Inbaraj : கருத்துக்கள் ( 9 )
Inbaraj
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
7
2021
அரசியல் முதல்வர் ஸ்டாலின் எதை அறிவித்தாலும் உடனே பாராட்டு அறிக்கையை வெளியிட்டு விடுங்கள்
சமீபத்திய திரு .பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் காங்கிரஸ் கட்சியில் இருக்கிறாரா என்பது தெரியவில்லை . அவரின் அறிக்கைகள் அனைத்தும் திமுக கொள்கை பரப்பு செயலாளர்கள் தோற்று விடும் அளவுக்கு உள்ளது .   10:47:30 IST
Rate this:
0 members
0 members
4 members

ஆகஸ்ட்
23
2021
அரசியல் தமிழகத்தில் கடன்கார ஆட்சிதி.மு.க., மீது எச்.ராஜா சாடல்
தமிழக நிதி அமைச்சர் தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றும் எந்த தேதியில் தமிழக மக்களுக்கு கிடைக்கும் என்பதை மக்களுக்கு அறிவிக்க வேண்டும். கேள்வி கேட்பவருக்கு பொருளாதாரம் தெரியவில்லை, திட்டங்களை நிறைவேற்ற சரியான தரவுகள் இல்லை, பழைய ஆட்சியில் தவறு நடந்து உள்ளது என்பதை சொல்வதை நிறுத்துவது நன்றாக இருக்கும். மேலும் தமிழகத்தில் விலைவாசி குறைப்பதற்கும், புதிய தொழில் முதலீடுகள் பெறுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்   12:15:07 IST
Rate this:
10 members
0 members
2 members

ஆகஸ்ட்
14
2021
அரசியல் நாளைக்கே அந்த எம்.பி.,க்களில் ஒருவர், அமைச்சர் அல்லது சபாநாயகர் ஆகி, சபையை நடத்தவும் கூடும்...
தமிழக பட்ஜெட் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. எப்போது நிறைவேற்றப்படும் என்ற கால அளவு பற்றி எதுவும்நிதிஅமைச்சர் குறிப்பிடவில்லை. இதனை விரைவில் மக்களுக்கு அறிவிக்க பட வேண்டும் என்பது மக்களின் விருப்பம். விலைவாசி ஏறுவதற்கு, ஏழை மக்களை பெரிதும் காரணமான உள்ள டீசல் விலைகுறைப்பு பற்றிய அறிவிப்பை மக்கள் பெரிதும் எதிர்பார்த்தார்கள் பெரிய ஏமாற்றம். ஆனால் பெட்ரோலுக்கு மட்டும் 3 ரூபாய் குறைக்கப் பட்டுள்ளது இது நடுத்தர மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும். தமிழக அரசு பெட்ரோல், டீசல், போன்றவற்றை சரக்கு மற்றும் சேவை வரிக்கு கீழ் கொண்டு வர முயற்சி செய்ய வேண்டும். அனைத்து மாநில முதல்வர்கள் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டு அதை நடைமுறைப்படுத்த வேண்டும் அதிகபட்சமாக சரக்கு மற்றும் சேவை வரி 28% தான் வசூலிக்க படுகிறது. இதை நடைமுறை செய்வதன் மூலம் தமிழகத்தில் உணவு பொருள், கட்டுமான மூல பொருள்களுக்கான பணவீக்கம் பெரிய அளவில் குறைய வாய்ப்பு உள்ளது. மேலும் தமிழக அரசின் போக்குவரத்து கழகங்கள் செலவு குறைக்கப்படும். போக்குவரத்து கழகங்கள் லாபத்தில் இயங்க வாய்ப்பு ஏற்படும்.   13:17:14 IST
Rate this:
0 members
0 members
1 members

ஆகஸ்ட்
13
2021
பொது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதே கடமை பட்ஜெட் உரையில் நிதி அமைச்சர்
