உண்மை உண்மையாக வெளிப்படும்போதுதான் மதிக்கப்படும். திரைக்காக உண்மையை திரித்தது சூர்யா அவர்கள் செய்த கொடுமை. மேலும், பழைய வரலாறுகளைக் கிளறி அதில் காய்வது வேதனை. உண்மையே ஆனாலும் அவை இன்று மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த வாய்ப்பு அதிகமுள்ளது. முகலாயர்கள் செய்த கொடுமைகளை விட பெரிதானது வேறு உண்டா என்ன? அவைகளை திரும்ப தோண்டிக் கொண்டிருந்தால் நமது இஸ்லாமிய சகோதரர்களே தவறானவர்கள் என்கிற உணர்வுதான் மிகும். அத்தகைய செய்கை எத்தனை சோகமானது. வரலாறு வரலாறாக இருக்கட்டும். எல்லோரும் அறிந்த ஒன்றை புதிதாக கூறுவது நம்மிடையே கிளர்ச்சியையே தூண்டும். வேதனையான இந்த விஷயங்கள் மறக்கப்பட வேண்டும். இன்றைய கால சூழ்நிலை மிகவும் வேறானது. அனைவரையும் அணைத்துச் செல்லும் நாகரிகமும் அரசு கொள்கைகளும் நிலவுகின்றது. இதில் கர்ணன் மற்றும் ஜெய் பீம் படங்கள் ஒரு சாராருக்கு நியாயமாகவே தெரிந்தாலும் நம் சமூக நல்லிணக்கத்திற்கு தடைகளை ஏற்படுத்தும். நம்மை நாம் புரிந்து கொண்டோமானால் கீழ்த்தரமான அரைவேக்காட்டு படங்கள் வெளிவராது. நம் மீது மதிப்பும் நம்பிக்கையும் கொள்ளவேண்டிய தருணம் இது. தேன் கூட்டை கலைத்து விடாதீர்கள் கூத்தாடிகளே.
16-நவ-2021 12:06:46 IST
புலம்பாதீர்கள். செவிடன் காதில் சங்கு ஊதுவது எதற்கு. தூங்குபவரைபோல் பாசாங்கு செய்வோரை எழுப்ப இயலுமா? துணிந்து நீதிமன்றத்திற்குச் செல்லுங்கள். இந்த இந்திய அரசியலமைப்பு சட்டங்களை மோதி மிதியுங்கள். சாதியால்தான் நம்மை பிரிக்க முனைவார்கள் ஆனால் எந்த சாதியானாலும் இந்துக்களாக ஓன்று கூடி ஆத்தீகத்தை நிலை பெறச் செய்வோம். உண்மையான மத உணர்வுடையவர்கள் எவரும் ஒன்றிணைவர்.
05-அக்-2021 12:05:18 IST
பொருளாதார வல்லுநர்கள் இருப்பது நல்லது. ஆனால் அவர்கள் நமது மக்களை நமது வேலைகளை புரிந்தவர்களாக , நமது மக்களை நேசிப்பவர்களாக இருக்கவேண்டுவது மிக முக்கியம். பொருளாதாரம் என்பது நமது மாநிலத்தில் தனித்து செயல்பட இயலாது. சமூக நீதி, விவசாயிகள் ஏற்றம், சமுக பாதுகாப்பு என்கிற விஷயங்கள், நேரடியான பொருளாதார தீர்வுகளுக்கு பல சமயங்களில் எதிராகவும் போகும். நமது சுயம் மறந்து போகும்.
22-ஜூன்-2021 10:53:08 IST
நீட் தமிழ் நாட்டுக்கு மட்டுமல்ல, இந்திய மாணவர் எவருக்கும் நன்மை தரக் க்கூடியதல்ல . நீட் ஒரு சுமை. பொதுத் தேர்வே மருத்துவ கல்லூரி சேர்க்கைக்கு போதுமானது. அதை மிஞ்சிய தேர்வு மாணவரின் தரத்தை பரிசீலிக்க எதுவுமில்லை. நீட் தேர்வு நீக்கப் படவேண்டியது. மக்கள் சொல்வதை கேட்பதுதான் ஒரு அரசுக்கு அழகு. அரசனால், மாநில அரசானாலும் சரி. மாணவரை மதிக்கக் கற்றுக்கொள்ளவேண்டும்.
09-ஜூன்-2021 15:48:48 IST
வழக்கறிஞர், கே.பத்மபிரியா, எழுதியிருப்பதை நான் மறுக்கிறேன். கால மாற்றத்தின் விளைவாக ஏற்படும் எதையும் நாம் ஏற்றுக்கொண்டு அதற்கான தீர்வுகளைக் காண வேண்டும். நம்முடைய செயல்பாடுகளுக்கு மற்ற ஊடகங்கள் முதலானவையை பழி கூறுவது வேடிக்கைதான். மாணவரும் மாணவியும் ஒருங்கிணைந்து செயல்படுவது இன்றைய இயற்கை. இதில் பாலியல் குற்றங்கள் தவிர்க்கப்படவேண்டுமெனின் அவர்களுக்கு உரிய தகவல்களையும் அவர்களது வாழ்க்கைத் திறன்களையும் அதிகரிக்க வேண்டும். லைப் ஸ்கில்ஸ் இதற்கு சிறந்த ஒரு மாற்று. காலத்திற்கேற்ப நாம் செயல் பட நம்மை நாம் புதுப்பித்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது.
06-ஜூன்-2021 07:19:51 IST
நீட் முதலான தேர்வுகள் பொதுத் தேர்வு முடிந்தபின் அதன் அடிப்படையில் எழுதப் படுவது. அனால் பொதுத் தேர்வு என்ற ஓன்று இருக்கையில் நீட் போன்ற தேர்வுகள் வீண். காசும் நேரமும் வீண். மாணவர்களை அவமானப்படுத்தும் செயல். மன உளைச்சலும் செலவுகளும் ஏற்படுத்தும் தேவையில்லாத செயல். அவரவர் மாநிலத்துக்குள்ளே அவரவர் விருப்பப்படி பொதுத் தேர்வின் அடிப்படையில் சேர்க்கை ஒரு நியாயமான நேர்மையான செயல். இதில் தரம் என்பது கேள்விக்குறி என்று சொல்வது அறிவின்மை. தரம் என்று பார்த்தால் எல்லோருக்கும் வேறுபாடு உண்டு. இதில் நீட் என்ன தரம் சார்ந்தது?
04-ஜூன்-2021 08:42:40 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.