subhashini : கருத்துக்கள் ( 835 )
subhashini
Advertisement
Advertisement
மார்ச்
8
2017
சம்பவம் வெளிநாட்டு வேலை கிடைத்தும் சேர முடியலை அண்ணா பல்கலை மாணவர்கள் தவிப்பு
வெளிநாட்டு வேலையில் மட்டுமல்ல ..வெளிநாட்டில் உயர் கல்வியில் பெறுவதிலும் பல நேரங்களில் இந்த தாமதத்தால் சிக்கல்கள் நேருகின்றன . அண்ணாவில் மட்டுமல்ல நிகர் நிலை பல்கலைக்கழங்களிலும் இந்த பிரச்சினை உள்ளதாக தெரிகிறது இது முக்கியமான பிரச்சினை உடனடியாக கவனிக்கபட வேண்டும்.   20:13:32 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மார்ச்
9
2017
அரசியல் முதல்வர் மகனின் சொந்து மதிப்பு 5 மாதங்களில் 23 மடங்கு அதிகரிப்பு
மிகவும் வளர்ந்துள்ளது போல் தெரிகிறது வருமானத்திற்கு அதிகமான சொத்து என்று ஆந்திராவில் இவர்களை பற்றி முழு விவரம் தெரிந்த யாரேனும் கேஸ் போட்டால் தான் இப்போது இல்லை என்றாலும் பல வருடங்களுக்கு பின்பாவது உண்மை என்ன பொய் என்ன என்று தெரிய வரும் .   20:09:41 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மார்ச்
1
2017
உலகம் குடியேற்றம் டிரம்ப் கொள்கையில் மாற்றம்
@shanmuga .இன்றைய தேதியில் .இந்தியாவில் சரியான வாய்ப்புக்கள் இல்லை ஒரேடியாக என்று கூற முடியாது . ...ஜப்பான் ஐ பற்றி நீங்கள் சொன்னது ஒன்று முற்றிலும் சரி..அவர்கள் சுய உழைப்பில் முன்னேறியவர்கள் ஆனால் இந்தியர்கள் பெரும்பாலும் அமெரிக்கா செல்வதற்கே விரும்புகின்றனர் . அதற்கு காரணம் பல உண்டு . .நீங்கள் சொல்வது போல் கூகிள் போன்றவை இந்தியாவில் அமைக்க இயலாததற்கு ஒரு முக்கிய காரணம் தேவையான கட்டமைப்பு வசதிகள் மற்றும் மிக திறமையான வேலையாட்கள் நிர்வாகிகள் இல்லாததும் கூட கட்டமைப்பு வசதிகள் இப்போது நன்கு மேம்பட்டு வருகின்றன..ஆனால் சுந்தர் பிச்சை போன்ற ஆட்கள் எங்கே???அவர்கள் இங்கே டிகிரி படித்து விட்டு அமெரிக்கா சென்று மேல் படிப்பு படித்து விட்டு அங்கேயே குடும்பத்துடன் தங்கி விடுகின்றனர்..அதாவது திறமை வாய்ந்தவர்கள் பலர் அமெரிக்கா சென்று விடுகின்றனர்.. .திரும்புவதே இல்லை ..இருபது -இருபத்திஐந்து வருடங்களுக்கு முன் படித்த பலர் அமெரிக்காவிற்கு சென்றனர்..அவர்களில் ஒருவர் ஈ மெயில் கண்டுபிடித்தவர்..ஆனால் அவர் இந்தியாவில் மரியாதை இல்லை வாய்ப்பில்லை என்ற ஒரே காரணத்தால் செல்ல வில்லை..சவாலான வேலை(challenging job ) வேண்டும் என்ற எதிர்பார்ப்பு /..நிறைய சம்பாதிக்க வேண்டும் அங்கு தங்கள் துறைகளில் ஆய்வு செய்ய வசதிகள்/ உபகார சம்பளம்/ வாழ்க்கை தரம்/வேலை சூழல் போன்ற பல பல காரணங்கள் அதற்குள் உண்டு..மேலும் இந்தியாவில் மக்கள் தொகை மிக அதிகம் ..அங்கு குறைவு ...எனவே இவர்கள் நன்கு சோபிக்கலாம் என்ற எண்ணமும் கூட ஒரு காரணம் . ..