Balagurusamy Ayyanadar : கருத்துக்கள் ( 12 )
Balagurusamy Ayyanadar
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
15
2020
பொது மாவட்ட வாரியாக நிலவரம் சென்னையில் மேலும் 680 பேர் டிஸ்சார்ஜ்
தினமலர் செய்திகளை கம்யூட்டரில் பார்க்கும் போது தற்போது தினமும் ஏதாவது விளம்பரம் முழுவதுமாக செய்திகளை மறைக்கிறது. வாசகர்கள் செய்திகளை பாரப்பதா வேண்டாமா? விளம்பரம் மறைப்பதால் செய்திகளை படிக்க முடிவதில்லை. விளம்பரங்களை ஒழுங்கு படுத்தி செய்திகளை சிரமமின்றி படிக்க உதவவும்.   22:58:26 IST
Rate this:
1 members
0 members
0 members

அக்டோபர்
22
2020
அரசியல் கொரோனா தடுப்பூசி இலவசம் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
மக்கள் தங்களை ஆள்வதற்கு தேர்ந்தெடுக்கும் அரசின் கடமை, நாட்டு மக்களுக்கு உணவு, உடை, இருப்பிடம், தரமான கல்வி மற்றும் மருத்துவ வசதிகளை செய்து கொடுப்பதற்காகத்தான். நோய்த தொற்றுக்களில் மக்களை பாதகாக்க வேண்டியதும் அரசிட் கடமையே. இதை தேர்தலில் ஓட்டுக்களை பெறுவதற்காக பிரச்சாரம் செய்வது ஏறபுடையது அல்ல.   13:14:00 IST
Rate this:
1 members
0 members
1 members

ஆகஸ்ட்
17
2020
அரசியல் கனிமொழியால் எம்.பி.,க்களுக்கு வந்த சிக்கல்
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு, அவர்களுக்கு உரிய அடையாள அட்டை இருக்கும் போது, அதை கையில் வைத்திருப்பதும் தேவைப் பட்டால் காட்ட வேண்டியதும் அவர்கள் கடமை தானே. இதில் என்ன கனிமோழியால் மற்றவர்களுக்கு சிக்கல் வந்தது.   11:54:40 IST
Rate this:
1 members
0 members
7 members

மே
6
2020
பொது மது கடைகள் திறப்பு தள்ளிப்போட முடிவு?
மதுவிலக்கு விவகாரத்தில் அரசு மக்களின் நலன் ஒன்றையே கருத்தில் கொள்ள வேண்டும். கடந்த நாற்பது நாட்களாக ஏழை எளிய மக்கள் வருமானம் இல்லாவிட்டாலும் நிம்மதியாக இருக்கிறார்கள். அரசு மக்களின் வாழ்வாதாரத்தை பாது காத்து உரிய முறையில் அவர்களை உயர்த்தி விட வேண்டும். மேலும் இன்னல்களுக்கு உள்ளாக்க கூடாது. மது கடைகளை திறக்கும் முயற்சியை அரசு அறவே கைவிட வேண்டும். மதுக்கடைகள் மூடப்பட்டது மூடியதாவே இருக்கட்டும்.   13:23:15 IST
Rate this:
0 members
0 members
4 members

மார்ச்
31
2020
அரசியல் வீட்டு வாடகை வசூலிக்கக்கூடாது தமிழக அரசு உத்தரவு
இவ்வளவு களேபரங்களுக்கு இடையிலும் அனைத்து தொலைக்காட்சி சானல்களும் போட்டி போட்டு திரைப்படங்களையும், பழைய சீரியல்களையம் மீண்டும் காண்பிக்க ஆரம்பித்து விட்டார்கள். இதில் வேடிக்கை என்னவெண்றால் ஒவ்வொரு பத்து நிமிடத்திற்கு ஒரு முறை ஏகப்பட்ட விளம்பரங்கள் ஒளி பரப்பாகி காண்போரை சலிப்படையச் செய்கிறது. இதன்மூலம் அனைத்து சானல்களும் ஏகப்பட்ட வருமானம் அடைகினறன. இப்போது சீரியல்களின் தொடருக்காக படப்பிடிப்பம் நடைபெறவில்லை. இப்போது கேபிள் டிவி கட்டணத்தை மூன்று மாதங்களுக்கு வசூல் செய்யாமல் விட்டுக் கொடுத்தால் இதனால் அனைத்து தரப்பு மக்களும் பயன் பெறுவார்களே? அரசும் சம்பந்தப்பட்ட. அதிகாரிகளும் விரைவில் ஆவன செய்யவும். நன்றி.   22:49:30 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜனவரி
27
2020
அரசியல் டி.என்.பி.எஸ்.சி., தேர்வில் இனி, சிறு தவறும் நடக்காது
நான் எந்த அரசியல் கட்சியையும் சார்ந்தவன் அல்ல. அமைச்சர் கூறுகிறார் "சர்க்காரியா கமிஷன் ஊழல், பூச்சி மருந்து ஊழல், சென்னையில் பாலம் கட்டியதில் ஊழல், '2 ஜி' ஊழல் என, விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்தவர்கள், தி.மு.க.,வினர். எனவே, ஸ்டாலின் முதலில் தன் முதுகில் உள்ள, ஊழல் கரையை திரும்பி பார்க்க வேண்டும். விஞ்ஞான பூர்வ ஊழலை தி.மு.க.வை தவிர, வேறு யாரும் செய்ய முடியாது. உலகத்திலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்டது தி.மு.க. அரசு தான், என்று. இரண்டாம் முறையாகவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருப்பவர்கள் இவரகள்தான். ஏன் இன்னும் சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து தகுந்த தண்டனை வழங்காமல் இருக்கிறார்கள்.   13:45:57 IST
Rate this:
0 members
0 members
4 members