தமிழக நிதி அமைச்சர் திரு .பி.டீ. ஆர் .பழனிவேல் ராஜன் அவர்களின் சமீபத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் முன்னாள் தமிழக அமைச்சர் .திரு.பாண்டியராஜன் அவர்கள் மிக தரம் தாழ்ந்து விமர்சனம் செய்து உள்ளார்கள். அஃது அவர் வகித்து கொண்டு இருக்கும் பதவிக்கும், அவர் பெற்ற கல்விக்கும் இது அழகானது இல்லை. திராவிட பாரம்பரியம் தமிழகத்தின் வளர்ச்சிக்கு அனைத்து திராவிட கட்சிகளுக்கும் அதில் பங்கு உண்டு. ஒருவர் மட்டும் அதை சொந்தம் கொண்டாட கூடாது. தமிழக நிதி அமைச்சர் இதை போன்ற பொது வெளியில் தனிமனித விமர்சனம் செய்வதைவிடுத்து தமிழக மக்களுக்கு தேர்தலில் போது கொடுத்த வாக்குறுதியை எந்தெந்த தேதியில் நிறைவேற்ற போகிறீர்கள் என்பதை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் . பொது வெளியில் கருத்துக்கு மட்டும் மறுப்பு தெரிவிக்க வேண்டும். தனிமனித விமர்சனம் தவிர்ப்பது நல்லது. அது தமிழகத்தில் வரும் காலத்தில் ஆரோக்கியமான அரசியல் நடக்க உதவியாக இருக்கும்.   12:33:13 IST
Rate this:
0 members
0 members
13 members

ஆகஸ்ட்
12
2021
அரசியல் " வாக்குறுதிகளில் முக்கியமானவற்றை நிறைவேற்றாவிட்டால் கெட்ட பெயரை சம்பாதிக்கும்... "
தேர்தல் அறிக்கை தயார் செய்த திமுக தலைவர்களுக்கும் அறிக்கை தயார் செய்யும் போது தமிழகத்தின் நிதி நிலைமை நன்கு தெரிய வந்திருக்கும் . அதன் அடிப்படையில் தான் தேர்தல் வாக்குறுதி தயாரித்து இருப்பிர்கள் . மேலும் தமிழகத்தின் நிதி அமைச்சர் பல்வேறு நிதி அனுபவங்களை பெற்றவர், ஆதலால் மக்களுக்கு கொடுக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் கண்டிப்பாக நிறைவேற்றப்படவேண்டும் என்பது அனைத்து மக்களின் கோரிக்கை . அதே நேரத்தில் தமிழகத்தில் தொடர் கொரோனா தொற்று அபாயம் காரணமாக அனைத்து மக்களும் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து ஒரு நிரந்தரமான வருமானம் இல்லாமல் வாழ்ந்து கொண்டு இருக்கும் இந்த நிலையில் அரசு சாமான்ய மக்களை பாதிக்கும் எந்த புதிய வரிச் சுமையும் ,கட்டண உயர்வு , அவர்கள் மீது ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் . அரசின் வருமானம் அதிகரிக்கும் பிற வழிகளை கண்டு அறிந்து அவற்றின் மூலம் வருமானத்தை அதிகரிக்க வேண்டும் . தமிழக அரசுக்கு சொந்தமான 60 பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளது . அதில் சிறந்த நிர்வாகம் மேற்கொண்டு தேவையற்ற செலவுகளை குறைத்து , கடந்த ஆட்சியில் போக்குவரத்து துறையில் வருமானத்தை அதிகரிக்க கூரியர் சேவை செயல்பட்டது அதை போன்று வருமானத்தை பெருக்க வழிமுறைகள் கண்டறியப்பட்டு லாபம் ஈட்டி அதன் ஈவுத் தொகையை அரசு பெற முயற்சி செய்ய வேண்டும் . தமிழக மக்கள் திமுக கூட்டணி மீது அதிக அளவு நம்பிக்கை வைத்து நாடாளுமன்றத்திற்கு 38 உறுப்பினர்களை தந்து உள்ளார்கள் . அவர்கள் மூலம் மத்திய