இன்று தேவைப்படாத இந்த ஜெட் போர் விமானங்களை வைத்து அரசியல் பண்ணுவது இந்தியாவை மேலும் கேலிக்குரியதாகிட்டது. நாட்டு மக்களை ஏமாற்றும் அற்பமான அரசியல் வெற்றுவேட்டுக்கு இராணுவத்தை கேடயமாக்கிக்கொள்ளும் பஜகவை விட்டு தமிழகம் தனது தனித்துவத்தை நிலைநாட்டுவதே விவேகமான அரசியலாகும் இன்று வருமுன் காப்பதற்கு உலகளாவிய நிலையில் உணவு உற்றபத்திக்கான வழிமுறைகளைப்பற்றி எந்த முன்னேற்பாடுமின்றி, இந்த கேவலமான அரசியல் பித்தலாட்டங்களால்,அருகிலும் ,தொலைவிலுமாக மக்கள் ஓலமிட்டு அழும் வேதனைக்குரல் ஒலிக்கும்படி இவர்களை அனுமதிப்பது எந்த வகையில் நியாயமாகும்?
27-ஜூலை-2020 09:51:05 IST
புதிய உலகத்தில் புதிய வழக்கத்தை கடைப்பிடிப்பது காலத்தின் கட்டாயம் .இதில் அரசின் தலையீடு என்று எதுவும இல்லை.எல்லா நாடுகளும் ,எல்லா மக்களுக்குமான ஒழுங்கு முறையினை கடைப்பிடிப்பது என்பது இதன் பொருளாகும் மக்கள் நலனுக்கு இது அவசியம் .இதற்கும் களங்கம் கற்பிக்க முற்படுவதானது சமயத்திறகும், சம்பிரதாயத்திற்கும் எந்த வித சம்பந்தமும் இல்லாத்தையே உறுதிப்படுத்தும். எந்த சமயமும் அறுதி முடிவான சமயமல்ல அது மக்களுக்காக வரும் தலைமுறைகளுக்குமான தொடர்ந்து வழிகாட்டியாகவே இருக்கும என்பதை நம்புங்கள். இதைத்தான் நமக்கு வழங்கப்பட்டுள்ள ஆய்வுக்கண்களால் ,உண்மையை நேசிக்கும் நாம் நாடவேண்டிய கோட்பாடுமாகும். ஒன்றே குலம் ,ஒருவனே தேவன் என்றால் ,உண்மை ஒன்றாகவேதான் பொதுவானதாக நமக்கும் கடவுள் பேரொளியாக எப்போதுமிருப்பார். தேடுங்கள் தட்டுங்கள் உண்மை தரப்படும் ).
01-ஜூலை-2020 06:34:23 IST
அமெரிக்கா வலுப்பெற்று மீள வேண்டியது அதன் பாதுகாப்புக்கு மட்டுமல்ல.சர்வதேசங்களுக்குமான நிர்வாக ஒழுங்கு முறைக்கு பொறுப்பாற்றும் கடப்பாடு அது கொண்டிருப்பதை எல்லா நாடுகளும் அங்கீகாரம் வழங்க வேண்டிய தருணம். நாடுகள் அனைத்தும் தங்கள் அமைதிக்கும் ,பாதுகாப்பிற்குமான ஒரு உலக ஒழுங்கமைப்ப முறையை இத்தருணத்தில் அமைத்தாலன்றி, கூட்டாக சிதறுண்டு போவது திண்ணம் .ஒன்றிணைந்து,அமைதியையும் ,சுபிடச்சத்திறகுமான நிர்வாக முறைமையை நிலைநிறுத்துவதா அல்லது பிளவு பட்டு, தன்னலமே பெரிது என்றெண்ணி, சின்னாபின்னமாக சிதறிப்போவதா என்பதை நாடுகள் உணர்ந்து, முடிவெடுக்க வேண்டிய இறுதியான தீர்வாக இது அமையும்
24-ஏப்-2020 02:34:17 IST
தன்மை மாற்றத்திற்கான யுகம் இது புலன்களின் ஊடே நுழைந்து நம்மை தாக்கும் இந்த நுண்கிருமிகளின் தாக்கத்திலிருந்து விடுபட நமது பழக்க வழக்கங்களை மாற்றியமைத்துக்கொள்ள வேண்டும். இது சற்று கடினமாக தெரிந்தாலும்,இந்த உயிர்கொல்லி நோயிலிருந்து நம்மை பாதுகாக்க நமது சில இயல்பான நடைமுறைகளை மாற்றியமைத்துக்கொள்ள நம்மை பழக்கப்படுத்தும் பாணிக்கு மாறத்தான் வேண்டும். நம்மை பீடித்திருக்கும் அவலங்கள்,பிணிகள் அகல,பழைய பாணிகள்,நடைமுறைகள் ஈடாக இல்லை என்பதை மறுக்க முடியாது. உலகமயமான குடிமக்களாக வாழும் நெறிமுறைகளுக்கு ஏற்ற நடைமுறைகளை ஏற்றுத்தான் ஆகவேண்டிய கட்டாயம் வந்துவிட்டது
12-மார்ச்-2020 05:48:55 IST
ஆயுதங்களை படிப்படியாக களைவதற்கான திட்டங்கள் உலக நாடுகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டாலன்றி, ஆயுதப் போட்டா போட்டிகளை தடுத்து நிறுத்தமுடியாது. மக்களது வரிப்பணம் விரயமாகாமலிருக்க முதலில் இந்த ஆயுதங்களால் நேரிடும் உயிர்பலிகளை விட உயிரியல் ஆயுதங்கள் அதீத ஆற்றலைக்கொண்டுள்ளதை கொரோனா நுண் கிருமிகள் நிரூபித்துக்கொண்டிருக்கின்றன.
