sethusubramaniam : கருத்துக்கள் ( 184 )
sethusubramaniam
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
23
2018
கோர்ட் வெள்ள பாதிப்பு தமிழகம் மீது கேரளா புகார்
கேரள வெள்ளம் மலையாள தேசம் இன்று மழை வெள்ள தேசமாச்சு கடவுளின் தேசம் இன்று கடல் கொண்டாற்போலாச்சு. அழகு கொஞ்சும் கேரளம் - இன்று அவலக்குரல் ஏராளம் . தண்ணீர் வெள்ளம் அதிகமா -மக்கள் கண்ணீர் வெள்ளம் அதிகமா . சரிவுகளில் கட்டிய வீடுகள் சரிந்து பெரும் சேதமாச்சு கடல்கடந்து சேர்த்ததெல்லாம் கரை கடந்த வெள்ளத்தாலே கண்ணெதிரே கரைஞ்சு போச்சு கனவுகள் கலைஞ்சுபோச்சு . சாபமென்றும் ,பாவமென்றும் காரணங்கள் தேடவேண்டாம் . இயற்கையின் சீற்றமென்றே இதனை நாம் உணரவேண்டும். தேகத்தால் உதவி செய்வோம் . தேவைகளுக்கு உதவி செய்வோம் உணவு, உடை கொடுத்திடுவோம் , உயிர்காக்கும் மருந்தளிப்போம் , அவரவர்க்கியன்றதனை அணுவளவேணும் உதவிடுவோம்.- அவர்கள் கேரளத்தவரோ , இந்தியரோ அல்ல -இன்று பேரழிவில் சிக்கியுள்ள மாந்தர்கள் என்றறிவோம் மதங்களைக் கடந்து இதில் மனித நேயம் காட்டிடுவோம். இனம் மொழி, மறந்து நம் இதயத்தைக் காட்டிடுவோம் . ஈனப்பிறவிகள் சிலர் இதிலும் கலகம் செய்வார் . அடையாளம் கண்டவரை அடியோடு புறக்கணிப்போம். அகில உலகினரும் கொடையாய் அள்ளிக்கொடுப்பதெல்லாம் எரிந்த வீட்டில் பிடுங்கியது ஆதாயம் என்றெண்ணி கையாடல் ,ஊழல் என கயமைகள் செய்யாமல் அவலத்தைத்தீர்த்திடவே அரசங்கம் செயல்படட்டும். இழப்புகள் அதிகம்தான் -உயிர் இழப்புகள் பெரும் சோகம்தான் . இழக்காதீர் நம்பிக்கையை இருக்கின்றோம் நாங்களெல்லாம் . மலையாள தேசத்திற்கு மலையளவு உதவிடுவோம். அன்புடன் சிலேடை சித்தர் சேதுசுப்ரமணியம்   21:50:16 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
19
2017
சம்பவம் ‛பீட்டாவுக்கு பாடை கட்டிய இளைஞர்கள்
மக்களைக் கடித்துக் குதறிய வெறிநாய்களைக் கொள்ளாத தடை வாங்கிய பீட்டா வின் செயலைக் கண்டித்து கேரளா மக்களும் பீட்டாவுக்கெதிராக ஒன்று திரளவேண்டும். மிருகங்களுக்கு சட்டப்படி வாழ்வுரிமைகோரும் பீட்டா , அந்த சட்டத்தை உருவாக்கிய மனிதனின் வாழ்வுரிமையைக் கேள்விக்குறியாக்குவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். தமிழக மற்றும் கேரளா பாராளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா உள்ளிட்ட செயல்கள் மூலம் பீட்டாவைக் கட்டுப்படுத்தவும் , அந்த அமைப்பைத் தடை செய்யவும் முன்வர வேண்டும். இல்லையேல் இவர்கள் மீண்டும் மக்களின் முன்வந்து நின்று வாகுக்கு கேட்க தகுதியற்றவர்கள் . பீட்டாவுக்குக் காட்டுவோம் டாட்டா .   14:20:25 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
19
2017
சம்பவம் ‛பீட்டாவுக்கு பாடை கட்டிய இளைஞர்கள்