இந்தியாவில் என்ன தான் வாய்ப்புக்கள் இருந்தாலும் அமெரிக்கா வேலையை தன் கனவாக எடுத்து கொண்டவர்கள் டாலர் இல் சம்பாதிக்க விரும்புகிறவர்கள் அமெரிக்கா விற்கு தான் போவார்கள் ..ஆனால் இந்த அமெரிக்கா மோக நிலை தற்போது குறைந்து வருவது மிக பெரிய ஆறுதல் ..இப்போது நன்கு படித்தவர்களும் நல்ல சம்பளம் சவாலான வேலை போன்றவை இருந்தால் இந்தியாவில் இருக்க விரும்புகின்றனர் என செய்திகள் வந்துள்ளன .எனவே இந்திய அரசாங்கம் மேலும் இதை ஊக்க படுத்தினால் இந்த வெளி நாட்டு மோகம் கட்டாயம் குறையும் .   21:54:03 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

மார்ச்
1
2017
உலகம் குடியேற்றம் டிரம்ப் கொள்கையில் மாற்றம்
அமெரிக்காவிற்கு மேல் படிக்க செல்ல விரும்பும் இந்திய இளைஞரகளுக்கு இது யோசிக்க வேண்டிய தருணம் i அமெரிக்காவில் உயர் கல்வி கட்டணம் இந்திய மதிப்பில் மிகவும் அதிகம் ...இவ்வளவு நாட்கள் இங்கிருந்து பலர் குறிப்பாக professional course படித்த இளைஞர்கள் எப்படியும் அங்கு சென்று எம் எஸ் முடித்து விட்டால் அங்கு வேலை கிடைத்து விடும் //தொடர்ந்து எச் ஒன் பி விசா வாங்கி விடலாம் .வேலை பார்த்து .நன்கு சம்பாதித்து விடலாம் செட்டில் ஆகி விடலாம் என்று எண்ணி கல்வி கடன் பெற்று வந்தனர்.நடுத்தர வர்க்க .பெற்றோர்களும் அடமானமாகவோ அலலது உறுதி கையெழுத்தோ போட்டு கல்வி கடன் வாங்க சம்மதித்தனர்..சிலர் சேமித்து வைத்திருந்த சொந்த பணம் கூட நிறைய செலவழித்தனர்..எல்லாம் எப்படியும் iஇதெல்லாம் வசூலாகி விடும் என்ற எண்ணத்தில் தான் ஆனால் இப்போது தினம் ஒரு செய்தி வருகிறது ..ஒரு நாள் விசா கெடுபிடிகள் அதிகம் என்று செய்தி வருகிறது..சில நாட்கள் கழித்து இல்லை என்று இன்னொரு செய்தி வருகிறது.ஒரு வாரம் முன்பு கன்சாஸில் ஒரு துப்பாக்கி சூட்டில் ஒரு இளம் இந்திய மென்பொறியாளர் ஒருவர் பலியாகி விட்டார் .ஆக மொத்தம் குழப்பமான நிலை தான் உள்ளது ..இந்த சூழ்நிலையில் ட்ரம்ப் சொல்கிறார் திறமைக்கு மதிப்பு உண்டு என்று மட்டுமே நம்பி இளைஞர்கள் இங்கு அதிக அளவில் கடன் தொகை பெற்று (வட்டி விகிதம் கூட சற்று அதிகம் தான்) /சொந்த காசை செலவழித்து /அல்லது ஏற்கனவே இங்கிருக்கும் வேலையை உதறி விட்டு செல்வதற்கு முன் நன்கு யோசித்து செயல் பட வேண்டும்.பெற்றோர்களும் இது பற்றி நன்கு சிந்தித்து செயல் பட வேண்டும் .   21:28:31 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

பிப்ரவரி
26
2017
பொது அச்சுறுத்தும் அமெரிக்க கனவுஅதிர்ச்சியில் பெற்றோர்
