S.VELMURUGAN : கருத்துக்கள் ( 88 )
S.VELMURUGAN
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
9
2021
அரசியல் நீட் தேர்வு விவகாரத்தில் மக்களை ஏமாற்றும் திமுக முருகன்
திமுக எதிர்கட்சியாக இருந்த போது நீட் தேர்வின் தாக்கத்தை ஆராய்ந்த பின்புதானே அதனை நீக்க வேண்டும் என்று கூறியது.இப்ப ஆளும் கட்சியாக வந்த பின்பு நீட் தேர்வின் தாக்கம் பற்றி புது ஆராய்ச்சியை ஏன் செய்கிறீர்கள்?.   10:19:13 IST
Rate this:
2 members
0 members
20 members

மே
19
2021
உலகம் இந்தியாவை வீணாக விமர்சிக்கலாமா சர்வதேச மீடியாவுக்கு ஹைடன் சவுக்கடி
நன்றி திரு.ஹைடன் அவர்களே.தங்களின் நடுநிலையான கூற்றுக்கு தேசப்பற்று மிக்க ஒவ்வொரு இந்தியனும் தலை வணங்குகிறோம்.   10:51:49 IST
Rate this:
2 members
0 members
26 members

மே
17
2021
பொது இது உங்கள் இடம் கமல் கட்சியின் எதிர்காலம்?
அறிவும் ஆணவமும் உடையவர்கள் களத்தில் தோல்வியை எளிதில் சந்திப்பர் என்பதற்கு கமல் ஒரு உதாரணம்.அறிவும் நிதானமும் மட்டுமே வெற்றியை நல்கும்.தேர்தல் களத்தில் தோல்வி வரும்போது அது தன்னையே சாரும் என்றும், வெற்றி வரும் போது அது தொண்டர்களையே சாரும் என்றும் பேரறிஞர் அண்ணா கூறியதை அவர் வழிவந்த திரு.வைகோவும் கூறியுள்ளார்.ஒரு அரசியல் கட்சி முதன் முதலில் சட்டமன்ற தேர்தலில் நின்று தோல்வியைச் சந்தித்தது சகஜம்தான்.அதனால் இரண்டாம் நிலை தலைவர்கள் எல்லாம் துரோகிகள் என்பது சரியல்ல. மக்கள் உங்கள்மீது அதிருப்தி யில் இருக்கிறார்கள்.முதலில் உங்களை சரி செய்யுங்கள். உங்கள் பேச்சிலும் செயலிலும் மாற்றம் வேண்டும்.   11:21:11 IST
Rate this:
1 members
0 members
2 members

மே
15
2021
பொது சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் ரெம்டெசிவிர் குவிந்த பொது மக்கள்
வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திரு.கே.எஸ் அழகிரி அவர்கள் எதற்கெடுத்தாலும் பிரதமர் திரு.மோடி அவர்களை குறை சொல்லி அறிக்கை விடுபவர் இதில் மௌனம் சாதிப்பது ஏன்?தன் விசுவாசத்தை திமுகவிற்கு காட்ட மௌனம் சாதிக்கிறாரா?   13:03:19 IST
Rate this:
0 members
0 members
2 members

மே
15
2021
பொது சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் ரெம்டெசிவிர் குவிந்த பொது மக்கள்
எதிர் கட்சியாக இருக்கும்போது திமுக கட்சி அதிமுக அரசை என்னவெல்லாம் குறை சொன்னது. ஒரு மருந்து வினியோகத்தை கூட இந்த அரசால் நல்ல முறையில் செய்ய முடியவில்லை.300 பேருக்கு மட்டும்தான் ஒரு நாளைக்கு மருந்து கொடுக்கப்படும் என்பது நியாயமற்ற செயல்.10 நாட்களாக காத்திருந்தும் மருந்து கிடைக்கவில்லை என்று ஒருவர் கூறியிருக்கிறார்.10 கவுண்டர் திறந்து காலை 6 மணியிலிருந்து மாலை 6மணி வரை மருந்தை கொடுங்க. ஒருவரை கூட சாக விட மாட்டோம் என்று சொல்லும் அரசு மருந்தை விற்கிறோம் என்ற பெயரில் மக்களை ஆடு மாடுகளை அடச்சுப் போட்டதுபோல் அடச்சு வைத்திருப்பது மக்கள் அவஸ்தை படுவது மட்டுமல்ல நோய் தொற்றிற்கும் இது வழிவகுக்கும்.முதல்வர் இதில் உடனே கவனம் செலுத்தனும். டில்லியில் ஏப்ரல் மாதம் 30000 பேருக்கு தொற்று என்பது இன்று 11000 மாக குறைக்கப்பட்டுள்ளது.தமிழ் நாட்டில் சுமார்12000 மாக இருந்தது இன்று 30000 மாக அதிகரித்துள்ளது.இந்த நிலையில் தமிழ் நாட்டில் முழு ஊரடங்கை போட்டு , திமுக கட்சி தன் தொண்டர்களை ஒன்றிணைவோம் வாருங்கள் என்று அழைப்பது எப்படி நியாயம்.அவர்களுக்கும் குடும்பம் இருக்கிறதல்லவா?.முதல்வரே ,உள்ளதை உள்ளபடி சொல்லியிருக்கிறேன்.   12:50:10 IST
Rate this:
0 members
0 members
4 members