பீட்டா அமைப்பு அந்நிய சக்திகளால் நமது நாட்டில் திணிக்கப்பட்டுள்ளது. சில பல சர்வதேச நிர்பந்தங்களால் அனுமதிக்கப்பட்டுள்ளது. அமைப்பின் நோக்கத்தை நாம் குறைகூறவில்லை. ஆனால் செயல்பாடுதான் சந்தேகத்திற்கிடமளிப்பதாக உள்ளது. நாட்டுக்கு நாடு இதன் செயல்பாடுகளும் , கொள்கைகளும் மாறுபடுவது ஏன். ? அந்நிய தேசத்தில் ஆயுதம் கொண்டு காளைகள் தாக்கி கொல்லப்படும் வீர விளையாட்டைத் தடை செய்ய ஏன் இந்த அமைப்பு முனையவில்லை. அரசாங்கங்களுக்குத் தகுந்தாற்போல் கொள்கைகளையும் மாற்றிக் கொள்வது எப்படி நடுநிலைக் கொள்கையாக முடியும். அனைத்துவகைகளிலும் , அனைத்து நாடுகளிலும் , எக்காரணத்திற்காகவும் விலங்குகள் கொல்லப்படுவதைத் தடுப்பதுதானே ஒரே கொள்கையாக இருக்கமுடியும்.? அப்படி செயல்படுவதாகத் தெரியவில்லையே. இந்த அமைப்பின் இந்திய நிர்வாகிகள் , தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த முடியாது, விடமாட்டோம் , பார்க்கிறோம் என்றெல்லாம் ஆணவத்துடன் கொக்கரிப்பதை எப்படி அனுமதிப்பது ? இந்திய கலாச்சாரத்திற்கும் , தமிழர் பண்பாட்டிற்கும் , குழிதோண்டிப்புதைக்க விடும் சவாலாக இதை மக்கள் எடுத்துக்கொண்டால் , அவர்களின் எழுச்சியை இந்த அமைப்பு தாங்குமா ? மானமுள்ள இந்தியர்களாக இருந்தால் , தமிழகத்தின் உப்பைத்தின்று வளர்ந்தவர்கள் என்றால், நன்றி உணர்ச்சி உள்ளவர்களாக இருந்தால் , சில கோடிகளுக்காக இதன் பிரதிநிதிகளாக உலாவரும் த்ரிஷா போன்றவர்கள் அந்த பணத்தைத் திருப்பிக்கொடுத்துவிட்டு , பதவியை ராஜினாமா செய்யவேண்டும் . இல்லையேல் , இவர்கள் தமிழகத்தில் கால் பதிக்கவும் , தமிழர்களின் பணத்தில் வாழ்க்கை நடத்தவும் தகுதியற்றவர்கள். நாட்டில் குழப்பம் விளைக்கவும், அமைதியைக் குலைக்கவும் , அந்நிய சக்திகளின் தூண்டுதலால் செயல்படும் இந்த அமைப்பின் செயல் பாட்டையும், கணக்குகளையும் , இதன் உறுப்பினர்களின் பின்னணியையும் ஆராய்ந்து , இந்த அமைப்பை தடை செய்ய மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே மக்கள் விருப்பம். நடுவண் அரசு நாட்டுப்பற்றுள்ள நாடு நிலையான அரசு என்பதை மக்கள் மன்றத்தில் நிரூபிக்கவேண்டும். பீட்டாவுக்கு சொல்லவேண்டும் டாட்டா. மிருகவதை தடுக்க நமது நாட்டில் போதிய சட்டங்கள் உள்ளன. அவற்றை சட்டத்தின் காவலர்கள் , சரியான முறையில், ஊழலுக்கு இடங்கொடாமல் அமல்படுத்தினால் போதுமானது. எனது வீட்டை சரிப்படுத்த அடுத்தவீட்டுக்காரன் தேவையில்லை.   14:07:04 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
19
2017
சிறப்பு பகுதிகள் இது உங்கள் இடம்
ஜல்லிக்கட்டு என்பது தமிழனின் வீர விளையாட்டுக்களில் ஒன்று என்பதற்கு சரித்திரச் சான்றுகள் பலவுண்டு. ஏறு தழுவலில் வெல்லும் வீர இளைஞனையே மணாளனாக ஏற்பர் தமிழ்ப் பெண்டிர் என்பது தமிழனின் வீர வரலாறு. கலித்தொகை முதல் பல்வேறு நூல்கள் ஏறு தழுவுதல் குறித்து பதிவு செயதுள்ளன. ஜல்லிக் கட்டு மாடுகளின் கொம்பிலோ கழுத்திலோ பணமுடிப்பையும் , பரிசுகளையும் கட்டிவைத்து , பொதுவில் அவிழ்த்து விட்டு , அதை அடக்கி அதன் கொம்பிலோ கழுத்திலோ கட்டப்பட்டுள்ள பரிசுகளை எடுக்கும் வீர இளைஞர்களுக்கே வழங்கும் வழக்கம் தொன்று தொட்டு நடந்து