Giridharan S : கருத்துக்கள் ( 2503 )
Giridharan S
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
12
2019
அரசியல் மாஜி அமைச்சர் பா.ஜ.,வில் சங்கமம்
அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா. இதெல்லாம் எப்படி செய்யணும்னு நம்ம அய்யாகிட்டே அவருடைய புள்ளையாண்டான் கிட்டே கத்துக்கணும்பா. எது எப்படியோ சின்னவரு MP ஆயிட்டாரு. அதுக்குதான் கட்சி ஆரம்பிச்சாருன்னு நீங்க முணுமுணுக்கறது எனக்கு கேக்கறது என்ன பண்றது நம்ம ..........   06:50:01 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஆகஸ்ட்
29
2019
பொது அனந்த சரஸ் குளத்து நீர் மத்திய குழுவினர் ஆய்வு
என்னதான் சுத்தமான தண்ணீர் விட்டால் கொட்டிட அப்ப அப்ப பெய்யும் மழையால் தண்ணீர் முழுமையாக சுத்தமாக இருக்காது. பொற்தாமரை குளத்தில் இருக்கும் தண்ணீரால் இந்த குளத்தில் நீர் நிரப்புவதால் ஒன்றும் தப்பில்லை. தனிப்பட்ட நபர்களின் வெறுப்பு காரணமாகத்தான் வழக்கு தொடர்ந்து இது போன்ற உத்தரவுகள் பெறப்படுகிறது. அந்த குளம் என்று நிரம்பி வராதா நீ தான் உன்னை காப்பாற்றிக்கொள்ள வேண்டும்   06:59:30 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

ஆகஸ்ட்
28
2019
சம்பவம் முதல்வர் காலை தொட்டு வணங்கிய ஐ.பி.எஸ்.அதிகாரி
அவர் படித்த படிப்பிற்கே மரியாதை இல்லையே. உண்மையில் இவர் படித்து வந்தாரா இல்லை conferred IAS பெற்று வந்தாரா நாடு முன்னேறிடும்   06:55:04 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஆகஸ்ட்
29
2019
பொது காலில் விழும் கலாசாரம் மீண்டும்..
இது தேவைதான். இவரின் காலை வாராமல் இருந்தால் சரிதான். தவழ்ந்து வந்து பதவியை பிடித்தவர். இப்போதுதான் தெரிகிறது அது சசிகலாவின் காலை வாரி விடத்தான். காலம் மாறும். இவரை மதிக்க கூட ஒருவரும் இருக்க மாட்டார்கள்., பதவிக்காக எதையும் செய்ய அரசியல்வாதிகள் தயங்க மாட்டார்கள். அந்த அம்மா நிர்மலா பெரியசாமி கேவலம்   06:53:16 IST
Rate this:
1 members
1 members
13 members
Share this Comment

ஆகஸ்ட்
12
2019
அரசியல் வெளிநாடு செல்கிறார் முதல்வர் இ.பி.எஸ்.,
அரசு செலவில் குடும்பத்துடன் போய்ட்டுவாங்க. ஏன்னா அமித் சா உங்களை மிரட்டிட்டு போயிருக்காரு.   07:10:06 IST
Rate this:
5 members
0 members
3 members
Share this Comment

ஆகஸ்ட்
12
2019
அரசியல் உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.,வுக்கு 33 % இட ஒதுக்கீடு...
அப்பகூட பிஜேபி எந்த இடத்திலும் ஜெயிக்காது. அது ஸ்டாலினுக்கு தான் லாபம். இன்னும் இரண்டு வருடம் ஓட்டவேண்டுமே இந்த ஆட்சியாளர்கள் எதையும் செய்ய தயங்க மாட்டார்கள். காலில் விழுந்து பதவியை பெறுபவர்களுக்கு அதை எப்படி தக்க வைக்க வேண்டும் என்பது தெரியாதா. எதிர்க்கட்சிகள் சொல்வது போல் மிரட்டலுக்கு பயந்து ஆட்சி செய்யும் இந்த அரசு இருக்க தேவையே இல்லை. vellore மக்களவை தேர்தலில் வேட்பாளருக்காக விழுந்த வாக்குகள் தான் அங்கு வேறு யாரையாவது நிறுத்தியிருந்தால் இவ்வளவு வாக்குகள் இந்த கட்சி வாங்கியிருக்காது. அம்மாவோட எல்லாம் போயிடிச்சு. அதை காரணம் காட்டி உள்ளாட்சி தேர்தல் என்ற பரீட்சையை எதிர்கொள்ள போகிறார்களாம். ஐயோ ஐயோ   07:07:11 IST
Rate this:
6 members
0 members
6 members
Share this Comment

ஆகஸ்ட்
9
2019
பொது 108 நாள் தொடர வேண்டும் அத்தி வரதர் தரிசன வைபவம்- இல.ஆதிமூலம்
காஞ்சிபுரத்தில் பொது மக்கள் படும் அவஸ்தை சொல்லி மாளாது. பக்தர்கள் அனைவரும் சேவிக்க வேண்டும் தான். காஞ்சி போன்ற சிறிய சிற்றூரில் 108 நாட்கள் என்பது தாங்காது. ஆகம விதிப்படி அவர் இருக்கவேண்டிய நாட்கள் பூவுலகில் இருந்தால் போதும் 2059 ல பார்த்துக்கட்டும். அப்போது எவ்வளவோ மாற்றங்கள் வரும்   11:30:33 IST
Rate this:
3 members
0 members
1 members
Share this Comment