அரசில் வரியிலிருந்து பெற வேண்டிய மாநில அரசின் பங்கு நிதியையும் , சரக்கு மற்றும் சேவை வரி மூலம் பெற வேண்டிய நிலுவை தொகையும் . சரக்கு மற்றும் சேவை வரியில் உள்ள தமிழகத்துக்கு பாதகமான அம்சங்களை நீக்கி தமிழக மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் , மத்திய அரசிடம் கிடைக்க வேண்டிய அனைத்து நிதி உரிமையையும், இழப்புகளையும் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற மேலவை உறுப்பினர்கள் மூலம் பெற்று தர வேண்டும் . அவர்கள் தொடர்ந்து நாடாளுமன்ற இரு அவைகளிலும் அதற்காக குரல் கொடுத்து பெற்று தந்து தமிழக நிதி பற்றாக்குறை போக்க வழிவகை செய்யலாம் . இதன் மூலம் தொடர்ந்து உணவுப்பொருட்களின் பணவீக்கம் ஏற்பட காரணமான உள்ள பெட்ரோல் , டீசல் விலையை அரசு குறைக்க முயற்சி செய்ய வேண்டும் என்பது அனைத்து மக்களின் ஆசை , மேலும் தேர்தல் வாக்குறுதியில் கொடுத்த மக்கள் நல திட்டங்களையும் படிப்படியாக நிதி ஆதாரத்தின் அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும். அதன் கால அளவுகளை வெளிப்படையாக தமிழக மக்களுக்கு அறிவிக்க வேண்டும் என்பது என் போன்ற அனைத்து சமூக ஆர்வலர்களின் விருப்பம் .இதனை தமிழக நிதி அமைச்சர் நிறைவேற்றுவர் என்பதை எதிர்பார்க்கிறோம் பா .இன்பராஜ் சமூக ஆர்வலர்   15:13:49 IST
Rate this:
1 members
0 members
4 members

ஆகஸ்ட்
11
2021
பொது இது உங்கள் இடம் போலி விவசாயிகளை களையெடுங்கள்!
வெள்ளை அறிக்கை காரணம் காட்டி தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை திமுக அரசு காலம் தாழ்த்தக் கூடாது. மேலும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான காலக்கெடுவை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும், சமூக ஆர்வலர் பா .இன்பராஜ் கோரிக்கை   10:29:05 IST
Rate this:
2 members
0 members
1 members

ஆகஸ்ட்
3
2021
சம்பவம் இன்றைய கிரைம் ரவுண்ட் அப்
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு , என் பெயர் இன்பராஜ், திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த சமூக ஆர்வலர், மேலும், நான் கடந்த 25 ஆண்டுகளாக ஊரக பகுதிக்கு கடன் கொடுக்கும் பல நிறுவனங்களில் பணியாற்றி கொண்டு வருகிறேன். மகாத்மா காந்தி கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தின் மூலம் விவசாயம் மற்றும் வேளாண் சார்ந்த தொழில்களில் உற்பத்தித்திறனை அதிகரிக்க எனது அனுபவத்தின் வழியாகவும் மற்றும் பல கிராமப்புற மக்ளுக்காக பணி செய்து கொண்டு இருக்கும் சமூக ஆர்வலர்கள் , விவசாய ஆர்வலர்கள் பலரிடம் தமிழக அளவில் கலந்து ஆலோசித்து திட்டம் தயார் செய்து அனுப்பியுள்ளேன் . அதனை பரிசீலிக்குமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் . தங்கள் தலைமையில் தமிழகத்தில் அரசு பதவியேற்ற நாள் முதல் நீங்கள் பல்வேறு