10-மார்ச்-2020 08:16:31 IST
இவனும் சேர்ந்து விட்டான் சொந்த புத்தி இல்லாத பஜக வைச்சாரந்தவன் என்பதை சுயமாக சிந்திக்க வக்கில்லையென்றாலும், கூறுவதில் என்ன அறிவுரை சொல்லப்பட்டுள்ளது என்பதை கேட்பதைக்கூட, வீம்புடன் மறுக்கும் புத்தி கெட்ட மந்திரியாக
27-பிப்-2020 06:25:12 IST
காங்கிரசு என்பது கட்சி என்ற கண்ணோட்டத்துடன் ஒரு வட்டத்தோடு பார்ப்பதால் இதுவும்கூட இன்னொரு அரசியல் சார்ந்த கொள்கைகளுடனான கட்சி என்றாகி விட்டது. அதனுடைய வரலாறு எந்த அடிப்படையில் உருவானது என்ற சிந்தனையை மறு பரிசீலனை செய்வது ஒரு நல்ல திருப்பம் ஏற்படலாம் . ஆனால்,காலம் மாறிவிட்டது. அரசியல் கருத்தாக்கங்களை மக்கள் நிராகரிக்கும் காலகட்டம் இதுவாகும். நாடுகள் நிர்மாணிக்கும் கடப்பாட்டிலிருந்து மனித குலம் பரிணாம வளர்ச்சியின் முதிர்ச்சியை நோக்கி சிந்தனை மாற்ற புரட்சி எல்லா துறைகளிலும் தகவல் தொடர்பு நுட்ப முன்னேற்றங்கள் வழியாக இன்று உலகை ஒருங்கிணைத்து செயல்பட வகுத்துள்ளது. அது அரசியல் சித்தாந்தங்களையும் மாறிவருகிறது. மனங்களில் தோன்றும் எண்ணங்களால் மட்டுமே இனி நடைமுறைகள் சாத்தியமாகும் என்ற நிலைப்பாடு இன்னும் ஒரு படி மேல் சென்று இதயபூர்வமாக நமது செயல்பாடுகள் நிறைவேற்றினால் மட்டுமே ,இனி எந்த மாற்றமும் அதன் இலக்கை நோக்கிய வெற்றியை அடையும். துடிப்பான, கலந்தாலோசனையுடன் அரப்பணிக்கப்படும் பன்முக சவால்களை சந்திப்பதறகாகவே பல சோதனைகளை மனிதகுலம் சவால்களாக இனி எதிர்கொள்ள வேண்டும். இளம் தலைவர்கள் பின்வாங்குவதற்கு பழைய பாணிகளில் சமூதாயங்களை நிர்மாணித்தல் நடைமுறையற்றது என்பதை நன்கு புரிந்துள்ளார் ராகுல்
26-பிப்-2020 12:33:44 IST
உலகையே தலைநிமிரந்தெழச்செய்து காட்ட இளைஞர்கள் உன் பின்னால் இருக்கும் போது(Youth can Move the world )காய்ந்து உதிரும் கவைக்குதவா சருகுகளைப் போல, தூற்றுபவர்கள் தூற்றினாலும , நம்பிக்கை நட்சத்திரமாக ,மாற்றம்,முன்னேற்றம் என்று தடைக்கல் எதுவானாலும்,அதை படிக்கல்லாக்கி இலக்கை முன்னோக்கி வீரமுழக்கமிட்டு ,எதிரிகளையும் நண்பர்களாக்கும் தலைமை தாங்கட்டும்,ராகுல்
21-பிப்-2020 11:21:42 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.