சிறந்த நகைச்சுவையான பதிவு .உண்மையில் நீங்கள் சிறந்த நகைச்சுவை உணர்வு கொண்டவர் என்பதை ஏற்கிறேன் .ஊழல் விஷயத்தில் நடவடிக்கை எடுப்பதற்கு மத்திய அரசுக்கு என சில அளவுகோல் உண்டு. அகண்ட பாரத தேசத்தில் அந்த உண்மையை அறியாதவர் எவரும் உண்டோ...?
06-ஏப்-2022 09:05:05 IST
தென் அமெரிக்கா நாடுகளில் , பிரேசில் ,அர்ஜென்டினா இரண்டுமே பலம் பொருந்திய தகுதி உடைய அணிகள்தான்......
இன்று இங்கிலாந்து எதிர் இத்தாலியின் யூரோ கிண்ண பலப்பரீட்சையை பாப்போம். மிக விறு விறுப்பாகவும், ஆக்ரோஷமாகவும் இந்த போட்டி அமையும் என்பதில் சந்தேகமில்லை......அரை நூற்றாண்டுகளுக்கு பின்பு கிண்ணத்தை கைப்பற்றும் முனைப்பில் இங்கிலாந்து , அதே போல் இந்த தொடரில் தோல்வியே அடையாத இங்கிலாந்தும் ,இத்தாலியும் இன்று சந்திக்க போகிறது .
11-ஜூலை-2021 08:49:24 IST
அவர் குடும்பத்தாரின் பேராசை, அதீத மதிப்பிடல், இவரது மனைவி மற்றும் மகனின் பக்குவமற்ற அணுகுமுறையும் பேச்சும் அவரது கட்சியை வீழ்த்தியது என்றால் மிகையாகாது. இறுதியில் பேராசை மிக பெரும் நஷ்டமானது. அண்மையில் ஓர் ஊடகத்திற்கு பிரேமலதா அம்மையார் அளித்த செவ்வியில் அவரது மகனின் அண்மைய ஓர் பேச்சை " இளம் கன்று பயம் அறியாது " ஆதலால் அப்படி பேசினார் என்று அந்த பேச்சை நியாயப்படுத்தினார். இவரது கட்சிக்கு முடிவுரை எழுதப்போவது வேறு யாருமல்ல, இவர்களே .......
28-மார்ச்-2021 10:46:01 IST
உணர்ச்சி வேகத்தில் கருத்து பதிவு செய்பவர்கள் ஒன்றை நினைவுகொள்வது சிறந்தது ...அது எல்லாவற்றையும் செயல்படுத்தக்கூடிய ஆற்றல் உள்ள தற்போதைய மத்திய அரசும் குறிப்பாக, முன்னைய காங் அரசும் ...." விடுதலை புலிகள் " எதிர்ப்பு கொள்கை என்பதன் அடிப்படையில் தமது பிராந்திய நலன்கள் குறித்த வெளியுறவு கொள்கையில் கோட்டை விட்டதுதான்....இதற்கு கொள்கை வகுப்பாளர்களாக ஆதிக்கம் செலுத்திய குறிப்பிட்ட தென்மாநிலத்தை சேர்ந்த ஓர் படித்த தமிழர் விரோத IFS கூட்டம் துணை போனதும் மறுப்பதிற்கில்லை. விடுதலை புலிகள் விவகாரத்தையும் , பிராந்திய நலன் சார்ந்த வெளியுறவு கொள்கையையும் வேறு வேறாக அணுகியிருந்தால் இன்று நிலைமை வேறாக இருந்திருக்கும்.
21-பிப்-2021 14:48:52 IST
நீங்கள் சொல்வது உண்மைதான் .....அதே போல் ஆளும்கட்சியும் வேறுவிதமாக, ஊழலில் ஊறி திளைத்த கட்சிதான்...ஊழல் பிளஸ் அராஜக தி மு க VS ஊழல் அதிமுக
17-பிப்-2021 16:39:57 IST
மக்களின் வெறுப்பிற்கும் இவர் ஆளானார் என்ற கூற்று எதை வைத்து சொல்லப்படுகிறது .....கொரோனா காரணமாக திருநள்ளாறில் இவர் விதித்த கட்டுப்பாடுகள் ....குடும்பங்கள் தலைவனை இழந்து , உறவுகளை இழந்து....... குழந்தைகள் தாய் தந்தையரை இழந்து தவிக்கக்கூடாது என்பதால் இவரது கடுமையான தலைக்கவசம் பற்றிய அணுகுமுறை ....ஊழலுக்கு துணைபோகக்கூடாது என்பதால் புதுச்சேரி அரசின் சில திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போட்டது .....
17-பிப்-2021 15:34:52 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.