ஆக்கபூர்வமான செயல்பாடுகளை செய்து வருகிறீர்கள். தமிழக அரசின் பொருளாதார ஆலோசகராக உலக அளவில் சிறந்த பொருளாதார வல்லுனரை நியமித்தல், பொருளாதார முன்னேற்றத்தை ஊக்குவிப்பதற்காக பிரத்தியேகமாக விவசாயத்திற்கான பட்ஜெட். இது அனைத்து தரப்பு மக்களாலும் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது. மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தைப் பயன்படுத்தி விவசாயம் மற்றும் வேளாண் சார்ந்த தொழில்களில் உற்பத்தித்திறனை அதிகரிக்கவும் கிராமப்புற வேலைவாய்ப்பை உறுதி செய்யவும் கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்களுக்கு வேலை வாய்ப்பை அதிகரிக்கவும் என்னைப் போன்ற ஒரு சமூக ஆர்வலரின் விருப்பம். மகாத்மா காந்தி வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பரிந்துரைக்கப்பட்ட 100 நாட்களுக்கு கூடுதலாக 50 நாட்கள் வேலை வழங்க மத்திய அரசு வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் ஒரு கோடியே 23 லட்சம் கிராமப்புற தொழிலாளர்கள் இதன் மூலம் பயனடைவார்கள். அந்த வேலைத் திட்டத்தின் மீது பல விமர்சனங்கள் தொடர்ந்து எழுப்பப்படுகின்றன. இந்த பயனுள்ள திட்டத்தை இதில் உள்ள விமர்சனங்களை கலைந்து , இதன் பயணளிகள் பணியை முழுமையாக பயன்படுத்தி , விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த பணிகளை கிராம அளவில் உருவாக்க இந்த அறிக்கையில் கொடுத்து உள்ளேன் .பயனாளிகள் தங்கள் வீடுகளிலே தோட்டக்கலைத் துறையின் உதவியுடன் காய்கறிகள், பழங்கள் மற்றும் கீரைகள் தரமான மற்றும் இயற்கை வழி முறையில் உற்பத்தி செய்ய அவர்கள் வீடுகளேயே தோட்டத்தை அமைத்து பயிரிட அவர்களுக்கு தேவையான பயிற்ச்சி மற்றும் விதைகள் கொடுத்து அவர்களில் வேலையை அதிக படுத்தலாம் . மேலும் பயனாளிகள் வீட்டுக்கு , ஒரு கறவை மாடு அருகில் உள்ள வங்கி மூலம் மானிய விலையில் வழங்கலாம் இது அவர்களின் பால் உற்பத்தியை அதிகரிக்கும் மற்றும் அவர்களின் கூடுதல் வருமான ஆதாரங்களையும் அதிகரிக்கும். திட்டத்தின் படி நிலைகள் இத்திட்டத்தின் பயனாளிகள் பஞ்சாயத்து மூலமாக செய்யப்படும் வேலைக்கு 50% ஊதியமாகவும் அவர்களுடைய மீதமுள்ள 50% ஊதியத்தை அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு ஊக்கத்தொகையாக வழங்க ஏற்பாடு செய்யலாம் . வேளாண்மைத் துறையின் மூலம் இத்திட்டத்தின் பயனாளிகளுக்கு நீர் மேலாண்மை, சொட்டுநீர் பாசனம் மற்றும் அவர்களின் வீடுகளில் தோட்ட பயிர்கள் பயிரிட தொடங்குவதற்கான பயிற்சி அளிக்கப்பட வேண்டும். தமிழ்நாடு தோட்டக்கலைத் துறை தரமான இயற்கை விவசாய விதைகளை அவர்களின் வீட்டில் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும், இந்த பணிகளை மேற்ப்பார்வை செய்ய தோட்டக்கலை முறையான விவசாயப் கொடுத்து கிராமத்துக்கும் ஒருவர் என்ற அடிப்படியில் அரசு நியமனம் செய்ய வேண்டும் . பயனாளிகளிடமிருந்து