இதனால் எல்லாம் யாரும் பின் வாங்கி விடமாட்டார்கள் .. இவ்வளவு ஏன் இறந்தவர் மனைவி கூட நிரந்தரமாக இந்தியா வருவாரா என்பது சந்தேகமே .காலம் அவர் மன காயத்தையும் ஆற்றும் வல்லமை படைத்தது. அவ்வப்போது நடக்கும் மேலும் ஒன்றிரண்டு நிகழ்வுகளால் பெரிய பயமோ மன பாதிப்போ தாக்கமோ வந்து விடாது. இந்த மாதிரி போக மாட்டோம் வந்து விடுவோம் பேச்சுக்கள் ஒரு உணர்ச்சி வேகத்தில் வருபவை. நிரந்தரமானவை அல்ல. திரு.டொனால்டு டிரம்ப் அமெரிக்காவில் இருந்து துரத்தினாலும் எப்படியாவது சந்து பொந்து மூலமாக அங்கு தங்கி விட முடியாதா என்று தான் முயற்சிப்பார்கள் இடியே விழுந்தாலும் பிரளயமே நேர்ந்தாலும் அமெரிக்கா மேல் (அல்லது அமெரிக்க டாலர்கள் மேல்) அளவு கடந்த மோகம் கொண்டுள்ளவர்கள் போய் கொண்டு தான் இருப்பார்கள் .. காரணம் சொல்வது என்னவோ அங்கு வேலை சூழ்நிலை நன்றாக இருக்கிறது உயர் கல்வி நன்றாக இருக்கிறது வாழ்க்கை தரம் நன்றாக இருக்கிறது என்று சொல்வார்கள். உண்மையில் டாலர் ரேட் இந்திய மதிப்பில் அதிகம் என்பது தான் முக்கிய காரணம். விரைவில் இந்தியாவில் அமெரிக்க தூதரக வாசலில் பெரிய கூட்டம் விசா கேட்டு நிற்பதாக செய்திகள் வரத்தான் போகிறது. இதெல்லாம் ஒரு சில மக்கள் மனதில் ஆழமாக பதிந்து விட்டவை... மாற்றுவது அவ்வளவு சுலபம் அல்ல .   15:16:46 IST
Rate this:
2 members
0 members
33 members
Share this Comment

பிப்ரவரி
26
2017
அரசியல் சுய நலத்திற்காக கண்டனக்கணை பன்னீர் மீது ஸ்டாலின் தாக்கு
புத்தகங்கள் தொண்ணூறு சதவிகிதம் கலைஞர் எழுதியவைதான் வரும் ..ஏற்கனவே அவை தான் கலைஞர் குடும்பத்தார் வீட்டில் நிறைய இருக்கே . எனவே வருபவை எல்லாம் விரைவில் லைப்ரரிக்கு அனுப்பப்படும் .. இந்த அவசர யுகத்தில் அவற்றை யாரேனும் பார்ப்பார்களா ?படிப்பார்களா ?என்று தெரியாது   15:04:21 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
25
2017
அரசியல் ஜெ., படத்தை அகற்ற வேண்டும்தலைமை செயலரிடம் ஸ்டாலின் மனு
நீங்கள் சொல்வது சரி.இதுக்கெல்லாம் முதன்மை தரவேண்டிய அவசியம் இல்லை...சக்தி தான் வீண்.காலத்தில் எல்லாம் கரைந்து போகும் ..கர்ம வீரர் காமராஜர் படம் எங்காவது மதிய உணவு திட்டம் உள்ள பள்ளியில் உணவு கூடத்தில் பெருமளவில் இருக்கிறதா? ஒன்று இரண்டு பள்ளிகளில் தப்பி தவறி இருக்கலாம். அப்பேர்பட்ட நேர்மையாளர்கள் படமே கால வெள்ளத்தில் காணாமல் போகும்போது ஊழல் குற்றவாளிகள் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கப்பட்டவர்கள் படம் சில நூறு ஆண்டுகளுக்கு பிறகு என்னவாகுமோ ?   22:29:14 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
26
2017
அரசியல் ஆத்திரத்தில் புலம்புகிறார் ஸ்டாலின் பன்னீர்செல்வம் பாய்ச்சல்
நீங்கள் சொன்னது சரி இன்னும் சொல்ல போனால் அம்மாவை வைத்து தான் சசி தரப்பு / ஓபிஎஸ் /தீபா மூவரும் எதிர்காலத்தில் அரசியல் செய்தாக வேண்டும்.. எம்ஜியார் ஐ பொறுத்தவை அவர் இமேஜ் ஓரளவுக்கு மிக நல்ல இமேஜ் ஆகவே எப்பவும் உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே . ஆனால் ஜெ இமேஜ் சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பின் பின் மிகவும் சரிந்துள்ளது என்று ஜெ பிறந்தநாள் பற்றி