Bala : கருத்துக்கள் ( 108 )
Bala
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
16
2021
பொது நாட்டின் ஏற்றுமதி 11 சதவீதம் அதிகரிப்பு
இன்னும் அதிகமாக ஏற்றுமதி செய்திருக்கலாம். கொழும்பு மற்றும் சிங்கப்பூர் துறைமுகங்களில் நடக்கும் தாமதம் தென்னிந்திய ஏற்றுமதியை பெரிதும் பாதித்துள்ளது. சென்னை, தூத்துக்குடி துறைமுகங்களிலிருந்து வாரம் இரு கப்பல்கள் மும்பை துறைமுகத்திற்கு ஆரம்பிக்க வேண்டும். இல்லாவிடில் காட்டுப்பள்ளி துறைமுகத்திற்கு தாய் கப்பல்கள் முக்கியமாக ஆப்பிரிக்க ஐரோப்பிய அமெரிக்க துறைமுகங்களுக்கு ஆரம்பிக்க வேண்டும்.   10:59:43 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜனவரி
14
2021
அரசியல் நடுத்தர வர்க்கத்தினருக்கு பட்ஜெட்டில் நல்ல செய்தி?
இந்த வருமான வரி என்பது அரசுக்கு எளிதில் கிடைக்கும் வருமானம். இதில் மாதச்சம்பளக்கரர்கள் தான் பெரிதும் உள்ளடக்கம். வரிப்பிடித்தம் போகத்தான் சம்பளமே வரும். இதனை நன்கு குறைத்தால் நடுத்தர வர்க்கத்தினரின் கையில் காசு புழங்கும். வாங்கும் சக்தி அதிகரிக்கும். கறுப்புப்பண புழக்கமும் குறையும்.   06:33:11 IST
Rate this:
0 members
0 members
8 members

ஜனவரி
11
2021
சம்பவம் பிரதமர் மோடியை விமர்சித்த பைலட் நீக்கம்
எடுத்த நடவடிக்கையில் தவறே கிடையாது. இந்தியாவில் பிரதமர் என்பது ஒரு கட்சித்தலைவர் பதவி போல கிடையாது. அந்த நாற்காலிக்கான மரியாதையை கொடுத்தாக வேண்டும். அரசின் செயல்பாடுகள் விமரிசனத்துக்கு உள்ளாகலாம். ஆனால் இம்மாதிரி தனி மனித தாக்குதல் அதுவும் நாட்டின் உயரிய பதவியில் இருக்கும் போது கண்டிப்பாக கண்டித்து தண்டித்தல் அவசியம். அந்த நாற்காலியில் யார் அமர்ந்திருந்தாலும் சரி   06:58:33 IST
Rate this:
5 members
0 members
28 members

ஜனவரி
4
2021
அரசியல் 200 படத்துக்கு மேல் நடித்தவர் தனி விமானத்தில் வரக்கூடாதா?
தாராளமாக வரலாம். வாடகையை ஒழுங்காக கட்டி விட்டால் தனி போயிங் விமானத்தில் கூட வரலாம். ஆனால் வந்து விட்டு அடுத்தவருக்கு சிக்கனத்தைப் பற்றி பாடம் எடுக்க அருகதையில்லை   06:54:58 IST
Rate this:
3 members
0 members
30 members

டிசம்பர்
5
2020
பொது நூற்றுக்கணக்கான ஆப்பிள் மரங்கள் வெட்டி சாய்ப்பு
யாரெல்லாம் இடத்தை வெச்சிருக்கானோ அவனிடம் வாடகை வசூல் பண்ணி முறைப்படுத்தியிருக்கலாம். அரசுக்கு வருமானமும் வந்திருக்கும். விவசாயிகளுக்கும் நன்மை   13:52:22 IST
Rate this:
1 members
0 members
5 members