சந்தை விலையில் மற்றும் ஊக்க விலையை சேர்த்து அரசு கொள்முதல் செய்ய வேண்டும் அரசு அதே நாளில் அவர்களுடைய வங்கிக் கணக்கில் பணம் செலுத்த ஏற்பாடு செய்தால் மிக நலமாக இருக்கும் இதனால், அவர்களின் தனிப்பட்ட வங்கி நடவடிக்கைகளை அதிகரிப்பது வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் மூலம் கடன் பெறுவதற்கான வாய்ப்பை உருவாக்கும். தோட்டக்கலை பொருட்கள் வீணாவதைத் தவிர்க்க, தேவைக்கேற்ப தொகுதி வாரியாக குளிரூட்டப்பட்ட கிடங்குகளை அமைக்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். நகர்ப்புற சிறு வணிகர்கள் வேளாண் சந்தைப்படுத்தல் துறை மூலம் அங்கிருந்து வாங்கி தரமான காய்கறிகள் மற்றும் பூக்களை பகுதிகளில். செயல்படும் உழவர் சந்தையிலும் - கடைகள் இல்லாத சிறு வியாபாரிகளுக்கான சிறு கடைகள் சந்தைகளிலும் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இதன் மூலம் பயிரிடப்படும் தரமான காய்கறிகள், பழங்கள் மற்றும் கீரைகள் ஆகியவற்றை அரசு மதிய உணவு திட்டத் திட்டம் மற்றும் குழந்தை மேம்பாட்டுத் திட்டத்திற்கும் கிடைக்கச் செய்யலாம். மேலும் பயனாளிகள் வீட்டுக்கு , ஒரு கறவை மாடு அருகில் உள்ள வங்கி மூலம் மானிய கடன் கொடுத்து வாங்க உதவி செய்யலாம் இது அவர்களின் பால் உற்பத்தியை அதிகரிக்கும் மற்றும் அவர்களின் கூடுதல் வருமான ஆதாரங்களையும் அதிகரிக்கும். அந்த பகுதியில் உற்பத்தி செய்யப்படும் கறவை மாடு பாலை அரசு ஆவின் மூலம் தொய்வு இல்லாமல் கொள்முதல் செய்ய வேண்டும் . 15 நாட்களுக்கு ஒரு முறை பணப்பட்டுவாடா செய்ய வேண்டும் கால்நடை பராமரிப்பு துறையின் உதவியுடன். சிறிய அளவில் கால்நடை தீவன உற்பத்தி மையங்களை தொகுதி அளவில் தொடங்க அரசு ஆதரவு அளிக்க வேண்டும். தீவன உற்பத்தி யூனிட்டில் இருந்து திட்ட பயனாளிகளுக்கு தீவனம். நேரடியாக குறைந்த விலையில் வழங்கலாம். அரசாங்கம் அதே கிராமத்திற்கு பொதுவான நிலத்தை அல்லது குத்தகைக்கு வழங்க ஏற்பாடு அதன் மூலம் சத்தான தீவன புல் சாகுபடி செய்யலாம் .திட்டத்தின் கீழ் வேலை செய்பவர்கள் நிலத்தை பயிரிட்டு தீவன புல்லை உற்பத்தி செய்து . அதே தீவன புல்ளை அவர்களின் கறவை மாடுகளுக்கு உணவுக்காக பயன்படுத்தப்படலாம் ஆவின் நிறுவனம் மூலம் அதிக அளவில் நகர்ப்புறங்களில் சிறு விற்பனை நிலையங்களை நிறுவி வேலையில்லாத இளைஞர்களுக்கு தொழில் முன்னுரிமை வழங்க வேண்டும். இந்த நிலையங்கள் தயிர் , மோர் , வெண்ணை , மற்றும் பாலில் இருந்து செய்யப்படும் பால்கோவா , மற்றும் இதர இனிப்புகள் விற்பனை செய்யலாம் , இது தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கும். இந்த திட்டம் சிறப்பாக செயல்பட்டால் மதிப்புக் கூட்ட பட்ட நெய் , மற்றும் பால் மூலம் தயார் செய்யப்படும் இனிப்பு வைகைகளை அயல் நாட்டுக்கு ஏற்றுமதி செய்யலாம் இதன் மூலம் தமிழக அரசின் வரி வருமானம் அதிகரிக்கும் . ஆவின் நிறுவனம் தொடர்ந்து லாபத்தில் செயல்பட வழிவகுக்கும் , மேலும் கிராம பகுதிகளில் அதிக அளவில் வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் ,கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு மக்கள் இடம்பெயர்வதை நிறுத்தப்படும் .