New Indian : கருத்துக்கள் ( 52 )
New Indian
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
18
2020
பொது புத்தகத்தை பார்த்து தேர்வெழுத புதுச்சேரி பல்கலை அனுமதி
சிந்தித்துப்பார்க்காமல் மனப்பாடம் செய்ய யாருக்கு தெரியுமோ அவனே நம் கல்வி முறையில் சிறந்த மாணவன். இது கல்வியல்ல, மனப்பாட போட்டி. தரமான உயர்நிலை கல்விமுறை இப்படி உருவாக்கலாம்: கல்லூரி வகுப்பறைகளைகளில் ஒவ்வொரு மாணவனுக்கும் கணினி வசதி செய்து கொடுத்து ஆர்வமுள்ள பாடங்கள், தொழில்களைபற்றி தாமே ஆராய்ந்து அறிந்துகொள்ள அவர்களை கண்காணிப்புடன் ஊக்குவிக்கவேண்டும். பழைய கல்வி முறையில் பட்டங்கள் குவித்த பேராசிரியர்களல்ல, ஒவ்வொரு துறையிலும் சாதனைகள் புரிந்த வல்லுநர்கள் அங்கு மாணவர்களை சந்தித்து கருத்துகள் பரிமாறி உதவ வேண்டும். உண்மையான வல்லுநர்களுக்கு சிறந்த மாணவனை கண்டறிய பரீட்சை நடத்த வேண்டிய அவசியமில்லை.   21:00:54 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
12
2020
சம்பவம் நீட் தேர்வு பயத்தில் மதுரை மாணவி தற்கொலை
ஒவ்வொரு மாணவரும் தனித்தன்மையுடையவர். எல்லோரும் பொதுவான ஒரு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டுமென்று கட்டாயப்படுத்துவது விவேகமல்ல. இது பெரும்பாலான மாணவர்களுக்கு பயத்தையும் மனச்சோர்வையும் ஏற்படுத்துகிறது. தன்னம்பிக்கையை தகர்க்கிறது. தேர்வில் தோல்வியடைந்தவர்களை பெற்றோர்களும், உறவினர்களும் நண்பர்களும், சமூகமும் பரிகசிப்பதால் சில மாணவர்கள் தற்கொலையும் செய்து கொள்கின்றனர். இந்தியாவை அடிமைப்படுத்தி ஆண்ட ஆங்கிலேய அரசு அளித்த பெருமை மிக்க நம் பொதுத்தேர்வை முதலில் நாம் சரியாக புரிந்து கொள்ள வேண்டும். மீன் தண்ணீருக்குள் நீந்தும், குரங்கு மரத்தில் ஏறும், பறவை பறக்கும், கால்நடை பால் தரும், நாய் காவல் காக்கும், சிங்கம் வேட்டையாடும், யானை பாறைகளை உருட்டும். இவை எல்லாம் மரம் ஏற வேண்டும் அல்லது தண்ணீருக்குள் நீந்த வேண்டும் என்று அவைகளுக்கு பொதுத்தேர்வு நடத்தி அதில் தேர்ச்சி பெறாதவை திறமையற்றவை என்று அறிவித்து நிந்திப்பது போன்றது இது.   09:37:58 IST
Rate this:
4 members
0 members
1 members

செப்டம்பர்
8
2020
சம்பவம் பப்ஜி மீதான தடையை நீக்க வாய்ப்பு - சீன நிறுவனத்துடனான உறவை முறித்துக்கொண்டது!
வன்முறையை மைய்யமாகக்கொண்ட பப்ஜி போன்ற மொபைல் போன் விளையாட்டுக்களால் சிறுவர்களின் மனவளர்ச்சி பாதிக்கப்படும், நாட்டின் கலாச்சாரத்துக்கும் ஏற்றதல்ல. எக்காரணம். கொண்டும் இதை மீண்டும் அனுமதிக்கக்கூடாது.   20:50:34 IST
Rate this:
0 members
1 members
21 members

செப்டம்பர்
7
2020
பொது கங்கனா ரணாவத்திற்கு ஓய் பிளஸ் பாதுகாப்பு
99% இந்தி நடிகர்கள் போதைப்பொருள் உபயோகிக்கிறார்கள் என்றும் மும்பை பாக்கிஸ்தானின் ஒரு பாகமாக மாறிவிட்டதென்றும் தைரியமாக குற்றம் சாட்டிய இந்தி நடிகை கங்கனா ரணாவத் மும்பை செல்லும்போது போதை பொருள் கடத்தல் கிரிமினல்கள் மற்றும் அவர்களுக்கு துணை போகும் அரசியல் கட்சி குண்டாக்களால் ஆபத்து நேரலாம். ஆளும் சிவா சேனா கட்சியினர் அவரை மும்பைக்கு வரக்கூடாது என்று கூறிய நிலையில் உரிய பாதுகாப்பை மஹாராஷ்ட்ரா போலீசிடம் எதிர்பார்க்கமுடியாது. அவருக்கு ஓய் பிளஸ் பாதுகாப்பு அளிக்க மத்திய அரசு உத்தரவிட்டது சரியான நடவடிக்கை.   19:35:57 IST
Rate this:
0 members
0 members
2 members

