RamRajan : கருத்துக்கள் ( 21 )
RamRajan
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
18
2017
அரசியல் சிவன் கோயிலை இடித்து தான் தாஜ்மஹால் கட்டினார் ஷாஜகான்!
தேஜோ மஹாலயா என்ற புராதன சிவன் கோவில் தான் தாஜ் மஹால் என்பதற்கான பல ஆதாரங்கள் கூகிள் தேடலில் கிடைத்தன. P N OAK என்ற சரித்திர ஆராய்ச்சியாளர் எழுதிய " THE TAJ MAHAL IS TEJO-MAHALAYA: A SHIVA TEMPLE" என்ற நூலில் இருந்து 103 ஆதாரங்கள் தரப்பட்டுள்ளன . ஆர்வமுள்ளவர்கள் படிக்கலாம் . சரித்திரத்தில் அந்த சம்பவம் ஒரு கரும்புள்ளி தான் என்றாலும் அது உண்மைதானா என்று அறிய ஆர்வம் காட்டுவதில் என்ன தவறு. நிலவில் பாட்டி நூல் நூற்கும் கதையை இனியும் யார் நம்புவார்கள் . மனிதரின் பரிணாம வளர்ச்சியில் அறிவு வளர்ச்சியும் அறிவு முதிர்ச்சியும் ஒரு பாகம் தான் . அது இல்லை என்றால் மனித இனம் இவ்வளவு முன்னேறியிருக்காது. உண்மையை அறிந்துகொள்ளும் ஆர்வம் தான் பல புதிய விஷயங்களை கண்டுபிடிப்புகளை தந்துள்ளது   13:55:45 IST
Rate this:
5 members
0 members
29 members

அக்டோபர்
18
2017
பொது நிலவேம்பு குடிக்க வேண்டாம் என நடிகர் கமல்... உளறல்
ஒரு கருத்தை படிக்கும் போது அதன் முழு அர்த்தம் என்ன என்பது பற்றி ஆராயவேண்டும். மருத்துவர் இல்லை என்றாலும் கமல்ஹாசன் புத்திசாலி. அவர் நற்பணி மன்றத்தினோடு நிலவேம்பு நீர் விநியோகம் செய்யும் வேலையில் ஈடு பட வேண்டாம் என்றே கூறியுள்ளார். யாரையும் குடிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. எய்ம்ஸ் மருத்துவ குழு தலைவர் அளித்த பேட்டியில் "அவர்கள் நிலவேம்பு நீரை நாங்கள் பரிந்துரைப்பது இல்லை. ஆனாலும் மக்கள் உபயோகிப்பதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை" என்று சொன்னார். நிலவேம்பு நீர் அத்துணை சக்தி உள்ளது என்றால் ஏன் மற்ற மாநிலங்கள் அதை உபயோகிப்பதில்லை? இந்திய ஆயுர்வேத சித்த ஆராய்ச்சி கூடங்கள் அதை ஏன் காப்புரிமை கோரவில்லை? உலகில் பல நாடுகளில் குறிப்பாக ஆப்ரிக்கா கண்டத்தில் டெங்கு பாதிப்பு உள்ளது. அங்கு ஏன் நிலவேம்பு நீரை பயன்படுத்தி ஆராய்ச்சிகள் செய்யவில்லை. ஆராய்ச்சி மூலம் பயன் தரும் என்று கண்டறியப்பட்ட பல இந்திய மருந்துகள் மேற்கத்திய நாடுகளால் காப்புரிமை பெறப்பட்டு உலகெங்கும் பயன் படுத்தப்படுகின்றன. அப்போது ஏன் இவ்வளவு சக்தி வாய்ந்த நிலவேம்பு நீரை யாரும் பயன் படுத்த வில்லை? நிரூபிக்கப்படாத எத்தனையோ விஷயங்களை மூட நம்பிக்கைகளை நாம் பின்பற்றி வருகிறோம் . பகுத்தறிவு வாதியான கமல் நிரூபிக்கப்படாத ஒரு விஷயத்தை அவரது ஆதரவாளர்கள் பின் பற்ற வேண்டாம் என நினைப்பதில் என்ன தவறு? தந்தை பெரியார் அவர்களும் இது போல பல பழக்கங்கள் மூட நம்பிக்கைகளை எதிர்த்து கருத்து சொல்லியிருக்கிறார். அது போல தான் இதுவும். " எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காணபதறிவு "   12:14:36 IST
Rate this:
20 members
0 members
23 members