வருகிறது. இதில் காளையை அடித்து துன்புறுத்தவோ , ஆயுதங்களை உபயோகித்து காளையை காயப்படுத்தவோ, தாக்கவோ அனுமதி இல்லை. மாறாக மாடு முட்டுவதால் கொம்பினால் தாக்கப்பட்டு , கிழிபட்டு , காயப்பட்டு இளைஞர்கள் இரத்தம் சிந்துவதும் , உயிரையே இழப்பதும் உண்டு. அப்படியிருக்க ஜல்லிக்கட்டு என்பது மிருகவதை என்ற வாதம் எங்கிருந்து வந்தது என்று புரியவில்லை. தமிழ்கலாச்சாரம் மட்டுமின்றி இந்து கலாச்சாரத்திலும் மிருகங்களை பாதுகாப்பதற்குத்தான் முதலிடம் தரப்பட்டுள்ளது. அவற்றின் மேல் பரிவும், பக்தியும் ஏற்படவேண்டும் இன்றுதான் அன்னம், கருடன், காக்கை ,மயில் போன்ற பறவைகள் முதல் சிங்கம், புலி, எருமை, யானை ,எலி போன்ற மிருகங்கள் வரை அனைத்தையும் தெய்வங்களின் வாகனங்களாக அமைத்தது இந்து மதம். கோ பூஜை, கோதானம் , கோ சம்ரக்ஷணம் என்பவை இந்து பெரும் புண்ணியமாக வரிக்கப்பட்டுள்ளன. அபிவாதயே என்னும் நமஸ்கார மந்திரத்தில் ' கோ ப்ராஹ்மணேப்ய சுபம்பவது ' என்று கூறப்பட்டுள்ளது. சந்தியா வந்தனத்தில் வரும் உபஸ்தான மந்திரத்தில் 'நமோ ப்ரம்மண்ய தேவாய , கோப்ராஹ்மண ஹிதாயச ' என்று ஆவினத்தையும் , ப்ராஹ்மணர்களையும் பராமரிக்க வேண்டிய முக்கியத்துவத்தையும் கூறியுள்ளது வேதம். சைவ சமயக் கடவுளான ஈஸ்வரன் வாகனமாக காளை இருப்பதும் , கிருஷ்ணாவதாரத்தில் பசுக்களை பாதுக்காக்கும் யாதவ குலத்தில் வளர்ந்து கோவிந்தன் என்று கண்ணன் அழைக்கப்பட்டதும் , பாற்கடல் கடைந்தபோது செல்வமெல்லாம் தரும் காமதேனு என்ற பசு வெளிவந்ததாக சொல்லப்படுவதும், காளைகளையும் , பசுக்களையும் இந்துமதம் எந்த அளவு பாதுகாக்க வலியுறுத்தியுள்ளது என்று அறியலாம். கன்றுக்குட்டியின் மீது தேரேற்றி அதன் இறப்புக்குகாரணமான தன் மகனை அதன் தாய்ப்பசுவுக்கு நீதி வழங்கும் பொருட்டு , சோழமன்னன் தன் மகன் மீதே தேரேற்றிக் கொன்றது தமிழக வரலாறு. புறாவைக் காக்க தன் சதையை அறிந்து கொடுத்தான் மனு நீதி சோழன் . முல்லைக்குத் தேர் கொடுத்தான் பாரி. இவ்வாறு தமிழர்கள் பாரம்பரியமாக விலங்குகளையும், பறவைகளையும், தாவரங்களையும் பரிவுடன் நடத்திவந்துள்ளது வரலாறு. இந்து மதம் மட்டுமின்றி , பௌத்த மதமும், ஜைன மதமும் , சீக்கிய மதமும் கூட உயிர்வதையை எதிர்த்து வந்துள்ளன . அது மட்டுமின்றி உலகளாவிய கிறித்தவ மதமும் , இஸ்லாமும் கூட உயிர்வதை மகா பாவம் என்பதை வலியுறுத்தி வந்துள்ளன. இவ்வாறிருக்க ' ஜல்லிக் கட்டு ' என்பது காளைகளை துன்புறுத்துவது என்பது ஏற்க முடியாத வாதமாக இருக்கிறது. அதனால்தான் இந்த போராட்டத்தில் அனைத்து மதத்தினரும் மத மாச்சரியமும் , மனமாச்சரியமும் இன்றி ஒருங்கிணைந்து போராட்டத்தில் கலந்து கொள்கிறார்கள் . இது எந்தவிதமான தூண்டுதலும் இன்றி தன்னிச்சையாக , தன்னார்வத்துடன் கலந்து கொள்ளும் மக்கள் கூட்டம். அரசியல்வாதிகளையும் , சுயநலவாதிகளையும் , ஆதாயம் தேடவிடாமல் தவிர்த்துவருவது போராட்டத்தை திசை திருப்ப விடாமல் செய்துவருகிறது. அதனால்தான் சமூக விரோத சக்திகள் நடத்தும் கல்வீச்சு, கண்ணாடி