kumaresan kr : கருத்துக்கள் ( 15 )
kumaresan kr
Advertisement
Advertisement
Advertisement
பிப்ரவரி
18
2020
முக்கிய செய்திகள் நடவடிக்கை! மதுரையில் ஷேர் கார் பெர்மிட் வழங்க...போக்குவரத்து அதிகாரிகள் தீவிரம்
வரவேற்க தக்கது . இப்போது இருக்கும் ஷேர் ஆட்டோவில் வயததானவர்கள் உட்கார கஷ்டப்படுகிறார்கள் . அது மட்டுமல்லாமல் , இந்த ஷேர் ஆட்டோக்களுக்கு விதிமுறைகள் எதுவும் பொருந்துவதில்லை . விதி மீற்றர்கள் அதிகம் .ஏன் என்று கேட்க ஆளில்லை. ஷேர் ஆட்டோக்கள் இல்லாமல் இருந்தாலே மதுரை நகரம் வளர்ச்சியை நோக்கி செல்லும் . ஷேர் ஆட்டோக்களால் ஏழை நடுத்தர மக்களுக்கு நன்மை நிறைய இருக்கு, ஷேர் ஆட்டோவாஹ நிறைய பேருக்கு வாழ்வாதாரம் yendur என்று யாராவது சொன்னால் அது மிகப்பெரிய பொய் தான் . ஏனெனில் ஷேர் ஆட்டோ இல்லாத பொது மக்கள் நிம்மதியாக பஸ், மினி பஸ் மற்றும் பிற ஊர்திகளை பயன்படுத்தி நிம்மதியாக இருந்தார்கள் என்பது தான் உண்மை . இவர்களை விதிமீறல்கள் இல்லாமல் ஷேர் கார் ஒட்டும்படி செய்யலாம் . மதுரையில் ஷேர் ஆட்டோ ஒழிந்தால் மதுரை மக்கள் அரசுக்கு நன்றி கடன் பட்டவர்களாக இருப்பார்கள் .   10:11:20 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

பிப்ரவரி
14
2020
முக்கிய செய்திகள் பந்தல்குடி கால்வாயில் சுத்திகரிப்பு மைய பணி தீவிரம் மூன்று மாதங்களில் முடிக்கவும் உத்தரவு
மதுரை வைகை ஆற்றின் வழி நெடுங்கிலும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவப்பட வேண்டும் . மறுசுழற்சி கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு மீண்டும் அதை ஆற்றில் விட வேண்டும் . சுத்திகரிப்பு நிலையங்களிலிருந்து வெளியேறும் கழிவுநீரை சிலிண்டர்களின் மூலம் உலர்த்தி உரமாக மாற்றி விற்பனை செய்யலாம் மாநகராட்சி . சில வன்கழிவுகளை எரித்துவிடுவார்கள் . கங்கை நதி சுத்திகரிப்பு மற்றும் வெளிநாடுகளில் உள்ளவை இவ்வாறு செயலாற்றுகின்றன .   10:13:15 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
13
2020
முக்கிய செய்திகள் அடுத்தடுத்த பயிற்சிகளால் ஆசிரியர்கள் குமுறல் மாணவர்களுக்கு கற்பித்தல் பாதிப்பு
காலாண்டு ,அரையாண்டு மற்றும் கோடை விடுமுறைகளை ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும் காலங்களாக முறைபடுத்தலாம் .   14:29:24 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
12
2020
முக்கிய செய்திகள் மதுரையில் கொரோனா கண்காணிப்பில்... 77 பேர் வீட்டைவிட்டு வெளியேற சுகாதாரத்துறை தடை
எச்சரிக்கை : மதுரையில் மெயின் ரோடு மற்றும் தெருக்களில் இறைச்சி கடைகளில் ஆடு , மாடு , கோழி அறுத்து வெளியே தொங்கவிடும் பழக்கம் இன்னும் மாறவில்லை . அரசாங்கம் உடனடியாக இறைச்சி கடைகளில் வெளியில் தெரியாத வாறு இறைச்சி விற்க ஏற்பாடு செய்ய வேண்டும் . மதுரை சிந்தாமணி ரோட்டில் அநேக இடங்களில் இறைச்சி கடையில் மாட்டுக்கறி தொங்கவிடப்படுகிறது . ஒருபுறம் கழிவு நீர் கலந்த ஓடை இன்னொரு புறம் திறந்த இறைச்சி கடைகள். சிந்தித்து செயல்படுங்கள் மக்களே மற்றும் இதையெல்லாம் எனக்கென்ன என்று வேடிக்கை பார்க்கும் மதுரை மாநகராட்சியே. நல்ல நல்ல மாற்றங்களை கொண்டு வருவது தான் நிர்வாகம் , வெறுமெனே பார்த்து கொண்டு இருப்பது அல்ல .   15:57:51 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