நவம்பர்
30
2020
பொது இது உங்கள் இடம் ஓட்டுப்பதிவு இயந்திரம் தேவையா?
வாக்குப்பதிவு இயந்திரம்தான் நம்மைப்போன்ற பெரிய அதிக தொகுதிகள், வேட்பாளர்கள் நிறைந்த நாட்டிற்கு உகந்தது. இந்த இயந்திரங்கள் இணைய வழியில் இணைந்தவை அல்ல. அதனால் அவற்றை வெளியிலிருந்து மாற்றியமைக்க முடியாது. இப்பொழுது ஓட்டுப்போட்டவர் தான் போட்ட ஓட்டை உறுதி செய்து கொள்ளும் வகையில் VVPAT என்ற துண்டு சீட்டும் வருகிறது. எந்த இயந்திரத்திலாவது சந்தேகம் வந்தால் அதனை இவற்றின் கூட்டுத்தொகையோடு பொருத்திப்பார்த்து நிவர்த்தி செய்து கொள்ளலாம். அது மட்டுமின்றி ஓட்டு எண்ணிக்கை ஆரம்பிக்கும் முன் அனைத்து கட்சி முகவர்கள் முன்னிலையில் ஒரு டம்மி வாக்குப்பதிவை தேர்தல் அலுவலர் நடத்திக்காட்டி விட்டுத்தான் உண்மையான பதிவு ஆரம்பிக்கும். வாக்குச்சீட்டு முறைக்காக எத்தனை மரங்களை அழிக்க வேண்டும்? எத்தனை பேருக்கு விடுமுறை அளித்து தேர்தல் பணியில் ஈடு படுத்த வேண்டும்? அமெரிக்காவில் வாக்குச்சீட்டு முறைதான். சமீபத்திய தேர்தலில் அதன் லட்சணத்தை பார்த்தோமே. இந்த இயந்திரத்தின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் எல்லாம் சும்மா அரசியல். எவ்வளவோ முறை நீதி மன்றங்களும் தேர்தல் ஆணையமும் அழைப்பு விடுத்தும் எந்த எதிர்க்கட்சியாலும் அதனை நிரூபிக்க இயலவில்லை. முன்பு நடந்தது போல் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி குண்டர்களை வைத்து அராஜக ஓட்டு போடும் நிலையும் இல்லை   06:15:48 IST
Rate this:
2 members
0 members
11 members

நவம்பர்
27
2020
கோர்ட் கோயில் நிலத்தில் கலெக்டர் அலுவலகம் உயர்நீதிமன்றம் தடை
நிலத்தை தரை வாடகைக்கு விட்டு அந்தப்பணத்தை கோயிலுக்கு செலவழிக்கலாம்   18:11:54 IST
Rate this:
1 members
0 members
5 members

நவம்பர்
25
2020
பொது சென்னை மழை பொழிகிறது ஒவ்வொரு துளியிலும் டிரெண்டிங் தெரிகிறது...!
ஒவ்வொரு முறையும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர், மக்கள் அவதி என்ற செய்திதான். அரசு போர்க்கால அடிப்படையில் தயவு தாட்சண்யமின்றி ஏரி மற்றும் நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். ஏரிகளை தூர் வாரி அதிக கொள்ளளவிற்கு தயார் படுத்த வேண்டும். எங்கு இடம் இருக்கிறதோ அங்கு சிறு குளங்களை வெட்டி இருக்கும் ஏரிகளுடன் இணைக்க வேண்டும். அனைத்து மழை நீர் வடிகால்கள் குப்பைகளின்றி மழை நீர் மட்டும் செல்லும் வகையில் அமைக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் அடுத்த முறையும் இதே பிலாக்கணம்தான்   05:22:25 IST
Rate this:
0 members
0 members
6 members

நவம்பர்
9
2020
அரசியல் டிரம்ப் நிலைமை பா.ஜ.,வுக்கு ஏற்படும் மெஹபூபா முப்தி
கதறு நல்லா கதறு. உங்கள் அனைவருக்கும் ஆப்பு நிச்சயம்.   19:40:19 IST
Rate this:
0 members
0 members
10 members

அக்டோபர்
17
2020
பொது நீட் தேர்வு கஷ்டமானது அல்ல
தமிழ்நாட்டில் NEET - ஒரு அலசல்.. தமிழ்நாட்டில் விண்ணப்பித்தவர்கள் - 121617 தமிழ்நாட்டில் எழுதியவர்கள் - 99610 தமிழ்நாட்டில் தேர்ச்சி பெற்றவர்கள் - 57215 தேர்ச்சி சதவீதம் - 57.44% சென்ற ஆண்டை விட தேர்ச்சி சதவீதத்தில் முன்னேற்றம் +8.87%👍🏼 தமிழ் நாட்டில் மருத்துவக்கல்லூரியில் உள்ள இடங்கள் - 5550 தமிழ் நாட்டு மாணவர்களுக்கான இடங்கள் - 4717 (85%) இந்தியாவில் உள்ள மொத்த மருத்துவக்கல்லூரி இடங்கள் - 82926 அதில் தமிழ் நாட்டு மாணவர்கள் சேர வாய்ப்புள்ள இடங்கள் = 11606 ((82926-5550)0.15)) தேர்ச்சி பெற்ற 57215 மாணவர்களில் தமிழ்நாட்டிலுள்ள 4717 இடங்கள் போக மீதி உள்ள 52498 மாணவர்கள் இந்தியா முழுவதும் 11606 இடங்கள் உள்ளன. வெறும் 833 இடங்கள் என்ற இடத்தில் 11606 இடங்கள் என்ற அசுர வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது NEET. கிட்டத்தட்ட 1400% அதிகம்💪🏼 இது எப்படி மாணவர்களை வஞ்சிக்கும் தேர்வாகும் 🤔🤔   13:02:02 IST
Rate this:
0 members
0 members
6 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X