உடைப்பு, பஸ் எரிப்பு போன்ற வழக்கமான கலவரங்கள் இல்லாது இருக்கிறது. இது அப்துல் கலாம் அவர்கள் மரணத்தின் பொது எவ்வித கலவரமும் இன்றி பொது மக்கள் அஞ்சலி செய்தவிதத்தை நினைவு படுத்துகிறது. அதனால்தான் இந்த போராட்டம் அகில இந்தியாவையும் , ஏன் ,அகில உலகையும் கவர்ந்து வருகிறது. ஆதரவையும் திரட்டி வருகிறது . ஜல்லிக் கட்டுக்காக போராட்டம் நடத்திவரும் இளைஞர்களும் , பொது மக்களும் தற்போது உள்ளதுபோல் அறவழியிலேயே போராட்டத்தைத் தொடரவேண்டும். காவல் துறையினரும் , அரசும், அரசியலாரும் சமூகப் பொறுப்புடன் நடந்துகொண்டு , தங்கள் அணுகுமுறையை கையாளவேண்டும். வெல்லட்டும் அறப்போராட்டம் . காக்கப்படட்டும் தமிழர் பண்பாடும் ,பாரம்பரியமும். இந்தப் போராட்டத்தின் வலிமையையும், நியாயத்தையும் உணர்ந்து உச்ச நீதி மன்றமும், மத்திய அரசும் நீதி வழங்கட்டும். இதே ஜல்லிக்கட்டை ' தமிழ்ப்புத்தாண்டு அன்றும் , சித்ரா பௌர்ணமியன்றும் தடைகளின்றி நடத்த வழி பிறக்கட்டும்.   13:08:41 IST
Rate this:
0 members
1 members
2 members
Share this Comment

டிசம்பர்
30
2016
அரசியல் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மீது வழக்கு பாயும் பா.ஜ., எச்சரிக்கை
ஆதாரங்களை நீதி மன்றத்தில் சமர்ப்பித்து வழக்கு பதிவு செய்ய சவால் விடுங்கள். அதை விடுத்து அரசு இயந்திரத்தை வைத்து மிரட்டாதீர்கள்.   11:11:11 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜூலை
10
2016
உலகம் அமெரிக்காவை பழிவாங்குவேன் ஒசாமா மகன் திடீர் எச்சரிக்கை
இஸ்லாமியர்களையே நிறைய அழிச்சுக்கிட்டிருக்கற , ஐ .எஸ் . தீவிரவாதிங்க கிட்டே இருந்து முதல்லே அவங்களைக் காப்பாத்துங்க . அப்புறம் இஸ்லாமைக் காப்பாத்தலாம் .   08:29:53 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

ஜூலை
11
2016
உலகம் நான் ஏமாற்றவில்லை மல்லையா விளக்கம்
அப்போ இருந்த ' ஸ்பிரிட் ' இப்போ இல்லையேன்னு ஆதங்கப் படறார் மல்லையா . அவர் யாரையும் ஏமாற்றவில்லை என்பது உண்மையாகத்தான் இருக்கும். மற்றவர்கள் அவர்களாகவே அவரிடம் ஏமாந்ததற்கு அவர் எப்படி பொறுப்பாக முடியும் .   08:26:28 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஜூலை
11
2016
பொது மாணவர்களுக்கு நீதி போதனை வகுப்பு அவசியம்
செஞ்சோற்றுக் கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா   08:21:25 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
11
2016
பொது அப்பாவிகள் பலியானால் ரூ.5 லட்சம் நிதி மத்திய அரசு
எல்லா அப்பாவிகளும் பலியாகி முடிக்கும் வரை இந்த ' சிறப்பு அந்தஸ்து ' திட்டம் தொடரும் .   08:18:25 IST
Rate this:
2 members
0 members
2 members
Share this Comment

ஜூலை
11
2016
அரசியல் மீண்டும் நேஷனல் ஹெரால்டுகாங்கிரஸ் தீவிர முயற்சி
' யங் இந்தியன் ' என்பது ஒருவேளை ராகுலைக் குறிக்குதோ ?   08:16:27 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X