இதிலிருந்து ஒன்றுமட்டும் தெரிகிறது.இந்த கையாலாகாத அரசியல்வாதிகளின் கோபம் ஆலை நிர்வாகத்தின் மீது மட்டும் தான்...தாமிரம் தயாரித்தால் என்ன, ஆக்சிஜன் தயாரித்தால் என்ன ... ஸ்டெர்லைட் ஆலை இயங்கக்கூடாது அவளவுதான்...கமிஷன் கிடைக்காத காரணமாக இருக்கலாம். கண்டிப்பாக பொதுமக்கள் மீது இவர்களுக்கு ஒரு அக்கறையும் இல்லை.
25-ஏப்-2021 11:29:43 IST
///மதநல்லிணக்கம் என்பது அடுத்தவர் மதத்தை பின்பற்றுவது அல்ல/// அவர் மத நல்லிணக்கத்தை நிலைநாட்ட போனாரா அல்லது சொந்த வேண்டுதல் படி போனாரா. என்பது உங்களுக்கு தெரியுமா? நம்முடைய ஊர் திருவிழாக்கள பலவற்றில் முசுலீம் சமூகத்தினர் அவர்கள் பாரம்பரிய உடையுடன் கலந்துகொள்வது வழக்கமாக உள்ளது. அது போல நிறைய ஹிந்துக்கள் வேளாங்கண்ணி மற்றும் நாகூர் தர்கா முதலான பிறமத வழிபாட்டு தளங்களில் சென்று வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இவை எல்லாம் மத நல்லிணக்கத்தை கட்டி பாதுகாக்க செய்வது இல்லை. எல்லோரும் சுய நம்பிக்கையின் அடிப்படையில் செல்கிறார்கள். ஒரு சில குதர்க்கவாதிகள் இச்செயலை கொச்சை படுத்தி மக்கள் மனதில் வெறுப்பை விதைக்கின்றனர் என்பது தான் உண்மை.
12-ஏப்-2021 11:02:54 IST
இந்து மத நம்பிக்கைகளை அவமதித்து பேசுவது, அதுவும் பிற மத விழாக்களில் கலந்துகொண்டு இந்துமதத்தை அவமதித்து பேசுவது, மறைமுகமாக ஜாதி மத வெறியை தூண்டிவிட்டுக்கொண்டே மத சார்பற்ற கூட்டணி என்று கூறிக்கொள்வது, திமுக அடிமட்ட தொண்டர்கள், இனி எங்களுடைய ஆட்சிதான், நாங்கள் வைத்ததுதான் சட்டம் என்ற தொனியில் பேசுவது, மிரட்டுவது போன்றவற்றால், கருணாநிதிக்காக திமுகவிற்கு ஓட்டுபோடுபவர்கள் வாக்குச்சாவடி பக்கமே எட்டிப்பார்க்கவில்லை என்பதுதான் காரணமாக இருக்கக்கூடும்.
09-ஏப்-2021 09:45:39 IST
தமிழக வாக்காளனின் மன ஓட்டம்- " எல்லா கட்சிகாரர்களும் பணம் கொடுத்தார்கள். யார் ஜெயிச்சாலும் எனக்கு ஒண்ணுதான்,.வாக்கு சீட்டாக இருந்தால் எல்லோருக்கும் ஒட்டு போட்டிருக்கலாம், மெஷினில அதுவும் முடியாது. நோட்டாவுக்கு போகவும் மனமில்லை. ஒட்டு போடாமல் ஊருக்கு போகவில்லை"
08-ஏப்-2021 10:55:19 IST
ஸ்டாலின் வராரு ...ஸ்டாலின் வராரு ...என்று ஊரெல்லாம் விளம்பரம் செய்ததனால் ஒட்டு போடவேண்டாம் என்று நினைத்திருந்த பலரும் பயந்துபோய் இரட்டை இலைக்கு ஒட்டு போட்டதாக கேள்வி...
06-ஏப்-2021 16:19:44 IST
ஹலோ, பெயரில்லா ...., ஜெய் ஸ்ரீராம் என்பது பஜனை பாடல் அல்ல. அது தூங்கிக்கொண்டிருக்கும் இந்துக்களை விழித்தெழ செய்யும் வெற்றிமந்திரம். அந்த மந்திரத்தால்தான் மத்தியில் ஆட்சிக்கு வந்துவிட்டனர்.
06-ஏப்-2021 06:29:42 IST
பாவம் மம்தா, காலில் பேண்டேஜ் போட்டு எத்தனை நாளாக கஷ்டப்பட்டு நடிச்சுக்கொண்டிருக்கிறார். தமிழ்நாடாக இருந்தால் அரைமணி நேரம் உண்ணாவிரதம் இருப்பதாக நடிச்சு போட்டோ நியூஸ் பேப்பரிலில் வந்தால்மட்டும் போதும்.
06-ஏப்-2021 06:21:50 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.