ஆகஸ்ட்
1
2019
முக்கிய செய்திகள் அபராதம்! பிளாஸ்டிக் பயன்படுத்தினால் இனி வீடுகளுக்கும் ...ஒத்துழைப்பு இல்லாததால் மாநகராட்சி எச்சரிக்கை
நாம் சுதந்திரம் பெற்று ஜனநாயக நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நம் மக்களால், மக்களே, மக்களுக்காக தேர்ந்து எடுக்கும் அரசு, சர்வாதிகார அரசு அல்ல. மேலே உள்ள செய்தியை பார்த்தால், பாமர ஜனங்கள் நொந்து கொள்ளத்தான் தோன்றுகிறது. தயாரிப்பாளர்களுக்கு எதற்கு மூன்று வாய்ப்புக்கள். முதலிலேயே உற்பத்தியை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தால் விட்டால் அடுத்து தயாரித்து வெளியே வராதே. அவர்கள் வசம் ஏற்கனவே தயாரித்து இருப்பில் உள்ளதை அரசே மறுசுழற்சிக்கு எடுத்துக்கொண்டு அதற்க்கு உரிய நஷ்டஈட்டை அவர்களுக்கு வழங்கிவிடலாமே. இதில் வீடுகளுக்கு எதற்க்காக அபராதம். இதனால் பொது ஜனங்களுக்கு தேவையில்லாத சங்கடங்களுக்கும், மனஉளைச்சலுக்கும் உட்படுத்த வேண்டியிருக்கும். அரசுக்கும் கெட்ட பெயர்தான் ஏற்படும். பிளாசிட்டிக் பொருட்களை ஒழிக்க வேண்டும் என்பதில் எந்த மாற்று கருதும் இல்லை. அதே நேரம் சரியான மாற்றுப்பொருட்களை தயாரிக்க, தயாரிப்பாளர்களையும் ஊக்குவிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினரும் அதிகாரிகளும் ஆவண செய்யவும். நன்றி.   11:47:35 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூலை
16
2019
அரசியல் தரமான சாலை வேண்டுமானால் கட்டணம் செலுத்தத் தான் வேண்டும்
அரசு என்பது மக்களே, மக்களால், மக்களுக்காக என்று பள்ளியிலே படித்த ஞாபகம். இன்றைய நிலை அப்படியா உள்ளது. பாமர மக்கள் உழைத்து சம்பாரிக்கும் பணத்தை எதாவது ஒரு வகையில் பிடுங்குவதே அரசின் வேலையாக உள்ளது. ஆத்திர அவசரத்திற்கு இயற்க்கை உபாதைகளுக்கு கூட பணம் வேண்டும். இப்போது சுங்க கட்டணம் வசூலிக்கப்படும் சாலைகள் எல்லாம் தரமாகவா உள்ளது. அனைத்திற்கும் வாரியாக தங்கள் வருமானத்தை அரசுக்கு செலுத்தும் மக்கள் மகிழ்ச்சியாகவா உள்ளனர்.   12:45:42 IST
Rate this:
1 members
1 members
14 members

மே
31
2019
சிறப்பு பகுதிகள் இயற்கை வளம் பெருக என்ன செய்யணும்!
இது உங்கள் இடம் பகுதியில் இடம் பெறும் செய்திகளில், எண்கள் பெரும்பாலும் தமிழ் எழுத்துக்களாகவே குறிக்கப்படுகிறது. ்து நடைமுறையில் இல்லாததால் படிப்பதற்கு சிரமமாக உள்ளது. ஆகவே ரோமன் எண்களையே குறிப்பிடவும் அல்லது தமிழ் எழுத்துக்களுக்கு நிகரான ரோமன் எண்களுடன் கூடிய அட்டவணையை காட்டவும்.   11:13:46 IST
Rate this:
0 members
0 members
2 members

அக்டோபர்
18
2018
சிறப்பு பகுதிகள் மு டீ கடை பெஞ்ச்
இது உங்கள் இடம் பகுதியில் கருத்தை பதிவு செய்துள்ள ஒருவர் அண்ணாதுரை ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசி போட்டார் என்று கூறியுள்ளார். தமிழ்நாடு முழுவதும் போடவில்லை, கோவையிலும் சென்னையில் ஒரு சில இடங்களில் மட்டுமே போட்டார்கள். அவர்களை நம்பி வாக்களித்த மக்களுக்கு சொன்னதை செய்யவுமில்லை, விலைவாசியையும் குறைக்கவில்லை. ஆனால் ஒரு படி அரிசிக்கு மக்கள் இப்போது நூறு ரூபாய்க்கு மேல் கொடுப்பது உண்மை.   20:49:07 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X