அக்டோபர்
3
2017
பொது ரத்தம் சிந்தி வளர்த்த தந்தை எலும்புகூடாக பார்த்த மகள்
சில விஷயங்களை கருத்தில் கொள்ள வேண்டும். காலம் மாறிவிட்டது. பெற்றோர்கள் தங்கள் படும் கஷ்டங்கள் தங்கள் பிள்ளைகள் படக்கூடாது என்பதில் மிக உறுதியாக இருக்கின்றனர் . எப்பாடுபட்டாவது பிள்ளைகளை படிக்க வைத்து ஒரு வேலைக்கு அனுப்ப வேண்டும் என்பது பலரின் எண்ணம் . அப்படி படித்து வரும் பல பிள்ளைகளுக்கு அவர்கள் சொந்த மண்ணில் / ஊரில் வேலை அமைவதில்லை . அப்போது பெரிய நகரங்களை நோக்கி அவர்கள் பயணம் அமைவது தவிர்க்கமுடியாது போகிறது. அப்போது பெற்றோர்களால் அதை தடுக்க முடிவதில்லை. பெற்றோர்களுக்கும் நடுத்தர வயது , உடல் நலம் நன்றாக இருக்கும் என்பதால் சமாளித்துக்கொண்டு பிள்ளைகளை வெளியூருக்கு போய் வேலை செய்ய ஊக்குவிக்கின்றனர். சில வருடங்கள் கழியும் போது பிள்ளைகள் நகர வாழ்க்கைக்கு பழகி விடுகின்றனர். ஆனால் பல பெற்றோர்கள் நகர வாழ்க்கைக்கு மாற முடியாமல் தவிக்கின்றனர் . அப்போது பிரிவு காலம் நீண்டு நீண்டு போகிறது. பிள்ளைகள் திருமணம் செய்யும்போது இருவரும் வேலைக்கு போவது இந்த காலத்தில் கட்டாயம் ஆகிறது . பேரக்குழந்தைகள் படிப்பும் நகரத்திலேயே தொடர்கிறது . இப்படியே இடைவெளி நீண்டு போகிறது. பல பெற்றோர்களுக்கு தாங்கள் வாழ்ந்த மண், வீடு , பழகிய நண்பர்கள், சொந்தங்கள் இவைகளை விட்டு பிரிய மனமில்லை .அது பெற்றோர்கள் முதுமை எய்தும் போது பெரிய பிரச்சினை ஆகிறது. உளவியல் வல்லுநர் கருத்து ,ஆண்களுக்கு புதிய சூழ்நிலைகளுக்கு பழகி அனுசரித்து போவது என்பது கொஞ்சம் கடினம். அதே சமயம் பெண்கள் புதிய சூழ்நிலைகளுக்கு வெகு விரைவில் அனுசரித்து விடுவார் என்பதே. அது உண்மையும் கூட.. பல நேரங்களில் நாம் நகரங்களில் பிள்ளைகள் கூட அம்மாக்கள் மட்டும் தங்கி இருப்பதை கண்கூடாக காண்கிறோம் இதற்க்கு என்னதான் முடிவு ? பெற்றோர்கள் பிள்ளைகளை பெரிய சிறிய நகரங்களுக்கு வேலை செய்ய அனுப்புவது தவிர்க்க முடியாமல் போகும் போது , இடையிடையே பெற்றோர்கள் அந்த நகரங்களுக்கு போய் சில காலம் பிள்ளைகளுடன் தங்கி அந்த சூழ்நிலைக்கு பழக முயற்சி செய்யவேண்டும். பிற்காலத்தில் வயதாகும் போது அந்த நகரங்களில் பிள்ளைகளுடன் தங்கி வாழ வேண்டிய சூழ்நிலை வந்தால் பெற்றோர்களுக்கு சிரமம் தெரியாது. பிள்ளைகள் நகரங்களுக்கு போய் அனுசரித்து வாழ்ந்து வெற்றி அடைவதுபோல பெற்றோர்களும் அனுசரித்து வாழ்ந்து விட்டால் இருதரப்பினருக்கும் நன்மை, பரஸ்பரம் அன்பும் அரவணைப்பும் கிடைக்கும். பெற்றோர்கள் அவர்கள் வயதான காலத்தில் பிள்ளைகளை நகர வாழ்க்கையை விட்டுவிட்டு திரும்பி அழைக்க வேண்டியதில்லை. எல்லோரும் ஒரே குடும்பமாக வாழ முடியாவிட்டாலும் அடுத்த தெருவில் அருகில் இருப்பது இருதரப்பினருக்கும் மனதிற்கு அமைதி தரும் என்பது என் கருத்து   22:20:59 IST
Rate this:
1 members
0 members
3 members