நகர்ப்புறங்களில் இட நெருக்கடி குறையும். திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன், அரசு அருகில் நல்ல போக்குவரத்து வசதிகள், சிறந்த கல்வி, மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப வசதிகளை அந்த பகுதிகளில் சிறப்பாக செயல்பட உறுதிப்படுத்தவேண்டும் இதை தமிழக முதல்வர் துறை அதிகாரிகள் மூலம் இதன் சாத்திய கூறுகளை நன்கு ஆராய்ந்து இதனை செயல் படுத்த வேண்டும் என்பது அனைத்து சமூக ஆர்வலர்களின் விருப்பமாகும். இது சாத்தியமாகும்பட்சத்தில் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் அதிக வேலைவாய்ப்பு உருவாக்கபடும் என்பது அனைத்து சமூக ஆர்வலர்களின் விருப்பமாகும். நன்றி பா .இன்பராஜ் சமூக ஆர்வலர் அலைபேசி எண் : 9791883540   16:57:16 IST
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
1
2021
சிறப்பு பகுதிகள் இது உங்கள் இடம்
தமிழக முதல்வருக்கு திருச்சியை சேர்ந்த சமூக ஆர்வலர் இன்பராஜ் கடிதம். தாங்கள் தமிழக முதல்வராக பதவி ஏற்று 100 நாட்கள் கடக்க உள்ளது. அரசின் அணுகுமுறைகள் குறிப்பாக கொரோனா காலத்தில் நீங்கள் எடுத்த தீவிர நடவடிக்கைகள், பல்வேறு துறைகளில் சிறப்பாக பணி செய்த அதிகாரிகளை அரசு துறைகளில் நியமனம் செய்தது, யார் எந்த தவறு செய்தாலும் பாரபட்சமின்றி அவர்கள் மீது சட்ட ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்வது மிகவும் பாராட்டும் வண்ணம் உள்ளது. ஆனால் பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது அனைத்து மக்களின் விருப்பம். இது உயர்ந்து வரும் விலைவாசியை குறைக்க வழிவகை செய்யும்.   15:34:03 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
2
2019
பொது ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம் எது நியாயம்?
தனியார் பள்ளிகளில் முது நிலை படிப்பை முடித்து குறைவான ஊதியம் பெற்று கடுமையாக காலை எட்டு மணிமுதல் மாலை ஐந்து மணி வரை வேலைசெய்கிறார்கள் . அப் பள்ளியில் படிக்கும் மாணவரக்ள் நன்கு படிக்கிறார்கள் . அரசு பள்ளியில் வேலை பார்க்கும் இந்த ஊதியம் போதுமானது . இதே ஊதியத்தை பெற்று தனியார் பள்ளிகளில் வேலை பார்க்கும் திறமையான ஆசிரியர்கள் இந்த பணிக்கு வேலை செய்ய தயாராக உள்ளனர் . இவர்களை அரசு பணிநீக்கம் செய்து தனியார் பள்ளிகளில் வேலை பார்க்கும் ஆசிரிர்களை நியமிக்க வேண்டும் என பொது மக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்..   11:07:50 IST
Rate this:
1 members
0 members
15 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X