10
2020
சம்பவம் மோட்ச விரதமிருந்த ஜெயின் முதியவர் மரணம்
வயது மிகுந்த முதியவர்கள் , புற்று நோய் அல்லது பிற தீராத நோயால் , மிகுந்த வலியால் அவதியுறும் , சொந்த பந்தங்கள் இன்றி அரசு மருத்துவமனைகளில் கிடந்தது கடவுள் தன்னை சீக்ரம் அழைத்து செல்ல மாட்டானா என்று நினைத்து அவதியுறும் மற்றும் வாழ்வில் தோல்விகளை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்பவர்களும் இதை படித்து பின் பற்ற வேண்டும் . உடம்போ மனதோ தொய்வடைந்த பின் மாத்திரை மருத்துகளை தொடர்ந்து சாப்பிட்டு தொண்ணுறு நுறு ஆண்டுகள் உயிரோடு மட்டும் இருப்பதை விட இந்த வன பிரஸ்த அல்லது வடக்கிருதல் என்பது மேலானது . தங்கள் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக இல்லையே , கடைசி நேரத்திலாவது இறைமையயை உணர்ந்து தனக்கும் தன் சுற்றத்திற்கும் ,சமுதாயத்திற்கும் நல்லது செய்து விட்டு செல்வோம் என்று கருதினால் இது மாதிரியான வடகிருத்தல் அல்லது மோட்சம் எய்துதல் ஆகியவற்றை கடை பிடிக்கலாம் . இதனால் அவர்களுக்கும் அவர்களை சார்ந்தவர்களுக்கும் ஆன்மீக பலம் கிடைக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை . முற்காலத்தில் நம் முன்னோர்கள் அறுபது வயதை தாண்டியவுடன் கணவன் மனைவி இருவரும் காட்டிற்கு சென்று விடுவார்கள் . திரும்பி வர மாட்டார்கள் . இதை வன பிரஸ்தம் என்று கூறுவார்கள் . இதனால் சமுதாயத்தில் , நாட்டில் ஆன்மீக சிந்தனை வளரும் ,நாட்டின் வளர்ச்சி அதிகரிக்கும். தினமலர் நாளிதழ் இந்த வன பிரஸ்த முறைகளை தமிழ்நாட்டில் மட்டுமல்லாது நம் நாட்டில் எல்லா பகுதியிலும் எடுத்து சென்று நம்முடைய சமுதாயத்தின் மீதும் நாட்டு மக்களின் நலத்தின் மீதும் ஒரு ஆழமான மிகசிறந்த பாதிப்பை ஏற்படுத்த வேண்டும் . ஒரு ஆரோக்கியமான வாழ்வியல் முறையை மக்களுக்கு அறிமுக படுத்த வேண்டும்.   12:24:08 IST
Rate this:
8 members
2 members
16 members
Share this Comment

பிப்ரவரி
8
2020
முக்கிய செய்திகள் இலவச வீட்டு மனை பட்டா வழங்குவதில் இடைத்தரகர்கள் தலையீடு எச்சரிக்கையாக இருக்க பொது மக்களுக்கு அறிவுறுத்தல்
இலவச பட்டாவிற்கு மட்டுமல்ல வாங்கின காலி மனைக்கு பட்டா பெயர் மாற்றம் செய்ய ஐந்து சென்ட் கொண்ட ஒரு பிளாட்டிற்கு பத்தாயிரம் ருபாய் லஞ்சம் கேட்கிறார்கள் . நேற்று அவனியாபுரம் அருகில் உள்ள அயன்பாப்பாக்குடி கிராமத்தில் உள்ள வி ஏ ஓ இந்த மாதிரி பட்டா மாற்றத்திற்கும்(பத்தாயிரம்) ஜாதி சான்றிதழ் ஆன்லைனில் க்ளியர் செய்து கொடுப்பதற்கும் (முன்னுரிலிருந்து ஐநூறு) கேட்பதாக சொல்கிறார்கள் . சமீபத்தில் ஜாதிசான்றிதழ் ,பட்டா மாற்றம் செய்தவர்கள் , போன்ற நபர்களிடம் விசாரணை மேற்கொண்டால் உண்மை தெரிந்துவிடும் . நம் நாட்டில் முக்கியமாக தமிழ்நாட்டில் இந்த மாதிரியான சிறப்பு லஞ்ச ஒழிப்பு ஆய்வுகளை மேற்கொண்டு மக்களுக்கு உதவலாமே   12:44:40 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