செப்டம்பர்
7
2020
சம்பவம் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் டார்ச்சரால் ஆட்டோ டிரைவாக மாறிய அரசு டாக்டர்
வேலை செய்ய வற்புறுத்திய IAS அதிகாரிகள் தம் கடமையைத்தான் செய்தனர். மறுத்த மருத்துவர் கடமை தவறியவர். ராஜினாமா செய்துவிட்டு தம் குற்றத்தை மறைக்க விளம்பரம் செய்கிறார். அப்பணியை ஆர்வமுடன் செய்ய தயாரான புதிய மருத்துவரை நியமிக்க வேண்டும்.   10:48:49 IST
Rate this:
5 members
0 members
13 members

செப்டம்பர்
5
2020
பொது உணவகங்களில் ஏசி பயன்படுத்தி கொள்ள தமிழக அரசு அனுமதி
சினிமா அரங்குகளையும் திறந்து அத்துறையை நம்பி வாழும் எண்ணற்ற தொழிலாளர்களுக்கும் நல்ல திரைப்படங்களை பெரிய திரையில் கூட்டத்துடன் பார்க்கும் சுவாரசியத்தை இழந்து வீட்டில் முடங்கியிருந்து டிவி யில் மட்டும் படங்கள் பார்த்து சலித்த சினிமா ரசிகர்களுக்கும் விடுதலை தரலாம்.   23:00:03 IST
Rate this:
1 members
0 members
0 members

செப்டம்பர்
5
2020
சம்பவம் வழி தவறிய சீனர்களை மீட்டு உணவு, ஆக்சிஜன் அளித்த இந்திய ராணுவம்!
சீன எல்லையிலுள்ள இந்திய மாவட்டங்களில் சீனர்களை ஏன் அனுமதித்தார்கள்? இந்தியர்களே பாஸ் வாங்கிக்கொண்டு செல்ல வேண்டிய கட்டாயம் நம் நாட்டின் சில சீன எல்லைப்பகுதிகளில் இருக்கும்போது அந்த எதிரி நாட்டு பிரஜைகளுக்கு அளவு கடந்த சலுகை கொடுப்பது ஏன்? வெளிநாட்டவர்களுக்கு எல்லா சுதந்திரமும் கொடுத்து வரவேற்று நம் நாடு அரசியல் சமய வாழ்க்கைகளில் அடிமைப்பட்டதை மறக்க வேண்டாம்.   20:36:38 IST
Rate this:
1 members
0 members
12 members

செப்டம்பர்
4
2020
உலகம் சிந்து சமவெளி நாகரிகம் அழிய பருவநிலை மாற்றம் காரணமாக இருக்கலாம் ஆய்வில் தகவல்
நகரங்களை கைவிட்டு மக்கள் வெளியேறினால் அத்துடன் அவர்களின் கலாச்சாரம் அழிவதில்லை. அவர்கள் சென்று வாழும் புதிய இடங்களில் அது மீண்டும் மலரும். ஏனென்றால் கலாச்சாரத்தின் வேர் மனிதனுக்குள் இருப்பது. எங்கெல்லாம் அவன் கட்டிடங்களும் பொருட்களும உருவாக்குகிறானோ அங்கெல்லாம் அதன் தன்மை வெளிப்படும்.   16:43:09 IST
Rate this:
0 members
0 members
1 members

செப்டம்பர்
1
2020
பொது தமிழகத்தில் திறந்த கோயில்கள் பக்தர்கள் பரவசம்
முகமூடி, சமூக இடைவெளியை விட நோயை எதிர்க்க வல்லவர் சத்தியவடிவான கடவுள். பெரிய மருத்துவமனையாகிய JIPMER துவங்கும்போது அதற்கொரு லட்சியச்செய்தி தரும்படி ஒரு ஞானியிடம் கேட்டார்கள். ஜிப்மரின் சின்னத்தில் இன்றும் நிரந்தரமாக பதிக்கப்பட்டுள்ள அச்செய்தி: "Truth Cures - Veritas Curat - சத்தியம் நோய் தீர்க்கும்". (எல்லா கோவில்களிலும் அத்தகைய கடவுள் இருக்கிறாரென்று சொல்லமுடியாது.)   13:20:03 IST
Rate this:
3 members
0 members
3 members

ஆகஸ்ட்
29
2020
கோர்ட் அடம்பிடிக்கும் பிரஷாந்த் பூஷனுக்கு என்ன தண்டனை ஆக. 31-ல் உச்சநீதிமன்றம் அறிவிப்பு
Bushan did not offer to apologise because he knows even if he is punished it will be minimal and he can gain more politically by refusing to apologise. The Supreme Court ought to jail this lawyer turned politician disrespecting the Court repeatedly by jailing him for a few months.   09:51:09 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X