மே
12
2021
உலகம் இந்தியாவுடன் பேச்சு இம்ரான் பூச்சாண்டி
சீன அரசால் உற்பத்தி செய்யப்பட்ட கொரோனா வைரஸ் உலகெங்கும் பாதிப்பை ஏற்படுத்துவதில் பாகிஸ்தானிற்கும் பங்குண்டு என்று உலக நாடுகள் சந்தேகிக்கின்றன.ஆதாரங்கள் கிடைத்தவுடன் சீன கொடுங்கோல் ஆட்சிக்கும் பாகிஸ்தான் தீவிரவாத ஆட்சிக்கும் தக்க தண்டனைகள் உலக நாடுகளால் வழங்கப்படும். இதை அறிந்தே பாகிஸ்தான் ஒன்றும் தெரியாதது போல் கபட நாடகத்துடன் இந்தியாவுடன் நட்புறவு என்ற பாசாங்கில் சவுதியை துணைக்கு அழைத்திருக்கிறது.மூன்றாம் நாடு எந்த நாடாக இருந்தாலும் இந்தியா பாகிஸ்தான் சமரசத்திற்கு தயார் என்று பாகிஸ்தான் அறிக்கை வெளியிட்டு இருக்கிறது.இந்திய அரசு இஸ்ரேல் நாட்டை மூன்றாம் நாடாக தேர்வு செய்ய வேண்டும்.   12:13:58 IST
Rate this:
0 members
0 members
2 members

மே
8
2021
பொது தமிழகத்தில் மே 10 முதல் முழு ஊரடங்கு பஸ்கள் ஓடாது 24 ம் தேதி வரை அமல்
ஊரடங்கு போக ,வீதிக்கு வீதி, வீட்டுக்கு வீடு அரசு மொபைல் வேன் மூலம் தகுதியுள்ள அனைவருக்கும் கொரோனோ தடுப்பூசியை போடும்படி இந்த முழு ஊரடங்கு நாட்களில் விரைவுபடுத்த வேண்டும்.   10:15:28 IST
Rate this:
1 members
0 members
11 members

மே
8
2021
உலகம் பூமியை நோக்கி வரும் ராக்கெட் ஆபத்து இல்லை என விளக்கம்
சீன கம்யூனிஸ்ட் அரசு இந்த 'லாங்க்மார்ச் 5பி' என்ற ராக்கெட் மூலம் தனது விண்கலத்தை பூமியிலிருந்து 370கிமீ தூரத்தில் உள்ள தனது விண்வெளி மையத்திற்கு ஏவும்போது, இந்தியாவில் சீனாவின் கொரோனாவால் ஏற்படும் உயிர் இழப்புக்களை ஆணவத்தோடு கொக்கரித்து கேலி செய்தது. இப்ப தான் தயாரித்தனுப்பிய ராக்கெட் சரியாக வடிவமைக்கப்படாததாலும் இந்தியாவைக் கேலி செய்ததாலும் தன் தலைமேலே வந்து விழப்போகிறது.தன் வினை தன்னைச் சுடும் என்பது உண்மை.   10:04:20 IST
Rate this:
0 members
0 members
5 members

மார்ச்
28
2021
அரசியல் ஆ.ராசாவா ‛ஆபாச பேச்சு ராசவா குவியும் கண்டனங்கள்
திரு.இராசா M.P. ,முதல்வரின் தாயைப் பற்றி தரக்குறைவாக பேசியது, தி.மு.க வின் அடிப்படைக் கொள்கையான கடமை, கண்ணியம்,கட்டுப்பாடு என்பனவற்றை காற்றில் பறக்க விட்டதாகவே தெரிகிறது.இராசாவின் இந்தப் பேச்சு தான் எவ்வளவு தரம் கெட்டவர் என்பதையே காட்டுகிறது.தன் கட்சிக்கும் தலைமைக்கும் கட்டுப்பட்டவரல்ல என்பதையும் இது தெளிவு படுத்துகிறது.அண்ணா அவர்கள் ,மாற்றான் தோட்டத்து மல்லிகையின் மணத்திற்கும் மரியாதை கொடுத்தவர் என்பதை தி.மு.க.மறந்து விடக்கூடாது.இந்தப் பேச்சு தற்சமயம் திமுக மீது மக்கள் மனத்தில் பயத்தை உருவாக்கியிருக்கும்.   12:24:22 IST
Rate this:
1 members
0 members
11 members

பிப்ரவரி
28
2021
பொது இந்து கோயில்களை விடுவியுங்கள் டுவிட்டரில் டிரெண்டிங்
மதச்சார்பற்ற கட்சிகள் என்று சொல்லும் கட்சிகள் இந்த தேர்தல் நேரத்தில் இந்து கோவில்களை அரசின் பிடியிலிருந்து விடுவித்து அந்தந்த பக்தர்களிடையே நிர்வாகத்தை ஒப்படைப்போம் என்று தங்கள் கட்சியின் தேர்தல் வாக்குறுதியில் சேர்க்க தயாரா? அப்படி செய்தால் இந்து சமய மக்களிடம் அது பேராதரவைப்பெறும்.   17:33:14 IST
Rate this:
1 members
0 members
16 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X