6
2020
முக்கிய செய்திகள் வாழை இலை, எண்ணெய் சிகிச்சைவசீகரிக்கும் அரசு மருத்துவமனை
முதியவர்களுக்கு இருக்கும் முற்றிய நோய்களை அல்லோபதி முறையில் குணப்படுத்துவதற்கு முயற்சி செய்வதை விட சித்த , ஆயுர்வேத மற்றும் ஹோமியோபதி மூலம் கையாள்வது தான் நல்லது . இதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் . முற்றிய புற்றுநோய்க்கு கீமோதெரபி , ரேடியோதெரபி ,ஆபரேஷன் போன்ற வலி மற்றும் உடலுக்கும் உள்ளத்திற்கும் வேதனை தரும் சிகிச்சை முறைகளை கைவிட்டு சித்த ,ஆயுர்வேத முறைகளை பழக்கி கொள்ள வேண்டும். உயிரோடு இருப்பது மட்டுமே முக்கியமல்ல , சிறிது உடல் வலி இருந்தாலும் உயிர் இருக்கும் வரை சந்தோசமாக வாழ்வது தான் அர்த்தமுள்ளதாக இருக்கும் .   10:28:46 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

பிப்ரவரி
5
2020
உலகம் சீனாவில் கொரோனா வைரஸ்பலி எண்ணிக்கை 492 ஆக உயர்வு
முதலில் சீனர்களது உணவு முறையை சைவ உணவாக மாற்ற வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி இந்தியாவில் உள்ள இந்து ஆன்மீகவாதிகள் சீன அரசிடம் விவரிக்க வேண்டும் . உடன் பட்டால் இந்தியாவிலிருந்து நிறைய காய்-கனிகளை மருத்துவ குணமுடைய அருகம்புல் ,நிலவேம்பு முதலியவைகளை இந்தியா ஏற்றுமதி செய்யலாம் . நம் நாட்டின் விவசாயிகளும் பயனடைவார்கள் .   14:49:17 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
31
2020
பொது கொரோனா பாதிப்பு தமிழகத்தில் 242 பேர் கண்காணிப்பு
இந்த கொரோனா நோய் வராமல் இருக்க வேப்பிலை ,துளசி மற்றும் வில்வஇலை சேர்த்து அரைத்து வெந்நீரில் கலந்து குடித்து வர வேண்டும் . இதோடு நிலவேம்பு குடிநீர் குடித்து வர வேண்டும் .பிரண்டை , வல்லாரை , தூதுவளை அடிக்கடி பயன்படுத்த வேண்டும்   15:30:30 IST
Rate this:
1 members
0 members
8 members
Share this Comment

ஜனவரி
30
2020
சம்பவம் கேரள மருத்துவ மாணவிக்கு, கொரோனா வைரஸ்... பாதிப்பு!
கரோனா வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுக்க உடனடியாக எல்லா குடியிருப்பு பகுதிகளிலும் மாவிலை தோரணங்கள் கட்ட வேண்டும் . மாவிலையை லேசாக கீறி விட்டால் மா வாசனை வருவதை கவனித்திருப்பீர்கள் . இந்த மாதிரி கீறிவிட்டு மா இலைகளை தோரணமாக கட்டி தொங்க விட்டால் இந்த நோய் பரவாமல் தடுக்கலாம். இதை எல்லா மாநகராட்சி கமிஸ்ஸின்ர்களுக்கும் தெரிவித்து நடவடிக்கை எடுக்க வேண்டியது தினமலரின் பொறுப்பு. இந்த மிகப்பெரிய பொறுப்பை மிக சிறந்த ஊடகத்திடம் ஒப்படைகிறோம். தினமலரால் மட்டுமே இந்த நல்ல காரியத்தை செய்ய முடியும் என்கிற நம்பிக்கையில் ..   12:46:07 IST
Rate this:
1 members
1 members
1 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X