மிக சரி, இறைவன் ஒருவனே, பெயர்கள் பல இருக்கலாம்... உடல் மண்ணுக்கானது, புதைத்த பிறகு மதம் அது, இது என்று பார்த்து என்ன பயன் ? பல கடவுள்கள் இருப்பது போலவும் இங்கே நாம் கட்சி நடத்துவது போல் அங்கே அவர்கள் உட்கார்ந்து கொண்டு யாருக்கு எத்தனை பக்தர்கள் என்று போட்டி போட்டு கொண்டிருப்பது போலவும் நாம் நினைத்தால் அது கடைந்தெடுத்த முட்டாள் தனம்.
16-ஏப்-2021 12:24:10 IST
பெங்களூரில் காய்கறி விற்பவர்கள் நிறைய பேர் தமிழர்கள், ஐந்து மொழிகளாவது பேசுவார்கள், தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னட கொஞ்சம் ஆங்கிலம்.. உலகத்தில் ஆங்கிலம் பேசப்படாத நாடுகள் அதிகம், German, ரஷியன் மொழி படித்தால் அங்கே குறைந்த செலவில் மேற்படிப்பு படிக்க வசதி, இந்தியா-வில் இருப்பதால் ஹிந்தி படித்தால் நமக்கு நன்மையே, வேறு மாநிலங்களுக்கு சென்று தொழில் செய்யலாம்,
03-ஆக-2020 14:28:09 IST
அரேபியாவில் வெயில் அதிகமாக இருந்தாலும், மக்கள் முழுக்க, முழுக்க Air Conditioned சூழலில் வாழ்கிறார்கள், எனவே வைரஸ் தொற்று எளிதாக பரவுகிறது... இந்தியாவில் அந்த அளவிற்கு வசதியான வாழ்க்கை இல்லை, ஆனால் அதுவே நம்மை காப்பாற்றுகிறது என்று நினைக்கிறேன்...
27-மார்ச்-2020 11:14:09 IST
திரு ராகுல், நீங்கள் சொல்வதை போல் குறைக்கலாம், ஆனால் என்ன ஆகுமென்றால், பயன்பாடு அதிகரிக்கும், அந்நிய செலாவணி அதிகம் செலவாகும், பிறகு தீடீரென விலை அதிகரிக்கும்போது பெட்ரோல் விலையும் மட, மடவென உயர்த்த வேண்டி இருக்கும். பயன்பாடு அதிகமானால் சுற்று சூழல் பாதிப்பும் அதிகமாகும், மேலும் பற்றாக்குறையினால் இருக்கும் நம் நிதி நிலைமையை சமாளிக்க இது உதவும்...
16-மார்ச்-2020 18:20:57 IST
500 கோடி ரூபாய் அவரிடமிருந்து மற்றவர்களுக்கு செல்கிறது, இதனால் பணப் புழக்கம் அதிகமாகும்... பொருளாதாரம் என்பது மக்களின் செலவிடும் திறன்தான், அதனால் செலவழிப்பது தவறல்ல, பதுக்கி வைப்பதுதான் தவறு...
03-மார்ச்-2020 14:40:45 IST
நம்மவர்கள் இந்தியை எதிர்க்கிறார்கள், சமஸ்கிருதத்தை எதிர்க்கிறார்கள்.. வட நாட்டவர்கள் இங்கே வந்து நம் வேலை வாய்ப்பை பறிக்கிறார்கள் என்று குற்றம் சொல்கிறோம்.... ஆனால் பாகிஸ்தான், பங்களாதேஷ் லிருந்து இஸ்லாமியர்களை அனுமதிக்க வேண்டும் என்று போராட்டம்... என்ன கொடுமை இது ?
23-பிப்-2020 21:48:25 IST
92 ஆயிரம் கோடி ஒரு பெரிய தொகை அல்ல.... இன்றைக்கு நிலக்கரி எடுக்கப்படும் நெய்வேலி எப்படி இருக்கிறது ? எரிவாயுவை சுவாசித்து, எண்ணெய்யை குடுத்தா வாழ முடியும் ? தோல் தொழிற்சாலைகள் வந்த பின் ஆம்பூர் வாணியம்பாடி பகுதிகள் எப்படி உள்ளன ? கையில் காசு இருக்கிறது, ஆனால் குடிக்க தண்ணீர் ? 92 ஆயிரம் முதலீடு வருகிறது, ஆனால் விவசாயத்தில் ஏற்படும் இழப்பு என்ன ? இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் எவ்வளவு என்பதை பற்றி யோசித்தீர்களா ? ஆரோக்கியம் பாதிக்கப்படுவதினால் ஏற்படும் இழப்பை பற்றி கணக்கிட்டீர்களா ? சூரிய சக்தி, காற்றாலை என்று இருக்க,, இன்னமும் கச்சா எண்ணையை நம்பியே இருக்க வேண்டுமா ? குறித்து வைத்துக்கொள்ளுங்கள், மின்சார வாகனங்களின் வருகையால், கச்சா எண்ணெயை தேவை குறையும், ஆரோக்கியம் அதிகரிக்கும்... நம் நாட்டில் தொழிற்சாலைகள் சுற்றுப்புற சூழல் பற்றி கவலைப்படுவதில்லை... இன்றைக்கு நாம் நம்பிக்கையோடு ஆற்று நீரை குடிக்க முடியுமா ? எந்த அளவிற்கு நாட்டை குட்டி சுவராக்க முடியுமோ, அந்த அளவிற்கு செய்துள்ளோம் ? நம்முடைய எதிர்கால சந்ததியினர் எப்படி வாழ்வார்கள் என்பதை யோசித்தோமா ? நாம் இருக்கும் வரை நமக்கு காசு கிடைத்தால் போதுமா ?
23-பிப்-2020 21:38:09 IST
அருமை, இது போன்று இன்னும் பல கருவிகளை நாம் உருவாக்கினால், வேலை வாய்ப்பு அதிகமாகும், வெளி நாட்டிற்கும் ஏற்றுமதி செய்யலாம்... அந்நிய செலாவணி கையிருப்பு அதிகமாகும், போர் தளவாடங்கள் உற்பத்தி செய்வதில்தான் இன்ஜினியரிங் தொழில் நுட்பம் வளர ஆரம்பித்து, பிற்பாடு பொதுமக்கள் உபயோகத்திற்காக வந்தது... தகவல் தொடர்பு, GPS போன்றவை இராணுவத்தில் பயன்பாட்டில் இருந்து பிறகு பொது மக்கள் பயன்பாட்டிற்கு வந்தவையே...
17-ஜன-2020 11:56:28 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.