செய்தி வெளியிட்ட மீடியாக்கள் செய்தி தாள்கள் சுட்டி காட்டுகின்றன.... அவர் மறைந்து விட்டதால் பொது மக்கள் யாரும் அவரை பற்றி தவறாக பேச விரும்பவில்லை . ஆனால் அவர் ஊழல் குற்றம் செய்தது சுப்ரீம் கோர்ட் ஆல் உறுதி செய்ய ப்பட்டுள்ளது / அவருடன் சசி மற்றும் இருவரும் ஊழல் குற்றவாளிகள் என்பதையும் பொது மக்கள் அறிந்து வைத்துள்ளனர். . இனி அதிமுக அணி யினர்( தீபா பேரவை உட்பட) எவருமே ஜெ ஊழல் குற்றவாளி என்பதை வெளிப்படையாக ஒத்து கொள்ளவே மாட்டார்கள்.. .அது இவர்கள் சொல்லும் அம்மா ஆட்சி பற்றியும் எதிர் கேள்விகளை திருப்பும். ..   22:22:22 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

பிப்ரவரி
25
2017
அரசியல் பிள்ளைகள் மீது சத்தியம் ஜெ.,வை சசிகலா கொல்லவில்லை அமைச்சர் சீனிவாசன் வெளிப்படை
எதையும் மூடி மூடி வைத்தால் சந்தேகம் வருவது இயற்கை ..எழுபத்திஐந்து நாட்கள் தெளிவற்ற நிலை இருந்தது மேலும் ஜெ இறந்தது முதல் மருத்துவர்கள் உட்பட ஒவ்வொருவரும் ஒவ்வொன்று மாற்றி மாற்றி சொல்லி வருவதாக பலருக்கு தோன்றுகிறது . ஒரு மாநிலத்தின் முதல்வர் என்ற முறையில் எழுபத்திஐந்து நாட்கள் அவரை பற்றிய புகைப்படங்கள் எதுவுமே இல்லை அப்போதைய முதல்வர் ஓபிஎஸ் உட்பட யாருமே பார்க்க பார்க்க அனுமதிக்க படவில்லை யார் இதை எல்லாம் எந்த அடிப்படையில் செய்தார்கள் என்ற சந்தேகங்கள் பொதுமக்களிடம் உள்ளன . .மேலும் அவர்ஜெ எந்த சூழ்நிலையில் அங்கு அழைத்து வரப்பட்டார் என்று தெளிவாக யாரும் சொன்னதாக தெரியவில்லை. அப்போல்லோவில் ஐ சி யு வில் cctv இல்லை என்று கூறி விட்டனர். ஜெ வீட்டில் இருந்திருக்க வேண்டும்.ஒருவேளை அந்த பதிவுகள் இருந்தால் அந்த cctv பதிவுகளை பார்க்க பலர் விரும்புகின்றனர் . இந்த நிலையில் தெளிவான நிலை தெரிய வேண்டும்எ ன்றே விரும்புகின்றனர் .   15:10:03 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

பிப்ரவரி
25
2017
அரசியல் அ.தி.மு.க.,வை கைப்பற்ற ஓ.பி.எஸ்., அணியினர்...சுறுசுறுப்பு! தேர்தல் கமிஷன் தீர்ப்பை எதிர்பார்த்து காத்திருப்பு சசி பதவி பறிபோனால் பொதுக்குழுவை கூட்ட திட்டம் மார்ச் 1ல் புதிய அறிவிப்பு வெளியாகலாம் என நம்பிக்கை
எம்ஜியார் ஆரம்பித்த அதிமுக இது. .எம்ஜியார் தன குடும்பத்தினர் எவரையும் இதில் எந்த பதவியையும் வகிக்க உயிரோடு இருந்தவரை அனுமதிக்கவில்லை ஜெ மிகவும் சிரமப்பட்டு வளர்த்தார்.அவரும் தன குடும்பத்தினர் யாரையும் உள்ளே விடவில்லை .எனவே குடும்ப அரசியல் கூடாது . இவர்கள் இருவருடன் அதிமுக அழியாமல் இருக்க வேண்டும் என்றால் ..ஜெ அல்லது வேறு ஒரு குடும்பத்தின் (நேரடியாகவோ மறைமுகமாகவோ) கை பிடியில் வந்து விட க்கூடாது ., என்பதே பல உண்மை தொண்டர்களின் விருப்பமாக இருக்கும் .   14:59:22 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X