ஜூலை
20
2019
பொது பக்தர்களுக்கு பாதுகாப்பு முதல்வர் ஆலோசனை
உண்மைதான். ஒரு சிறிய நகரம் மற்றும் ஒரு சிறிய கோவிலில் இந்த வைபவத்தை நடத்துவதற்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகள் பாராட்டுக்குரியதுதான். கோயில் மரபு படி அத்திவரதரை வேறு எங்கும் வைத்து வழி பட முடியாது. இந்த வைபவத்திற்கு எத்தனை நாட்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் துணை ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் மற்றும் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர் என்பதை என் போன்ற காஞ்சிபுர வாசிக்குதான் தெரியும். எல்லா இடங்களிலும் லட்ச கணக்கில் மக்கள் குவியும்போது இதுபோன்ற ஒரு சில அசம்பாவிதங்கள் நடக்கத்தான் செய்யும். senior citizen மற்றும் குழந்தைகளை வைத்துள்ள பெண்மணிகளுக்கு தனியாக தரிசன வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மிகவும் உடல்நிலை பாதிக்க பட்டவர்கள் மற்றும் நிறைமாத கர்பிணிகளுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்படும் என்றுதான் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தது தான் என்னுடைய நினைவிற்கு வருகிறது. எனக்கு தெரிந்தவரை பணியாளர்கள் பக்தர்களின் தரிசனத்திற்கு பிறகு இரவு 2 மணிக்குமேல் கோவிலை சுத்தம் செய்வதும், நீர் தொட்டிகளை நிரப்பவும் செய்கின்றனர். அதைபோல் கோவிலினுள் புதிய வழிகள் மற்றும் பாதிக்கப்பட்ட சாரங்களையும் மாற்றி அமைக்கின்றனர் கோவில் உள்ளேயும் வெளியும் சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பணியில் இரவும் பகலும் பணியாற்றி வருகின்றனர். அதைவிட காஞ்சி பொது மக்கள் படும் சிரமங்கள் அளவிடமுடியாதது. அதுவும் கோவிலை சுற்றியும் அமைந்துள்ள வீடுகளின் வாசிகள் வெளியே செல்ல முடியாமலும் வாகனங்களை வெளியில் எடுக்க முடியாமலும் பல கிலோமீட்டர் தூரம் மாற்றுப்பாதையில் சென்றிடவேண்டிய நிர்பந்தத்தில் உள்ளனர். அவர்களின் குழந்தைகளை பள்ளியில் சென்று விடவும் மீண்டும் அழைத்து வரவும் என்னற்ற துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். ஆனால் இதை யாரும் வெளி காட்டிக் கொள்வது கிடையாது காரணம் வெளியூரிலிருந்து வரும் பக்தர்களுக்காக தாங்கிக் கொள்கிறார்கள். இவர்களும் முடிந்த வரை மாவட்ட நிர்வாகத்திற்கு முழு அளவில் ஒத்துழைப்பை நல்கி வருகின்றனர். எது எப்படியோ அத்திவாரதர் பக்தர்களை பாதுகாக்க நான் பிரார்த்தனை செய்கிறேன்.ஒன்றுமட்டும் நான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நீண்ட நேரம் தங்களின் கஷ்ட நஷ்டங்களையும் தாங்கிக்கொண்டு தரிசனம் சேயும் பக்தர்களுக்குத்தான் பெருமாளின் ஆசி முழுமையாக கிட்டும் குறுக்கு வழியிலும் VIP வழியில் சென்று தரிசிக்கும் பக்தர்களுக்கு அவரின் அருள் முழுமையாக கிடைக்காது என்பதுதான் என்னுடைய நம்பிக்கை. காவல் துறையினருடன் ஒத்துழைத்து பயணம் செய்தால் அத்திவரதரை எளிதாகவும் சிரமமின்றி தரிசனம் செய்யலாம்.   08:54:46 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜூலை
20
2019
பொது டில்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்சித் காலமானார்
ஓம் ஷாந்தி. இவரின் ஆன்மா இறைவனின் பாதங்களில் இளைப்பாறட்டும்.   08:17:53 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

ஜூலை
20
2019
பொது திருப்பதியில் விஐபி டிக்கெட் ரூ.10,000
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் பணமே இல்லையா. அந்த trustkku அவசியம் பணம் தேவையா. அதை விட சாமானியர்கள் சீக்கிரம் தரிசனம் செய்ய வேறு வழி எதாவது இருந்தால் யோசிக்கலாம். நீண்ட நெடுக்க நின்று தரிசனம் செய்யும் பக்தனுக்கே பெருமாளின் ஆசி என்றும் உண்டு. இது போன்று VIP தரிசன வழியில் செல்பவர்களுக்கு அவரின் அருள் மிகவும் குறைவு என்பதுதான் உண்மை.   08:14:47 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X