத்து முன்னேறலாம் . கிராமம்தோறும் கிராம அளவில் இயக்கம் கட்சி ஆரம்பித்து டீல் பேசினால் நல்ல விளமப்ரம் கிடைக்கும் ,கெஜ்ரிவால் மாதிரி CM ஆகலாம் , பாபா ராம் தேவ் மாதிரி உலக பணக்காரர் ஆகிடலாம் .
07-ஜன-2022 17:28:49 IST
சமூக இடைவெளி , முகக்கவசம் , தனிநபர் சுத்தம் , சமூக சுத்தம், தடுப்பூசி இருந்தால் கொரோனா அணுகாது . இதை மூடர் கூட்டம் பின்பற்றாமல் இருப்பதால் மாநிலம் மூடி கிடைக்கவேண்டிய அவலம் .
05-ஜன-2022 18:58:54 IST
ஊரெல்லாம் அடங்கிகெடக்கும்போது மோடியும் அமித் கும்பலும் ஆதாணி அம்பானி டாட்டா கும்பலுடன் ஒரு துன்னடை கொண்டு வரச்செய்து அதுக்கு கீளுக்கு கையைப்போட்டு, நேரு இந்திரா ராஜிவ் மன்மோகன் சேர்த்துவைத்த நாட்டை தரகு பேசி கமிஷன் வைத்து விற்பார்கள். ஊரடங்கினாலும் இந்த கோர கொடியோர் அடங்குவதில்லை. ஜனநாயகத்துக்கு எதிராக முதலாளித்துவ தீவிரவாதம் இந்தியாவில்.
04-ஜன-2022 15:02:19 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.