Muthusamypillai Dhandapani : கருத்துக்கள் ( 2 )
Muthusamypillai Dhandapani
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
30
2018
கோர்ட் பொன்.மாணிக்கவேலை சிறப்பு அதிகாரியாக நியமித்து ஐகோர்ட் அதிரடி
மிகவும் பாராட்டத் தக்க தீர்ப்பு. இந்த நடவடிக்கையை ஆளும் அரசு அல்லவா எடுத்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் ஏன் எடுக்கவில்லை? மிகவும் யோசிக்க வேண்டிய விஷயம். சிலை கடத்தலை தடுக்க வேண்டிய அரசு அதில் வெகு சிறப்பாக நடவடிக்கை எடுத்து வரும் ஓர் நேர்மையான அதிகாரியை பாராட்டி ஊக்குவிக்காமல், அவரிடமிருந்து சிபிஐ க்கு மாற்ற நினைப்பதும், பதவி நீட்டிப்பு கொடுக்காமல் இருப்பதும் ஏன்? பொதுமக்களாகிய நாமும், இன்றைய ஊடகங்களும் விழிப்புணர்வுடன் இருக்கும் காலகட்டதிலிலேயே, அனைவரும் கவனிப்போம் என தெரிந்தே அரசு ஏன் இப்படி செயல் படுகிறது? ஒருவேளை இந்த பிரச்சனையை ஊடகங்களும், பொதுநலம் பேணும் வழக்கறிஞர்களும், சமூக ஆர்வலர்களும் சரிவர மாண்புமிகு உயர் நீதி மன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லாதிருந்து இருந்தால், கோவில் சிலைகள் கதி என்ன ஆகும்? நினைக்கவே நெஞ்சு குமுறுகிறது. நீதியை நிலை நாட்டை பாடுபட்ட அனைவருக்கும் பொது மக்களாகிய நாம் நன்றி தெரிவிப்போம். இப்பொழுது போலவே, அனைவரும் சிலை கடத்தல் வழக்குகளை கவனமுடன் கண்காணிப்போம். தமிழக அரசு மாண்புமிகு உயர்நீதி மன்ற தீர்ப்பை ஏற்று கொண்டு, திரு. பொன்மாணிக்கவேல் அவர்களின் பணிக்கு உறுதுணையாக இருப்பது உத்தமம். நற்பெயரையும் அரசுக்கு ஈட்டித் தரும். மாறாக, உச்சநீதி மன்ற அப்பீல், திரு. பொன்மாணிக்கவேல் அவர்களின் விசாரணைக்கு முட்டுக்கட்டை என இறங்குமானால் அது அவப்பெயரை ஏற்படுத்தும்.   18:47:23 IST
Rate this:
0 members
0 members
12 members
Share this Comment

பிப்ரவரி
1
2018
பொது பிட்காயினுக்கு ‛குட்பை
மாண்புமிகு நிதியமைச்சர் பிட் காயின் போன்ற கிரிப்டோ கரன்சியை சட்ட விரோத செயல்பாட்டிற்கு பயன் படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப் படும் என்று தெரிவித்துள்ளார்கள். சட்ட விரோதம் illegal என்று எங்கும் கூறவில்லை என்பதை கவனிக்கவும். சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு பயன் படுத்தினால் குற்றம் ஆகும். மற்றபடி முதலீடு செய்து அதில் ஏற்படும் விற்பனை, இலாபம், நஷ்டம் குறித்து சட்டப்படி ஏதும் நடவடிக்கை எடுக்க முதலீடு செய்தவரால் முடியாது என்பதைத்தான் the government doesn't consider cryptocurrency as legal tender என்ற வார்த்தைகள் குறிக்கும் என்பதை கவனிக்கவும். முறைப்படி ரிஜிஸ்டர் செய்து ஏற்படும் இலாபத்திற்கு வரி கட்டுவோருக்கு ஆபத்தில்லை என்பதே என் கருத்து.   14:39:48 IST
Rate this:
2 members
0 members
19 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X