செப்டம்பர்
27
2017
பொது காய்கறி வாங்க கைடு மனைவி அசத்தல்
வாழ்த்துக்கள். தம்பதிகள் இருவரும் கட்டாயம் வேலைக்கு போக வேண்டிய காலகட்டம் வந்துவிட்டது. விவாகரத்துகள், முறிவுகள் அதிகமாகி வரும் இந்த காலத்தில் பரஸ்பரம் புரிதலுடன் பிரச்சினைகளை எதிர் கொண்டு சமாளித்து வழி தேடி வாழும் இந்த தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள். இவர்களின் காய்கறி லிஸ்ட் மட்டும் அல்ல, அவர்களின் பரஸ்பரம் புரிதலும், சுய கெளரவம் பார்க்காமல் தவறுகளை திருத்திக்கொள்ளும் முயற்சியும் பாராட்டப்படவேண்டியவை. இளம் தம்பதிகளுக்கு நல்ல முன் உதாரணம். அவர்களின் செயல்களை கேலி செய்யாமல், அந்த செயல்களின் உள்நோக்கம் என்ன என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அது நன்மை தரும்   12:29:34 IST
Rate this:
2 members
0 members
20 members

செப்டம்பர்
18
2017
பொது சுங்கச்சாவடிகளில் வாகன காத்திருப்பு பிரச்னைக்கு தீர்வு! புது தொழில்நுட்பத்தை பயன்படுத்த அரசு திட்டம்
தாமதமாக செயல்பட தொடங்கினாலும் , நல்ல முயற்சி . வரவேற்போம் . சுங்க சாவடிகளில் வரிசையில் காத்து கிடப்போர்க்கே அதன் கஷ்டம் தெரியும். சில்லரை தட்டுப்பாடு , மெஷின் கோளாறு ,வாகனங்களினின் பிரேக் டவுண் போன்ற விஷயங்களால் ஏற்படும் தாமதம் தவிர்க்கப்படும். பல வளர்ந்த நாடுகளில் இந்த முறை அமலில் இருக்கிறது . லேட் ஆனாலும் லேட்டஸ்ட் ஆ வருதே   14:12:35 IST
Rate this:
3 members
0 members
3 members

செப்டம்பர்
17
2017
உலகம் கொரிய பாட்மின்டன் சிந்து சாம்பியன்
பூப்பந்து விளையாட்டில் புலியாக பாயும் பூவைக்கு வெற்றி மேல் வெற்றிகள் குவிய பூச்செண்டு கொடுத்து வாழ்த்துவோம்   13:54:38 IST
Rate this:
0 members
0 members
3 members

செப்டம்பர்
17
2017
அரசியல் ராணுவ அமைச்சர் பதவி நிர்மலாவுக்கு கிடைத்தது எப்படி பா.ஜ., மூத்த தலைவர்கள் ஆச்சரியம்
வாழ்த்துக்கள் அம்மணி ... மென் மேலும் உயர வாழ்த்துக்கள். சிலரது கருத்துக்கள் எதிர்மறையாக இருப்பினும் கலங்காது வெற்றி பாதையில் முன் செல்வீராக. இரும்பு இதயம் கொண்டோர் வாழ்ந்த நாடு இது. இந்தியனாக இருந்து நம் நாட்டிற்கு நல்லது செய்யுங்கள். தமிழ் மண்ணில் விளைந்த வீர பெண்மணிகள் வரிசையில் வாழ்ந்திடுங்கள் . வணக்கம். ஜெய் ஹிந்த்   13:51:52 IST
Rate this:
9 members
1 members
17 members

செப்டம்பர்
16
2017
பொது மாஜி விமானப்படை மார்ஷல் அர்ஜன் சிங் காலமானார்
நாட்டிற்க்காக அரும் பணி ஆற்றிய தளபதிக்கு வீர வணக்கங்கள்   21:48:29 IST
Rate this:
0 members
0 members
4 members

செப்டம்பர்
16
2017
அரசியல் சசியை சந்திக்க தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் முடிவு
உச்ச நீதிமன்றம் குற்றவாளி என தீர்ப்பளித்து தண்டித்த ஒரு நபரை தலைவராக, வழிகாட்டியாக மக்களும் மக்கள் பிரதிநிதிகளும் ஏற்ற்றுக்கொள்வது என்பதை ஒப்புக்கொள்ளமுடியவில்லை. அப்படியென்றால் நீதிமன்ற தீர்ப்பு தவறா? முறைகேடான வழியில் வாழ்வதுதான் இன்றைய தர்மமா ? இதுதான் இளைய தலைமுறைக்கு சரியான வழிகாட்டலா? இப்படியே செயல்படுவோமேயானால் அடுத்த தலைமுறை அராஜகம் , அதர்மம், முறைகேடுகள், இவையே வாழ்க்கை நெறி என செயல்பட தொடங்கும். அதை பற்றி இவர்களுக்கு என்ன கவலை? ஏழு தலைமுறைக்கு வேண்டிய பணம் அவர்களிடம் இருக்கிறதே . பிறகு என்ன வேண்டும். தர்மமாவது ஒழுக்கமாவது. இவர்களின் குடும்பம் , குழந்தைகள் இவர்களை எப்படி பார்க்கும்? அவர்களுக்கு என்ன பாடம், அறிவுரை சொல்லிக்கொடுப்பர் ? ஊழல் செய் , முறைகேடாக செயல்படு, சட்டத்தை மதிக்காதே, சமூகத்திற்கு பயப்படாதே , பணம் இருந்தால் எதையும் செய்யலாம் என்றா? பெற்றோர் செய்யும் பாவ காரியங்களின் பலன் குழந்தைகளுக்கு கிட்டும் என்று சொல்லக்கேள்வி. இவர்களின் பாவங்களுக்கு என்ன தீர்ப்பு?   14:58:52 IST
Rate this:
0 members
0 members
7 members

செப்டம்பர்
16
2017
பொது இனி ஓட்டுனர் உரிமம் பெற ஆதார் எண் கட்டாயம்
நல்ல முயற்சி .. ஆதார் இணைப்பை கேலி செய்வோர் சிந்திக்க வேண்டும். அரசாங்கம் சட்ட விரோத நடவடிக்கைகளை தடுக்க முயற்சி செய்வதை வரவேற்க வேண்டும். நம் நாட்டில் முறைகேடாக அடையாள அட்டை பெறுவதை தடுக்கவேண்டும். நம் தேசத்தின் பாதுகாப்புக்காக சில காரியங்கள் செய்யவேண்டி உள்ளது. தீவிர வாதிகள் இதுபோன்ற ஓட்டைகளை பயன்படுத்துவதை தடுக்கவேண்டும். வயலில் களை எடுப்பது, மரத்தின் கிளைகளை வெட்டி சீராக்குவது , முட் புதர்களை அகற்றுவது இவை எல்லாம் கடினமான செயல் என்று நினைப்போமேயானால் எப்படி சீராக்க முடியும் ? போது நலனுக்காக தனி மனிதன் சில சிரமங்களை பொறுத்துதான் ஆகவேண்டும்.நமது தேசப்பிதா காந்திஜி தன் சுய சிரமங்களை பார்த்திருந்தால் நமக்கு சுதந்திரமே கிடைத்திருக்காது. சுதந்திர இந்தியாவில் பிறந்த நமக்கு அடிமை வாழ்க்கையின் அவலம் தெரியாது . கருத்து சுதந்திரம் என்ற பேரில் முக்கியமான காரியங்களை கேலி செய்வது தவறு. ஒரு சட்டவிரோத செயல் நடக்கும் போது, நாட்டில் பாதுகாப்பு இல்லை , அரசு என்ன செய்கிறது என்று குரல் எழுப்புகிறோம் . ஆனால் அரசு இது போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கும் போது கேலி செய்கிறோம். இது சரியான மனோபாவமா? நம்ம ராணுவ வீரர்கள் தியாகம் செய்யாமல் நாட்டின் பாதுகாப்பு நடக்குமா? எல்லோராலும் ராணுவ சேவை செய்ய முடியாது . இது போன்ற செயல்களுக்கு ஆதரவு கொடுப்பதும் ஒரு விதத்தில் ராணுவ சேவை போலத்தான் .. விவரம் தெரிந்தவர்கள் தெரியாதவர்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும் அது எல்லா இந்தியர்களின் கடமையும் கூட ..நாம் நமது தேச பாதுகாப்புக்காக , நமது அமைதியான வாழ்க்கைகாக, நம் வருங்கால சந்ததியர்க்காக சில சிரமங்களை பொறுத்துக்கொள்வோம். ஜெய் ஹிந்த்   12:50:30 IST
Rate this:
1 members
0 members
14 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X